Ad Code

Ticker

6/recent/ticker-posts

வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி 2025 – விரதம், பூஜை முறைகள், பஞ்சாங்கம், பரிகாரங்கள்

 


ந்து மதத்தில் முழுமுதற் "கடவுளாக போற்றப்படுபவர் விநாயகப் பெருமான். ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர்' அவதரித்ததாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இந்நாளையே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவானது இந்தியா முழு வதும் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.


பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும், அவர்களை வழிபடுவதற்கு கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு அந்த அவசியம் இல்லை. ஏனென்றால் ஊரில் உள்ள சாலையோரம், ஆற்றங்கரை, குளக்கரை, அரச மரத்தடி போன்ற எல்லா இடங்களிலும் எளிமையாக அருள்புரிபவர் விநாயகப் பெருமான். சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும், விஷ்ணு பகவானை வழிபடுவதை 'வைணவம்' என்றும் சொல்வதை போல விநாயகப் பெருமானை வழிபடுவதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள்.


விநாயகப் பெருமான் பிள்ளையார், விக்னேஸ்வரர், ஐங்கரன், கணபதி போன்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். விநாயகர் என் றால் 'மேலான தலைவர்' என்றும், விக்னேஸ்வரர் என் றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், பிள்ளையார் என்றால் 'குழந்தை மனம் படைத்த வர்' என்றும், ஐங்கரன் என்றால் 'ஐந்து கரங்களை உடையவர் என்றும், கணபதி என்றால் 'கணங்களுக்கு அதிபதி என்றும் பொருள்படும். விநாயகப் பெருமான் அவதாரம் குறித்து பல்வேறு புராணக் கதைகள் உள்ளன.


ஒரு சமயம் சிவபெருமான் கைலாயத்தில் சென்றிருந்த போது, பார்வதி தேவி நீராடச் சென்றார். அப்போது அவர், தனக்கு காவல் காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது உடலில் இருந்து வாசனை துகள்களை உருட்டி ஒரு உரு வத்தை உருவாக்கினார். பின்பு தன்னுடைய அனுக்கிர சுத்தால் அதற்கு உயிரூட்டினார். இவ்வாறு உருவம் பெற்றவரே விநாயகர். விநாயகரிடம், யாரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது என கட்டளை யிட்டு நீராட சென்றார், பார்வதி தேவி.


அச்சமயம் கைலாயத்திற்கு திரும்பிய சிவபெருமான் உள்ளே நுழைய முயன்றார். வந்திருப்பது தன் தந்தை என்பதை அறியாத விநாயகர், அவரை உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் சண்டை மூண்டது. இறுதியில் கோபம் கொண்ட சிவ பெருமான், தனது சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார்.


அப்பொழுது பார்வதி தேவி நீராடி முடித்துவிட்டு வெளியே வந்தார். தன் மகனான விநாயகர், தலை இல்லாமல் கிடப்பதை கண்டு கடும்ஆவேசமும் கொண்டார். தான் உருவாக்கிய விநாயகரை சிவனே சிதைத்து விட்டதை அறிந்த பார்வதி தேவி, காளியாக உருவம் எடுத்து கண்ணில் படுவதை யெல்லாம் அழிக்கத் தொடங்கினார்.


காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர் கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியை சாந்தப்படுத்துவதற்கு முடிவு செய்த சிவன், தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் வெட்டி கொண்டு வருமாறு பணித்தார். அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு யானையே முதலில் தென்பட்டது.


அவர்கள் யானையின் தலையை வெட்டி எடுத்துச் சென்று இறைவனிடம் கொடுத்தனர். சிவபெருமான் அத்தலையை வெட்டுண்டு கிடந்த விநாயகரின் உடலில் வைத்து உயிர் கொடுத்தார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவி மனம் மகிழ்ந்து விநாயகரை கட்டி அணைத்துக் கொண்டார். பின்பு சிவன், விநாயகருக்கு 'கணேசன்' என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என நாரத புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விநாயகர் சதுர்த்தி விரதம்


விநாயகர் சதுர்த்தி விரதம் என்பது ஆவணி மாதம் சதுர்த்தியில் தொடங்கி புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி வரை மேற்கொள்ளப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டை சுத்தம் செய்து வாசலில் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்க வேண்டும். பின்பு பூஜையறையை மொழுகி கோலம் இட்டு அதன் நடுவில் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்ப வேண்டும். அந்த பச்சரிசியில் வலது மோதிர விரலால் பிள்ளையார் சுழி போட்டு 'ஓம்' என்று எழுதி, மண் பிள்ளையார் அல்லது பிள்ளையார் படத்தை வைக்க வேண்டும்.


