Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஆட்டுக்கல் மழைமானி






புவியீர்ப்பு விசை காரணமாக மேகங்களில் இருந்து விழும்நீர் மழையாக பொழிகிறது. மழைபொழியும் பொழுது மழையின் அளவை அளப்பதற்கு " மழைமானி " ( மழை அளவி)  எனும் கருவி பயன்படுத்தப்படுகிறது. நீர் ஒரு திரவம் என்பதால் ' மில்லி லிட்டர் ' எனும் ( பன்னாட்டு முறை )  அளவிடும் அலகிலேயே  மழையளவை  அளக்கிறார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை அளவு என்பது, ஒரு சதுர மீட்டர்  பரப்பளவில்  ஒரு லிட்டர் மழைநீர் வீழ்ந்திருக்கிறது என்பதாகும். இவ்வழி முறையினைக் கொண்டே தற்காலத்தில் மழையளவு அளக்கப்படுகிறது. பண்டைய காலத்தில் தமிழர்கள் எப்படி மழையின் அளவை அளந்தார்கள் என்பதைப்பற்றி இப்போது காண்போம்.


மழைபொழிவைக் கணக்கிட நம் முன்னோர்கள் ஆட்டுக்கல்லையே ( இட்டலி, தோசைக்காக  மாவு அரைப்பதற்கான இயந்திரம்) பயன்படுத்தினார்கள்.  வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் ஆட்டுக்கல் குழியில் மழை நேராக பெய்து அக்குழியை நிரப்பும். ஆட்டுக்கல்லில் நிரம்பியிருக்கும் நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா , ஈரழவுக்கு ஏற்ற மழையா என்பதை முடிவுசெய்வர். மழைப்பொழிவினை 'செவி' அல்லது ' பதினு ' முறையில் கணக்கிட்டார்கள். இது 10 மில்லி மீட்டர் அல்லது 1 சென்டி மீட்டர் மழைக்கு நிகரானது.  மழையின் அளவுக்கும், நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ' பதினை ' என்பர்.


5 சென்டி மீட்டர் அளவுக்கு மழைபெய்தால் அதை 'ஒரு உழவு மழை ' என்பர். அதாவது,  நிலத்தில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால் அதையே ஒரு உழவு மழை என்பர். இந்த ஒரு உழவு மழையால்  ஏர்கலப்பைக்கொண்டு   இலகுவாக மண்ணில் ஓரடி ஆழத்துக்கு உழவு செய்யலாம். நிலத்தை உழும்போது ஏர்க்கால் இறங்கும் அளவுக்கு நிலம் நனைந்திருக்கும்.   விதை விதைக்க இது போதுமான மழையாகும். மழையின் அளவைப் பொறுத்து ஓருழவு, ஈருழவு, ஐந்து உழவு எனக்கணக்கிடுவர். ஐந்து உழவுக்குமேல் மழைபெய்தால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் . தமிழர்களின் ஆறாம் அறிவின் உச்சமே " ஆட்டுக்கல் மழைமானி " 


இவண் 

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

கருத்துரையிடுக

0 கருத்துகள்