Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC மூன்றாம் திருப்புதல் தேர்வு 2022 மாதிரி வினாத்தாள் விடைகள்

 

பகுதி-I

குறிப்பு:1) அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கும் விடையளிக்கவும்

2) கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் மிகவும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

 

 1.வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

  1. 1905 ஜூன் 19
  2. 1906 ஜூலை 18
  3. 1907 ஆகஸ்ட் 19
  4. 1905 அக்டோபர் 16

விடை ; 1905 அக்டோபர் 16

2.விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

  1. 1930 ஜனவரி 26
  2. 1929 டிசம்பர் 26
  3. 1946 ஜூன் 16
  4. 1947 ஜனவரி 15

விடை ; 1930 ஜனவரி 26

3.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

  1. T.M. நாயர்
  2. P. ரங்கையா
  3. G. சுப்பிரமணியம்
  4. G.A. நடேசன்

விடை ; P. ரங்கையா

4.இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ______________________ இல் உருவாக்கப்பட்டது.

  1. 1918
  2. 1917
  3. 1916
  4. 1914

விடை ; 1918

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  1. எம்.சி. ராஜா
  2. இரட்டை மலை சீனிவாசன்
  3. டி.எம். நாயர்
  4. பி.வரதராஜுலு

விடை ;  எம்.சி. ராஜா

 

6.தமிழ்நாட்டின் அட்சப் பரவல் முதல் வரை உள்ளது.

  1. 8°4´ வ முதல் 13° 35´ வ வரை
  2. 8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை
  3. 8° 0´ வ முதல் 13° 05´ வ வரை
  4. 8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை

விடை : 8°4´ வ முதல் 13° 35´ வ வரை

 

7.தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ஆகும்

  1. ஆனைமுடி
  2. தொட்டபெட்டா
  3. மகேந்திரகிரி
  4. சேர்வராயன்

விடை : தொட்டபெட்டா


8.தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா

  1. காவிரி டெல்டா
  2. மகாநதி டெல்டா
  3. கோதாவரி டெல்டா
  4. கிருஷ்ணா டெல்டா

விடை : காவிரி டெல்டா

9.தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்

  1. மேட்டூர்
  2. பாபநாசம்
  3. சாத்தனூர்
  4. துங்கபத்ரா

விடை : மேட்டூர்

 

10. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

  1. பர்மா – இந்தியா
  2. இந்தியா – நேபாளம்
  3. இந்தியா – சீனா
  4. இந்தியா – பூடான்

விடை ; இந்தியா – சீனா

11. எந்த  இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

  1. இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
  2. மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
  3. மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
  4. இலங்கை மற்றும் மாலத்தீவு

விடை ; இலங்கை மற்றும் மாலத்தீவு

 12. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

  1. சேவை வரி
  2. கலால் வரி
  3. விற்பனை வரி
  4. மத்திய விற்பனை வரி

விடை : விற்பனை வரி

13. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

  1. 1860
  2. 1870
  3. 1880
  4. 1850

விடை : 1860

14.ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ____________________ .
  1. தூத்துக்குடி
  2. கோயம்புத்தூர்
  3. சென்னை
  4. மதுரை

விடை : சென்னை


பகுதி-II

எதையேனும் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் 

28 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

15. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

  • சாரதா
  • சம்பல்பூர்
  • பஞ்சாபின் சில பகுதிகள்
  • ஜான்சி
  • நாக்பூர்
16.பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.
  • பஞ்சாபில் பகத்சிங், சுக்தேவ், மற்றும் அவர்களது தோழர்கள் இந்துஸ்தான் குடியரசு இராணுவத்தை மீண்டும் அமைத்தனர்.
  • பொதுவுடைமை கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த அமைப்புக்கு இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று 1928இல் பெயர் மாற்றம் செய்தனர்.
  • லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.
  • 1929இல் மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை பகத்சிங்கும் B.K. தத்தும் வீசினார்கள். அவர்கள் “இன்குலாப் ஜிந்தாபாத்” “பாட்டாளி வர்க்கம் வாழ்க” ஆகிய முழக்கங்களை எழுப்பினார்கள்.
  • ராஜகுருவும் பகத்சிங்கும் கைது செய்யப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
  • பகத்சிங்கின் அசாத்தியமான துணிச்சல் இந்தியா முழுவதும் வாழ்ந்த இளைஞர்களின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து அவர் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தார்.
17.மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக.
  • அரசியலைமப்பு வழிமுறையில் நம்பிக்கை கொண்டிருத்தல்.
  • அவைக் கூட்டங்களில் நடத்துதல்
  • பிரச்சனைகள் குறித்து ஆங்கிலத்தில் கலந்துரையாடல்.
  • தங்கள் கண்ணோட்டங்களை மொழி நடையில் வேண்டுகோள் மூலம் மனுக்கள் அளிதல்
  • குறிப்பானை மூலம் அரசுக்கு சமர்பித்தல்
  • ஆங்கிலேயர்களின் காலனியச் சுரண்டலை அம்பலப்படுத்துதல்

