Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC மூன்றாம் திருப்புதல் பொதுத் தேர்வு-2022|சமூக அறிவியல்|மாதிரி வினாத்தாள்

 SSLC மூன்றாம் திருப்புதல் பொதுத் தேர்வு-2022

சமூக அறிவியல்

நேரம்:3.00மணி    மொத்த மதிப்பெண்:100

பகுதி-I

குறிப்பு:1) அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கும் விடையளிக்கவும்

 2) கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில்  மிகவும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

14×1=14

1. வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?

  1. 1905 ஜூன் 19
  2. 1906 ஜூலை 18
  3. 1907 ஆகஸ்ட் 19
  4. 1905 அக்டோபர் 16

2. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

  1. 1930 ஜனவரி 26
  2. 1929 டிசம்பர் 26
  3. 1946 ஜூன் 16
  4. 1947 ஜனவரி 15

3. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

  1. T.M. நாயர்
  2. P. ரங்கையா
  3. G. சுப்பிரமணியம்
  4. G.A. நடேசன்

4. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ______________________ இல் உருவாக்கப்பட்டது.

  1. 1918
  2. 1917
  3. 1916
  4. 1914

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

  1. எம்.சி. ராஜா
  2. இரட்டை மலை சீனிவாசன்
  3. டி.எம். நாயர்
  4. பி.வரதராஜுலு

6. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் முதல் வரை உள்ளது.

  1. 8°4´ வ முதல் 13° 35´ வ வரை
  2. 8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை
  3. 8° 0´ வ முதல் 13° 05´ வ வரை
  4. 8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை

7. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ஆகும்

  1. ஆனைமுடி
  2. தொட்டபெட்டா
  3. மகேந்திரகிரி
  4. சேர்வராயன்

8. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா

  1. காவிரி டெல்டா
  2. மகாநதி டெல்டா
  3. கோதாவரி டெல்டா
  4. கிருஷ்ணா டெல்டா

9. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்

  1. மேட்டூர்
  2. பாபநாசம்
  3. சாத்தனூர்
  4. துங்கபத்ரா

10. மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

  1. பர்மா – இந்தியா
  2. இந்தியா – நேபாளம்
  3. இந்தியா – சீனா
  4. இந்தியா – பூடான்

11. எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

  1. இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்
  2. மாலத்தீவு மற்றும் லட்சத் தீவுகள்
  3. மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு
  4. இலங்கை மற்றும் மாலத்தீவு

12. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

  1. சேவை வரி
  2. கலால் வரி
  3. விற்பனை வரி
  4. மத்திய விற்பனை வரி

13. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் _____________ ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது

 

  1. 1860
  2. 1870
  3. 1880
  4. 1850

14. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது ____________________ .

  1. தூத்துக்குடி
  2. கோயம்புத்தூர்
  3. சென்னை
  4. மதுரை

 பகுதி-II

எதையேனும் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் (10×2=20)

28 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

15. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்?

16. பகத் சிங் பற்றி குறிப்பு வரைக.?

17. மிதவாத தேசியவாதிகளின் பங்களிப்பைப் பட்டியலிடுக?

18. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக?


19. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக?

20. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக?

21. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக?

22. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களை எழுதுக?

23. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக?

24. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

25. வரி ஏய்ப்பு என்றால் என்ன?

26. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக?

27. தொழில்முனைவோர் என்பவர் யாவர்?

 28. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக?

பகுதி -III

எதையேனும் 10 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.  (10×5=50)

42 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

29. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்?

30. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி?

31. 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து வரிவாக ஆராயவும்?

32. 1905ஆம் ஆண்டு நிகழ்ந்த வங்காளப் பிரிவினையின்போது வங்காள மக்கள் எவ்விதம் நடந்து கொண்டனர்?

33.காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக?

34. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்?

35. வேறுபடுத்துக.

அ). தாமிரபரணி மற்றும் காவிரி

ஆ). மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்

 கீழ்கண்டவற்றிக்கு காரணம் தருக

அ).கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடரச்சியற்று காணப்படுகிறது.

36. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக?

37. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக?

38. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக?

39. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக?

40.காந்தி இயக்கத்தில் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் பற்றி விரிவாக ஆராயவும்?

41) காலக் கோடு வரைக

    1930 முதல் 1950 வரையிலான இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் ஏதேனும் ஐந்தினை எழுதுக

42) கீழ்காணும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்

1.மீரட்  2.ஜான்சி  3.கான்பூர் 4.தண்டி 5.சபர்மதி ஆசிரமம்

 பகுதி-IV

பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும் (2×8=16)

43.அ) நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூக நீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக் காட்டவும்?

  அல்லது

ஆ)தமிழ்நாட்டினுடைய சமூக மாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்?

 44.கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு வரைபடத்தில் கீழ்காணும் இடங்களை குறிக்கவும்.

)1) காவேரி

      2) தொட்டபெட்டா

      3) சென்னை

      4) பழவேற்காடு

      5) முதுமலை வனவிலங்கு சரணாலயம்

     6) ரப்பர் விளையும் பகுதி

     7 ) நாகப்பட்டினம்

    8 ) சாத்தனூர்

)1) செம்பரம்பாக்கம் ஏரி

      2) முல்லைப்பெரியாறு அணை

      3) தூத்துக்குடி

      4) மதுரை

      5) காபி விளையும் பகுதி

      6) மேகமலை வனவிலங்கு சரணாலயம்

      7) தாமிரபரணி

      8) ஏலகிரி குன்றுகள்



மூன்றாம் திருப்புதல் தேர்வு 2022 வினாத்தாள் pdf download- click here

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்