Ad Code

Ticker

6/recent/ticker-posts

டெல்லி சுல்தானியம்|lesson plan

 

பாட முன்னறிவு / ஊக்கமளித்தல்

கஜினி மாமூதுவின் சோமநாதபுர தாக்குதலுக்குப்பின் அரேபியர்களின் கவனம் இந்தியாவின் மீது திரும்பியதையும் அவர்கள் எவ்வாறு ஆட்சியை நிலைநாட்டினார்கள் என்பதை எடுத்துக்கூறுதல்.

பிருத்திவிராஜ் சௌகான் கதையை கூறி, இந்திய அரசர்களிடையே ஒற்றுமையின்மையின் காரணமாக இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் எவ்வாறு ஏற்பட்டது என்பதை கூறுதல்.

கற்றல் நோக்கங்கள்

டெல்லி சுல்தானியத்தில் அடிமை வம்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை மாணவர்களுக்கு அறியச் செய்தல்.

அடிமை வம்சத்தில் ஆட்சி செய்த அரசர்களால் கட்டப்பட்ட கட்டிடக்கலை பற்றி அறியச் செய்தல்.

அடிமை வம்சத்தின் வீழ்ச்சிக்கான காரணங்களை புரிந்துக்கொள்ளல்.

கற்றலின் விளைவுகள்

LO No: 716,717

இடைக்கால இந்தியாவில் பல இடங்களில் வரலாற்று வளர்ச்சியை தொடர்புபடுத்துகிறார்.

பல்வேறு விதமான பேரரசுகளால் கட்டுப்படுத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையால் வட இந்தியாவை தன்னுடன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதை விளக்குதல்.

அறிமுகம்




  1. இப்படத்தை பார்த்தால் என்ன தோன்றுகிறது?
  2. இது எங்கு உள்ளது?
  3. இதை கட்டியது யார் என்று உனக்கு தொரியுமா?

போன்ற வினாக்களை கேட்டு மாணவர்களை ஆயத்தப்படுத்துதல்


கருத்து வரைபடம்



விளக்குதல்

இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி முகமது கோரியால் நிறுவப்பட்டது. குத்புதீன் ஐபக் அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார். அவருடைய மருமகன் இல்துமிஷ் அதனை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்தினார். இல்துமிஷின் மகளான ரஸியா தைரியமிக்க போராளியும் மிகச்சிறந்த நிர்வாகியும் ஆவார்

ஆட்சி: தில்லி சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் ஆட்சியில் துருக்கி ஆட்சியை ஒத்தநிலையில் இருந்தது. படைபலம் இராஜ்ஜியத்தின் முதுகெலும்பாக இருந்தது. சுல்தான்கள் முழுமையான அதிகாரம் படைத்தவர்களாக இருந்தார்கள். பால்பன் என்ற சுல்தான் தான் கடவுளின் பிரதிநிதி, கடவுளுக்கு அல்லாமல் வேறு யாருக்கும் தலைவணங்கமாட்டேன் என்று கூறினார். தில்லி சுல்தான்கள் உள்நாட்டு அரசர்களின் பலமான எதிர்ப்பை தொடர்ந்து எதிர்க்க வேண்டி இருந்தது.
சிற்பக்கலை மற்றும் இலக்கியம்: தில்லி சுல்தான்களின் காலத்து முக்கிய சிற்பக் கலைகள் என்றால் புகழ்வாய்ந்த குதுப்மினார் (71 மீட்டர் உயரம்) , அலை தர்வாஜா என்ற அழகான நுழைவாயில், கவ்வத்வுல் மசூதி மற்றும் சிறிகோட்டை. இதே காலத்தில் உருது மொழி உருவானது. அமீர் குஸ்ரு மற்றும் அமீர் ஹசன் பாரசீக மொழியின் புகழ்பெற்ற  கவிஞர்கள். ராமானந்தா,கபீரா,ராயிதாசர் மற்றும் மீரா இந்தக் காலத்தில் அருத்தொண்டர்களாக இருந்தனர்.
பொருளாதாரம்: விவசாயிகளின் மீதான நிலவரி அதிகமாக இருந்தது. முகமது பின் துக்ளக் வரியை இன்னும் அதிகப்படுத்தியது மட்டுமில்லாமல், அதை கட்டாயப்படுத்தி வசூலித்தார். இதன் விளைவாக விவசாயிகள் எல்லா இடங்களிலும் கலகத்தில் ஈடுபட்டனர். நெசவு அந்தகாலத்து பெரிய தொழிலாக இருந்தது. நகரப்பகுதிகளில் கட்டிட கட்டுமானப் பணிகள் துரிதமாக நடந்தன. இது அதிக அளவில் வேலை வாய்ப்பை அளித்தது. சுல்தான்கள் முக்கியமாக போர்க்குதிரைகளை இறக்குமதி செய்தார்கள்
கீழ்கண்ட செயல்பாடுகள் மூலம் மாணவர்களுக்கு பாடத்தை விளக்கி கூறுதல். 
 
