Ad Code

Ticker

6/recent/ticker-posts

எட்டாம் வகுப்பு|சமூக அறிவியல்|பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் ஒப்படைப்பு மார்ச் 2022

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1.இந்தியாவிலுள்ள முதல் பெண் மருத்துவர்

 முத்துலட்சுமி அம்மையார்

2.சதி எனும் நடைமுறை ஒழிக்கப்பட்ட ஆண்டு 

    1829

3.பெதுன் பள்ளி ……………. இல் J.E.D பெதுன் என்பவரால் நிறுவப்பட்டது.

     1849

4. 1882ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான ஆரம்பப் பள்ளிகளைத் தொடங்க எந்த ஆணையம் பரிந்தரைத்தது?

 ஹண்டர்

5. புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு _____________ ஆகும்.

  புவிப்படவியல்

6. ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் _____________

 நிலத்தோற்ற புவிப்படம்

7.ஆழம் குறைந்த நீர்ப்பகுதிகள் _____________ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது

வெளிர்நீலம்

8. மக்கட்தொகை பரவலை _____________ மூலம் காண்பிக்கலாம்

புள்ளிகள்

9. புவிப்படங்கள் புவியை____சித்தரிக்கின்றன

இருப்பரிமாணத்தில்

10. பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் _____________ ஆகும்

நிலக்கானி புவிப்படங்கள் 

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:

11. ________ 1819 இல் கிறிந்துவ சமயப்பரப்பு குழுக்களால் அமைக்கப்பட்டது

விடை : பெண் சிறார் சங்கம்

12. சிவகங்கையை சேர்ந்த _____________ என்பவர் பிரிட்டிஷாரை எதிர்த்து வீரமாக போராடினார்

விடை : வேலுநாச்சியார்

13)______ இல் பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது

1992

14)_____காலத்தில் பெண்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன

பின்வேதகாலத்தில்

15) 1854 ஆம் ஆண்டில்_______ கல்வி அறிக்கை பெண் கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் அளித்தது

சார்லஸ் வுட்

16. புவிக்கோள மாதிரி என்பது _____________ உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.

விடை : புவியின்

 17.புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளபரப்பில் வரையப்படும் முறை _____________ எனப்படும்

விடை : புவிப்படம்

 18.சமஅளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு _____________ 

விடை : சமஅளவுக்கோடு (ஐசோலைன்)

 19.காணிப்படங்கள் பொதுவாக _____________ பராமரிக்கப்படுகின்றன

விடை : அரசாங்கத்தால்

20. ________ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன

விடை : கருத்துப்

 

III. சரியா / தவறா?

21. ரிக் வேத காலத்தில் பெண்கள் கெளரவிக்கப்பட்டனர்

விடை : சரி

22. தேவதாசி முறை ஒரு சமூக தீமை

விடை : சரி

23. இந்தியா சமூக சீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி ராஜா ராம் மோகன்ராய்

விடை : சரி

24. பெண்களுக்கான 23 சதவீத இட ஒதுக்கீடு என்பது பெண்களின் சமூக-அரசியல் நிலையை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

விடை : தவறு

25. 1930ஆம் ஆண்டு சாரதா சட்டம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான திருமண வயதை உயர்த்தியது

விடை : சரி

IV.பொருத்துக

26.

 1. நிக்கோலோ கோண்டி-இத்தாலிய பயணி

2.வரதட்சணை-சமூக தீமை

3. புவிப்பட விளக்கம்-புவிப்படத்தின் திறவுகோல்

4. வட கிழக்கு-45 OR பழுப்பு நிறம்

5. நிழற்பட்டைப் படம்-கருத்துப்படங்கள்

 

 

V.ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு சுருக்கமான விடை தருக

 

1. பெண்களின் முன்னேற்த்திற்காக போராடிய முக்கிய தலைவர்களின்பெயரினை குறிப்பிடுக

  • ராஜாராம் மோகன்ராய்
  • தயானந்த சரஸ்வதி
  • கேசவ சந்திர சென்
  • ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
  • பண்டித ரமாபாய்
  • டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்
  • ஜோதிராவ் பூலே
  • ஈ.வெ.ரா. பெரியார்
  • டாக்டர் தர்மாம்பாள்

 

2. சமூக தீமைகளில் சிலவற்றை பட்டியலிடுக

  • பெண் சிசுக்கொலை
  • பெண் சிசு கருக்கொலை
  • குழந்தைத் திருமணம்
  • சதி
  • தேவதாசி முறை

3. இடைக்கால இந்தியாவில் குறிப்பிடத்தக் பெண்கள் யாவர்?

