முதல் இடைப் பருவ தேர்வு 2022
சமூக அறிவியல்பத்தாம் வகுப்பு
விடைகள்
I. சரியான விடையை தேர்வு செய்யவும்
1) ரூஸ்வெல்ட்
2)1991
3) ஆந்திரப் பிரதேசம்
4)காபி
5)கனிமப்படிவுகள்
6) சட்டப்பிரிவு 360
7) வளர்ந்து வரும் பொருளாதாரம்
II) எவையேனும் ஆறு வினாக்களுக்கு மட்டும் விடையளி.
8) முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?
- துருக்கி மீண்டும் ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சா முக்கிய பங்கு வகித்தார்.
- கமால் பாட்சா துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்தும் மாற்றி அமைத்தார்.
9)பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின பெயர்களை குறிப்பிடுக
உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு
10) மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
- 1933ஆம் ஆண்டு வாக்கில் சீன பொதுவுடைமை கட்சியின் மீதான முழுக் கட்டுப்பாடும் மாவோ வசம் வந்து சேர்ந்தது.
- ஒரு நீண்ட பயணத்தை முன்னெடுத்து 100,000 பொதுவுடைமை இராணுவத்தினர் 1934இல் கிளம்பினர். அப்பயணம் ஒரு சகாப்தமாக மாறியது.
- இவ்வாறு கிளம்பிய 1,00,000 பேரில் வெறும் 20,000 பேர் மட்டும் 1935இன் பிற்பகுதியில் 6,000 மைல்களைக் கடந்து வடக்கு ஷேனிப் பகுதியை சென்றடைந்தனர்.
11) இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
- மேற்கு – பாகிஸ்தான்
- வடமேற்கு – ஆப்கானிஸ்தான்
- வடக்கு – சீனா, நேபாளம், பூடான்
- கிழக்கு – வங்காளதேசம், மியான்மர்
- தெற்கு – இலங்கை
12)நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக
- நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக கனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
- ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்சசிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது கருப்பு தங்கம் (Black gold) என அழைக்கப்படுகிறது.
ஆந்திரசைட் | 80 முதல் 90% |
பிட்டுமினஸ் | 60 முதல் 80% |
பழுப்பு நிலக்கரி | 40 முதல் 60% |
மரக்கரி | 40%த்திற்கும் குறைவு |
13) ராபி பருவம் மற்றும் காரிப் பருவம்
ராபி பருவம்
- விதைக்கும் காலம் அக்டோபர்
- அறுவடை காலம் மார்ச்
- கோதுமை, பருப்பு, நிலக்கடலை, பார்லி முதலியன விளையும் பயிர்கள்
- குளிர்காலப் பயிர்
காரிஃப் பருவம்
- விதைக்கும் காலம் ஜூன்
- அறுவடை காலம் செப்டம்பர்
- நெல், பருத்தி, மக்காச்சோளம் கம்பு முதலியன விளையும் பயிர்கள்
14) நிதி மசோதா குறிப்பு வரைக.
- அரசின் வருமானம் மற்றும் செலவு சம்மந்தமான அல்லது பண சம்மந்தமான நிதி மசோதா ஆகும்.
- புதியவரி விதிப்படி, வரி நீக்கம் மற்றும் அரசாங்க கடன் சம்மந்தப்பட்ட மசோதாக்கள் நிதி மசோதா ஆகும்.
- நிதி மசோதாவினை திருத்தம் செய்யவோ, அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
- மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
- இம்மசோதா மாநிலங்களவை ஒப்புதலுடன் சட்டமாக மாறும்
- மாநிலங்களவை 14 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கவில்லையெனில் ஒப்புதல் பெறாமலேயே சட்டமாகிவிடும்.
15) ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?
- அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
- நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
- மேலும் அவர், இலாபம் தரும் எந்த தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
16) மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு
- மதிப்புக் கூட்டு முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டினால் இறுதி பண்டத்தின் மதிப்பை அடையலாம்.
- உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட அனைத்து இடைநிலை பண்டங்களின் மதிப்பை சேர்க்கும்பொழுது, பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிப் பண்டங்களின் மொத்த மதிப்பு கிடைக்கிறது .
டீதூள் + பால் + சர்க்கரை = தேனீர்
இடைநிலை பண்டங்களின் மொத்த மதிப்பு = இறுதிப் பண்டத்தின் மொத்த மதிப்பு
17)உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் :
- கிடைத்தல்
- அணுகல்
- உறிஞ்சுதல்
1. உணவு கிடைத்தல்
உணவு கிடைத்தல் என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பதாகும். இது உள்நாட்டு உற்பத்தி, இருப்பு மற்றும் இறக்குமதியில் மாற்றங்கள் பற்றிய ஒரு செயல்பாடாகும்.
2. உணவுக்கான அணுகல்
உணவுக்கான அணுகல் என்பது முதன்மையாக வாங்கும் திறன் பற்றிய கூற்றாகும். எனவே, இது ஈட்டுதலுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. திறன்களும், வாய்ப்புகளும் ஒருவரின் சொத்துக்கள் மற்றும் கல்வியுடன் தொடர்புடையது.
3. உணவினை உறிஞ்சுதல்
உணவினை உறிஞ்சுதல் என்பது உட்கொள்ளும் உணவை உயிரியல் ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திறன் ஆகும்.
18) பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக
- பின்லாந்தின் மேற்குக்கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டு தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
- போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்துவைத்தது.
- கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்தபோது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
- விசாரணைக்குப்பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்கவேண்டுமெனத் தீர்மானித்தது.
- 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
- லொக்கார்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகியநாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
- ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக்குழுவிலும் நிரந்தர இடமளிக்கப்பட்டது.
19) தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக
காலம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் செப்டம்பர் வரையாகும்.
பருவக்காற்று துவக்கம்
- பருவக்காற்று பொதுவாக ஜூன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக் கடற்கரை பகுதிக்கு ஜூன் இரண்டாவது வாரத்திலும் ஜூலை 15இல்அனைத்து இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.
- தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்தியாவின் வெப்பநிலையானது 46oC வரை உயருகிறது. இப்பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்)’பருவமழை வெடிப்பு’ எனப்படுகிறது.
- இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிக்கிறது.
- அவை
- அரபிக்கடல் கிளை
- வங்காள விரிகுடா கிளை
அரபிக்கடல் கிளை
- தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் மோதி பலத்த மழைப் பொழிவை தருகிறது.
- இக்கிளையானது வடக்கு நோக்கி நகர்ந்து இமயமலையால் தடுக்கப்பட்டு வட இந்தியா முழுவதும் கனமழையைத் தோற்றுவிக்கிறது.
- ஆரவல்லி மலைத்தொடர் இக்காற்று வீசும் திசைக்கு இணையாக அமைந்துள்ளதால் இராஜஸ்தான் மற்றும் வட இந்தியாவின் மேற்கு பகுதிக்கு மழைப்பொழிவை தருவதில்லை.
வங்காள விரிகுடா கிளை
- வங்காள விரிகுடா கிளை, வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.
- இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளால் தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள மௌசின்ராமில் (mawsynram) மிக கனமழையைத் தருகிறது.
- பிறகு இக்காற்று கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகரும்போது மழைப் பொழிவின் அளவு குறைந்து கொண்டே செல்கிறது.
- இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப் பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது
20). இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக
இந்திய பருத்தி நெசவாலைகள்
- பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
- தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின எண்ணிக்கையிலும் முதன்மை நாடாகவும் உள்ளது.
- தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.
பருத்தி நெசவாலைகளின் பரவல்
- மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன
- தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்கடி, சேலம் மற்றும் விருதுநகர் ஆகிய முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
- இந்தியாவில் இப்போது 1719 பருத்தி நெசவாலைகள் உள்ளன.
மும்பை – இந்தியாவின் மான்செஸ்டர்
- மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் பருத்தியாலைகள் செரிந்து காணப்படுவதால் மும்பை இந்தியாவனின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது
- காரணம் மகாராஷ்டிரம் மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பை துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர் மின் சக்தி, சந்தை வசதி மற்றும்ச சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.
கோயம்புத்தூர் – தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
21)இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.
- உலகிலுள்ள எழுதப்பட்ட, அனைத்து அரசியலமைப்புகளை விடவும் மிகவும் நீளமானது.
- இதன் பெரும்பாலான கருத்துகள் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புகளிலிருந்து பெறப்பட்டவை.
- இது நெகிழாத்தன்மை கொண்டதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
- கூட்டாட்சி முறை அரசாங்கத்தை (மத்திய, மாநில அரசுகள்) ஏற்படுத்துகிறது.
- இந்தியாவைச் சமயச்சார்பற்ற நாடாக்குகிறது.
- சுதந்திரமான நீதித்துறையை வழங்குகிறது.
- உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமையை அறிமுகப்படுத்தியதோடு 18 வயது நிரம்பிய குடிமக்கள் அனைவருக்கும் எந்த வித பாகுபாடுமின்றி வாக்குரிமையை வழங்குகிறது.
22)பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
பன்னாட்டு நிறுவனங்களின் நன்மைகள்
- பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருள்களைதரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
- பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.
பன்னாட்டு நிறுவனங்களின் தீமைகள்
- பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் சுற்றுசூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
- ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
- பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினைதிருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
23)இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க
உலகம் இரு அணிகளாகப் பிரிதல்:-
இரண்டாவது உலகப்போர் உலகில் அடிப்படையானதும் முக்கியமானதுமான பலமாற்றங்களை ஏற்படுத்தியது. வல்லரசுகள் தலைமையிலான அணிகளைக் கொண்ட உலகம் இரு துருவங்களானது. ஒரு அணி கம்யூனிச எதிர்ப்புக் கருத்துக்களைக் கொண்ட அமெரிக்காவால் தலைமையேற்கப்பட்டது. மற்றொரு அணிக்கு சோவியத் யூனியன் தலைமை தாங்கியது. கம்யூனிச நாடுகள், கம்யூனிசமல்லாத நாடுகள் என ஐரோப்பா இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
அணு ஆயுதப் பரவல்:-
அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அணுஆயுதங்களை அதிகரிக்கும் போட்டியில் இறங்கி, ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்தன. பல நாடுகளில் இராணுவத்திற்கான செலவினங்கள் உச்சத்தை எட்டின.
பன்னாட்டு முகமைகள்:-
பல பன்னாட்டு முகமைகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, பன்னாட்டு நிதியம் (International Monetary Fund) போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
காலனி நீக்கச் செயல்பாடு:-
காலனி நீக்கச் செயல்பாட்டின் அடிப்படையில் காலனியாதிக்கச் சக்திகள் தங்களது காலனிகளுக்கு விடுதலை வழங்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர். அதில் இந்தியா முதலாவதாய் சுதந்திரம் பெற்றது.
24.காலக்கோடு
1934-நீண்ட பயணம்
1938- மியூனிச் உடன்படிக்கை
1939- இரண்டாம் உலகப் போர் தொடக்கம்
1940- பிரிட்டன் போர்
1945-இரண்டாம் உலகப் போர் முடிவு
25) உலகவரைபடம்
26) இந்திய வரைபடம்
0 கருத்துகள்