18.பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

  • 1929 முதல் சுயமரியாதை மாநாடுகளில், பெண்களின் மோசமான நிலை குறித்து குரல் கொடுக்கத் தொடங்கினார்
  • பெண்களுக்கு விவாகரத்து பெறுவதற்கும் சொத்தில் பங்கு பெறுவதற்கும் உரிமை உண்டு என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
  • “திருமணம் செய்து கொடுப்பது” எனும் வார்த்தைகளை மறுத்த அவர் அவை பெண்களைப் பொருட்களாக நடத்துகின்றன
    என்றார். அவைகளுக்கு மாற்றாக திருக்குறளில் இருந்து எடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டினார்.
  • பெண்ணியம் குறித்து பெரியார் எழுதிய மிக முக்கியமான நூல் பெண் ஏன் அடிமையானாள்? என்பதாகும்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.
  • முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்றார்

19. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக

  • கிழக்கில் – வங்காள விரிகுடா
  • மேற்கில் – கேரளா
  • வடக்கில் – ஆந்திரப் பிரதேசம்
  • வடமேற்கில் – கர்நாடகா
  • தெற்கில் – இந்தியப் பெருங்கடல்

ஆகியன தமிழ்நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளன

20. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.

  • பாம்பன் தீவு
  • காட்டுப்பள்ளி தீவு
  • முயல் தீவு
  • கொய்யில் தீவு
  • குருசாடி தீவு
  • புள்ளிவாசல் தீவு
  • விவேகானந்தர் நினைவுப் பாறை
  • நல்ல தண்ணித்தீவு
  • ஸ்ரீ ரங்கம் தீவு
  • உப்பு தண்ணித்தீவு நிலங்கள்

21. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.

சொர்ணவாரி (சித்திரை பட்டம்)
விதைக்கும் காலம் ஏப்ரல் – மே
அறுவடை காலம் ஆகஸ்டு – செப்டம்பர்
முக்கிய பயிர்கள் பருத்தி மற்றும் திணை வகைகள்
சம்பா (ஆடிப்பட்டம்)
விதைக்கும் காலம் ஜூலை – ஆகஸ்டு
அறுவடை காலம் ஜனவரி – பிப்ரவரி
முக்கிய பயிர்கள் நெல் மற்றும் கரும்பு
நவரை
விதைக்கும் காலம் நவம்பர் – டிசம்பர்
அறுவடை காலம் பிப்ரவரி – மார்ச்
முக்கிய பயிர்கள்பழங்கள், காய்கறிகள், வெள்ளரி, தர்பூசணி 

 

 

22. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக.

மேட்டூர் அணை பவானிசாகர் அணை
அமராவதி அணை கிருஷ்ணகிரி அணை
சாத்தனூர் அணை முல்லை பெரியார் அணை
வைகை அணை மணிமுத்தாறு அணை
பாபநாசம் அணைபரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

23. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.

  • பாகிஸ்தான்
  • வங்காளதேசம்
  • ஆப்கானிஸ்தான்
  • மியான்மர்
  • சீனா
  • இலங்கை
  • நேபாளம்
  • மாலத்தீவு
  • பூடான்

 


 

24. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு வரி செலுத்த வேண்டும்.
  • சில அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, தங்குமிடம் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மாத வருமான போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காவும், நாட்டின் வறுமையை குறைப்பதாற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசிற்கு நீதி அவசியப்படுகிறது.
  • அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது.
  • நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன.
  • இதன் மூலம் அரசாங்கம் அதன் “நிதி ஆதாரங்களை” திரட்டுகிறது.

 

25. வரி ஏய்ப்பு என்றால் என்ன?

தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.

26. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்

  • 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது

தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம்

  • 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
  • சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம்

  • நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

27 தொழில்முனைவோர் என்பவர் யாவர்?

  • ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.
  • இவர்களிடம் சிறந்த நிர்வாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையான தலைமைக்கான பண்புகளும் இருக்கும்.

 

28. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • தமிழில் – திராவிடன்
  • ஆங்கிலத்தில் – ஜஸ்டிஸ்
  • தெலுங்கில் – ஆந்திர பிரகாசிகா

பகுதி -III

எதையேனும் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.

42 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்


 

29. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்

  • டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலைவாரியாக 3 பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது. அவர்களுக்ககென குறிக்கப்பட்ட பகுதிகளை விடுத்து வேறு இடங்களில் அவர்கள் நிலத்தை சொந்தமாக வைத்துக் கொள்ள முடியாத நிலை இருந்தது. மேலும் இரவு 9 மணிக்கு பிறகு அனமதியின்றி வெளியிடங்களுக்கு செல்ல முடியாத நிலையும் இருந்தது. இத்தகைய நியாமற்ற சட்டங்களை எதிர்த்து அவர் போட்டத்தை தொடங்கினார்.
  • தென்னாப்பிரிக்காவில் குடியேற்றம் மற்றும் இனவேறுபாடு ஆகிய பிரச்சனைகளுக்காகப் போராட சத்தியாகிரக சோதனைகளை அவர் மேற்கொண்டார்.
  • குடிபெயர்ந்தோரை பதிவு செய்யும் அலுவலகங்கள் முன் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடத்தினார். காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட போதிலும் அவர் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை. காவல்துறையினாரின கடுமையான நடவடிக்கைகளையும் பொருட்படுத்தாமல் பேராட்டத்தை தொடர்ந்தார்.
  • இறுதியாக ஒப்பத்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி ஸ்மட்ஸ்-காந்தி ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் காந்தியடிகளின் தொடக்ககால சத்தியாகிரகங்கள்

  • இந்திய வருைகயின் போது காந்தியடிகள் தான் சந்தித்த கோபால கிருஷ்ண கோகலே மீது பெரும் மரியாதை கொண்டு அவரையே தமது அரசியல் குருவாக ஏற்றார்.
  • கோகலேயின் அறிவுரையின் படி, அரசியலில் ஈடுபடுவதற்கு முன் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் காந்தியடிகள் பயணம் மேற்கொண்டார். இதனால் மக்களின் நிலையை அவர் அறிந்து கொள வழி பிறந்தது.
  • இது போன்ற ஒரு பயணத்தின்போதுதான் தமிழகத்தில் தமது வழக்கமான ஆடைகளை விடுத்து சாதாரண வேட்டிக்கு காந்தியடிகள் மாறினார்.

சம்பரான் சத்தியாகிரகம்

  • பீகாரில் உள்ள சம்பரானில் தீன்காதியா முறை பின்பற்றப்பட்டது. இந்த சுரண்டல் முறையில் இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தில் இருபதில் 3பங்கு  அவுரி (இண்டிகோ) பயிரிட ஐரோப்பிய பண்ணையாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்த வகையில் விவசாயிகள் அதிக சிரமங்களை சந்தித்தனர்.
  • காந்தியடிகள் சம்பரானுக்கு சென்றார். காவல்துறையினர் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். இச்செய்தி பரவியதையடுத்து ஆயிரக்கணக்கானோர் அவருக்கு ஆதரவாகக் கூடினார்.
  • ராஜேந்திர பிரசாத் மற்றும் பிரஜ்கிஷோர் பிரசாத் ஆகியோர் காந்தியடிகளுக்குத் துணையாக செயல்பட்டனர். அதன் பிறகு துணைநிலை ஆளுநர் ஒரு குழுவை உருவாக்கினார். காந்தியடிகள் அக்குழுவில் ஒரு உறுப்பினர் ஆனார்.
  • இண்டிகோ பண்ணையாளர்கள், விவசாயிகள் மீது நடத்திய அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தீன் காதிய முறையை ரத்து செய்ய அந்தக்குழு பரிந்துரைத்தது.
  • சம்பரான சத்தியா கிரகத்தின் வெற்றியை அடுத்து 1918இல் அகமதாபாத் மில் வேலைநிறுத்தம், 1918இல் கேதா சத்தியா கிரகம் ஆகியன காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருவாக்கின.
30. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.
  • 1927 இந்திய தேசிய காங்கிரசின் மாநாடு சுதந்திரமே தனது இலக்கு என தீர்மானித்தது.
  • காந்தியடிகளின் தண்டியாத்திரை தமிழகத்திலும் எதிரொலித்தது.
  • ராஜாஜி அவர்கள் திருச்சியில் இருந்து கடற்கரை நகரமான வேதாரண்யம் சென்று உப்பு காய்ச்சி கால்நடையாக பேராட்டத்தை தொடங்கினார்.
  • ராஜாஜியுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
  • நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் தேசபக்தி வீரப்பாடல்கள் அணிவகுப்பில் எதிரொலித்தது.
  • பயணித்த பாதை எங்கு வரேவற்பு கிடைத்தது.
  • ராஜாஜி தலைமையிலான 12 தொண்டர்கள் உப்பு சட்டத்தை மீறி உப்பு காய்ச்சி எதிர்ப்பை தெரிவித்தனர்.
  • ராஜாஜி மற்றும் T.S.S ராஜன். திருமதி. ருக்மணி லட்சுமிபதி, சர்தார் வேதரத்தினம் போன்றோர் கைது செய்யப்பட்ட்னர்.
  • இந்த சட்ட மறுப்பு இயக்கங்கள் சென்னை திருவல்லிக்கேணி, இராமேஸ்வரம், உவரி, வேப்பபலோடை, தூத்துக்குடி, தருவைகுளம் போன்ற இடங்களில் நடந்தேறியது.
  • தீரர் சத்தியமூர்த்தி அவர்கள் அந்நிய துணிகள் விற்கும் கடைகளை தடை செய்தார்.
  • திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் போராட்டம் நடந்தது. பேராட்டத்தில் திருப்பூர் காவலர்கள் தடியடியில் இறந்தார்.
  • மொத்தத்தில் சட்ட மறுப்பு இயக்கம் மிகப்பெரிய இயக்கமாக நாட்டில் எழுச்சி பெற்றது.

