Ad Code

Ticker

6/recent/ticker-posts

இன்றைய செய்திகள் 28.05.2025(புதன்கிழமை)



📕📘மாணவர்களின் அறிவு தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை மேம்படுத்துதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

📕📘TN SLAS EXAM தேர்வு முடிவுகள் வெளியீடு.SLAS EXAM REPORT CARD DOWNLOAD LINK வெளியீடு.

📕📘தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் அமைக்கப்பட்ட மாநிலக் கல்விக் கொள்கை குழுவின் செயல்பாடுகள் வெளியீடு.                                               📕📘சென்னை ஐஐடியில் 4 புதிய படிப்புகள் அறிமுகம்ஆகியுள்ளது.

📕📘நேர்காணல் இல்லாத தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு.

📕📘பத்தாம் வகுப்பு / 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் / மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.                                                   📕📘வருமான வரி தாக்கல் செய்வதற்கு ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதியமைச்சகம் உத்தரவு.வருமான வரி இணையதளத்தில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிப்பு.

👉குறிப்பு: இந்த ஆண்டு (A.Y. 2025-2026) வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளம் இன்னும் திறக்கப்படவில்லை.

📕📘அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதியளித்து அரசாணை வெளியீடு.

📕📘மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில்நேற்று நடக்கவிருந்த தொழில் சட்டம் தேர்வு ஒத்திவைப்பு.

👉நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற இருந்த தொழில் சட்டம் (Industrial law) தேர்வு ஒத்திவைப்பு.

பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் தேர்வு ஒத்திவைப்பு.

வினாத்தாள் கசிவு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்வை வரும் 30 அல்லது 31ஆம் தேதி நடத்த திட்டம் எனத் தகவல்.

📕📘அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 374 மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிய முதலமைச்சர்

கல்வி உதவித்தொகை, பேனா, நோட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தக பையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

📕📘மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் உள்ள அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 131 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச மடிக் கணினிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

📕📘அரசு கலை - அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் மே 30-ல் வெளியீடு!

சென்னை: அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதி வெளியிடப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: “அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் மாணவிகள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 619 பேர். மாணவர்கள் 76 ஆயிரத்து 65 பேர். மூன்றாம் பாலினத்தவர் 78 பேர்.

விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் அரசு கல்லூரிகளில் வெளியிடப்படும், இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும்.

மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும்.

மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30-ம் தேதி தொடங்கும். மாணவர் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூன் 30-ம் தேதி ஆரம்பமாகும்,” என்று அவர் கூறியுள்ளார்.

📕📘உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். 

👉கோடை விடுமுறைக்கு பின் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரும் ஜூன்-2ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளி திறப்பு தொடர்பாக அரசு முதன்மைச் செயலாளர், துறைசார் இயக்குநர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் காணொலி வாயிலாக அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து உரையாடினார். 

தொடர்ந்து முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினோம்.

இடைநிற்றலைக் கண்காணித்து, இடைநிற்றல் இருப்பின் அம்மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும்.

மாணவர்கள் வருகைக்கு முன்னர் பள்ளி வளாகத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

இக்கல்வியாண்டில் கல்வி அலுவலர்கள் அதிகமான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

முந்தைய கல்வியாண்டை விட, இக்கல்வியாண்டில் அதிகப்படியான தேர்ச்சி விகிதத்தைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை பரிசோதிக்க வேண்டும்.

உடனடித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

மாணவர்களுக்கான நன்னெறி வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் உறுதி செய்திட வேண்டும்.

உடற்கல்வி பாடவேளையை முறையாக பின்பற்றி சாதனையாளர்களை உருவாக்க வேண்டும்.

மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்போம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

📕📘தமிழகத்தில் பாரத் பெட்ரோலிய நிர்வாகம் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளதை எதிர்த்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் எதிரொலியாக, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட கூடிய சூழல் உருவாகியுள்ளது.

📕📘திருப்பூர் - தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலைகள் நடமாட்டம்..

அமராவதி தடுப்பணையில் 12 அடி மற்றும் 13 அடி நீளம் கொண்ட 2 முதலைகள் உள்ளதால் ஆற்றில் இறங்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை.

📕📘பெண்ணிடம் அத்துமீறல்.

உத்திரபிரதேசத்தின் மீரட்டில் தனது குழந்தையுடன் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அத்துமீறல்.

பைக்கில் வந்து முத்தம் கொடுத்துவிட்டு தப்பியவனை கைது செய்து நையப்புடைந்த போலீஸ்.

📕📘106% அளவிற்கு மழை பதிவாகும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை நாடு முழுவதும் 106% அளவிற்கு தென்மேற்கு பருவமழை பதிவாக கூடும்.

வடகிழக்கு இந்தியாவில் இயல்பிற்கு குறைவாகவும், வடமேற்கு இந்தியாவில் இயல்பான நிலையிலும், மத்திய மற்றும் தென் இந்தியாவில் இயல்பிற்கு அதிகமாகவும் மழை பதிவாகும்.

