Ad Code

Ticker

6/recent/ticker-posts

மதுரை சித்திரைத் திருவிழா 2026: மீனாட்சி திருக்கல்யாணம் முதல் கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவது வரை - முழு வரலாறு!

 


சித்திரை  மாதம் என்றாலே மதுரையில் கொண்டாட்டம் களைகட்டிவிடும். காரணம் சித்திரை மாதத்தில்தான் உலக பிரசித்தி பெற்ற சித்திரை பெருவிழா கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் நடைபெறும், இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவது வழக்கம். இந்தத் திருவிழா, சைவ-வைணவ ஒற்றுமையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.


மீனாட்சி அம்மன் அவதாரம்


மதுரையை ஆண்டுவந்த பாண்டிய மன்னனான மலையத்துவஜ பாண்டியனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் அவரும், அவரது மனைவியான காஞ்சனமாலாவும் யாகம் ஒன்றை நடத்தினர். அப்போது யாகசாலையில் சக்தி தேவியின் அம்சமாக ஒரு அழகிய பெண் குழந்தை தோன்றியது. ஆனால் அந்த குழந்தை மூன்று தனங் களுடன் இருந்ததால் மன்னன் வருந்தம் அடைந்தான். அப்போது, "கவலைப்படாதே, இக்குழந்தை மணம் முடிப்பவரை கானும்போது மூன்றாவதாக உள்ள தனம் மறைந்துவிடும்" என்று அசரீரி ஒலித்தது.


இதையடுத்து மனம் மகிழ்ந்த மன்னன், குழந்தைக்கு “தடாதகை' என்று பெயர் சூட்டி வளர்த்தான். சிறுவயதி லேயே குழந்தைக்கு அனைத்து கலைகளையும் ன்னன் கற்றுக்கொடுத்தான். மன்னனுக்கு பிறகு, துரையின் ஆட்சி பொறுப்பை தடாதகை ஏற்றார். எப்போதும் மீன் போன்று விழிப்புடன் இருந்து ஆட்சி ளிந்ததால் தடாதகை மீனாட்சி' என்று அழைக்கப் ட்டார்.


மதுரையை சுற்றியுள்ள மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்த மீனாட்சி, கயிலாயத்துக்கு சென்று போர் முரசு கொட்டினார். அப்போது போர்க்கோலத்தில் வந்த சிவபெருமானை பார்த்ததும் அவர் மீது மீனாட்சி காதல் கொண்டார். மீனாட்சிக்கு இருந்த மூன்றாவது தனமும் மறைந்தது. பின்பு சிவபெருமான், மதுரையில் சொக்கனாக எழுந்தருளி மீனாட்சியை மணம் புரிந்ததாக தல வரலாறு கூறுகிறது.

கள்ளழகர் கோவில் 

மதுரையில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ள அழகர்மலை அடிவாரத்தில் கள்ளழகர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் திருமாலிருஞ்சோலை, மாவிருங்குன்றம், சோலை மலை எனவும் அழைக்கப் படுகிறது. இங்கு மூலவராக பரமசுவாமியும், உற்சவராக சுந்தாராஜப் பெருமாளும் அருள்பாலிக்கிறார்கள்.


ஒரு சமயம் சாபம் பெற்ற எமதர்மர், சாபவிமோசனம் வேண்டி அழகர்மலையில் தவம் இயற்றினார். எமதர்மரின் தவத்தால் மகிழ்ந்த பெருமாள், அவருக்கு காட்சிக் கொடுத்தார். அப்போது எமதர்மர், "தினமும் ஒரு முறையாவது உளக்கு பூஜை செய்ய வேண்டு என்று வேண்டினார் அவ்வாறே பெருமாளும் வரம் கொடுத்தார். அதன்படி இக்கோவிலில் தினமும் அர்த்தஜா பூஜையை ளமதர்மரே நடத்துவதாக பப் படுகிறது.


முன்னொரு காலத்தில் சுதபஸ் முனிவர், அழகர் மலையில் உற்பத்தியாகும் நூபுரகங்கை தீர்த்தத்தில் மகாவிஷ்ணுவை நினைத்து தவம் இயற்றினார். அப்போது அவ்வழியாக வந்த துர்வாச முனிவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், சுதபஸ் முனிவரை மண்டுகமாக (தவளை) மாறும்படி சாபமிட்டார்.