 

31. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து வரிவாக ஆராயவும்

மேலதிகாரக் கெள்கை

உள்நாட்டு ஆட்சியாளர்கள் திறனற்றவர்கள் என்ற அடிப்படையில் புதிய நிலப்பகுதிகளை இணைத்துக் கொண்டனர்.

வாரிசு இழப்புக் கொள்கை

அரசு கட்டிலில் அரியனை ஏற நேரடி ஆண் வாரிசு இல்லையெனில் அவர்கள் இறப்பிற்கு பின் அப்பகுதி ஆங்கிலேய ஆட்சிப் பகுதியுடன் இணைக்கப்படும். இதன் மூலம் சாரதா, சம்பல்பூர், ஜான்சி, நாக்பூர் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டன.

இந்திய கலாச்சார உணர்வுகள் 

  • சமயக்குறியீடுகளை தடைவிதிக்கப்பட்டதது
  • தலைப்பாகைகளுக்கு பதிலாக தொப்பிகளை அணியுமாறும் பணிக்கப்பட்டனர்.
  • ஆடைக் கட்டுப்பாடுகள் மதம் மாறச் செய்வதற்கான ஒரு முயற்சியாக கருதப்பட்டது.
  • ஊதியம் மற்றும் பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டது.
  • தரக்குறைவாக நடத்தப்பட்டன.
  • கலகம் என்பது புதி ரக என்பீல்டு ரக துப்பாக்கியின் கீழ் வடிவில் வந்தது.
  • பசு மற்றும் பன்றி கொழுப்பு தடவிய தோட்டாக்கள், விலங்குகள் தோலில் செய்யப்ட் உறைகளும் காரணமாக அமைந்தது.

32. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?

வங்காளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய 1905 ஆம் ஆண்டு கர்சன் பிரபு வங்களத்தை இரண்டாகப் பிரித்தார்.