தமிழகத்தை பொறுத்தவரை வடமாவட்டங்களில் இயல்பிற்கு அதிகமாகவும், தென் மாவட்டங்களில் இயல்பான அளவிலும் மழைப்பொழிவு இருக்கும்.

-இந்திய வானிலை ஆய்வு மையம்.

📕📘மதுரை மாவட்டம் உத்தங்குடியில் ஜூன் 1ம் தேதி நடைபெறும் திமுக மாநில பொதுக்குழு கூட்டத்திற்கான முன்னேற்பாடுகள் தீவிரம்.

📕📘யாசகம் கேட்பது போல் கைவரிசை.

கோவை அத்திப்பாளையத்தில் உள்ள தனியார் பம்ப் கம்பெனியில் யாசகம் கேட்பது போல் சென்ற 7 வட மாநில பெண்கள் கைவரிசை.

பம்ப் கம்பெனியில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள காப்பர் ஒயர், பித்தளை உலோகங்கள் திருட்டு.

பாத்ரூமில் வைக்கப்பட்டிருந்த பினாயில் பாட்டிலையும் வட மாநில பெண்கள் திருடி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவு.

📕📘சென்னை தனியார் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தில் சிக்கிய 13 பேர் பத்திரமாக மீட்பு.                                                                                              📕📘இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை தொடங்கிய Alcatel - ‘வி3 கிளாசிக்’ போனின் சிறப்பு அம்சங்கள் என்ன?

👉சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் நுழைந்துள்ளது பிரெஞ்சு தேச மொபைல் ஹேண்ட்செட் நிறுவனமான Alcatel. ‘வி3’ ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் மூன்று போன்களை அந்நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

தற்போது இந்தியாவில் அறிமுகமாகி உள்ள இந்த மூன்று போன்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்சனின் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் இந்தியாவில் இந்த போன்களை தயாரிக்கிறது. மற்ற மொபைல்போன் நிறுவனங்கள் வழங்காத தனித்துவ சலுகையை இளைஞர்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தியாவில் Alcatel களம் கண்டுள்ளது.

இந்தியாவில் வி3 கிளாசிக், வி3 புரோ, வி3 அல்ட்ரா போன்களை Alcatel அறிமுகம் செய்துள்ளது. வரும் ஜூன் 2-ம் தேதி முதல் இந்த போன்களின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மூலம் இந்திய நகரங்களில் தொடங்குகிறது. ‘வி3’ ஸ்மார்ட்போன்: சிறப்பு அம்சங்கள்

6.67 இன்ச் ஹெச்டி+ Nxtபேப்பர் டிஸ்பிளே

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்

மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்

பின்பக்கத்தில் இரண்டு கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா

8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா

5,010 mAh பேட்டரி

18 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்

6ஜிபி ரேம்

128ஜிபி ஸ்டோரேஜ்

5ஜி நெட்வொர்க்

நானோ சிம் + ‘இ’சிம்

யுஎஸ்பி டைப்-சி

இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

இந்த போனின் விலை ரூ.12,999 முதல் தொடங்குகிறது.

📕📘சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேரை இடமாற்றம் செய்ய கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

நீதிபதி விவேக்குமார் சிங்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி பட்டுதேவானந்தை ஆந்திர உயர்நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.                                                  📕📘மாநிலங்களவை தேர்தலில் என்ன முடிவெடுக்க வேண்டும் என தலைமை தான் சொல்லும். 

அதிமுக உடன் கூட்டணியில் உள்ளோம். அதனால் அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம். 

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

📕📘தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்ம பூசன் விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

📕📘பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞரும், நடிகையுமான ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் குடியரசு தலைவர்.

📕📘ஊழலை ஒழிக்க 2000 நோட்டு போல் ரூ.500 நோட்டுகளையும் திரும்பப்பெற வேண்டும்”

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

📕📘போக்குவரத்து துறையில் சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு 2025 உலக சுற்றுச்சூழல்சிறப்பு விருது வழங்கப்பட்டது

புது டெல்லியில் உள்ள Roseate House ஏரோசிட்டியில், உலகளாவிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (Global Energy and Environment Foundation – GEEF) ஏற்பாடு செய்த, உலக எரிசக்தி தலைவர்கள் மாநாட்டில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்கான “உலகளாவிய சுற்றுச்சூழல் சிறப்பு நிறுவனம்” என்னும் உயரிய விருதைப் பெற்றுள்ளது.

📕📘மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்: 

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

📕📘தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

 ’10-15 பேருக்கு கொரோனா பரவல் தினமும் ஏற்படுகிறது; வீரியம் இல்லாத கொரோனா தான். பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூட தேவையில்லா நிலையில் தான் பரவல் உள்ளது’ எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📕📘தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி 3 ஆயிரத்து 253 மெகாவாட்டாக உயர்ந்தது.

