Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஒன்பதாம் வகுப்பு|சமூக அறிவியல்|பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் ஒப்படைப்பு மார்ச் 2022

I. சுருக்கமாக விடையளி

 

1.சங்க காலம் குறித்து அறிந்துகொள் நாணயங்கள் எந்தளவுக்கு ஒரு முக்கியமான சான்றாக உள்ளன?

  • சேர, சோழ, பாண்டிய அரசர்களின் முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகின்றன.
  • ரோமானிய நாணயங்கள் சங்க கால கடல் கடந்த வணிகம் பற்றி அறிய உதவுகின்றது.

2. சங்க காலத்தில் விவசாயம் ஒரு முக்கியமான வாழ்வாதாரமாக இருந்தது. இதற்கான காரணங்களை கூறு.

  • யவனர் என்று அழைக்கப்பட்ட கிரேக்க, ரோமானிய மேற்கு ஆசிய வணிகர்கள் பழங்கால தமிழகத்துடன் வணிகத்தொடர்பு வைத்துள்ளனர்.
  • மிளகு போன்ற நறுமணப் பொருட்களும், யானைத் தந்தம், நவமணிகள் தமிழ்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
  • செங்கடல் துறைமுகங்களான பெர்னிகே, குசேர் அல் காதிம் போன்ற இடங்களில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள், சுடுமண் பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • தாய்லாந்து நாட்டில் குவான்லுக் பாட் என்ற இடத்தில் அரிய கல் ஒன்று கிடைத்துள்ளது.

 

3.வளிமண்டலம் – வரையறு.

  • புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்றுப் படலம் வளிமண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
  • புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசையே காரணமாகும்
  • வாயுக்கள், நீராவி, மற்றும் தூசுகள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.

4.காலநிதலதயப் பாதிக்கும் காரணிகள் யாதவ?

  1. நில நடுக்கோட்டிலிருந்து தூரம்
  2. கடல் மட்டத்திலிருந்து உயரம்
  3. கடலிலிருந்து தூரம்
  4. வீசும் காற்றின் தன்மை
  5. மலைகளின் இடையூறு
  6. மேகமூட்டம்
  7. கடல் நீரோட்டங்கள்
  8. இயற்கைத் தாவரங்கள்.

 5.வெப்பத்தலைகீழ் மாற்றம் – சிறு குறிப்பு வரைக

ஒவ்வோரு 165 மீட்டர் உயரத்திற்கும் 1oC வெப்பநிலை குறையும். இதனை வெப்பத்தலைகீழ் மாற்றம் என்கிறோம்.

 6.வானிலை மற்றும் காலநிலை

வானிலை காலநிலை
1. ஒரே நாளில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படும் வளிமண்ல மாற்றத்தைப் பற்றி அறிவது வானிலை ஆகும் நீண்ட காலத்திற்கு மிகப் பரந்த நிலப்பரப்பில் ஏற்படும் வானிலையின் சராசரியே காலநிலை ஆகும்
2. ஓவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு நாளுக்கும் அடிக்கடி மாறக்கூடியதாக உள்ளது. ஏறக்குறைய மாறுதலுக்கு உட்படாமல் இருக்கிறது.
3. வானிலையைப் பற்றிய படிப்பு வானிலையியல் ஆகும்.காலநிலையைப் பற்றிய படிப்பு காலநிலையியல் ஆகும்.

 

7. இந்தியாவிலுள்ள தேர்தல் முறைப்பற்றி விவரி

  • இந்திய தேர்தல் முறை, இங்கிலாந்தில் பின்பற்றப்படும் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகின்றது.
  • தேர்தல் ஆணையம் தலைமை ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களை உள்ளடக்கியது.
  • தேர்தல் ஆணையம் நாட்டின் சுதந்திரமான, நியாயமான தேர்தலை பாராளுமன்றத்திற்கம், சட்டசபைகளுக்கும் நடத்துகிறது.

8. அரசியல் கட்சி என்பதன் பொருள் விளக்குக

  • ஒர் அரசியில் கட்சி என்பது அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நிகழ்ச்சி நிரல்களையும், குறிப்பிட்டக் கொள்கைகளையும் கொண்ட மக்கள் குழுவின் அமைப்பாகும்.
  • தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எனும் மூன்று அங்கங்களை ஒரு அரசியல் கட்சி பெற்றுள்ளது.

 

 9.இரு கட்சி ஆட்சி முறை மற்றும் பல கட்சி ஆட்சி முறையினை வேறுபடுத்துக.

இரு கட்சி ஆட்சி முறை பல கட்சி ஆட்சி முறை
இரு கட்சி ஆட்சி முறையில் இரு முக்கிய கட்சிகள் மட்டும பங்கு பெறுகின்றன. பல கட்சி ஆட்சி முறையில் இரண்டிற்கும் மேற்பட்ட பல கட்சிகள் பங்கு பெறுகின்றன
எ.கா: அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்துஎ.கா: இந்தியா, இலங்கை, பிரான்ஸ்

10. பாெருளாதாரத்திலுள்ள மூன்று துறைகள் யாவை?

