Ad Code

Ticker

6/recent/ticker-posts

பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்குவது லாபமா?

 ந்தியாவில் தங்கத்தை ஒரு மங்கள பொருளாகவே பார்க்கிறோம். அழகு சேர்க்கும் ஆபரணமாக மட்டுமில்லாமல் எதிர்கால சேமிப்பாகவும் தங்கத்தை பெண்கள் கருதுகிறார்கள். அதனால்தான் விலை அதிகமாக இருந்தாலும். பலரும் நம்பிக்கையோடு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். நிதி தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் தங்கத்தை விற்பதும், முதலீடு செய்யும் நோக்கத்தில் தங்கத்தை வாங்குவதும் இந்திய குடும்பங்களின் பொருளாதார நடவடிக்கையில் ஒன்றாகும். தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இந்த நிலையில் ஏற்கனவே வைத்திருக்கும் பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்குவது லாபம் தருமா? என்ற கேள்வி பலரிடம் உள்ளது. இது குறித்த சில விஷயங்கள்:



ங்களிடம் இருக்கும் தங்க நகைகளை கொடுத்து, புதிய தங்க நகைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற விளம்பரங்கள் நாள்தோறும் நம்மைச் சுற்றி வலம் வருகின்றன. சில நகைக்கடைகளில் தங்கத்தை மாற்றும்போது அதிக பணமும் தருகிறார்கள். இவ்வாறு இவர்கள் பழைய தங்கத்தை வாங்க முனைப்பு காட்டுவதன் காரணம் என்னவாக இருக்கும்? 


ங்கத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 8% இறக்குமதி வரி உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மார்ஜின் தொகை முழுவதையும் செலுத்தினால்தான்  தங்கத்தை வாங்க முடியும் என வங்கிகளும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. வேர்ல்ட் கோல்டு கவுன்சில் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் இந்திய மக்களிடம் மட்டும் சேமிப்பாக கிட்டத்தட்ட 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பது தெரியவந்தது. இதன் விளைவாக நகை கடைகள் தங்கம் இறக்குமதி செய்வதை குறைத்து, வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய தங்கத்தை வாங்கி வருகின்றன.


 வ்வாறு பழைய தங்கத்தை விற்கும் போது குறிப்பிட்ட சதவீதத்தை கழித்து விட்டு, அன்றைய விலைக்கு எடுப்பார்கள் குறிப்பாக கல் வைத்த நகைகளை மாற்றும் போது வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு நஷ்டமே ஏற்படும்.


னவே உங்களுடைய பழைய தங்கத்தை விற்காமல் அவசர தேவைக்கு மட்டும் அதை அசையும் சொத்தாக வைத்து கடன் பெற்றுக் கொள்ளலாம், தங்கத்தை நகையாக வாங்குவதற்கு பதிலாக, தங்கள் காயின்களில் முதலீடு செய்யுங்கள் பிற்காலத்தில் அதன் மதிப்பும் உயரும் உங்களுக்கு நஷ்டமும் ஏற்படாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்