  • ரசியா சுல்தானா
  • ராணி துர்காவதி
  • சாந்த் பீபி
  • நூர்ஜஹான்
  • ஜஹனாரா
  • ஜீஜாபாய்
  • மீராபாய்

 

4. இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியமான பெண்களை குறிப்பிடுக

  • பேகம் ஹஸ்ரத் மஹால்
  • ராணி லட்சுமி பாய்
  • வேலுநாச்சியார்

 

5. புவிப்பட அளவை வரையறு

புவிப்பட அளவை என்பது புவிப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப் பரப்பில் உள்ள தொலைவிற்கம் இடையிலான விகிதத்தை குறிப்பதாகும்

 

6. இயற்கையமைப்பு புவிப்படம் என்றால் என்ன?

ஒரு பகுதியின் பல்வேறு இயற்கை அம்சங்களை காண்பிப்பதற்கு வரையப்படும் படங்கள் இயற்கையமைப்பு அல்லது நிலத்தோற்ற புவிப்படங்கள் எனப்படுகின்றன.

 

7. காணிப் புவிப்படங்களின் பயன்கள் யாவை?

உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி, வரிவிதிப்பு, பெரும் பண்ணை, பராமரிப்பு, சட்ட ஆவணங்களில் சொத்து விவரங்களை குறிப்பிடுதல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது

 

VI.பின்வருபவைகளுக்கு விரிவான விடை தருக

1. சுதந்திரப் போராட்டத்தில் பெண்களின் பங்கினைக் கண்டறியவும்

  • தொடக்க கால காலனிய எதிர்ப்பு பாேராட்டத்தில் பெண்கள் பல்வேறு வகைகளில் முக்கிய பங்காற்றினர்.
  • பேகம் ஹஸ்ரத் மாஹால், ரானி லட்சுமி பாய், வேலுநாச்சியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்
  • விடுதலைப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் அயல்நாட்டு பொருட்களை புறக்கணித்தல், ஊர்வலங்களில் கலந்து கொள்வது, சட்டங்களை மீறதல் மூலம் தடியடி பெற்ற சிறைக்கு சென்றனர்.
  • விடுதலைப் பேராட்டத்தில் அவர்களது பங்களிப்பு வெகுஜன தன்மையில் புதிய பரிணாமத்தை சேர்ததது.

 

2. பல்வேறு புவிப்பட அளவைகளை விரிவாக விளக்குக

வாக்கிய முறை அல்லது சொல்லளவை

  • இம்முறையில் அளவுத்திட்டமானது சொற்களால் விவரிக்கப்படுகிறது
  • 1செ.மீ. என்பத 1கி.மீ அதாவது வரைபடத்தில் 1 செ.மீ. என்பது நிலப்பகுதியில் 1கி.மீ தூரத்தை குறிக்கின்றது.

பிரதிபின்ன முறை (அ) எண்சார் பின்னமுறை (அ) விகிதாச்சார முறை

  • இம்முறையில் புவிபடப்பரப்பில் உள்ள தொலைவும் புவிபரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படுகிறது
  • உதாரணமாக 1 : 50,000 என்பது புவிப்படத்தில் 1 அலகு என்பது புவியில் 50,000 அலகுகளை குறிக்கின்றது.

வரை கலை அல்லது நேரியல் அளவை

  • இந்த அளவை ஒரு சிறிய வரைக்கோல் போன்று வரைபடத்தின் அடிப்குதியில் குறிப்பிடப்பட்டிருக்கும். இக்கோடு மேலும் சிறிய அளவிலான பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும்
  • இதன் ஒவ்வொரு சிறு பகுதியும் நிலப்பகுதியிலுள்ள ஒரு குறிப்பிட்ட தூரத்தை குறிப்பதாக அமைந்துள்ளது.
  • இவ்வளவைகள் மாறாதவை என்பதால் புவிப்படநகல்கள் எடுத்துக் கொள்ள ஏதுவாக உள்ளது இதன் சிறப்பம்சமாகும்

 

3. காணிப்புவிப்படங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவத்தை விவரி

ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க காணிப் புவிப்படங்கள் பயன்படுகின்றன. இவ்வகைப்படங்கள் திட்ட புவிப்படங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன

 

இவை பெரிய அளவை கொண்டுள்ளதால் குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றம் கட்டடங்களின் முழு விவரங்களையும் அளிக்கின்றன

காணிப்புவிப்படத்தின் முக்கியத்துவத்துவம்

  • காணிப்புவிப்படங்கள் ஒரு நிலத்தின் நில உடமை, எல்லைகள், மாதிரிப்படங்கள், கட்டடத்திட்டப் படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவை மூலம் ஆவணங்களாக பதிவு செய்கின்றன
  • தொடக்கத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் மதிப்பினை அறிந்துகொள்வும்
  • வரிவிதிப்பிற்கும் இவ்வகை புவிப்படங்கள் பயன்படுத்தப்பட்டன

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்