அழகார்ந்த செந்தமிழே!
*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!*
செப்பரிய நின்பெருமை
செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்? முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும் விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச் செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!
-பாவலரேறு பெருஞ்சித்திரனார்
நூல் வெளி
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தாய் வாழ்த்து, முந்துற்றோம் யாண்டும்) பாடமாக இடம்பெற்றுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர், துரை. இராசமாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார். இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன
1. 'அன்னை மொழியே' என்ற கவிதையின் ஆசிரியர் யார்
பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2. பெருஞ்சித்திரனார் எங்கு, எப்போது பிறந்தார்?
சேலம் மாவட்டம் சமுத்திரத்தில் 10.03.1933இல் பிறந்தார்.
3.பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
துரை. இராசமாணிக்கம்
4. பெருஞ்சித்திரனாரின் சிறப்புப்பெயர் என்ன?
பாவலரேறு
5. பெருஞ்சித்திரனார் இயற்றிய நூல்கள் யாவை?
* உலகியல் நூறு
* பாவியக்கொத்து
* நூறாசிரியம்
* கனிச்சாறு
* எண்சுவை எண்பது
*மகபுக வஞ்சி
*பள்ளிப் பறவைகள்
6. ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க.
அ) யசோதர காவியம்
ஆ) சிலப்பதிகாரம்
இ) மணிமேகலை
ஈ) சீவக சிந்தாமணி
7. உள்ளத்தில் கனல்மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடியது எது?
அ) தேன்சிட்டு
இ) தேனீ
ஆ) வண்டு
ஈ)வண்ணத்துப்பூச்சி
8. "அன்னை மொழியே" என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தருள் ஒருவர்
அ) சேரன்
ஆ) சோழன்
இ) பாண்டியன்
ஈ) பல்லவன்
9. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) பாவியக்கொத்து
ஆ) நூறாசிரியம்
இ) தென்தமிழ்
ஈ) பள்ளிப்பறவைகள்
10. பொருந்தாதவற்றைக் கண்டறிக.
அ) தமிழ்ச்சிட்டு
ஆ) பள்ளிப்பறவைகள்
இ) எண்சுவை எண்பது
ஈ) உலகியல் நூறு
11. 'அன்னை மொழியே' கவிதை இடம் பெறும் நூல்
அ) நூறாசிரியம்
ஆ) கனிச்சாறு
இ) எண்சுவை எண்பது
ஈ) பாவியக்கொத்து
12. "முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே"- என்று பாடியவர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) க.சச்சிதானந்தன்
இ) வாணிதாசன்
ஈ) கண்ண தாசன்
13. "முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே" - என்று பாடியவர்
அ) க.சச்சிதானந்தன்
ஆ) துரை. மாணிக்கம்
இ) வாணிதாசன்
ஈ) முடியரசன்
14. "நற்கணக்கே" என்பதில் சுட்டப்படும் நூல்கள் எத்தனை?
அ) 18
ஆ) 10
இ)8
ஈ)5
15. "மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே!" எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் எத்தனை? பாம் வெல்வோம்
அ) ஐந்து
ஆ) மூன்று
இ) இரண்டு
ஈ) எட்டு
16. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர்
அ) பெருஞ்சித்திரனார்
ஆ) பெரியவன்கவிராயர்
இ) தேவநேயப் பாவாணர்
ஈ) தமிழண்ணல்
17. பெருஞ்சித்திரனார் பாடலில் 'பழமைக்குப் பழமை' என்னும் பொருள் தரும் சொல்.
அ) முன்னை முகிழ்ந்த
ஆ) முன்னைக்கும் முன்னை
இ) முன்னும் நினைவால்
ஈ) முந்துற்றோம் யாண்டும்
1 அன்னை மொழியே
0 கருத்துகள்