தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை-150 கிராம் சர்க்கரை- 150 கிராம்
தண்ணீர்- 100 மில்லி
ஏலக்காய் பொடி- 1 தேக்கரண்டி
பிஸ்தா பாதாம் (பொடித்தது)- தேவைக்கு எண்ணெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு
கேசரி பவுடர் (ஆரஞ்சு நிறம்)- தேவைக்கு
செய்முறை
கொண்டைக்கடலையை சுத்தம் செய்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு அதை வடிகட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். வாணிலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும். கொண்டக்கடலையை மாவை தட்டையாக பிடித்து அதில் போட்டு பொரித்து எடுக்கவும் ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை அடைப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தவும் பின்பு அதில் சர்க்கரை கேசரி பவுடர் ஏலக்காய் பொடி சேர்த்துக்கலக்கவும் இந்த கரைசல் பாகு பதத்திற்கு வரும்போது கொண்டைக்கடலையை அதனுடன் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும்.இந்த கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்போது நெய்யில் வறுத்து பொடித்த பாதாமை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். இதனை இளம் சூடாக இருக்கும்போதே உருண்டைகளாக பிடிக்கவும் கடைசியாக நெய்யில் வறுத்த பிஸ்தா, பாதாமை லட்டுகளின் மேல் தூவவும் இப்போது சுவையான கொண்டக்கடலை லட்டு தயார்.
0 கருத்துகள்