வங்காள மக்கள் நடத்து கொண்ட விதம்

  • மத அடிப்படையில் வங்காள மக்களைப் பிரிக்க நினைத்த பிரிவினைச்செயலானது அவர்களைப் பிரிப்பதற்குப் பதிலாக ஒன்றிணைத்தது.
  • போராட்டக் குழுக்கள் மித தேசியவாதிகள், தீவிர தேசியவாதிகள் என இரண்டாக பிரிந்து கிளர்ச்சியில் ஈடுபட்டன.
  • வேண்டுகோள்கள், செய்திப் பிரச்சாரங்கள், மனுக்கள், பொதுக்கூட்டங்க் மூலமாக மக்கள் எதிர்ப்பு நடந்தது.
  • பிரிட்டிஷ் பொருட்களை புறக்கணிப்பது என மக்கள் முடிவு செய்தனர்.
  • சுதேசி இயக்கக் கொள்கைக வங்காள மக்களிடம் வேகமாக பரவியது.
  • 1905 அக்டோபர் 16, பிரிவினை நாள் துக்க நாளாக மாறியது.
  • ஆயிரக்கணக்கான மக்கள் கங்கை நதியில் புனித நீராடி வந்தே மாதரம் பாடலை பாடியபடி கல்கத்தா சாலையின் அணிவகுத்து வந்தனர்.
  • புறக்கணிப்பும் சுதேசி இயக்கமும் இணைந்தே நடந்தது.
  • சுதேசி இயக்கங்கள் நான்கு வழிகளில் மக்கள் வெளிப்படத்தினர். அவைகள் முறையே மிதவாதப் போக்கு, தீவிர தேசியவாதம், ஆக்கப்பூர்வ சுதேசி, புரட்சிகர தேசியவாதம்

33. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக

காவிரி உற்பத்தி

  • காவிரி ஆறு கர்நாடகா மாநிலத்தில் கூர்க் மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னும் இடத்தில் உற்பத்தியாகி 850 கிலோ மீட்டர்
    நீளத்திற்கு பாய்கிறது.
  • இதில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு தமிழ்நாட்டில் பாய்கிறது. இது கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கு இடையே சுமார் 64 கிலோ மீட்டர் தூரத்திற்கு எல்லையாக
    உள்ளது.

நீர்வீழ்ச்சி மற்றும் நீர்தேக்கம்

  • தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில்
    இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

காவிரியின் துணை ஆறுகள்

  • மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு இதன் துணையாறாக வலது கரையில் காவிரியுடன் இணைகிறது. பின்னர் கிழக்கு நோக்கிப் பாய்ந்து தமிழ்நாட்டின் சமவெளிப்பகுதிக்குள் நுழைகிறது.
  • கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் வலதுகரையில் மேலும் இரண்டு துணை ஆறுகளான அமராவதி மற்றும் நொய்யல் ஆறுகள் இணைகின்றன.
  • இப்பகுதியில் ஆற்றின் அகலம் அதிகமாக இருப்பதால், இது ”அகன்ற காவிரி’ என அழைக்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் தீவு

  • திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இந்த ஆறு இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. வடகிளை கொலேருன் அல்லது கொள்ளிடம் என்றும் தென்கிளை காவிரியாகவும் தொடர்கிறது.
  • இவ்விடத்திலிருந்து காவிரி டெல்டா சமவெளி தொடங்குகிறது. சுமார் 16 கிலோ மீட்டர்தொலைவிற்கு பாய்ந்த பின் மீண்டும் இவ்விரு கிளைகள் இணைந்து ’ஸ்ரீரங்கம் தீவை’ உருவாக்குகின்றன.

காவிரி டெல்டா

  • ‘கிராண்ட் அணைகட்’ என்றழைக்கப்படும் கல்லணை காவிரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
  • இந்த ஆறு கல்லணையைக் கடந்த பின் பல கிளைகளாகப் பிரிந்து டெல்டா பகுதி முழுவதற்கும் ஒரு வலைப்பின்னல் அமைப்பை உருவாக்கி உள்ளது.
  • காவிரி டெல்டா பகுதிகளில் கிளை ஆறுகளால் உண்டாகியுள்ள இவ்வலைப்பின்னல் அமைப்பு ’தென்னிந்தியாவின் தோட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.
  • பின்னர் கடலூருக்கு தெற்கே வங்க கடலில் கலக்கிறது

 34.தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

மனித குலத்திற்கும் புவியில் வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்களுக்கும் நீர் இயற்கையின் ஒரு விலைமதிப்பற்ற பரிசாகும்.

தமிழ்நாட்டின் நீர் வளங்கள்

  • இந்தியப் பரப்பளவில் 4 சதவிகிதத்தையும் மக்கள் தொகையில் 6 சதவிகிதத்தையும் கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர் வளத்தில் 2.5 சதவிகிதத்தை மட்டுமே பெற்றுள்ளது.
  • தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 சதவிகிதத்திற்கு அதிகமாகவும் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்:

பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்கு திட்டங்கள், அடிப்படையில் வேளாண் நீர்ப்பாசன மேம்பாட்டிற்காகவும் மற்றும் நீர் மின்சக்தி உற்பத்திக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன. இருப்பினும் இவை வேறு பல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. மேட்டூர் அணை
  2. பவானிசாகர் அணை
  3. அமராவதி அணை
  4. கிருஷ்ணகிரி அணை
  5. சாத்தனூர் அணை
  6. முல்லை பெரியார் அணை
  7. வைகை அணை
  8. மணிமுத்தாறு அணை
  9. பாபநாசம் அணை
  10. பரம்பிகுளம் ஆழியாறு திட்டம்

