வாரம் ஒரு தேவாரம்
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திரு முறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக் கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
அந்தமும் ஆதியும் நான்முகனும் அரவணை யானும் அறிவரிய மந்திர வேதங்கள் ஓதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் செந்தமி ழோர்கள் பரவிஏத்தும் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கந்தம்அ கில்புகை யேகமழும் கணபதி ஈச்சரம் காமுறவே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
திருமால் திருவடியையும், நான்முகன் திருமுடியை யும் காண வேண்டும் என்று முயற்சி செய்தும் அறிவ தற்கு அரியவனாய், வேதங்களை ஒதும் பெருமக்கள் திகழும் திருமருகல் தலத்தில் எழுந்தருளும் இறை வனே! இனிமை மிக்கவர்கள் போற்றி புகழும் சிறப் பினை கொண்ட திருச்செங்காட்டங்குடியில் நறுமண புகை கமழும் கணபதி ஈச்சரம் எனும் திருக்கோவிலில் காட்சி தருவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக
0 கருத்துகள்