Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஐரோப்பியர்களின் வருகை 8th standard notes of lesson

 ஐரோப்பியர்களின் வருகை


கற்றல் விளைவுகள்




SS 810-பல்வேறு சான்றுகளைப் பயன்படுத்தி பண்டைய, இடைக்கால, நவீன இந்தியாவை வேறுபடுத்துதல்.

SS 811-ஆங்கிலேயக் கிழக்கிந்திய நிறுவனம் எவ்வாறு ஆதிக்கம் மிக்க சக்தியாக மாறியது என்பதை விளக்குதல்.

கற்றலி நோக்கங்கள்


*நவீன இந்திய வரலாற்று ஆதாரங்களின் வகைகள் பற்றி அறிதல்

*இந்தியாவில் போர்ச்சுகீசியரின் வர்த்தகத்தை புரிந்துகொள்ளுதல்

*இந்தியாவில் போர்ச்சுக்கீசியர்கள் மற்றும் டச்சுக்காரர்கள் ஆதிக்கத் தாக்கத்தைப் புரிந்து கொள்ளுதல்

*டென்மார்க்கின் காலனி குடியேற்றங்களைப் பற்றி அறிதல்.

*ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்களின் வருகை மற்றும் நிலைப்பாடுகளை அறிதல்

அறிமுகம்


இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர் பற்றி எடுத்துக் கூறுதல்.

அவர்கள் எந்தெந்த நாடுகளில் இருந்து வந்தனர். அவர்களின் நோக்கங்கள் என்ன? அவர்கள் வருகையால் ஏற்பட்ட தாக்கங்கள் யாவை என்பனவற்றை சுருக்கமாகக் கூறுதல்.

வாசித்தல்


பாடப்பகுதியை மாணவர்களை வாசிக்கச் செய்து கடினமான சொற்களைக் கண்டறியச் செய்தல். பின் கடினமான சொற்களுக்கு விளக்கமளித்தல்

மன வரைபடம் 

ஐரோப்பியர்களின் வருகை 8th standard notes of lesson

தொகுத்தல்


* தமிழ் வரலாற்றுக் குறிப்பு ஆவணங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு பெயர் ஆனந்தரங்கம்.

*தமிழ்நாடு ஆவணக் காப்பகம் (TNA) என அழைக்கப்படும் சென்னை பதிவாளர் அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது.

*போர்ச்சுக்கீசிய இளவரசர் ஹென்றி பொதுவாக "மாலுமி ஹென்றி'' என அழைக்கப்படுகிறார். பிரான்சிஸ்-டி-அல்மெய்டா 'நீலநீர்க் கொள்கை'யைப் பின்பற்றினார்.


*1602-இல் நெதர்லாந்து ஐக்கியக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.

* டச்சுக்காரர்களின் தலைமையகம் பழவேற்காடு.

* 1600-ஆம் ஆண்டு ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நிறுவப்பட்டது.

*முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் சூரத்தில் வர்த்தக மையம் அமைக்க ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு 1613 இல் அனுமதி வழங்கினார்.

* பிரெஞ்சு கிழக்கிந்தியக் உருவாக்கப்பட்டது. கம்பெனி 1664-கால்பர்ட் என்பவரால்

* பாண்டிச்சேரி பிரான்சின் மிக முக்கியமான மற்றும் வளமான குடியேற்றமாக விளங்கியது.

வலுவூட்டல்


QR code மூலம் பாடத்தை மீண்டும் விளக்குதல்.

மதிப்பீடு


LOT


 கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கியவர்

2. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய அதிகாரத்தை உண்மையில் நிறுவியவர்

MOT

 சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 1453-ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிள் யாரால் கைப்பற்றப்பட்டது?

அ) பிரெஞ்சுக் காரர்கள்

ஆ) துருக்கியர்

இ) டச்சுக்காரர்கள

ஈ) ஆங்கிலேயர்

2. சர் வில்லியம் ஹாக்கின்ஸ்

நாட்டைச் சேர்ந்தவர்.

அ) போர்ச்சுக்கல்

ஆ) ஸ்பெயின்

இ) இங்கிலாந்து

ஈ) பிரான்ஸ்

HOT 


பின்வரும் கேள்விக்கு விடையளிக்கவும்.

ஆங்கிலேயர்கள் எவ்வாறு இந்தியாவில் தங்களது வர்த்தக மையங்களை நிறுவினர்?

குறைதீர் கற்பித்தல்


மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திறன் மிகுந்த மாணவர்களைக் கொண்டு பரிடப்பகுதியை விளக்கச் செய்தல்.

எழுதுதல்


பாடத்தின் இறுதியிலுள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வரச் சொல்லுதல்.

 செயல்பாடு


நவீன இந்திய ஆதாரங்களைத் தொகுத்து ஒரு அட்டவணைத் தயார் செய்து வரச் செய்தல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்