  1. முதன்மைத்துறை – விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு
  2. இரண்டாம் துறை – உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம்
  3. சார்புத் துறை -போக்குவரத்து, காப்பீடு, வங்கி

 

II.விரிவான விடையளிக்கவும்

11. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

சங்ககாலத்தின் தாக்கம் தமிழக அரசியலில் காலகாலமாக இருந்து வந்துள்ளது,

குழு வாழ்வும் – குழுத்தலைவனும்

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். குழுக்களிலிருந்து உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள். வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.

மூவேந்தர் – அரசியல் நிலப் பிரிவுகள்

சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.

சேரர்

தற்காலத்து கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

  • தலைநகர் – வஞ்சி
  • துறைமுகங்கள் – முசிறி, தொண்டி
  • புகழ்பெற்ற அரசர் – சேரன் செங்குட்டுவன்
  • இலச்சினை – வில்லும் அம்பும்

சோழர்

காவிரி வடிநிலப்பகுதியையும், தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

  • தலைநகர் -உறையூர
  • துறைமுகங்கள் – பூம்புகார் (எ) காவிரிபூம்பட்டினம்
  • புகழ்பெற்ற அரசர் – கரிகால சோழன்
  • இலச்சினை – புலி

சேரர்

தென் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தார்கள்

  • தலைநகர் – மதுரை
  • புகழ்பெற்ற அரசர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
  • இலச்சினை – மீன்

குறுநில மன்னர்கள்

பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் மூவேந்தர்களோடு துணைநின்றோ, மூவேந்தர்களை எதிர்த்தோ ஆட்சி புரிந்தனர்.

 

12. வளிமண்டலத்தின் அமைப்பை பற்றி ஒரு பத்தியில் எழுதுக

வளிமண்டலம்

புவியைச் சூழ்ந்து காணப்படும் காற்று படலம் வளிமண்டலம் என்று அழைக்கபடுகிறது. புவியை வளிமண்டலம் சூழ்ந்து காணப்படுவதற்கு அதன் ஈர்ப்பு விசைேய காரணமாகும்.

வளிமண்டல கூட்டமைப்பு

வாயுக்கள், நீராவி மற்றும் தூசுக்கள் வளிமண்டலத்தில் வேறுபட்ட விகிதத்தில் கலந்து காணப்படுகின்றன.

வளிமண்டல வாயுக்கள்

ஆக்சிஜன் (21%) நைட்ரஜன் (76%) ஆர்கான் (0.93%) கார்பன்-டை-ஆக்ஸைடு (0.03%) நியான், ஹீலியம், ஓசோன், ஹைட்ரஜன், கிரிப்டான், செனான், மீதேன்

வளிமண்டலத்திலுள்ள மற்ற பொருட்கள்

நீராவி, தூசுத் துகள்கள், உப்புத் துகள்கள், மகரந்த துகள்கள், புகை, சாம்பல், எரிமலைச் சாம்பல்

வளிமண்டலத்திலுள்ள அடுக்குகள்

வளிமண்டலத்தில் ஐந்து அடுக்குள் உள்ளன

  • கீழ் அடுக்கு
  • மீள் அடுக்கு
  • இடை அடுக்கு
  • வெப்ப அடுக்கு
  • வெளியடுக்கு

கீழ் அடுக்கு

18 கி.மீ வரை காணப்படுகிறது. இவ்வடுக்கில் தான் அனைத்து வானிலை நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இங்கு உயரே செல்ல செல்ல வெப்பநிலை குறையும்

மீள் அடுக்கு

கீழடுக்குக்கு மேல் உள்ள மீள் அடுக்கு. இங்கு ஓசோன் மூலக்கூறுகள் அதிகம் உள்ளதால், இது “ஓசோனோஸ்பியர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கு ஜெட் விமானங்கள் பறப்பதற்கு ஏதுவாக உள்ளது.

இடையடுக்கு

மீள் அடுக்குக்கு மேல் உள்ளது இடையடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை கூடுகிறது. புவியிலிருந்து பெறப்படு வானொலி அலைகள் இவ்வடுக்கிலிருந்து தான புவிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.

வெப்ப அடுக்கு

இடையடுக்கு மேல் உள்ளது வெப்ப அடுக்கு. இங்கு உயரம் செல்ல செல்ல வெப்பநிலை அதிகரிக்கிறது. இங்கு அயனிகளும், மின்னணுக்களும் காணப்படுகின்றன.

வெளியடுக்கு

வெப்ப அடுக்கிற்கு மேல் உள்ளது வெளியடுக்கு. இங்கு வாயுக்கள் மிகவும் குறைந்த காணப்படுகிறது. இவ்வடுக்கின் மேல்பகுதி படிப்படியாக அண்ட வெளியோடு கலந்து விடுகிறது.

