Ad Code

Ticker

6/recent/ticker-posts

SSLC சமூக அறிவியல் தினசரி தேர்வு – தினமும் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள்



 1)பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018-19 இல் ………………….. லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
அ) 91.06
ஆ) 92.26
இ) 80.07
ஈ) 98.29
விடை:
ஆ) 92.26

2) இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் …………….. ஆண்டுகள் ஆகும்.
அ) 65
ஆ) 60
இ) 70
ஈ) 55
விடை:
அ) 65

3) எந்தக் குழுக்கள் / கமிஷன்கள் மத்திய – மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?
1. சர்க்காரியா குழு
2. ராஜமன்னார் குழு
3. M.N. வெங்கடாசலையா குழு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு.

அ) 1, 2 &3
ஆ) 1 & 2
இ) 1 &3
ஈ) 2 & 3
விடை:
ஆ) 1 & 2

4) பின்வருவனவற்றுள் எந்த உரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் ‘இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா’ என விவரிக்கப்பட்டது?
அ) சமய உரிமை
ஆ) சமத்துவ உரிமை
இ) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
ஈ) சொத்துரிமை
விடை:
இ அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை

5) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்
அ) ஊட்டி
ஆ) ஆனை முடி
இ) கொடைக்கானல்
ஈ) ஜின்டா கடா
விடை:
ஆ) ஆனை முடி

6) இந்தியாவின் மிகப்பெரிய வடிகாலமைப்பு ……………… ஆகும்.
அ) சிந்து
ஆ) பிரம்மபுத்திரா
இ) கங்கை
ஈ) வைகை
விடை:
இ கங்கை

7) பின்லாந்தைத் தாக்கியதற்காக சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ) ஜெர்மனி
ஆ) ரஷ்யா
இ) இத்தாலி
ஈ) பிரான்ஸ்
விடை:
ஆ) ரஷ்யா

8) பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ) பிரிட்டன்
ஆ) பிரான்ஸ்
இ) டச்சு
ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்
விடை:
அ) பிரிட்டன்

9) i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றியது.
iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) iv) சரி
ஈ) i), ii), iv) ஆகியன சரி
விடை:
ஈ) i), ii), iv) ஆகியன சரி

10) பழவேற்காடு ஏரி ……………. மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
அ) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
ஆ) கர்நாடகா மற்றும் கேரளா
இ) ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
விடை:
ஈ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்


SSLC சமூக அறிவியல் தினசரி தேர்வு – தினமும் 10 ஒரு மதிப்பெண் வினாக்கள் (தமிழ்வழி )

Go To Online Test

கருத்துரையிடுக

0 கருத்துகள்