கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தீப வழிபாடுதான். பொதுவாக எல்லா மாதங்களிழம் தீபம் ஏற்றி வழிபட்டாலும், கார்த் திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை பெற்றுத்தரும், கார்த்திகை மாதத்தை ஆன்மிக மாதம் என்றே கூறலாம், ஏனெனில் முருகன், ஐயப்பன், சிவன் என அனைத்து தெய்வங்களையும் வழிபடும் சிறப்பு வாய்ந்த மாதமாக இந்த கார்த்திகை மாதம் உள்ளது.
கார்த்திகை மாதம் என்பது அதிகளவு மழை பெய்யும் காலமாகும். மேலும் இந்த மாதத்தில்தான் காந்தள் மலர்கள் அதிகளவு பூக்கின்றன. எனவேதான் இம்மாதம் கார்த்திகை மாதம் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
திருமால், பிரம்மா உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த நாள் தான், திருக்கார்த்திகை என்று கருதப்படுகிறது. இது கார்த்திகை மாதம் பவுர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றுசேரும் நாளில் கொட்டப்படுகிறது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை திருநாள் 3-12-2025 (புதன்கிழபை) அன்று வருகிறது.
திருக்கார்த்திகை தினத்தன்று திருவண்ணாமலை வில் மலை உச்சியில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாள், பரணி நட்சத்திர நாளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள், தெரியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு, எமபயம் நீங்கி நலமுடன் வாழ்வர்.
கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் சிவ பெருமானை வழிபடுவது மிகவும் விசேஷமாகும் கார்த்திகை மாதம் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சித்து வழி பட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத் தின்போது நீராடினாய் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைக்கும்.
கார்த்திகை மாதம் முழுவதும் கோவில்கள் அல்லது வீடுகளில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் அனைத்துவித மங்களமும் வாழ்வும் கிடைக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் விளக்கேற்ற முடியாதவர்கள், துவாதசி, சதுர்த்தசி பொன்ற நாட்களிலாவது கட்டாயம் விளக்கு ஏற்ற வேண்டும்.
சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தீப்பொறியாக தோன்றி. சரவணப் பொய்கையில் குழந்தையாக முருகப்பெருமான் உதித்த மாதம் கார்த்திகை ஆகும். எனவே இந்த மாதத்தில் முருகப்பெருமானை. வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கப்பெறும்.
கார்த்திகை மாதத்தில் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டால் 16 விதமான பேறுகளும் வந்துசேரும். அப்படி ஆறுபடை வீடுகளுக்கும் செல்ல முடியாதவர்கள், அதில் ஒரு படை வீட்டிற்காவது செல்லலாம்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் ஐயப்பனுக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொள்வர்.
கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை மலர்கள் சாற்றி வழிபட்டால் தேவர்கள் அடையும் மோட்ச நிலையை பெறலாம். விஷ்ணு பகவானை துளசி இலையை கொண்டு அர்ச்சித்து வழிபாடு செய்தால், ஒவ்வொரு துளசியும் ஒரு அஸ்வமேத யாகம் செய்த பலனை பெற்றுத் தரும்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் காவிரியில் நீராடி னால், ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். இதை 'முடவன் முழுக்கு என்பர். கார்த்திகை மாதம் பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகும். கிரிவலத்தின்போது மழை பெய்தால், அதை தேவர்களின் ஆசியாக கருதுகிறார்கள்.
கார்த்திகை மாதம் திங்கட்கிழமையில் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், குழல்வாய்மொழி அன்னையையும் வழிபாடு செய்தால் அனைத்து பாவங்களும் அழியும் என்பது நம்பிக்கை.
கார்த்திகை மாதம் பஞ்சமி தினம், நாக தோஷ. நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.
கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை களில் உமா மகேஸ்வா விரதம் இருந்தால் தம்பதிகளுக்கும் ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களில் இருந்தும் விடுபடுவர்.
கார்த்திகை மாதத்தில் சூரிய பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இம்மாதத்தில் மன சேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பத்தானம் ஆகியவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே கார்த்திகை மாதத்தை 'திருமண மாதம்' என்று கூறுகிறார்கள்.
கார்த்திகை மாதத்தில் பகவத் கீதை படித்து, இறை வனை வழிபட்டால் மன அமைதி உண்டாகும்.
Keywords
Karthigai Month Benefits,Karthigai Deepam 2025,Karthigai month significance,Karthigai masam palangal,Tamil Karthigai month rituals,Karthigai month spiritual benefits,Karthigai deepam festival,கார்த்திகை தீபம் 2025,கார்த்திகை மாத நன்மைகள்,கார்த்திகை மாதம் முக்கியத்துவம்

0 கருத்துகள்