தமிழ்நாட்டிலுள்ள நீர் வள ஆதாரங்கள்

  1. ஆற்று வடிநிலம்
  2. ஆழ்துளை கிணறுகள்
  3. நீர்த்தேக்கங்கள்
  4. திறந்தவெளி கிணறுகள்
  5. ஏரிகள்

மேற்பரப்பு நீர் வள ஆதாரங்கள்

  • தமிழ்நாட்டின் மொத்த மேற்பரப்பு நீரின் அளவு சுமார் 24,864 மில்லியன் கன மீட்டராகும். மாநிலத்தில் 17 பெரிய ஆற்று வடிநிலங்கள் 81 நீர்தேக்கங்கள் மற்றும் 41,262 ஏரிகள் உள்ளன.
  • ஏற்கனவே பெரும்பகுதி மேற்பரப்பு நீர் பாசனத்திற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • சுமார் 24 இலட்சம் ஹெக்டேர் விளைநிலம் மேற்பரப்பு நீர் மூலம் பெரிய, நடுத்தர சிறிய நீர்பாசன திட்டங்கள் மூலம் பாசன வசதியை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் நிலத்தடி நீர்வள ஆதாரங்கள்

  • மாநிலத்தில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க நிலத்தடி நீர்வளம் 22,433 மில்லியன் கனமீட்டர் ஆகும்.
  • நீரின் தற்போதைய பயன்பாட்டின் அளவு 13,558 மில்லியன் கனமீட்டர் ஆகும். இது மறுவூட்டம் மூலம் கிடைக்கும நீரில் 60% ஆகும். மீத இருப்பு நீரானது சுமார் 8,875 மில்லியன் கன மீட்டராகும்.

35. வேறுபடுத்துக.

1. தாமிரபரணி மற்றும் காவிரி

தாமிரபரணி

  • தாமிரபரணி, அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றுகிறது.
  • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.
  • காரையாறு, சேர்வலாறு, மணிமுத்தாறு, கடனா நதி, பச்சையாறு, சிற்றாறு மற்றும் இராமநதி ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

காவிரி

  • காவிரி ஆறு தலைக்காவேரியில் கூர்க் மாவட்டத்திலுள்ள கர்நாடகாவில் என்னும் உற்பத்தியாகிறது
  • இது சேலம், ஈரோடு, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் வழியாக பாய்கிறது
  • பவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆகியன இதன் முக்கிய துணை ஆறுகளாகும்.

 

2. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.

மேற்பரப்பு நீர்

  • மழைநீர் மூலம் பெறப்படும் ஆற்று வடிநிலப்பகுதி நீர் நீர்தேக்கங்கள் ஏரிகள், குளங்களில் உள்ள நீர் மேற்பரப்பு நீர் எனப்படும்.
  • மேற்பரப்பு நீர் பருவ மழையை மட்டுமே நம்பி கிடைக்கும் நீர்
  • மேற்பரப்பில் 95% பயன்பாட்டில் இருந்து வருகிறது

நிலத்தடி நீர்.

  • மழைநீரானது பூமியின் உள் சென்று தங்கி அதனை கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு மூலம் பெறப்படும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.
  • பூமியின் உள்ளே தங்கி நாம் எடுக்கும் நீர்
  • 80%த்திற்கும் மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது

காரணம் தருக

1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடரச்சியற்று காணப்படுகிறது.

காரணம்

கிழக்குத் தொடர்ச்சி மலையானது பல இடங்களில் வங்களாவிரிகுடா கடலில் கலக்கும் ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது

36. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.

பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாவதற்கான காரணம்

  • உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒரு மாற்றாகவும், அமெரிக்க மேலாதிக்கத்திற்குப் போட்டியாகவும், உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
  • உறுப்பு நாடுகளிடையே பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவும், சொந்த மற்றும் சுயமாக நிரூபிக்கும் விதமாக இக்கூட்டமைப்பு உருவாக்கப்ட்டது.

