1.பொருத்தமற்ற தாவர இலை இணையைத் தேர்ந்தெடுக்க.
அ) கரும்பு தோகை
ஆ) நெல் புல்
இ) மா இலை
ஈ) அகத்தி கீரை
2.பிறமொழி கலவாத சொற்றொடரைத் தெரிவு செய்த
அ) கயல்விழி நேற்று சினிமாவுக்குச் சென்றாள்
ஆ) பாம்பின் விஷம் உயிரைக் கொல்லும் 1-CO
இ) கண்ணன் தேர்வினை நன்றாக எழுதினான்.
ஈ) மாலா பீரோவில் துணிகளை அடுக்கினாள்.
3.பா வடிவம் அல்லாததைக் கண்டறிக.
அ) புதினம்
ஆ) துளிப்பா
இ) புதுக்கவிதை
ஈ) செய்யுள்
4. 'இன்பத்தமிழ் RY பாடலில் உறுதிக்குச்சான்றாகக் கூறப்பட்டிருக்கும் பொருள்
அ) தேன்
ஆ) தோள்
இ) வேல்
ஈ) வைரம்
5.'சுப்புரத்தினம்' என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர்
அ) பாரதியார்
ஆ) கண்ணதாசம்
இ) புதுமைப்பித்தன்
ஈ) பாரதிதாசன்
6.பாரதிதாசன் என்று தனது பெயரை மாற்றிக் கொள்ளக் காரணம்?
அ) ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்
ஆ) பாரதியாரின் கவிதை மீது கொண்ட பற்று
இ) சுதந்திரப்போராட்ட ஈடுபாடு.
ஈ) எண்கணித முறை.
7.'இன்பத்தமிழ்' பாடலின் சரியான அடியைத் தேர்ந்தெடுக்க.
அ) தமிழ் எங்கள்பால் இளமைக்கு
ஆ)எங்கள் தமிழ் இளமைக்குப் பால்
இ) இளமைக்குப் பால் எங்கள் தமிழ்
ஈ) தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
8.இன்பத்தமிழ் பாடலில் தமிழுக்குப் பாரதிதாசன் சூட்டியுள்ள பெயர்கள்.
அ) அமுது, நிலவு, மணம்
ஆ) ஊர், நீர், நேர்
இ) பால், வேல், வான்
ஈ) தேன், தோள், வாள்
9.சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ) கோல், தோள், வேல், பால், வாள்
ஆ) கோல், தோள், பால், வாள், வேல்
இ) வேல், பால், கோல், தோள், வாள்
ஈ) பால், கோல், வேல், வாள், தோள்
10.'இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' இவ்வடியில் 'நேர்' என்பதன் பொருள்?
அ) உயரமானது
ஆ) நீளமானது
இ) துணையானது
ஈ) இணையானது
11.தமிழ் தேன் இரண்டிற்குமுள்ள பொதுப்பண்பாகப் பாரதிதாசன் குறிப்பிடுவது
அ) சீரிய வடிவம் கொண்டிருத்தல்
ஆ) உடல் இளைத்தல்
இ) சோர்வு நீக்குதல்
ஈ) கோபம் போக்குதல்
12,'பூட்டு+அறுக்கும்' என்ற சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) பூட்டறுக்கும்
ஆ) பூட்டியிருக்கும்
இ) பூடிறுக்கும்
ஈ) பூட்டிறுக்கும்
13.கீழ்க்காணும் பெயர்களில் தமிழ்ப்பெயரைத் தேர்ந்தெடுக்க.
அ) ஹர்ஷா
ஆ) தேன்மொழி
இ) ஜவஹர்
ஈ) ரோஜா
14.கவிதைக்குரிய சரியான தலைப்பைத் தேர்வு செய்க.
அ) மண்
ஆ) விதை
இ) மழை
ஈ) விவசாயம்
15.ஒரு மனிதனின் பண்பாட்டைப் பேணிக்காப்பது அவனது?
அ) அயல்மொழி
ஆ) கணினிமொழி
இ) தாய்மொழி
ஈ) தந்தைமொழி
16.சென்னை மாநகரம் 26-12-2004 அன்று அழிப்பெருக்கால் கடும் பாதிப்பிற்கு உள்ளானது. இத்தொடரில் 'ஆழிப்பொருக்கு' என்பதன் பொருள்.
அ) கடல்கோள்
ஆ) பேரலை
இ) சுனாமி
ஈ) வெள்ளப்பெருக்கு
17.சரியான அமைப்பு கொன்ட தொடரைக் கண்ட
அ) மனிதன் நீக்க அறியாமையை மனத்தின் கற்க கல்வி வேண்டும்
ஆ) அறியாமையை நீக்க மனத்தின் மனிதன் கல்வி கற்க வேண்டும்
இ) கல்வி அறியாமையை மனிதன் மனத்தின் நீக்க கற்க வேண்டும்
ஈ) மனத்தின் அறியாமையை நீக்க மனிதன் கல்வி கற்க வேண்டும்.
18.'இளங்கோதையர்' என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
அ) இளங் +கோதையர்
ஆ) இள +கோதையர்
இ) இளமை + கோதையர்
ஈ) இளைய +கோதையர
19.தொடருக்குப் பொருத்தமற்ற எதிரிணையைத் தேர்வு செய்க. வாழ்க்கையில் நிலையற்றது.
அ) வெற்றிதோல்வி
ஆ) உயர்வுதாழ்வு
இ) இன்பதுன்பம்
ஈ) ஈடுஇணை
20.படத்திற்குப் பொருத்தமான கவிதைத் துளியைத் தேர்ந்தெடுக்க.
அ) அம்மா புடவையை மடிக்க முடியாது....
ஆ) விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே நடக்கும் இசைக்கச்சேரி...
இ) அப்பா காசை எண்ண முடியாது...
ஈ) பார்க்க முடியாது உணர முடியும்...
21.பெருஞ்சித்திரனார் 'பாவலரேறு' என்னும் சிறப்புப்பெயரால் அழைக்கப்படுகிறார். இதில்
'ஏறு' என்னும் சொல்லின் பொருள்.
அ) உழவுக்கருவி
ஆ) ஏறுதல்
இ) சிங்கம்
ஈ) சுறாமீன்
22.தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழைமையான இலக்கண நூல்.
அ) நன்னூல்
ஆ) தொன்னூல்
இ) இலக்கணக்கொத்து
ஈ) தொல்காப்பியம்
23.கீழ்க்காணும் ஒரெழுத்து ஒருமொழிச் சொற்களுக்கான பொதுப்பண்பை அடையாளம் காண்க.
அ) அனைத்தும் '
ஆ' வரிசைச்சொற்கள்.
ஆ) அனைத்தும் நெடில்.
இ) அனைத்தும் பெயர்ச்சொற்கள்.
ஈ) அனைத்தும் வினைச்சொற்கள்.
24.தமிழ் எண்ணில் வடையளிக்க. இந்தியக் குடியரசு தினம் ஆண்டுதோறும் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? சனவரி
அ) உரு
ஆ) உகூ
இ) உக
ஈ) உ ௪
25.'முத்தமிழ்' சரியான பிரித்தெழுதும் முறை
அ) முத்து + தமிழ்
ஆ) மூன்று +தமிழ்
இ) முதுமை +தமிழ்
ஈ) மூத்த +தமிழ்
0 கருத்துகள்