இதையடுத்து தவளையாக மாறிய கதபஸ் முனிவர். துர்வாச முனிவரிடம் சாப விமோசனம் வேண்டினார். அவாது வேண்டுகோளை ஏற்ற துர்வாச முனிவர், வைகை ஆற்றங்கரையில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இயற்று, சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், மகாவிஷ்ணு உனக்கு சாப விமோசனம் அளிப்பார்" என்றார். அதன்படி தவளை உருவத்தில் வைகை ஆற்றங்கரையில் தவம் இயற்றிய சுதபஸ் முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கவே, மகாவிஷ்ணு கள்ளழகராக வைகையில் எழுந்தருள்வதாக வும் கூறப்படுகிறது.


சித்திரை திருவிழா


இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 19-ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 28-ந் தேதி (இன்றும் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இத்திருவிழாவின் ஒரு பகுதியாக, தன் தங்கையான மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வேண்டி திருமாலிருஞ் சோலையில் இருந்து அழகர் மதுரைக்கு புறப்படுவார்.


அப்போது அவர் கள்ளர் வேடமிட்டு பலவிதனை ஆயதங்களுடன் வருவார். எனவே அவர் 'கள்ளழகர் என்று அழைக்கப்படுகிறார். பின்னர் மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை (மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்றல்) நிகழ்ச்சி நடைபெறும். அதைத் தொடர்ந்து ஆண்டாள் தொடுத்த மாலையை அணிந்துகொண்டு தங்கக் குதிரை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருள்வார்.


பின்னர், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் அமர்ந்து வைகை ஆற்றில் இறங்குவார். இந்த கண்கொள்ளா காட்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள். அப்போது பக்தர் கள் அனைவரும் எழுப்பும் 'கோவிந்தா' என்ற கோஷம் மதுரையை அதிரவைக்கும்.


இவ்வாறு வைகை ஆற்றில் இறங்கும் போது, மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்துவிட்ட செய்தி அறிந்து, கள்ளழகர் மீண்டும் அழகர்மலைக்கு திரும்புகிறார். அதன்படி, கள்ளழகர் வண்டியூரில் உள்ள பின்பு கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மோட்சம் அருள்வார். அதைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தருவார். இறுதி நிகழ்வாக கள்ளழகர் மதுரையில் இருந்து அழகர்மலைக்கு திரும்புவார்.


மதுரையில் நடைபெறும் இத்தகைய சிறப்புமிக்க சித்திரை திருவிழாவில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்யையும் கண்டுகளித்தாய் இனிமை யாள வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.


கணக்கு காட்டும் கள்ளழகர்


அழகர்மலை கோலியில் காவல் தெய்வமாக இருப்பவர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி சித்திரை திருவிழாவில், கள்ளழகர் அழகர்மலை யில் இருந்து மதுரைக்கு புறப்படும்போது, நான் போட்டிருக்கும் நகைகளை கருப்பண்ணசாமி முன்பாக வைத்து கணக்கு காட்டுவார். பின்னர், வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துவிட்டு அழகர்மலைக்கு திரும்பும்போதும் கருப்பண்ணசாமியிடம் கணக்கு காட்டிவிட்டுதான் கோவிலுக்குள் செல்வார்.


கள்ளழகர் உடுத்தும் பட்டாடை


கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது, எந்த வண்ண பட்டாடை உடுத்துகிறார் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அழகர் எந்த வண்ணப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ, அதற்கேற்ப அந்த ஆண்டில் பலன்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி,அழகர் பச்சை பட்டு உடுத்தி வந்தால், நாடு செழிப்பாக இருக்கும். மஞ்சள் பட்டு உடுத்தி வந்தால், மங்களகர நிகழ்வுகள் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

Key words 

மதுரை சித்திரை திருவிழா 2026, மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் வைகையில் இறங்குதல், Madurai Chithirai Thiruvizha, Kallazhagar Vaigai Entry, Meenakshi Amman History, தடாதகை பிராட்டி, பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, பச்சை பட்டு கள்ளழகர், மதுரை திருவிழா வரலாறு, Manduka Maharishi, Sundararajar Perumal

கருத்துரையிடுக

0 கருத்துகள்