தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது. தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக் கோவில். இங்குள்ள இறைவன் மனோக்கியநாத சுவாமி என்றும், நீலகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மார்க்கண்டேயர் தவம் இயற்றி, சிரஞ்சீவி அருள் பெற்ற தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
தல வரலாறு
தேவர்களும், அசுரர்களும் இணைந்து அமிர்தம் எடுக்க, பாற்கடலை கடைந்தனர். அப்போது அதில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. இதனால் உலகம் இருளில் மூழ்கியது. தேவர்கள் உட்பட அனைவரும் அஞ்சி நடுங்கினர். அப்போது இந்த உலகை காக்கும் பொருட்டு சிவபெருமான், அந்த ஆலகால விஷத்தை உண்டார். அவர் உண்ட கடுமையான விஷம் வயிற்றுக்குள் செல்லாமல் இருக்க. பார்வதி தேவி அவரின் கழுத்தை அழுத்தி பிடித்தார். எனவே விஷம் வயிற்றுக்குள்ளே இறங்காமல், கழுத்திலேயே தங்கிவிட்டது. இதனால் இறைவன் நீலகண்டேஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
மிருகண்டு என்ற முனிவர் புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி, சிவபெருமானை வழிபட்டு வந்தார். அவர் பக்தியை மெச்சிய சிவபெருமான், அவர் முன் தோன்றி "உனக்கு நல்ல குணங்களைக் கொண்ட சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த 16 வயது மட்டுமே வாழும் மகன் வேண்டுமா? அல்லது தீய உள்ளம் கொண்ட நீண்ட ஆயுளை கொண்ட மகன் வேண்டுமா?" எனக் கேட்டார்.
அதற்கு முனிவர், நல்ல குணம் உடைய மகனே வேண்டும்" என்றார். அவ்வாறே 16 வயது வரை மட்டும் வாழும் குழந்தை பிறக்கும் என்று அருளினார், சிவ பெருமான். அதன்படி அவருக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயர் எனப் பெயரிட்டு வளர்த்தனர். சிவ பெருமானின் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். சிறுவயதிலேயே வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
அவருக்கு 16 வயது நெருங்கியதும், பெற்றோர் மிகவும் கவலை அடைந்தனர். பெற்றோரின் கவலைக்கான காரணத்தை அறிந்த மார்க்கண்டேயர், ஒவ்வொரு சிவ தலமாக சென்று சிவபெருமானை தரிசித்து வேண்டி வந்தார். அவ்வாறு அவர் திருநீலக்குடி தலத்திற்கும் வந்து ஈசனை வழிபட்டார். அங்கு கடுமையாக விரதம் இருந்து சிவபெருமானை தியானிக்க, அவர்முன் தோன்றிய சிவபெருமான், உனக்கு என்ன வரம்வேண்டும் என்று கேட்க, மார்க்கண்டேயர் தன்னுடைய ஆயுளை நீட்டிக்க வேண்டினார். சிவபெருமானும் இந்த தலத்தில் என்றுமே பதினாறு வயதுடைய இளைஞனாகவே இருப்பாய் என வரம் அளித்தார். மார்க்கண்டேயரும் அங்கேயே தங்கி சிவனை வழிபட்டு வந்ததாக புராணம் கூறுகிறது.
கோவில் அமைப்பு
இக்கோவிலில் இரண்டு நுழைவுவாசல்கள் உள்ளன. முதல் மற்றும் 2-ம் நுழைவாசலுக்கு இடைப்பட்ட பிரகாரத்தில் நந்தி மண்டபம், கொடிமரம் மற்றும் பலிபீடம் உள்ளது. கரு வறையில் இறைவன் மனோக்கியநாத சுவாமி சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இத்தலத்தில் இரண்டு அம்மன் சன்னிதிகள் உள்ளன. ஒரு அம்மன் திரு மணக்கோலத்தில் உள்ள அனுபமஸ்தினி தாயார். இவர் அழகாம்பிகை என்றும், ஒப்பிலாமுளை யாள் என்றும் அழைக்கப்படுகிறார். மற்றொரு அம்மன் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பக்தபீஷ்டப் பிரதாயனி என்கிற தவக்கோல அம்மை.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். உள் திருச்சுற்றில் கன்னிமூலை கணபதி, மார்க்கண் டேயர், பாலசுப்பிரமணியர், வள்ளி - தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி ஆகியோரது சன்னிதிகள் உள்ளன.வெளிச்சுற்றில் துர்க்கை அம்மன் சன்னிதி உள்ளது. சூரியனை மையமாக வைத்த நவக்கிரகங்கள் சன்னிதி உள்ளது.
இத்தலத்தின் தலவிருட்சமாக ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் உள்ளது. இருப் பினும் கோவிலின் உட்பிரகாரத் தில் உள்ள பலா மரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தின் களைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்த பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். கோவிலில் தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஷீர குண்டம் என நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்கள் உள்ளன.
பிரார்த்தனை
இத்தலத்து இறைவனை வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். இங்கு வரும் பக்தர்களால் எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் செய்யப்படுகிறது. பிரம்மா, தேவகண்டர், வசிஷ்டர் சூரபத்மன் காமதேனு ஆகியோர் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம், வருளானும் தேவகன்னியர்களும் பூஜித்து வரம் பெற்ற தலம் என்ற பெருமையும் இத்தலத்திற்கு உண்டு. இங்குள்ள மனோக்கியநாத சுவாமியை வழிபட்டால் மணஅமைதி கிடைக்கும். கல்யாண வரம், குழந்தை வரம் கைகூடும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர்ந்து இல்லறம் நடத்துவர். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
இக்கோவிலில் சித்திரைப் பெரு விழா சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இத்தலத்தில் மார்க்கண் டேயருக்கு சிரஞ்சீவி பதம் தரப்பட்டதால், அதற்கு நன்றிக் கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து ஊர் ஊராக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையிலேயே இத்தலத்தில் சித்திரைத் திருவிழா நடத்தப்படுகிறது.
இவ்விழாவின் பன்னிரெண்டாம் நாளில் சுவாமி பல்லக்கில் புறப் பட்டு, ஏழூர் (இலந்துறை, ஏனாதி மங்கலம், திருநாகேச்சுரம், திரு புவனம், திருவிடைமருதூர், மருத் துவக்குடி, திருநீலக்குடி) சென்று வருவது அற்புதமான காட்சியாகும். இத்தலத்தில் பெருமான், மார்க் கண்டேயருக்கு அருள் புரிந்ததால் திருவிழாக் காலத்தில் சுவாமிக்கு முன்னால் எதிர்முகமாக மார்க் கண்டேயர் உற்சவமூர்த்தியாக செல்கிறார்.
அமைவிடம்
கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் ஆடுதுறையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் திருநீலக்குடி உள்ளது
விஷத்தன்மையை குறைக்க எண்ணெய் அபிஷேகம்
இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் செய்யப்படுகிறது. தினமும் எவ்வளவுதான் எண்ணெய் மாற்றினாலும், அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடு வது அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஒரு நாள் அபி ஷேம் செய்துவிட்டு மறுநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவலிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால், அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. என்பது ஐதீகம்.
Key words
மனோக்கியநாதர் சுவாமி, மார்க்கண்டேயர் வரலாறு, சைவ தேவஸ்தானம், சிவன் கோவில் வரலாறு, ஆன்மீக தகவல்கள், கோவில் சிறப்புகள், தமிழின் ஆன்மீகம், தமிழ் ஹிந்து பக்தி, Hindu temples in Tamil, rare shiva temples
0 கருத்துகள்