Ad Code

Ticker

6/recent/ticker-posts

இயற்கையான முறையில் இதழ்களை எவ்வாறு சிவப்பாக்கலாம்

 


ற்போது பெண்கள் பலரும், லிப்டிஸ்டிக் லிப் கிளாஸ் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தி தங்கள் இதழ்களை அழகுப்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இந்த செயற்கை நிறை மூட்டிகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள், சாப்பிடும் போது உணவு பொருட்களுடன் சேர்த்து உடலுக்குள் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் .எனவே இயற்கையான முறையில் இதழ்களை எவ்வாறு சிவப்பாக்கலாம் என்று பார்க்கலாமா ..........

எலுமிச்சை -சர்க்கரை ஸ்கிரப்

லுமிச்சைம்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சர்க்கரையில் நனைக்கவும் பின் அதை உங்கள் உதட்டின் மீது மென்மையாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். இதைத்தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் நல்ல மாற்றங்களை பெற முடியும்.சர்க்கரை, சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்ற உதவியோடு அற்புதமான ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளதால் சிறந்த இயற்கை எக்ஸ்போலியேட்டராக அறியப்படுகிறது.


உருளைக்கிழங்கு 

புதிய உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சார் எடுத்துக் கொள்ளவும். இரவு படுக்கை செல்லும் முன், சுத்தமான பஞ்சை இந்த சாற்றில் நனைத்து உதட்டின் மீது தடவவும், இதை தொடர்ந்து செய்வதன் மூலம் குறைந்தது 5 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம். உருளைக்கிழங்கு சாறில் அதிக அளவு வைட்டமின்கள் ஏ,பி மற்றும் சி இருப்பதால் உதட்டின் கருமையை நீக்குவதில் முக்கிய பங்காற்றும்.இந்தச் சாறு கருமையான அடர் நிறத்தைப் போக்கி நல்ல நிறத்தை உதடுகளுக்கு அளிக்கும். 

பீட்ரூட் சாறு 

பீட்ரூட்டை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கியோ அல்லது துருவியோ சாறு எடுத்துக் கொள்ளவும். இரவில் படுக்கச்செல்லும் முன் இந்த சாரை உதட்டின் மீது தடவவும்.தினசரி இதை தொடர்ந்து செய்துவர நாளடைவில் மென்மையான, மிளிரக்கூடிய உதட்டை பெறலாம். இயற்கையாகவே நிறத்தை அதிகரிக்கச் செய்யும் பண்பு பீட்ரூட் சாறில் இருக்கிறது. இது உதட்டின் அடர்நிறத்தை குறைத்து,சிவந்த நிறத்தை அளிக்கும். 

ஆரஞ்சு பழத் தோல்

ரஞ்சு பழத்தோலை நன்றாக உலர்த்தி பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். இந்த பொடியை தயிருடன் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது பூசி, காய்ந்ததும் கழிவு விடவும். இதை வாரம் இரு முறை செய்து வர மூணு வாரங்களில் நல்ல மாற்றத்தை அறியலாம். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சு பழத்தோலில் இயற்கையாகவே சருமத்தை உணர செய்யும் பண்புகள் உள்ளன. இது உதட்டின் மேற்பகுதியின் அடர்நிறத்தை குறைத்து, பட்டு போன்ற உதடுகளை பெற செய்கிறது.


மஞ்சள் மாஸ்க் 


க்காளி, எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து உதட்டின் மீது தடவி 15 நிமிடங்களுக்கு பின் கழுவ வேண்டும். இதை வாரம் மூன்று முறை செய்து வர நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்