செயல்பாடு – 1 
 
திரையில் காண்பிக்கும் இந்திய வரைபடத்தின் மூலம் அடிமை வம்சம் ஆட்சி செய்த பகுதிகளை சுட்டிக்காட்ட செய்தல் 



 செயல்பாடு – 2

 அடிமை வம்சத்தை ஆட்சி செய்த முதல் பெண்மணி இரஸ்ஸியா பேகம் கதாபாத்திரத்தை நடித்துக்காட்டி விளக்குதல்.

 செயல்பாடு – 3

 அடிமை வம்சம் கட்டிடங்கள் திரையில் காண்பிக்கும் போது அதை யார்? யார்? கட்டினார்கள் என்பதை மாணவர்கள் கூறச் செய்தல். செ

செயல்பாடு – 4

 விளையாட்டு அடிமை வம்ச அரசர்களின் பெயர்களை சொல்லும் போது மாணவர்கள் அனைவருக்கும் எழுந்து நிற்கும் படியும், மற்ற வம்சத்தை சேர்ந்த அரசர்களின் பெயர்களை கூறும் போது உட்கார்ந்திருக்க வேண்டும், மாற்றி செய்யும் போது மாணவர்கள் விளையாட்டிலிருந்து நீக்கப்படுவர்

ஊடாடுதல்

ஆசிரியர் மாணவர்களிடம் சந்தேகங்களை கோட்குமாறு அறிவுறுத்துதல் மற்றும் சில வினாக்களை கேட்டு கலந்துரையாடுதல்.

மீள்பார்வை

அடிமை வம்சம்குத்புதீன் ஐபெக்இல்துமிஷ்ரஸ்ஸியாகியாசுதீன் பால்பன்
ஆண்டுகள்1206-12101210-12361236-12401266-1287
சிறப்புகள்
  • அடிமை வம்சத்தை தோற்றுவித்தவர்.
  • குதுப்மினாருக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ”சாகல்கானி” அல்லது நாற்பதின்மர் குழுவை ஏற்படுத்தினார்.
  • குதுப்மினாரைக் கட்டி முடித்தார்.
  • இவர் இல்துமிஷின் மகள்.
  • முதல் பெண் சுல்தான்.
  • ”நாற்பதின்மர்” குழுவை ஒழித்தார்.
  • கவிஞர் அமிர் குஸ்ருவை ஆதரித்தார்.

மதிப்பீடு

LOT – குத்புதீன் ஐபெக் ___________ யை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்.

ரஸ்ஸியா சுல்தான் ஆட்சிக்கு வந்த ஆண்டு_____________.

MOT – அடிமை வம்சத்தின் கடைசி மன்னர் கைகுபாத் யாரால்? எதற்காக? கொல்லப்பட்டார்.

அடிமை வம்சத்திற்கு பிறகு டெல்லியை ஆட்சி செய்த வம்சம்_______________.

HOT – குத்புதீன் ஐபெக் 20 வருடம் தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

இந்தியாவில் அடிமை வம்சம் ஏற்படுத்திய தாக்கத்தை பட்டியலிடுக.

எதற்காக குத்புதீன் ஐபெக் குதுப்பினாரைக் கட்டினார்?

தொடர்பணி / ஒப்படைப்பு

இந்திய வரைபடத்தில் டெல்லி சுல்தானியர்கள் ஆட்சி செய்த பகுதிகளை வண்ணமிட்டு மாணவர்களை குறித்து வரச் சொல்லுதல்.

குதுப்மினார் மாதிரியை உருவாக்கி வரச்சொல்லுதல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்