1) சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக
1. சிம்பன்ஸி
2.குதிரை மற்றும் இரும்பு
3. கவசம்
4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
5. சராசரி
2) கோடிட்ட இடங்களை நிரப்புக
6. பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் ______________ எனப்படும்.
விடை : இடைக்காலம்
7. எகிப்தியர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய உருவ எழுத்துகள் சார்ந்த முறை _________________ ஆகும்.
விடை : ஹைராேகிளிபிக் (சித்திர எழுத்து முறை)
8. ஹரப்பா நாகரிகம் நிலவிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானைகளின் மீதுள்ள ____________ உருவங்களும் ஓவியங்களும் அவர்களின் கலைத்திறனை உணர்த்துகின்றன.
விடை : சுடுமண்
9. இந்திய அரசியலைமப்பு இறுதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்டு _____________________
விடை : 1949
10. An Uncertain Glory என்ற புத்தகத்தை எழுதியவர் ……………………………………………
விடை : அமர்த்தியா சென்
3)பொருத்துக
11) நுண் கற்காலம்
12) பசுபிக் பெருங்கடல்
13) கீற்று மேகம்
14) புதுப்பிக்கத்தக்க வளங்கள்
15)18
4) சுருக்கமான விடை தருக
16. சிந்தனைகளின் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது.
- உலகம் மற்றும் பேரண்டம் குறித்து புரிந்துமு கொள்ளவும் அவைப்பற்றிய அறிவை சேகரித்து விளக்கவும் இயன்ற ஒரே உயிரினம் மானுட இனம் மட்டும் தான்.
- பரிணாமா வளர்ச்சியில் அறிவாற்றலுடன் இயற்கை, தம்மை சுற்றியுள்ள உயிரினங்கள் குறித்து சிந்தித்து கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
- இயற்கை பற்றிய அவனது சுயபுரிதலே, இயற்கையை வழிபட வைத்தது.
17.சிகுரட்களின் முக்கியமான பண்புகளை கூறுக
- பண்டைய மெசபடோமியாவின் நகரின் மையத்தில் மேடை மீது சிகுராட் என்னும் கோவில்கள் கட்டப்பட்டன.
- கோவிலைச் சுற்றி சடங்குகளுக்கான தாழ்பாரங்கள், புனித இடங்கள் ஆண் மற்றும் பெண் மதருமார்களின் கல்லறைகள் சடங்குகளுக்கான விருந்து அரங்குகள் போன்ற வளாகங்கள் இருந்தன.
18. புவியின் உள் அடுக்குகள் யாவை?
புவியின் உள் அடுக்குகள்
- மேலோடு
- கவசம்
- கருவம்
19. உயிரினச் சிதைவு என்றால் என்ன?
- மண்புழுக்களாலும், விலங்கினங்களாலும், மனித செயல்பாடுகளினாலும் பாறைகள் சிதைவுறுதலே உயிரினச்சிதைவு எனப்படும்.
- எ.கா. தாவரங்களின் வேர்கள் பாறைகளின் விரிசல்களின் வழியே ஊடுருவிச் சென்று பாறைகளை விரிவடையச் செய்வது.
20. ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையைக் கூறு
“மக்களால் மக்களுக்காக மக்கள் நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.
21. நேரடி மக்களாட்சி மற்றும் மறைமுக மக்களாட்சியினை வேறுபடுத்துக.
நேரடி மக்களாட்சி | மறைமுக மக்களாட்சி |
1 பொது விவகாரங்களில் மக்களே நேரடியாக முடிவெடுக்கக் கூடிய அரசு முறை நேரடி மக்களாட்சி எனப்படுகிறது. | பொது விவகாரங்களில் மக்கள் தங்களது விருப்பத்தைக் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் மூலம் வெளிப்படுத்தும் அரசு முறை மறைமுக மக்களாட்சி எனப்படுகிறது |
2 எ.கா: பண்டைய கிரேக்க அரசுகள் சுவிட்சர்லாந்து | எ.கா: இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
22. மேம்பாடு என்பதற்கு நீங்கள் என்ன பாெருள் காெள்கிறீர்கள்?
- மேம்பாடு என்னும் சொல், ஒரு குறிப்பிட்டத் துறையின் அல்லது ஒரு குறிப்பிட்ட நபரின் மேம்பாட்டைக் குறக்கிறது.
- ஒரு நாட்ட்டின் பொருளாதார முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார மேம்பாடு என்று அறியப்படுகிறது
23. சூரிய சக்தி என்றால் என்ன?
சூரிய சக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவது ஆகும்.
5) விரிவான விடையளி
24. விவசாயம், பானை செய்தல், உலோகக்கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழந்த வளரச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் உறுதிப்படுத்தவும்.