காற்று மற்றும் மழை காரணமாக மின் நுகர்வும் தமிழகத்தில் குறைந்துள்ளது.கடந்த 3 தினங்களுக்கு முன்னர் தமிழகத்தின் ஒரு நாள் மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. ஆனால் திங்கட்கிழமை 13 ஆயிரத்து 905 மெகாவாட்டாக குறைந்துள்ளது. காற்றாலை மின் உற்பத்தியை பொறுத்தவரை திங்கட்கிழமை  காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 200 மெகாவாட்டை கடந்தது மே மாதத்தில் அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. இன்றும் பலமாக காற்று வீசுவதால் காற்றாலை மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

📕📘மாநிலங்களவை சீட் தொடர்பான கேள்விக்கு பொறுமை கடலினும் பெரிது என பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

மேலும் தற்போது தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்; அடுத்த சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாலர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

📕📘டெல்லி லோதி எஸ்டேட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த அரசு இல்லத்தை மாயாவதி காலி செய்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக 35 லோதி எஸ்டேட் பங்களாவில் காலி செய்வதாக மாயாவதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்சித் தலைவர் என்ற வகையில் மாயாவதிக்கு 2024ல் டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. அரசு பங்களாவை மே 20ல் காலி செய்த மாயாவதி, வீட்டு சாவிகளை மத்திய பொதுப்பணித் துறையிடம் ஒப்படைத்தார்.

📕📘சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்திய வீரர் ஷுபான்ஷு சுக்லா, 14 நாள் தனிமைக்கு அனுப்பப்பட்டார்.

📕📘அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.

சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து 7 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்திருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

📕📘சென்னை- லக்னோ இண்டிகோ விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது பயணிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பயணிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக விமானம் அவசரமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.

📕📘ஐபிஎல் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவு.

👉பிளே ஆஃப் போட்டிகள் மே-29, 30 மற்றும் ஜூன் 1 அன்றும் நடக்க இருக்கிறது,  இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று நடக்கிறது

📕📘திமுக ஆட்சியில் குறை கூற எதுவுமே இல்லாததால் அரைத்த மாவையே அரைக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

நான் டெல்லி சென்று வந்தது குறித்து சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறார்

அவருக்கு பதில் கூறி என் தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை

முதல்வர் ஸ்டாலின்

📕📘முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை

ரேஷன் கடைகளில் புதிய முன்னெடுப்பு

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை அடிப்படையில் அமல். |விரைவில் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.

இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடைக்கு பொருட்கள்  விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

📕📘நடைபோட்டியில் வெண்கலம் வென்ற தமிழ்நாட்டு வீரர்

தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியின், நடைபோட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செர்வின் வெண்கலம் வென்றார்!

1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் 20 கி.மீ இலக்கை கடந்து அசத்தல்

📕📘ஜூலை 5ம் தேதி நா.முத்துகுமாரின் இசை நிகழ்ச்சி!

நா.முத்துகுமாரின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 5ம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது!

நா.முத்துகுமார் Welfare Core கமிட்டி, ACTC நிறுவனம் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளது.

📕📘தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை

தென்மேற்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி துணை முதல்வர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

📕📘ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் குல்வீர் சிங்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்றார். 26வது ஆசிய தடகள போட்டி தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது.

📕📘பல் மருத்துவருக்கு தண்டனை.

உ.பி - முடி மாற்று அறுவை சிகிச்சையால் அடுத்தடுத்து 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி, சரண், சிறையில் அடைப்பு.

-உயிரிழந்தவரின் மனைவி அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை.

 📕📘"முகக்கவசம் கட்டாயம் இல்லை”

தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.

கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்

மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.

📕📘சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு; ஒரு கிராம் தங்கம் ரூ.8995க்கு விற்பனை ஆகிறது.

📕📘வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பு அறிமுகம்.

வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பை இந்திய வானிலை மையம் அறிமுகம் செய்தது. 

தற்போதைய வானிலை அமைப்பால் 12 கிமீ கட்ட அளவுக்கே துல்லியமாக கணிக்க இயலும்.

புதிய வானிலை அமைப்பு மூலம் 6 கி.மீ. க்கு 6 கி.மீ. கட்ட அளவில் வானிலை தகவல்களை கணிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

📕📘6ஜி தொலைத் தொடர்பு சேவைக்கான காப்புரிமை கோரி தாக்கல் செய்கிறது இந்தியா

அதிநவீன தொலைத் தொடர்பு சேவையைக் கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பெருமிதம்.

📕📘இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சு

"காஷ்மீர் விவகாரம், பயங்கரவாதம், சிந்து நதி பிரச்சினை, வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார்"

தெஹ்ரானில் ஈரான் அதிபர் உடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உரை

ஆக்கிரமிப்பு காஷ்மீர், பயங்கரவாதிகளை ஒப்படைப்பது குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என இந்தியா கூறி வருகிறது

📕📘நான் ரஜினிகாந்த்காக ஒரு சாதாரண கதையை எடுக்க  முடியாது. அவருடைய ரகமும், மார்க்கெட்டும், ரசிகர் பட்டாளமும் வித்தியாசமானவை & மிகப்பெரியவை, நான் அவரை இயக்கும்போது அந்த எல்லா காரணிகளையும் நியாயப்படுத்த வேண்டும் 

-மணிரத்னம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.       என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்,                                                        மாவட்டச் செயலாளர்

&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

கருத்துரையிடுக

0 கருத்துகள்