Ad Code

Ticker

6/recent/ticker-posts

முதல் இடைப் பருவத் தேர்வு விடைகள்|ஏழாம் வகுப்பு|சமூக அறிவியல்

பகுதி-1

சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக

1. இபன் பதூதா

2. முதலாம் நாகபட்டர்

3. விஜயாலயன்

4. நிக்கல் மற்றும் ஃபெர்ரஸ்

5. சீனா

6.மங்கோலியர்கள்

7. 18

8. சீனா

9.பயன்பாட்டை உருவாக்குதல்

10.நிலம், உழைப்பு

 பகுதி-II

IIகோடிட்ட இடங்களை நிரப்புக

11.ஜிட்டல்

12. விக்கிரமசீலா பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவர் _____________ ஆவார்.

விடை : தர்மபாலர்

13. செயல்படும் எரிமலைக்கு உதாரணம் _______________ ஆகும்.

விடை : ஸ்ட்ராம்போலி

14. தேர்தலில் போட்டியிடும் உரிமை என்பது ___________ உரிமை ஆகும்.

விடை : அடிப்படை சமத்துவம்

15. __________ என்பது மனித உற்பத்தியில் ஓர் இரு பொருள்.

விடை : நுகர்வோர்

பகுதி-III

IIIபொருத்துக

16.அபுகுன்று

17.பாண்டியர்கள் தலைநகர்

18.காயல்

19.சுதந்திரமான நியாயமான தேர்தல்

20.மீன்பிடித்தல், சுரங்க தொழில்

பகுதி-IV

21. ‘தசுக்’ எனும் வார்த்தையின் பொருள் யாது?

வாழ்க்கை நினைவுகள்

22. பாலர் அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

கோபாலர்

23. சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?

சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

24. அரித்தல் வரையறு.

நீர், காற்று, பனி மற்றும் கடல் அலைகள் என பல்வகைப்பட்ட காரணிகளால் புவியின் மேற்பரப்பு அடித்துச் செல்லப்படுவதை அரித்தல் என்கிறோம்

25. சமத்துவம் என்றால் என்ன?

சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.

26.மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.

  • ஒரு கட்சி முறை
  • இரு கட்சி முறை
  • பல கட்சி முறை

 27.உற்பத்தி என்றால் என்ன?

நுகர்வோரின் பயன்பாட்டுக்காக, மூலப்பொருளையும், மூலப்பொருள் அல்லாதனவற்றையும் ஒன்றிணைத்து, ஒரு பொருளை உருவாக்கும் செயலே உற்பத்தியாகும்

 28)சிந்துவை அரேபியர்கள் கைப்பற்றியதன் தாக்கங்கள் யாவை



29. எரிமலை வெடிப்பின் அடிப்படையில் அதன் வகைகளை விளக்குக.

எரிமலைகளின் வடிவத்தை கொண்டு அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம்.

  1. கேடய எரிமலை
  2. தழல் கூம்பு எரிமலை
  3. பல்சிட்டக் கூம்பு எரிமலை

1. கேடய எரிமலை :

  • சிலிகாவின் அளவு குறைந்து மிக மெதுவாக எரிமலை குழம்பு வெளியேறும்போது கேடய எரிமலை உருவாகின்றது. இவை அகன்று மென்மையான சரிவுகளைக் கொண்ட கூம்பு வடிவத்தில் காணப்படும்.
  • ஹவாய் தீவுகளிலுள்ள எரிமலைக் குன்றுகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.

2. தழல் கூம்பு எரிமலை :

  • மிகுந்த சிலிகா கொண்ட மாக்மாவை உள்ளிருக்கும் வாயுக்கள் தடுக்கும்போது ஏற்படும் அதிக அழுத்தத்தினால் வாயுக்களும், சாம்பல் துகள் சேர்ந்த ஓர் கலவை மிகுந்த சத்தத்துடன் வளிமண்டத்தில், பலநூறு கிலோ மீட்டர் உயரத்திற்கு வெடித்து சிதறும்போது, தழல் கூம்பு எரிமலைகள் உருவாகின்றன. இவ்வகை எரிமலைகள் தழல் கூம்பு வடிவத்தை பெறுகின்றன.
  • மெக்ஸிகோ மற்றும் மத்திய அமெரிக்கா எரிமலைகள் இவ்வகையை சார்ந்தவையாகும்.