மண்பாண்டங்கள்
- கருப்பு மற்றும் சிகப்பு நிறங்களைக் கொண்ட மண்பாண்டங்களைப் பயன்படுத்தினார்
- மண்பாண்டங்கள் சமைக்க, பொருட்களை சேமிக்க, உணவை சாப்பிட பயன்பட்டன.
- மண்பாண்டங்கள் உள்ளே கருப்பாகவும், வெளியே சிவப்பாகவும் மற்றும் வெளிப்புறம் பளபளப்பாகவும் இருந்தன.
உலோகக் கருவிகள்
- ஈமப்பொருள்களாக ஏராளமான இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டன.
- வாள்,குறுவாள், கோடாரிகள், உளிகள், விளக்குகள், முக்காலிகள் பயன்படுத்தப்பட்டன.
- இதில் சிலவற்றிற்கு எலும்பு அல்லது மரத்திலான கைப்பிடி பொருத்தப்பட்டிருந்தது.
- இரும்புக்கருவிகள் வேளாண்மைக்கும், வேட்டையாடவும், உணவு சேகரிக்கவும், போர்களுக்கும் பயன்பட்டன.
- வெண்கலக் கிண்ணங்கள், வெண்கல முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும்
- இரும்புக்கால மக்கள் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பையும் மேற்கொண்டனர்.
- திணையும் நெல்லும்பயிரிடப்பட்டன.
- பாசன நிர்வாகம் மேம்பட்டது.
- ஆற்றுப் படுகைகளில் பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
26. புவி அமைப்பை விவரி.
புவியின் அமைப்பு
புவியின் உள்ளமைப்பு மேலோடு, கவசம், கருவம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மேலோடு
- நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவிமேலோடு என்கிறோம். புவியின் தோல் போன்று புவி மேலோடு உள்ளது. இது 5 முதல் 30 கிலோமீட்டர் வரை பரவியுள்ளது.
- புவிமேலோடு திடமாகவும் இறுக்கமாகவும் உள்ளது. புவிமேலோட்டினை கண்ட மேலோடு மற்றும கடலடி மேலோடு என்று இரண்டாகப் பிரிக்கலாம்.
- இங்கு சிலிகா (Si), அலுமினியம் (Al) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் (SIAL) என அழைக்கப்படுகிறது.
கவசம்
- புவிமேலோட்டிற்கு கீழேயுள்ள பகுதி கவசம் எனப்படும். இதன் தடிமன் சுமார் 2900 கிலோமீட்டர் ஆகும்.
- இவ்வடுக்கில் சிலிகா (Si) மக்னீசியம் (Mg) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு சிமா என அழைக்கப்படுகிறது.
- கவசத்தின் மேற்பகுதியில் பாறைகள் திடமாகவும் கீழ்ப்பகுதியல் உருகிய நிலையிலும் காணப்படுகின்றது. உருகிய நிலையில் உள் பாறைக் குழம்பு “மாக்மா” என அழைக்கப்படுகிறது
கருவம்
- புவியின் கவசத்திற்கு கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படும். இது மிக வெப்பமானது.
- கருவத்தில் நிக்கலும் (Ni) இரும்பும் (Fe) அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு நைஃப் (NIFE) என அழைக்கப்படுகிறது.
- கருவம் இரண்டு அடுக்குகளை கொண்டது. உட்கருவம் திட நிலையிலும் வெளிக்கருவம் திரவ நிலையிலும் உள்ளது
27. பனியாறு என்றால் என்ன? அதன் வகைகளை விளக்குக
- பனிக்குவியல் மண்டலத்திலிருந்து பெரிய அளவிலான பனிக்கட்டிகள் மெதுவாக நகர்வதே பனியாறு எனப்படுகிறது.
- பெரும் பரப்பளவில் உள்ள பனிக்கட்டிகள் அதன் அடிப்பாகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் வெப்பம் உருவாகி பனிகட்டியின் அடியில் உருகி மெல்ல நகரத் தொடங்குகிறது.
- இந்நகர்விற்கான காரணங்கள் சரிவு, பனிக்கட்டியின் கன அளவு, அடர்த்தி, பயனிக்கும் நித்தின் உராயும் தன்மை மற்றும் வெப்பம் போன்றவை ஆகும்.
பனியாறுகளின் வகைகள்
பனியாறுகள் அவை உற்பத்தியாகும் இடங்களை அடிப்படையாக கொண்டு
- கண்டப் பனியாறுகள்
- பள்ளத்தாக்கு பனியாறுகள்
கண்டப் பனியாறுகள்
கண்டங்களில் அடர்ந்த பனியால் மூடப்பட்டிருக்கும் பரந்த நிலப்பரப்பு கண்டப் பனியாறு எனப்படுகிறது.