பிரிக்ஸின் நோக்கங்கள்

  • பிராந்திய வளர்ச்சியை அடைவது
  • வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இடையே பாலமாக செயல்படுவது
  • மனித மேம்பாட்டிற்கு மிகப்பரந்த அளவில் பங்களிப்பு செய்தல்
  • அதிக சமத்துவம் மற்றும் நியாயமான உலகத்தை ஏற்படுத்துதல்
  • வணிக ஒத்துழைப்பை அதிகரிக்க பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே உள்நாட்டு நாணயங்கள் மூலம் வணிகம் மேற்கொள்வதை ஊக்குவித்தல் மற்றும் நடப்பு சர்வதேச சிக்கல்களை எதிர்கொள்ளுதல்
  • உறுப்பு நாடுகளிடையே தகவல் தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்வதை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளில் வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு பொருளாதார மாற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல்.

 37.சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.

நேர்முக வரிகள்

  • நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும்.
  • வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
  • இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.

சொத்து வரி

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
  • இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

நிறுவன வரி

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
  • இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது

மறைமுக வரிகள்

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்

முத்திரைத் தாள் வரி

  • முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி

  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை அல்லது கலால் வரி

  • சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.
  • இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி” என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

 

38. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக

  • கருப்பு பணம் கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

1. பண்டங்கள் பற்றாக்குறை

  • கருப்பு பணம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்கள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மூலகாரணமாக உள்ளது.
  • கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்கு அடுத்தடுத்து தடைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

2. உரிமம் பெறும் முறை

  • கட்டுப்பாட்டு அனுமதி, ஒதுக்கீடு மற்றும் உரிமங்கள் அமைப்பு, பொருட்களின் குறைான அளிப்பினால், தவறான விநியோகத்துடன் தொடர்புடையது என்று உறுதியாக நம்பப்படுகிறது.
  • இதன் விளைவாக கருப்பு பணம் உருவாகிறது.

3. தொழில் துறையின் பங்கு

  • கருப்புப் பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்குவகிப்பது தொழில் துறையாகும்.
  • உதாரணமாக வரையறுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின்  கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்வதுடன், அப்பொருளுக்கு அதிக கட்டணம் வசூலித்து அவ்வித்தியாசத்தை தனிப்பட்ட முறையில் பாண்பிப்பத்தில்லை.

4. கடத்தல்

  • கருப்புப் பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரமாகும். இந்தியா கடுமையான பரிமாற்ற முறைகளை கொண்டிருந்தபோது, விலை உயர்ந்த பொருட்களான தங்கம், வெள்ளி, ஜவுளிகள், மின்னணுப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சுங்கத்தீர்வை அதிகமாக விதிக்கப்பட்டது.
  • அதிகாரிகளை மீறி இந்த பொருளை கொண்டு வருவது கடத்தலாகும்.

5. வரியின் அமைப்பு

  • வரி விகிதம் அதிகமாக இருக்கும்போது கருப்பு பணம் தோன்றக் காரணமாக அமைகிறது.

 

39. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

கல்வி

  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
  • இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்.
  • இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.

உள்கட்டமைப்பு

  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.

தொழில்துறை ஊக்குவிப்பு

  • கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  • பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.
  • எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

40. காந்திய இயக்கதத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.

  • 1929இல் டிசம்பர் மாதம் லாகூரில் ஜவகர்லால் நேரு தலைமையில் காாங்கிரஸ் அமர்வு நடந்தது
  • அதில் 1930 ஜனவரி 26நாள்  முழுமையான சுந்ததிரம் என்பது இலக்காக அறிவிக்கப்பட்டது.
  • வட்டமேசை மாநாட்டை புறக்கணிப்பது என்றும் சட்ட மறுப்பு இயக்கதை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டது.
  • பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை காந்தியடிகள் அரசப் பிரதிநிதியிடம் அளித்தார்.
  • 1930 ஜனவரி 31ஆம் நாளுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் அரசப்பிரதிநிதி பதில் தெரியாத நிலையில் சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கினார்.
  • உப்பு மீதான வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒரு அறிவுப்பூர்வமான முடிவாகும்.
  • காந்தியடிகம் 1930 மார்ச் 12ஆம் நாள்7 8 பேர்களுடன் சமர்பதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ் பெற்ற தண்டியாத்திரை தொடங்கினார்.
  • காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • இந்து சட்ட மறுப்பு இயக்கம் மூலமாக நடந்த குஜராத் தண்டிய யாத்திரை காந்தியடிகளை இந்திய அளவில் வெகுவாக உயர்த்தியது

41) காலக் கோடு வரைக

1930 முதல் 1950 வரையிலான இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக

1930- முதல் வட்டமேசை மாநாடு

1931- இரண்டாம் வட்டமேசை மாநாடு

1932- மூன்றாம் வட்டமேசை மாநாடு

1947- இந்தியா விடுதலை

1948- காந்தி மரணம்

42) கீழ்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்

1.மீரட் 2.ஜான்சி 3.கான்பூர் 4.தண்டி 5.சபர்மதி ஆசிரமம்



 

பகுதி-IV

பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்

 43.)

நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்.

நீதிக்கட்சியின் தோற்றம்:-

  • தமிழக அரசியில் களங்களில் பிராமணர் ஆதிக்கம் தொடர்ந்ததால் பிராமணர் அல்லாத டாக்டர் நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டி.எம். நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயாரம்மாள் உட்பட 30 முக்கிய பிராமணர் அல்லாத தலைவர்கள் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை 1916 நவம்பர் 20இல் உருவாக்கினர்.
  • தமது கொள்கைகளைப் பரப்புரை செய்வதற்காகத் தமிழில் திராவிடன், ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ், தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா ஆகிய பத்திரிக்கைகளை வெளியிட்டது.
  • ஜஸ்டிஸ் என்ற ஆங்கில பத்திரக்கையின் பேரில் 1920 நீதிகட்சியாக பெயரமாற்றம் பெற்றது.
  • 1920இல் சென்னை மாகாண தேர்தலில் வெற்றி பெற்று A. சுப்பராயலு சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.

சமூக நீதி பங்களிப்பு:-

  • நீதிக்கட்சியே நாட்டில் பிராமணர் அல்லாதவர்களின் மூலாதாரமாய் விளங்கிற்று.
  • நீதிக்கட்சி அரசாங்கம் மக்கள் தொகையில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கியது.
  • சாதி மறுப்புத் திருமணங்களிற்கு தடையாக இருந்து சட்டச் சிக்கல்களை அகற்றியது.
  • பொது இடங்களை ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்டுத்த நடவடிக்கை எடுத்தது.
  • 1921இல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதன் முலாக கொண்டு வந்தது.
  • 1924இல் பணியாளர் தேர்வு வாரியத்தை அறிமுகப்படுத்தி இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தியது.
  • 1926இல் இந்து அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்து கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்க வழி செய்தது.
  • ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்ட இலவச மனைப்பட்டாகள் வழங்கியது.
  • மதிய உணவுத் திட்டம் சென்னையில் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது..
  • தேவதாசி முறையை ஒழித்தது

)

தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

  • பெரியார் ஈ.வெ.ராமசாமி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
  • ஆரம்ப காலங்களில் மத பற்றாளராக இருந்து பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
  • காங்கிரஸ் கட்சியில் பிராமணர்களின் ஆதிக்கத்தை வெறுத்து 1925இல் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.

பெரியாரின் பங்களிப்பு

  • பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தார்.
  • குடிஅரசு (1925), ரிவோல்ட் (1928), புரட்சி (1933), பகுத்தறிவு (1934), விடுதலை (1935) போன்ற பலசெய்தித்தாள்களையும் இதழ்களையும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்.
  • பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்.
  • ஓடுக்கப்பட்ட மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தினார்
  • மது குடிப்பதை தவிர்க்க தனது தோட்த்தில் உள்ள தென்னை மரங்களை வெட்டினார்.
  • பெரியார் ஆணாதிக்க சமூகத்தை விமர்சித்தார்.
  • குழந்தைத் திருமணத்தையும் தேவதாசி முறையையும் கண்டனம் செய்தார்.
  • பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கப்படுவது அவர்களுக்குச் சமூகத்தில் நன்மதிப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என பெரியார் நம்பினார்.
  • முன்னோர்களின் சொத்துக்களை உடைமையாகப் பெறுவதில் பெண்களுக்குச் சம உரிமை வேண்டுமென்றார்.
  • கோவில்களில் நிலவிய பரம்பரை அர்ச்சகர் முறையை எதிர்த்து அனைத்து நபர்களும் அர்ச்சகர் ஆகலாம் என வாதிட்டவர்
  • சுயமரியாதை திருமணங்களைப் பரிந்துரைத்து செயல்படுத்தியவர்
  • சேரன்மகாதேவி குருகுலப் பள்ளியில் நடைபெற்ற சாதி வேறுபாடுகளை களைய முற்பட்டவர்

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்