Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆறாம் வகுப்பு|சமூக அறிவியல்|பள்ளிக்கல்வித்துறை விழுப்புரம் மாவட்டம் ஒப்படைப்பு மார்ச் 2022

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

 

1. பாண்டியர் ஆட்சிக்குப் பின் ஆட்சிக்குப் வந்தோர் ________________ ஆவர்.

      களப்பிரர்கள்

2. குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்த மக்களின் தொழில் யாது? 

     வேட்டையாடுதல் மற்றும் சேகரித்தல்

3. கீழ்க்காணும் அரச வம்சங்களில் எது சங்க காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லை 

      பல்லவர்

4. ஆசியாவின் மேற்கு எல்லையில் இல்லாதது எது?

     அரபிக்கடல்

5. இந்தியா_______உற்பத்தியில் முன்னணி வகிக்கின்றது. 

     மைக்கா

6. பொருந்தாத இணையைக் கண்டறிக

    பென்னின்ஸ் – இத்தாலி

7.ஐரோப்பாவில் மிகக் குறைவான மக்களடர்த்தியைக் கொண்ட நாடு எது? 

    ஐஸ்லாந்து

8. மக்களாட்சியின் பிறப்பிடம் . 

     கிரேக்கம்

9. உலக மக்களாட்சி தினம் ஆகும்.

    செப்டம்பர் 15

10. நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் . 

 வாக்காளர்கள்

 

II.கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வெண்ணி போரில் வெற்றி பெற்றது ___________.

விடை : கரிகாலன்

2. காவிரியாற்றின் குறுக்கே கல்லணையை ___________ கட்டினார்

விடை: கரிகாலன்

3. நில வரி _________ என அழைக்கப்பட்டது

வினட: இறை

4. உலகின் மிக ஈரப்பதமான இடம் ___________.

விடை: மௌசின்ராம்

5. பிலிப்பைன்ஸ் நாட்டின் தேசிய நடனம் ___________

விடை: நன்னம்பிக்கை முனைவழி

6. வடகடலில் உள்ள முக்கிய மீன்பிடித்தளம் ___________

விடை: டாகர் பாங்ஸ்

7. __________ ஐரோப்பாவில் உள்ள ஒன்பது நாடுகளைக் கடந்து செல்கின்றது

விடை: டான்யூப் ஆறு

8. நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு ___________

விடை : சுவிட்சர்லாந்து

9. மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ___________

விடை: ஆபிரகாம் லிங்கன்

10. நம் நாட்டில் ___________ மக்களாட்சி செயல்படுகிறது

விடை: பிரதிநிதித்துவ

 

III.பொருத்துக

1.தென்னர்-பாண்டியர்

2. அதியமான்-வேளிர்

3. மெசபடோமியா சமவெளி-யூப்ரடீஸ் & டைக்ரிஸ்

4. தென்கிழக்கு ஆசியாவின் அரிசிக் கிண்ணம்-தாய்லாந்து

5. எருதுச் சண்டை-ஸ்பெயின்

IV. சுருக்கமாக விடையளி

 

1. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து திணைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  1. குறிஞ்சி
  2. முல்லை
  3. மருதம்
  4. நெய்தல்
  5. பாலை

 

2. கடையேழு வள்ளல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • பாரி
  • காரி
  • ஓரி
  • பேகன்
  • ஆய்
  • அதியமான்
  • நள்ளி

 

3. ஐரோப்பாவின் முக்கிய ஆறுகள் யாவை?

  • வோல்கா
  • டேன்யூப்
  • நீப்பர்
  • ரைன்
  • ரோன்
  • போ
  • தேம்ஸ

 

4. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறை முகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • டோக்கியோ
  • ஷாங்காய்
  • சிங்கப்பூர்
  • ஹாங்காங்
  • சென்னை
  • மும்பை
  • கராச்சி
  • துபாய்

5. மக்களாட்சி என்றால் என்ன?

“மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி”

 

V.கீழ்க் காண்பதற்கு விடையளிக்கவும்

1. சங்க காலத்தில் பெண்களின் நிலை குறித்து விவாதிக்கவும்

  • சமூக வாழ்வில் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை.
  • கற்றறிந்த, அறிவுக் கூர்மையுடைய பெண்கள் இருந்தனர்.
  • நாற்பது பெண்புலவர்கள் வாழ்ந்து அரியநூல்களை கொடுத்துச் சென்றுள்ளனர்.
  • சங்க காலப் பெண்பாற்புலவர்கள் : அவ்வையார், வெள்ளிவீதியார், காக்கைப் பாடினியார், ஆதி மந்தியார், பொன்முடியார்.
  • திருமணம் சொந்த விருப்பத்தை சார்ந்து அமைந்திருந்தது.
  • இருந்தபோதிலும் ‘கற்பு’ பெண்களின் மிகச் சிறந்த ஒழுக்கமாகக் கருதப்பட்டது.
  • பெற்றோரின் சொத்துக்களில் மகனும், மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்.

2. ஐரோப்பாவின் காலநிலைப் பிரிவுகளைப் பற்றி விவரி?

  • ஐரோப்பிய காலநிலை மிதவெப்ப மண்டல காலநிலை முதல், துருவ காலநிலை வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.
  • தென்பகுதியில் காணப்படும் மத்தியதரைக் கடல் பகுதி காலநிலை மிதமான கோடைகாலமும், குளிர்கால மழையையும் கொண்டதாகும்.
  • வட அட்லாண்டிக் நீரோட்டத்தினால் மேற்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பொதுவாக மிதமான, ஈரக் காலநிலையைக் கொண்டதாகும்.
  • மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் காலநிலை ஈரப்பதம் வாய்ந்த கண்டகாலநிலை ஆகும்.
  • துணை துருவ மற்றும் தூந்திரக் காலநிலை வடகிழக்கில் காணப்படுகின்றது.
  • அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து வீசுகின்ற மேற்கத்திய காற்றுகளின் மிதமான தாக்கத்திற்கு ஐரோப்பா முழுவதும் உட்படுகின்றது.
VI. கீழ்க்காணும் இடங்களில் தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.
கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, உறையூர், மதுரை


 

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்