குடிமையியல்
அலகு 1
இந்திய அரசியல் அமைப்பு
நோக்கங்கள்
கற்றல் விளைவுகள்
அறிமுகம்
இன்று நாம் குடிமையியல் இந்திய அரசியலமைப்பு பாடத்தை பார்க்கலாம்.ஒரு நாட்டில் நாம் எப்படி இருக்க வேண்டும். நம் அரசு எப்படி இருக்க வேண்டும். என்பதற்காக ஒவ்வொரு நாட்டிலும் வடிவமைக்கப்பட்டது போல நம் நாட்டிலும் வடிவமைக்கப்பட்ட சட்டமே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். சரி இந்த அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது சார் ஆரம்பிக்கப்பட்டது. நம் ஒன்பதாம் வகுப்பில் வரலாறு இரண்டாம் பாடத்தில் பண்டைய நாகரிகங்கள் என்ற தலைப்பில் மெசபடோமிய நாகரிகம் என்ற பாடத்தை பார்த்தோம் அங்குதான் முதல் முதலில் ஹமுராபி சட்டத்தொகுப்பு என்று கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்று நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தினர் .
சரி நாம் பாடத்திற்கு வருவோம் 1947 இல் நாம் சுதந்திரம் அடைந்தாலும் அதன்பின் இரண்டு வருடங்கள் நாம் ஆங்கிலேய அரசியல் அமைப்பையே பின்பற்றி வந்தோம் 1946 அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் இந்திய அரசியல் நிர்ணய சபையால் நம் நாட்டிற்கு அரசியல் அமைப்பு உருவாக்க டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களை தலைவராக கொண்டும் துணைத் தலைவர்களாக H.C. முகர்ஜி மற்றும் V.T. கிருஷ்ணம்மாச் சாரிவும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கும் சட்ட வரைவுக் குழு தலைவர் டாக்டர் பி. ஆர் அம்பேத்கார் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒரு முழு வடிவம் பெற்றது ( நம் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள்) 11 கூட்டங்கள் . 166 நாட்கள். 2473 திருத்தங்கள் செய்து முகவுரை 22 பாகங்கள். 395 சட்டப்பிரிவுகள் 8 அட்டவணையில் கொண்ட இந்திய அரசியலமைப்பு 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26ம் நாள் ஏற்றுக் கொள்ளப்பட்டது ஆனால் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாளே ஒவ்வொரு ஆண்டும் இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
நம் அரசியல் அமைப்புச் சட்டத்தை இத்தாலிய பாணியில் கையால் எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் ரைஜடா என்பவர் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பு கூறுகள் என்ற தலைப்பில் அதன் சிறப்புகளையும் முகவுரையில் இந்திய மக்களாகிய நாம் என்ற வார்த்தையின் அடிப்படையில் நம் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது அடுத்ததாக அதன் முகவரியில் பிரஞ்சு புரட்சியின் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்ற முக்கிய முழக்கங்களும் இடம்பெற்றுள்ளன குடியுரிமை என்ற தலைப்பில் இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 ன் படி குடியுரிமை பெறுதல் என்பதையும் குடியுரிமை இழத்தல் என்பதையும் நாம் விரிவாக பார்க்கலாம் அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பில் ( பகுதி III 12 லவ் இருந்து 35 வரையிலான பிரிவுகள் அடிப்படை உரிமைகள் பற்றி கூறுகின்றது ( அடிப்படை உரிமைகளை அமெரிக்கா ஐக்கிய நாட்டின் அரசியல் அமைப்பில் இருந்து பெறப்பட்டது) இதன்படி சமத்துவ உரிமை சுதந்திர உரிமை சுரண்டலுக்கு எதிரான உரிமை சமயச்சார்பு உரிமை கல்வி கலாச்சார உரிமை அரசியல் அமைப்பு உட்பட்டு தீர்வு காணும் உரிமை. பற்றி நாம் பார்க்கலாம் அடுத்ததாக அரசு நெறிமுறைப்படுத்தும் கோட்பாடுகள் என்ற தலைப்பில் வழிகாட்டும் நெறிமுறைகளை நாம் பார்க்கலாம் அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய அடிப்படைக் கடமைகளை நாம் பார்க்கலாம் ( நம் அடிப்படை கடமைகளை சோவியத் ரஷ்யாவின் அரசியல் அமைப்பில் இருந்து சேர்க்கப்பட்டது) முக்கியமாக தேசிய கீதம் தேசியக்கொடி தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல். நம் நாட்டின் உயர்ந்த பாரம்பரிய கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல் .தேச பாதுகாப்பிற்கு தேவைப்படும் பொழுது பணியாற்ற தயாராக இருத்தல். வன்முறையை கைவிட்டு பொது சொத்துக்களை பாதுகாத்தல். அடுத்ததாக தேசிய அவசரநிலை என்று பார்க்கும் போது தேசிய அவசர நிலை (1972 இந்திரா காந்தி)மாநில அவசர நிலை நிதி சார்ந்த அவசர நிலை பற்றி பார்க்கலாம் அடுத்ததாக அரசியல் அமைப்பு சட்டத் திருத்தம் பற்றியும் அரசியலமைப்பு சீர்திருத்த குழுக்கள் பற்றியும் நாம் பார்க்கலாம் .மொத்தத்தில் அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணி போன்றது
Mindmap
Teaching aids
இந்திய அரசியல் அமைப்பு Notes of lesson
I find 1.2 இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் really interesting and helpful on DIKSHA. https://diksha.gov.in/play/content/do_31289540156788736011059?referrer=utm_source%3Dmobile%26utm_campaign%3Dshare_content
For more such interesting content, download the DIKSHA mobile app
https://play.google.com/store/apps/details?id=in.gov.diksha.app&referrer=utm_source%3Dmobile%26utm_campaign%3Dshare_app
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கிய குழு
இந்திய அரசியலமைப்பு சாதனம் உருவான வரலாறு
இந்திய அரசியலமைப்பு ஒரு பார்வை
இந்திய அரசியலமைப்பு தினம்
இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் உடைமைகள்
0 கருத்துகள்