பள்ளத்தாக்கு பனியாறுகள்
பனிமூடிய மலைத்தொடர்களில் இருந்து உற்பத்தியாகும் பனியாறு பள்ளத்தாக்கு பனியாறு எனப்படுகிறது.
4. காற்று படியவைத்தல் செயலினை விவரி
மணல்மேடு
பாலைவனங்களில் வீசும் மணல் புயல் மிக மிக அதிக அளவில் மணலைக் கடத்துகின்றன. காற்றின் வேகம் குறையும் போது கடத்தப்பட்ட படிவுகள் மிக அதிக அளவில் குன்று போல் படிய வைக்கப்படுகின்றன. இவ்வாறு குன்று அல்லது மேடாக காணப்படும் நிலத்தோற்றம் மணல் மேடு எனப்படுகிறது.
இதன் வகைகள்
- பர்கான்
- குறுக்கு மணல்மேடு
- நீண்ட மணல்மேடு
- காற்றடி வண்டல்
i. பர்கான்
பிறை வடித்தில் தனித்துக காணப்படும் மணல் மேடுகள் பர்கான்கள் என
அழைக்கப்படுகின்றன. அவை காற்று வீசும் பக்கத்தில் மென் சரிவையும், காற்று
வீசும் திசைக்கு எதிர் பக்கத்தில் வன்சரிவையும் காெண்டிருககும்.
ii. குறுக்கு மணல்மேடு
குறுக்கு மணல்மேடுகள் சமச்சீரற்ற வடித்தில் காணப்படும். காற்று வேகமாகவும், மிதமாகவும் மாறி, மாறி ஒரே திசையில் வீசும் போது குறுக்கு மணல் மேடுகள் உருவாகின்றன.
iii. நீண்ட மணல்மேடு
நீண்ட மணல்மேடுகள் குறுகிய மணற் தொடர்களாக நீண்டு காணப்படும். இம்மணற் தொடர்கள் காற்று வீசும் திசைக்கு இணையாக காணப்படும். இவை சகாராவில் செய்ப்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
iv. காற்றடி வண்டல்
பரந்த பிரதேசத்தில் படிய வைக்கப்படும் மென்மையான மற்றும் நுண்ணிய படிவுகளே காற்றடி வண்டல் எனப்படும்
28. வளிமண்டலத்தின் அமைப்பை பற்றி ஒரு பத்தியில் எழுதுக
வளிமண்டலம்
புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கபடுகிறது. புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசைேய காரணமாகும்.
வளிமண்டல கூட்டமைப்பு
வாயுக்கள், நீராவி மற்றும் தூசுக்கள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.
வளிமண்டல வாயுக்கள்
ஆக்சிஜன் (21%) நைட்ரஜன் (76%) ஆர்கான் (0.93%) கார்பன்-டை-ஆக்ஸைடு (0.03%) நியான், ஹீலியம், ஓசோன், ஹைட்ரஜன், கிரிப்டான், செனான், மீதேன்
வளிமண்டலத்திலுள்ள மற்ற பொருட்கள்
நீராவி, தூசுத் துகள்கள், உப்புத் துகள்கள், மகரந்த துகள்கள், புகை, சாம்பல், எரிமலைச் சாம்பல்
வளிமண்டலத்திலுள்ள அடுக்குகள்
வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குள் உள்ளன
- கீழ் அடுக்கு
- மீள் அடுக்கு
- இடை அடுக்கு
- வெப்ப அடுக்கு
- வெளியடுக்கு
கீழ் அடுக்கு
18 கி.மீ வரை காணப்படுகிறது. இவ்வடுக்கில் தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு உயரே செல்ல செல்ல வெப்பநிலை குறையும்
மீள் அடுக்கு
கீழடுக்குக்கு மேல் உள்ள மீள் அடுக்கு. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது “ஓசோனோஸ்பியர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.
இடையடுக்கு
மீள் அடுக்குக்கு மேல் உள்ளது இடையடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகிறது. புவியிலிருந்து பெறப்படு வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான புவிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
வெப்ப அடுக்கு
இடையடுக்கு மேல் உள்ளது வெப்ப அடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. இங்கு அயனிகளும், மின்னணுக்களும் காணப்படுகின்றன.
வெளியடுக்கு
வெப்ப அடுக்கிற்கு மேல் உள்ளது வெளியடுக்கு. இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்த காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.
29. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?
இந்தியாவில் மக்களாட்சி உள்ள முக்கிய சவால்கள்
- கல்வியறிவின்மை
- வறுமை
- பாலினப் பாகுபாடு
- பிராந்தியவாதம்
- சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
- ஊழல்
- அரசியல் குற்றமயமோதல்
- அரசியல் வன்முறை
0 கருத்துகள்