3. பல்சிட்டக் கூம்பு எரிமலை :

  • லாவா, பல்சிட்டம், எரிமலை சாம்பல் ஆகியவை மாறி மாறி அடுக்குகளாக படியும்போது பல்சிட்டக் கூம்பு எரிமலைகள் உருவெடுக்கின்றன. இவ்வகை எரிமலைகளை அடுக்கு எரிமலைகள் எனவும் அழைக்கலாம்.
  • அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரத்தின் அருகே உள்ள செயின்ட் ஹெலன் எரிமலை பல்சிட்டக் கூம்பு எரிமலைக்கு எடுத்துக்காட்டாகும்.

30. அரசியல் சமத்துவம் என்றால் என்ன?

இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன.

அவை பின்வருமாறு:

  1. வாக்களிக்கும் உரிமை
  2. பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை
  3. அரசை விமர்சனம் செய்யும் உரிமை
  • குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான
    வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும்
  • இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
  • 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான்பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம்.
  • நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.

 

31. உற்பத்தியின் வகைகளை விரிவாக எழுதுக

உற்பத்தியில் மூவகை உள்ளன. அவையாவன:

  1. முதன்மை நிலை உற்பத்தி
  2. இரண்டாம் நிலை உற்பத்தி
  3. மூன்றாம் நிலை உற்பத்தி

1. முதன்மை நிலை உற்பத்தி

  • இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களை, நேரடியாகப் பயன்படுத்திச் செய்கின்ற செயல்பாடுகளுக்குட்பட்ட நிலையை முதன்மை நிலை உற்பத்தி என்கிறோம்.
  • முதன்மைநிலையில் வேளாண்மைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனை வேளாண்மைத் துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
  • வேளாண்மையும் அதனுடன் தொடர்புடைய செயல்கள், வனங்களைப் பாதுகாத்தல், மீன் பிடித்தல், சுரங்கத்தொழில், எண்ணெய் வளங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற செயல்பாடுகள் முதன்மை நிலை உற்பத்தியுள் அடங்கும்.
  • இந்தச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள், பூமியின் மேற்பரப்பிலிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் இயற்கை வளங்களைப் பிரித்தெடுக்கின்றன.

2. இரண்டாம் நிலை உற்பத்தி

  • முதன்மை நிலையின் உற்பத்திப் பொருள்களை மூலப்பொருள்களாகப் பயன்படுத்திப் புதிய உற்பத்திப் பொருள்களாக உருவாக்கும் செயல்பாட்டை இரண்டாம் நிலை உற்பத்தி என்கிறோம்.
  • இரண்டாம் நிலையில் தொழிலுக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனைத் தொழில்துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
  • எடுத்துக்காட்டாக, மாவிலிருந்து ரொட்டி தயாரித்தல், இரும்புத் தாதுவிலிருந்து பயன்படக்கூடிய பொருள்களைத் தயாரித்தல் போன்றவற்றைக் கூறலாம்.
  • மேலும், நான்கு சக்கர வண்டிகள், ஆடைகள், இரசாயனப் பொருள்கள் போன்றவற்றைத் தயாரித்தலும் பொறியியல் துறை சார்ந்த பணிகள், கட்டடப் பணிகள் சார்ந்த தொழில்களும் இரண்டாம் நிலை உற்பத்தியுள் அடங்கும்.

3. மூன்றாம் நிலை உற்பத்தி

  • முதன்மை நிலை, இரண்டாம் நிலைகளின் உற்பத்திப் பொருள்களைச் சேகரிப்பதும் பரிமாற்றம் செய்வதும் மூன்றாம் நிலை உற்பத்தியாகும். மூன்றாம் நிலையில் சேவைக்கு முதலிடம் அளிக்கப்படுவதால், இதனைச் சேவைத்துறை உற்பத்தி எனவும் கூறுவர்.
  • சேவைத் துறை நிறுவனமானது, உற்பத்திப் பொருள்களைத் தொழில்துறை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நேரடியாக வழங்குகிறது.
  • எடுத்துக்காட்டாக வாணிகம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, செய்தித்தொடர்பு, சட்டம், நிருவாகம், கல்வி, உடல்நலப் பாதுகாப்பு போன்ற அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் சேவைத்துறை உற்பத்தி நிறுவனங்களாக விளங்குகின்றன.
32) இந்திய வரைபடம்


கருத்துரையிடுக

0 கருத்துகள்