விநாயகரை அருகம்புல், எருக்கம்புல், விபூதி, சந்த னம், மலர்கள் போன்றவற்றால் அலங்கரிக்க வேண்டும். பிறகு விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், தேங்காய், வெல்லம் கலந்த மாவு உருண்டை, அப்பம், அவல், பொரி, சுண்டல், எள்ளுருண்டை போன்றவற்றை படைத்து சாம்பிராணி காட்டி சூடம் ஏற்ற வேண்டும். அப்போது விநாயகருக்கான அகவல், மந்திரம், கவசம் பாடி வழிபட வேண்டும். 'சதுர்த்தி விர தத்தை முறையாக கடைப்பிடிக்க உள்ளேன். அதனால் விரதம் முடியும் வரை எந்த தடைகளும் வராமல் இருக்க அருள்புரிய வேண்டும்' என்று பிரார்த்திக்க வேண்டும்.


மேலும் ஏழை, எளிய மக்களுக்கு வசதிக்கேற்றவாறு தானங்கள் செய்யலாம். அன்னதானம் வழங்கலாம். விநாயகர் விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பவர் களுக்கு சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், செல்வ வளமும் கிடைக்கும். குடும்பத்தில் துன்பம் விலகி, இன்பம் பொங்கும்.

பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல்


அனலாசுரன் என்ற அரக்கன் தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். இதனால் வருந்திய தேவர்கள், விநாயகரிடம் சென்று முறையிட்டனர். விநாயகர் அனலாசுரனுடன் போர் செய்து அவனை சிறிய உருவமாக மாற்றி விழுங்கினார். ஆனால், அசுரனின் வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிந்தது. தேவர்களும், பூதகணங்களும் எவ்வளவு முயன்றும், விநாயகரின் உடல் எரிச்சலை தணிக்க முடியவில்லை. அப்போது, காஷியா முனிவர் இருபத்தொரு அருகம்புல்லை விநாயகரின் தலைமீது வைத்தார். உடனே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்தது. அன்றுமுதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்தது


மகாபாரதத்தை எழுதிய விநாயகர்

மகாபாரதத்தை எழுத விரும்பிய வேதவியாசர், தான் சொல்லும் கலோகத்துக்கு அர்த்தம் புரிந்து எழுதும் தகுதியான நபரை தேடினார். இறுதியாக, வியாசர் விநாயகப் பெருமானே இதற்கு தகுந்த நபர் என்று கருதி அவரிடம் "நான் உருவாக்கும் மகாபாரத காவியத்தை தாங்கள் எழுதி தர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார். இதற்கு ஒப்புக்கொண்ட விநாயகர், தான் எழுதும்போது சுலோகங்களை தடையின்றி தொடர்ந்து சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையோடு எழுத ஆரம்பித்தார். முதலில் மயில் இறகைக் கொண்டு எழுதிய விநாயகர், மயில் இறகு முறிந்து போக தன்னுடைய தந்தத்தில் ஒன்றை உடைத்து மகாபாரத காவியத்தை எழுதியதாக விநாயகர் புராணம் கூறுகிறது.


ஞானப் பழத்தை வென்ற பிள்ளையார்


ஒருமுறை கைலாயத்துக்கு வந்த நாரதர், தன்னிடம் இருந்த ஒரு ஞானப்பழத்தை சிவன் பார்வதியிடம் கொடுத்தார். அந்த ஞானப்பழத்தை பெற, சிவனின் புதல்வர்களான பிள்ளையார், முருகன் ஆகிய இருவரும் விரும்பினர். இதனால் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது, "உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கே இந்த ஞானப்பழம்" என முடிவானது.


இதையடுத்து முருகப்பெருமான், தனது மயில் வாகனத்தில் ஏறி உலகை சுற்றி வர புறப்பட்டார். ஆனால் விநாயகரோ, தாயும் தந்தையுமே உலகம் என்று சிவன்-பார்வதியை சுற்றி வந்து வழிபட்டார். இதன் மூலம் ஞானப்பழத்தையும் வென்றார். உலகத்தை சுற்றி வந்த முருகப்பெருமான், நடந்தவற்றை அறிந்து தாய் - தந்தையர் மீது கோபித்து கொண்டு பழனி மலையில் குடியேறினார். இதன்மூலம், பெற்றோரே உண்மையான உலகம், அவர்களை வழிபடுவதே உண்மையான ஞானம் என்ற தத்துவம் உலகிற்கு எடுத்துரைக்கப்படுகிறது.


Key words 

விநாயகர் சதுர்த்தி 2025, Vinayagar Chaturthi Puja Vidhi, Tamil Vinayaka Chaturthi Date, Ganesh Chaturthi Remedies, விநாயகர் விரதம், வினை தீர்க்கும் பரிகாரம், Tamil Ganesh Festival, விநாயகர் வழிபாடு பயன்கள், Vinayagar Chaturthi Pooja Benefits, High CPC Hindu Festival Keywords


கருத்துரையிடுக

0 கருத்துகள்