காலாண்டு தேர்வு -2025
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
(H-5, G5, C3, E3 5 / 16)
மிக முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் :
வரலாறு
1. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களை குறிப்பிடுக.
2. பதுங்கு குழிப்போர் முறை குறித்து நீங்கள் அறிந்தது என்ன ?
3. பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களை பட்டியலிடுக.
4. டாலர் ஏகாதிபத்தியம் தெளிவுபட விளக்குக.
5. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது ?
6. முதல் உலகப்போருக்கு பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர் ?
7. முத்து துறைமுக நிகழ்வை விவரி.
8. பிரெட்டன் வுட்ஸ் இரட்டையர்களின் பெயர்களை குறிப்பிடுக.
9. பன்னாட்டு நிதி அமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை ?
10. மார்சல் திட்டம் என்றால் என்ன ?
11. மூன்றாம் உலக நாடுகள் பற்றி குறிப்பு.
12. ராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து குறிப்பு வரைக.
13. பிரம்ம சமாசித்தால் ஒழிக்கப்பட்ட சமூக தீமைகள் யாவை.
14. கியூபாவின் ஏவுகணை சிக்கல் எவ்வாறு செயல் இழக்க செய்யப்பட்டது ?
15. மாவோவின் நீண்ட பயணம் பற்றி குறிப்பு வரைக.
புவியியல்
1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை கூறுக.
2. தக்காண பீடபூமி குறிப்பு வரைக.
3. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளை பற்றி குறிப்பிடுக.
4. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக.
5. அதிக மழை பெறும் பகுதிகளை குறிப்பிடுக.
6. ஜெட் காற்றோட்டங்கள் என்றால் என்ன ?
7. வேளாண்மை வரையறு இந்தியாவின் வேளாண் முறைகளை குறிப்பிடுக.
8. இந்தியாவின் தோட்ட பெயர்களை குறிப்பிடுக.
9. இந்திய வேளாண் பருவங்களை குறிப்பிடுக
10. வளம் வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
11. நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.
12. கனிமங்கள் மற்றும் அவற்றின் வகைகள் யாவை ?
13. இடப்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளை குறிப்பிடுக.
14. தகவல் தொடர்பு என்றால் என்ன ? அதன் வகைகள் யாவை ?
15. பன்னாட்டு வணிகம் வரையறு.
குடிமையியல்
1. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படைஉரிமைகளை பட்டியலிடுக.
2. நீதிப்பேராணை என்றால் என்ன ?
3. நடுவன் மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.
4. செம்மொழி தகுதி பெற்ற இந்திய மொழிகள் யாவை ?
5. நடுவன் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின்படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
6. நிதி மசோதா குறிப்பு,
7. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன ?
8. தேசிய அவசர நிலை என்றால் என்ன ?
9. உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை ?
10. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது ?
பொருளியல்
1. நாட்டு வருமானம் வரையறு.
2. GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக.
3. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.
4. உலகமயமாக்கல் என்றால் என்ன ?
5. உலகமே மக்களின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
6. உலகமயமாக்களின் மூன்று நிலைகளை எழுதுக.
7. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படை கூறுகள் யாவை ?
8. தமிழ்நாட்டில் உள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.
9. பசுமைப் புரட்சியின் விளைவுகள் என்ன ?
10. தனிநபர் வருமானம் என்றால் என்ன ? / தலா வருமானம் என்றால் என்ன ?
II.மிக முக்கியமான ஐந்து & எட்டு மதிப்பெண் வினாக்கள்:
வரலாறு
1. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெப்சைல்ஸ்
உடன்படிக்கையின் சரத்துகளை கோடிட்டு காட்டுக.
2. முதல் உலகப் போருக்கான காரணங்களை விவாதி.
3. பன்னாட்டு சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
4. உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் (1919 -1939)இந்தியாவில் காலணிய நீக்க செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதை குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.
5. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளை ஆய்வு செய்க.
6. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு செயல்பாடுகளை ஆய்வு செய்க.
7. சீனாவை ஒரு பொதுவுடமை நாடாக்க மாசேதுங்கின் பங்களிப்பை அளவிடுக.
8. பெண்களின் மேம்பாட்டிற்கு 19 நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள் குறித்து ஒரு கட்டுரை வரைக.
புவியியல்
குடிமையியல்
III.உலக வரைபட பயிற்சி மிக முக்கிய இடங்கள்.
IV.இந்திய இந்திய வரைபடத்தில் குறிக்க வேண்டிய மிக முக்கிய இடங்கள்:
10th Social Quarterly Exam Important 2, 5, 8 Mark Questions & Map PDF (2025)
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் மாணவர்களுக்கான 2025 காலாண்டுத் தேர்வுக்கான முக்கியமான வினாக்கள் மற்றும் வரைபடங்கள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த PDF-ல் உள்ளன:
- ✅ 2 மதிப்பெண் வினாக்கள்
- ✅ 5 மதிப்பெண் வினாக்கள்
- ✅ 8 மதிப்பெண் வினாக்கள்
- ✅ வரைபடக் கேள்விகள் (Map based questions)
- ✅ தேர்வுக்கு முக்கியமான பகுதிகள்
2025 ஆண்டுக்கான பாடத்திட்டத்தின் அடிப்படையில்
இந்த வினாக்கள் புதிய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அரசு & தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் பயன்படக்கூடியது.
0 கருத்துகள்