கிறிஸ்துவின் சம காலத்திலும் அதற்கு முன்னரும் பசுநெய், எருமை நெய், நல்லெண்ணெய் ஆகியவையே தமிழர் சமையல் பயன்பட்டு வந்திருக்கின்றன இவற்றுள் நல்லெண்ணெய் தலையில் தேய்த்துக் கொள்ளவும் பயன்பட்டது பாரு மயிர் குடிமி என்னை நீவி புறம் என வரும் தொடரால் தலையில் நல்லெண்ணெய் தேய்க்கும் வழக்கம் அக்காலம் தொட்டு வழக்கில் இருந்ததை அறிகிறோம். பனையும் எள்ளும் தமிழகத்தின் தொன்மையான புஞ்சை காட்டுப் பயிர்கள் இவை இரண்டும் ஒரே நிலத்தில் பயிர் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது. ஆமணக்கு செக்கிலிட்டு ஆட்டி பெறப்பட்ட விளக்கெண்ணையும் வேப்பெண்ணையும் தலையில் தேய்த்துக் கொள்ளவும் மருந்து பொருட்களாகவும் பயன்படுத்தப்பட்டன.
புன்னை எண்ணெய்யும் விளக்கெண்ணையும் விளக்கு எரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட் ன பின்னரே மணிலா எனப்படும் நிலக்கடலை பயிரிடப்பட்டு எண்ணெய் வித்தாக பயன்படுத்த பெற்றிருக்கிறது பக்தி இயக்கம் தோன்றிய காலத்தில் பார்ப்பனர் வீடுகளிலும் கோயில்களிலும் பாலில் இருந்து பெறப்பட்ட நெய் மட்டுமே சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கூட பார்ப்பனர் வீடுகளில் மாதாளங்காய்னை நெய்யிலே பொரித்த செய்தி கூறப்படுகிறது பக்தி இயக்க காலத்தில் சாதிய படிநிலைகள் கடுமையாக வகுக்கப்பட்ட போது செக்கினை தொழில் கருவியாக கொண்டு எண்ணெய் எடுக்கும் சாதியர் கீழ் சாதியராக கருதப்பட்டனர்.
13ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் இவர்களை சக்கர பாடியார் சங்கரபாடியார் என்று குறிப்பிடுகின்றன. கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த தாராசுரம் கோயில் சிற்ப வரிசையில் கலிய நாயனார் செக்காட்டும் சிற்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் எண்ணெய் அமங்கல பொருளாக கருதப்பட்டது எண்ணெய் விற்போர் எதிரில் வருவது நல்ல சகுனம் இல்லை எனவும் கருதப்பட்டது இக்காலத்தில் எண்ணெய் விற்கும் சாதியார் செட்டியார் என்ற சாதி பெயரை இட்டு கொள்கின்றனர். அக்காலத்தில் அவர்களுக்கு செக்கார் என்றும் பேரு உண்டு .
சோழ பாண்டிய பேரரசர்கள் காலத்தில் எண்ணெய் உற்பத்திய அரசால் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது கல்லினால் ஆன மிக பழைய சொக்குகள் எழுத்துக்களோடு கிடைத்துள்ளன. தர்மபுரி மாவட்ட கல்வெட்டு ஒன்றில் இறை அம்மன் இட்ட தெற்கு என்ற தொடர் காணப்படுகிறது மதுரை மாவட்டம் கருங்காலக்குடியில் ஸ்ரீ வழுதி வளநாட்டு நிழலோர் அப்பனும் சுரபி நாட்டு நல்வேலு பொற்கொடி வீரர் பேரால் இட்டசக்கு என்ற கற்பொரிப்புடன் கூடிய ஒரு செக்கு கண்டுபிடிக்கப்பட்டு இப்பொழுது மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் வைக்கப்பட்டுள்ளது இவற்றிலிருந்து அரசியல் அதிகாரிகளே கழிச்சுக்கு அமைக்கும் உரிமைகளை பெற்றிருந்தனர் எனத் தெரிகிறது. எளிய குடிகள் தம் தேவைக்கு மரச்செக்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் செக்கின் மீது இடப்பட்ட வரி செக்கிரை என்றும் செக்காரப்பட்ட பாட்டம் என்றும் கல்வெட்டுகளில் பலமுறை குறிப்பிடப்படுகிறது பிற்கால கல்வெட்டுகளில் கோயில்களின் எண்நெய் தேவைக்காக கோயில்களுக்கு இலுப்பை தோப்புகள் இருந்தன அறிகிறோம் புன்னைகாய் எண்ணெயினை அடித்தளத்து மக்கள் நிறைய பயன்படுத்தி இருக்க வேண்டும் என தெரிகிறது அண்மைக்காலம் வரை மாட்டின் காம்புகளில் புன்னை எண்ணையே தடவப்பட்டு பால் கறக்கப்பட்டது.
தேங்காயிலிருந்து பெறப்படும் எண்ணெய் இரண்டு வகையாக தயாரிக்கப்படுகிறது தேங்காயை பூவாக துருவி நீர் சேர்த்து அரைத்து பாலாக்கி அந்தப் பாலை அடுப்பில் இட்டு காட்சி எடுக்கப்படுவது தேங்காய் எண்ணெய் ஆகும். இது மேல் சாதியினரின் வீடுகளில் வழக்கமாக இருந்தது. இதன் தயாரிப்பு செலவு அதிகம்.தேங்காயை வெயிலில் இட்டு காய வைத்து செக்கிலிட்டு ஆட்டி என்ன எடுப்பது மற்றொரு முறை பத்தி இயக்க காலத்தில் கூட கோயில்களில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை சமையலுக்கு பசு நெய்யும் விளக்கு அடிக்க பசுமணியும் இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தி உள்ளனர் சமையலில் கடலை எண்ணெயை பயன்படுத்தி வழக்கம் விஜயநகர பேரரசு காலத்திலேயே ஏற்பட்டது என கொள்ளலாம் இறந்தவர்களின் நினைவை அளிக்கும் வண்ணம் எண்ணெய் தேய்த்து குளிப்பதும் இந்த காலத்திலேயே தோன்றியிருக்க வேண்டும்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்கள் எழுதிய அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்தில் இருந்து....
தொகுப்பு
மு. செல்வகுமார்
பட்டதாரி ஆசிரியர்
அரசு உயர்நிலைப்பள்ளி
புதுப்பாளையம்
கடலூர் மாவட்டம்
0 கருத்துகள்