தேவையான பொருட்கள்
வேகவைத்து, மசித்த பனங்கிழங்கு- ஒரு கப்
சர்க்கரை- ஒரு கப்
பால்,நெய்- தேவையான அளவு
பொடியாக நறுக்கி, நெய்யில் வறுத்த
முந்திரி- 3 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த உலர் திராட்சை 10
ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்
செய்முறை
பனங்கிழங்கின் மேல் தோலை நீக்குங்கள் பின்னர் பனங்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு வேக வையுங்கள் கிழங்கு வெந்ததும் நடுவில் உள்ள நரம்பை நீக்கி சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள் அப்போது வரும் நார்களை நீக்குங்கள். பனங்கிழங்கு துண்டுகளை மிக்சியில் இட்டு விழுதாக அரையுங்கள். அதனுடன் பால் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரையுங்கள். பின்னர் அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடைப்பில் வையுங்கள்.சர்க்கரை கரைந்து பாகு பிசுபிசுப்பு பதத்துக்கு வந்ததும் அதில் கிழங்கு கலவையை ஒரு கையால் ஊற்றிக்கொண்டே, மற்றொரு கையால் கிளறவும் இடைஇடையே நெய்யை சேருங்கள். பின்னர் ஏலக்காய் பொடி முந்திரி திராட்சை சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றுங்கள். வித்தியாசமான சுவை நிறைந்த பனங்கிழங்கு அல்வா தயார்
0 கருத்துகள்