Ad Code

Ticker

6/recent/ticker-posts

முக்கிய நிகழ்வுகள் - அக்டோபர் 10

 



 உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி  கடைபிடிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிரான உலகக் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்நிகழ்வை முன்னெடுத்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தற்போது மரண தண்டனை வழங்கப்படுவதில்லை. குற்றம் புரிந்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைகளில் மிக கொடுமையான தண்டனையான மரண தண்டனையைக் கொண்டுள்ள சில நாடுகளும் அதைக் கைவிட வேண்டும் என்ற நோக்கிலே “மரண தண்டனை எதிர்ப்பு நாள்” கடைபிடிக்கப்படுகிறது.


 உலக மனநல நாள்  

ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.  இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன. ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.


 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்.

 தமிழீழத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 10ம் நாளன்று எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழீழப் போராட்ட வரலாற்றிலே 1987இல் முதன் முதல் களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளியான இரண்டாம் லெப். மாலதியின் நினைவு நாளில் இது நினைவு கூறப்பட்டு வருகிறது. தமிழீழ போராட்ட வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக பெண் போராளிகள் வளர்ந்துள்ளனர். 1987 அக்டோபர் 10, இந்திய அமைதிப் படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதலை தொடங்கிய நாள் அன்று கோப்பாயில் இந்திய படைகளுடன் இடம் பெற்ற மோதலின் கொல்லப்பட்டவரே 2ம் லெப்.மாலதி ஆவார்.


ஆர். கே. நாராயணன் பிறந்த தினம்

 ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி  உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார். இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர். இவர் பிறந்த தினம் அக்டோபர் 10 ஆண்டு 1906.


 மு. வரதராசன் இறந்த தினம்

 மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன்  20ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமின்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார். 

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார். இவர் இறந்த தினம் அக்டோபர் 10 ஆண்டு 1974.

கருத்துரையிடுக

0 கருத்துகள்