 

13. நேரடித் தேர்தலின் நிறைகள் மற்றும் குறைகள் விவாதி

நேரடித் தேர்தல்

தங்கள் பிரதிநிதிகளை வாக்காளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை நேரடித் தேர்தல் எனப்படும்.

நிறைகள்

  • வாக்காளர்கள் தங்களது பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதால், வலுவான மக்களாட்சி கொண்டதாகக் கருதப்படுகிறது.
  • அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய விழுப்புணர்வும், தகுதியான பிரதிநிதிகளைத் தேர்ந்நதடுக்கவும் மக்களுக்குக் கற்பிக்கிறது.
  • மேலும் மக்கள் அரசியலில் முக்கிய பங்கு வகிக்க ஊக்கமளிக்கிறது.
  • மக்களைத் தீவிரமான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகிறது.

குறைகள்

  • நேரடித் தேர்தல் முறை அதிக செலவு கொண்டதாக உள்ளது.
  • எழுத்தறிவற்ற வாக்காளர்கள், சிலநேரங்ளின் சாதி, மதம் பிற பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் பொய்யானப் பரப்புரைகளால் தவறாக வழி நடத்தப்படுகிறார்.
  • நேரடித் தேர்தல் நடத்துவது மிகப்பெரும் பணியோக இருப்பதால், ஒவ்வொரு வாக்கு மையங்களிலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் முறையை உறுதி செய்வது என்பது ஒரு பெரும் சவாலாகும்.
  • சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், வாக்காளர்கள் மீது பணம், பொருள் (அ) பணிகள் மூலமான தங்களது செல்வாக்கைச் செலுத்துவது என்பது ஒரு மற்றொரு சவாலாகும்.
  • தேர்தல் பரப்புரைகளின் போது சில நேரங்களில் வன்முறைகள், பதற்றங்கள், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை பாதிக்கப்படுகிறது.

 

14. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் யாவை?

  • கட்சிகள் தேர்தல்களில் போட்டியிடுகின்றன. பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் கட்சிகளால் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் இடையே தான் கடும் போட்டிகள் நிலவுகின்றன.
  • கட்சிகள் தங்களைத் தேர்ந்தெடுக்க அவர்களது கொள்கைகளையும், திட்டங்களையும் தேர்தல் தொகுதிகளில் முன்னிறுத்துகின்றனர்.
  • முறையான சட்டங்கள் நாடாளுமன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
  • அரசியில் கட்சிகள் அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழி நடத்துகின்றனர்.
  • தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகள் எதிர்கட்சியாகப் பங்களிப்பு செய்கின்றன. இவை அரசின் குறைகள் மற்றும் தவறான கொள்கைகளை எதிர்த்து விமர்சனம் செய்கின்றன.
  • மக்களின் கருத்திற்கு அரசியல் கட்சிகள் வடிவம் கொடுக்கின்றன. மேலும் முக்கிய நிகழ்வுகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றன.
  • அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அரசியில் கட்சிகளின் செயல்பாடுகள் இருக்கின்றன.

 

15. இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள் யாவை?

அரசியல் பங்கேற்பு

மனுக்கள், பேரணிகள் மற்றும் ஆர்பாட்டங்கள் மூலம் மக்களின் ஆதரவைத் திரட்டி தங்கள் செல்வாக்கினை விரிவுபடுத்துகின்றன.

கல்வி

பல அழுத்தக் குழுக்கள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளுவது, இணையதளம் பராமரிப்பு, அரசு கொள்கைகள் மீது கருத்துக்கள் வெளியிடுவது மற்றும் கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் முக்கிய பிரபலங்களிடமிருந்து கருத்துக்களை திரட்டி வல்லுனர்களின் ஆதரவைப் பெறுவது ஆகிய செயல்பாடுகளில் ஈடுபடுகின்றன

கொள்கை உருவாக்கம்

அரசுக்கு தகவல் அளிப்பது, ஆலோசனைகள் வழங்குவது மூலம் அரசின் கொள்கை உருவாக்க பணிகளில் அழுத்தக் குழுக்கள் உதவுகின்றன.

 

16. விவரி

அ) முதன்மைத் துறை, ஆ) இரண்டாம் துறை, இ) சார்புத் துறை

அ) முதன்மைத் துறை

முதன்மைத்துறை விவசாயத்துறை என அழைக்கப்படுகிறது. முதன்மைத் துறைக்கு உதாரணங்கள் விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால்பண்ணை போன்றவை

ஆ) இரண்டாம் துறை

இரண்டாம் துறை தொழில்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை உதாரணம் ஆகும்

இ) சார்புத் துறை

சார்புத் துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத்தொடர்பு, வீட்டு விற்பனை, அரசு மற்றும் அரசுசார சேவைகள்  போன்றவை உதாரணம் ஆகும்

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்