Ad Code

Ticker

6/recent/ticker-posts

நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்




இந்தியா தனது குறைந்தபட்ச ஊதிய முறையை 2025 ஆம் ஆண்டிற்குள் முடிவிற்கு கொண்டு வந்து LIVING Wages எனப்படும் வாழ்க்கை ஊதியமாக மாற்ற உள்ளது. இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.புதிய ஊதிய அமைப்பை மதிப்பிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு சர்வதேச தொழிலாளர் அமைப்பிடம் (ILO) தொழில்நுட்ப உதவியை நாடுவதாக அறிவித்துள்ளது.

குறைந்தபட்ச ஊதியத்தில் இருந்து வாழ்க்கை ஊதியத்திற்கு மாறுவது மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் மற்றும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான விரைவான முயற்சிகளை எடுக்கும் என்பதால் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒருவருக்கு அளிக்கப்படும் மிக குறைந்த அடிப்படை ஊதியம் ஆகும். ஆனால் வாழ்க்கை ஊதியம் என்பது.. ஒருவர் சுயமாக கடன் இன்றி சரியான உணவு, சரியான படிப்பு செலவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஊதியம் ஆகும்.

இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர், 90% அமைப்புசாரா துறையில் உள்ளனர். பலர் தினசரி குறைந்தபட்ச ஊதியம் ₹176 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கின்றனர். இவர்களுக்கு போதிய ஊதிய உயர்வு இல்லாததால் பல்வேறு மாநிலங்களில் ஊதியம் வழங்குவதில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது .



வாழ்க்கை ஊதியம் என்பது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒழுக்கமான வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்குத் தேவையான ஊதியத்தை வழங்குவது ஆகும். நாட்டின் பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு நாட்டின் பணவீக்கத்தை கணக்கில் கொண்டு சம்பளத்தை அடிக்கடி உயர்த்துவது, மக்களுக்கு முறையான வாழ்வாதாரத்தை வழங்குவதே வாழ்க்கை ஊதியம் ஆகும்.



பென்சன்: இது போக ஓய்வூதிய திட்டம்: நாடு முழுக்க பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.இதில் முக்கியமான வாக்குறுதி பழைய ஓய்வூதிய திட்டம் ஆகும். ஆனால் இதை இன்னும் தமிழ்நாடு அரசு கொண்டு வரவில்லை. பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.



புதிய பென்சன்: இது போக புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.இப்போது உள்ள மார்க்கெட் லிங்க் பென்சன் திட்டத்தில் மாற்றம் செய்து இந்த புதிய முறையை கொண்டு வர உள்ளனர். பல மாநிலங்கள் பழைய பென்சன் திட்டத்தை கையில் எடுக்க நினைக்கும் நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது .



வேறுபாடு என்ன? : தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் மற்றும் அரசாங்கம் 14% பங்களிக்க வேண்டும். இறுதியில் அந்த முதலீட்டு கார்பஸின் சந்தை வருவாயைப் பொறுத்து கடைசி கட்ட பென்சன் தீர்மானிக்கப்படும்.அதுவே பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50% என்னவோ.. அந்த அளவிற்கு நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது.



புதிய ரூல் : இந்த நிலையில்தான் புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.ஒருவேளை இந்த திட்டமும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றால், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்தலாம் என்ற திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.







கருத்துரையிடுக

0 கருத்துகள்