I சரியான விடையினை தேர்ந்தெடுத்து எழுதுக
1. இங்கிலாந்து
2. 1757
3.கரிசல்மண்
4.2.8%
5.முதலமைச்சர்
6) குடியரசு தலைவர்
7) உதயகுமார்
II.குறுவினாக்களுக்கு விடையளி
8. இந்தியாவில் டச்சுக்காரர்களால் நிறுவப்பட்ட முக்கிய வர்த்தக மையங்களின் பெயரை எழுதுக.
- பழவவேற்காடு
- சூரத்
- சின்சுரா
- காசிம்பஜார்
- பாட்னா
- நாகப்பட்டினம்
- பாலசோர்
- கொச்சின்
9. துணைப்படைத் திட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக
- ஹைதரபாத்
- தஞ்சாவூர்
- அயோத்தி
- பேஷ்வா
- போன்ஸ்லே
- குவாலியர்
- இந்தூர்
- ஜெய்பூர்
- உதய்பூர்
- ஜோத்பூர்
10.மண்ணின் வகைகளைக் கூறுக.
- வண்டல் மண்
- கரிசல் மண்
- செம்மண்
- சரளை மண்
- மலை மண்
- பாலை மண்
11.காலநிலை – வரையறு
- காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும்.
- இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும்.
12.மாநில சட்டமன்றத்தின் இரு அவைகளின் பெயரை எழுதுக.
- மேலவை – சட்டமன்ற மேலவை
- கீழவை – சட்ட மன்ற பேரவை
13.நற்குடிமகனின் மூன்று பண்புகளை குறிப்பிடுக
- அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடத்தல்
- சட்டத்துக்கு கீழ்படிதல்
- சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல் மற்றும் குடிமைப் பணியை செயலாற்றுதல்.
- நற்பண்புகளையும், நீதியையும் நிலைநாட்டுதல்
- வேற்றுமைகளை மறந்து நடத்தல்
14.கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?
கருப்பு பணம் என்பது அரசாங்கத்திற்கு செலுத்தாத எந்தவொரு பணத்தையும் குறிக்கும்
15.கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. இந்தியாவின் தேசிய ஆவணக்காப்பகம் (NAI) __________ ல் அமைந்துள்ளது.
விடை : புது தில்லியில்
2. மாப்ளா கலகம் _________ல் நடைபெற்றது.
விடை : கேரளாவில்
3. புவியின் தோல்’ என்று ______________ அழைக்கப்படுகிறது
விடை : மண்
4. நீர்ச் சுழற்சியில் __________ நிலைகள் உள்ளன.
விடை : மூன்று
5. ஆளுநரின் பதவிக்காலம் __________ ஆண்டுகள் ஆகும்.
விடை : 5
16.பொருத்துக
1.1600
2.இண்டிகோ விவசாயிகளின் துயரம்
3.செயல்படும் எரிமலை
4.மேகங்கள்
5.உண்மையான தலைவர்
17.சரியா/தவறா
1.சரி
2.சரி
3.சரி
4.தவறு
5.சரி
19. பாறைகளை வகைப்படுத்தி விவரிக்கவும்
புவி பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
- தீப்பாறைகள் (Igneous Rocks)
- படிவுப் பாறைகள் (Sedimentary Rocks)
- உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள் (Metamorphic Rocks)
தீப்பாறைகள்
- தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு (Magma) உறைந்து உருவானதாகும்.
- இப்பாறைகளிலிருந்து மற்ற பாறைகள் உருவாகின்றதால் இவற்றை முதன்மைப் பாறைகள் (Primary Rocks) அல்லது தாய்ப் பாறைகள் (Parent Rocks) என்று அழைக்கிறோம்.
படிவுப் பாறைகள்
- படிவுப் பாறைகள் அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன.
- இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன.
- பல்வேறு காலக்கட்டத்தில் படியவைக்கப்பட்டபொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் (Stratified Rocks) என அழைக்கப்படுகின்றன.
உருமாறிய பாறைகள்
- அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
20. முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி?
- முதலமைச்சர் மாநிலத்தின் தலைமை நிர்வாகி ஆவார். மாநில அரசாங்கத்தின் பல்வேறு முக்கிய முடிவுகள் அவரது தலைமையின் கீழ் எடுக்கப்படுகின்றன.
- மாநில முதலமைச்சர், அமைச்சரவையை, உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- முதலமைச்சரின் ஆலோசனையின்பெயரில் அமைச்சர்களை ஆளுநர் நியமிக்கிறார்.
- பல்வேறு துறைகளை கண்காணித்து ஆலோசனை வழங்குகிறார். மேலும் அவர் பல்வேறு துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
- முதலமைச்சர் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
- மாநில அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளில் அவரது முடிவே இறுதியாக இருக்கும்.
- மாநில அரசாங்கத்தின் உயர் பதவிகளில் நியமனம் செய்யும் முக்கிய அதிகாரத்தைக் கொண்டுள்ளார்.
- இருமுகத் தேவை பொருத்தமின்மை
- பொதுவான மதிப்பின் அளவுகோல்
- பொருட்களின் பகுபடாமை
- செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்
22.வேறுபடுத்துக.
1. உருமாறிய பாறைகள் மற்றும் படிவுப்பாறைகள்
உருமாறிய பாறைகள் | படிவுப்பாறைகள் |
அதிகவெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது. | அரிப்பு காரணிகளால் அரிக்கப்பட்டு (காற்று, நீர், பனியாறுகள்) படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட லமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் படிவுப் பாறைகள் உருவாகின்றன. |
2.காலநிலை மற்றும் வானிலை
காலநிலை | வானிலை |
காலநிலை என்பது ஒரு பகுதியின் நீண்ட நாளைய வானிலை சராசரியைக் குறிப்பதாகும். இது வளி மண்டலத்தின் வானிலைக் கூறுகளின் சராசரி தன்மையினை நீண்ட காலத்திற்கு அதாவது 35 வருடங்களுக்கு கணக்கிட்டுக் கூறுவதாகும். | வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் வளிமண்டலத்தில் நிலவும் சூரிய வெளிச்சம், வெப்பம், மேகமூட்டம், காற்றின் திசை, காற்றழுத்தம், ஈரப்பதம், மழைப்பொழிவு மற்றும் பிற கூறுகளின் தன்மைகளை குறிப்பதாகும். |
காரணம் கூறுக
1.தீப்பாறைகள் எரிமலை பகுதிகளில் காணப்படுகிறது
- தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து எரிமலை வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்த உருவானதாகும்.
- ஆகையால் தீப்பாறைகள் எரிமலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
2. உயரம் அதிகரிக்கும் பொழுது வெப்பம் குறைகிறது.
- உயரம் அதிகமுள்ள இடங்களில் காற்றழுத்தம் குறைவாக இருக்கும்.
- காற்றிலுள்ள மூலக்கூறுகளின் அளவு குறைவதால் வெப்பமும் குறைகிறது.
0 கருத்துகள்