Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஏழாம் வகுப்பு|சமூக அறிவியல்|பள்ளிக்கல்வித் துறை விழுப்புரம் மாவட்டம் ஒப்படைப்பு மார்ச் 2022


I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. கீழ்க்காண்பவருள் யார் தன்னை தாய் யசோதாவாக பாவித்துக் கொண்டு கிருஷ்ணனின் மேல் பாடல்களைப் புனைந்துள்ளார்?

 பெரியாழ்வார்

2. அத்வைதம் எனும் தத்துவத்தை போதித்தவர் யார்?

 ஆதி சங்கரர்

3. சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?

 மொய்னுதீன் சிஸ்டி

4. வட அமெரிக்காவையும் ஆசியாவையும் _______________ பிரிக்கிறது.

 பேரிங் நீர் சந்தி

5. _______ உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படுகிறது.

 கியூபா

6. உலகின் மிக நீண்ட மலைத்தொடர் _______________.

ஆன்டிஸ்

7. பூமத்திய ரேகை பகுதியில் இருப்பதால் _________ வடிநிலப் படுகை தினந்தோரும் மழை பெறுகிறது. 

அமேசான்

8. பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை

 அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்

9. பின்வருவனவற்றில் எது பாலின சமத்துவமின்மை அல்ல?

 ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை

10. பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட பின்வரும் எந்த உத்திகள் உதவுகின்றது?

மேலே உள்ள அனைத்தும்  

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:


1. சீக்கியர்களின் புனிதநூல் ______________ ஆகும்.

விடை : குரு கிரந்தசாகிப்

2. மீராபாய் ______________ என்பாரின் சீடராவார்

விடை : ரவி தாஸ்

3.  வட அமெரிக்காவின் தாழ்வான பகுதியான ________ கடல் மட்டத்திலிருந்து 86 மீட்டர் ஆழத்தில் உள்ளது.

விடை : மரண பள்ளதாக்கு

4. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் ____________ உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகிறது.

விடை : அமேசான் காடுகள்

5.புக்கர் பரிசை வென்ற முதல் இந்திய பெண் _____________.

விடை : அருந்ததி ராய்

 

III. பொருத்துக

1. பாகல்-குரு கோவிந் சிங்

2.இராமசரிதமானஸ்-துளசிதாசர்

3. ஸ்ரீவைஷ்ணவம்-இராமானுஜர்

4..மெக்கென்லீ சிகரம்-6194 மீ

5.நான்கு மணி கடிகார மழை-வெப்ப மண்டல காடுகள்

 

III. சரியா? தவறா? காண்

1. இஸ்லாமியப் பண்பாடு பரவ சூபியிஸம் காரணமாயிற்று.

விடை : தவறு

2. இடைக்காலத்தின் தொடக்கத்தில் நன்கறியப்பட்டிருந்த சிஸ்டி அமைப்பைச் சார்ந்த சூபி, நிஜாமுதீன் அவுலியா என்பவராவார்.

விடை : சரி

3. குருநானக், சீக்கியர்களின் முதல் குருவாகக் கருதப்படுகிறார்.

விடை : சரி

4. கடவுளை உய்த்துணர உணர்சிகரமான பக்தியும் தீவிர தியானமுமே சாத்தியம் என சூபிக்கள் நம்பினர்.

விடை : சரி

5. அடிப்படை தமிழ் சைவப் புனித நூல்கள் 12 ஆகும்.

விடை : சரி

v.குறுகிய விடையளி

 

1. திருமுறை பற்றி நீவிர் அறிவது என்ன?

நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் நம்பி ஆண்டார் நம்பி (கி.பி.1000) என்பார் தொகுத்ததாகக் கூறப்படுகிறது. அதுவே சைவப்புனித நூல்களான திருமுறையின் அடிப்படையாக உள்ளது. திருமுறை 12 நூல்களைக் கொண்டுள்ளது. அவற்றில் 11 நூல்கள் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டவையாகும். சேக்கிழாரின் பெரியபுராணம் 12வது நூலாகும்.

2. நாயன்மார்கள் மொத்தம் எத்தனைபேர்? அவர்களில் முக்கியமானோர் யாவர்?மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் 63 பேராவர். அவர்களில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் (மும்மூர்த்திகள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகியோர் தென்னிந்தியக் கோவில்களில் சிலைவழிபாடு செய்யப்படுகின்றன

 

3. வட அமெரிக்காவின் எல்லைகளை கூறுக.

  • மேற்கில் பசிபிக் பெருங்கடலையும்
  • கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும்
  • வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடலையும்
  • தெற்கில் தென் அமெரிக்காவையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

 

4. வட அமெரிக்காவில் விளையும் பழங்களின் வகைகள் யாவை? அவற்றில் சில பழங்களைப் பட்டியலிடுக.

வட அமெரிக்காவில் கிரான்பெரீஸ், ப்ளூபெர்ரி, கான்கார்ட் திராட்சைகள், ஸ்ட்ராபெரி, நெல்லிக்கனி மற்றும் பிற பழவகைகள், முக்கிய பழங்களாக விளைவிக்கப்படுகின்.

 

5. எஸ்கிமோவின் வாழ்க்கை முறை பற்றி குறிப்பு வரைக.

  • எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும் வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு வாழ்கிறார்கள்.
  • விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலூக்களில் வாழ்கிறார்கள்.

 

6. தென் அமெரிக்காவின் இயற்கை பிரிவுகளை எழுதுக.

  • அமேசான் படுகை
  • கிழக்கு உயர்நிலங்கள்,
  • கிராண்ட் சாக்கோ
  • ஆன்டஸ் மலைச்சரிவுகள்.

7. 4 மணி ’கடிகார மழை’ என்றால் என்ன?

பூமத்திய ரேகை பகுதிகளில் வெப்பச்சலன மழை கிட்டத்தட்ட தினமும் பிற்பகலில் நிகழ்கிறது. இது பொதுவாக மாலை 4 மணிக்கு நிகழ்கிறது, அதனால்தான் இது 4 மணி ’கடிகார மழை’ என்று அழைக்கப்படுகிறது

 

8. பாலின சமத்துவம் என்றால் என்ன?

நாட்டின் நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கு நமது சமூகத்தில் பெண்களுக்கு அதிகாரப் பகிர்வு அளித்தலும் பாலினச் சமத்துவம் அடைதலும் அவசியமாகும்.

 

9. பெண்களின் மேம்பாட்டிற்கான அத்தியாவசிய காரணிகளை பட்டியலிடுக

  1. கல்வி ஒருவருக்கு அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன் மற்றும் தனித்தன்மை வாய்ந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.
  2. பாலினப்பாகுபாடு பார்க்கும் சமூகம் எக்காலத்திலும் முன்னேவறுதற்கான வாய்ப்பு அரிது.
  3. சாதி, இன, சமய பாகுபாடுகளை அடிப்படையாகக் காெண்ட சமூகம், முன்னேற்றம் அடையாது.
VI.வரைபடதிறன்

கொடுக்கப்பட்டுள்ள தென்அமெரிக்கா வரைபடத்தில் அமேசான், ஒரினாகோ, நிக்ரோ, உருகுவே,பராகுவோ ஆறுகளை குடிக்கவும்.


 

 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்