Ad Code

Ticker

6/recent/ticker-posts

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 18


*மியூசிக் அகாதெமி' என்றழைக்கப்படும் கலை மன்றம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இராயப்பேட்டை பகுதியில் உள்ளது . இக்கலை மன்றம், சங்கீத வித்வத் சபை என்றும் அழைக்கப்படுகிறது. இசையைப் பற்றி தத்துவம் மற்றும் பயிற்சி ரீதியாக கற்றுத்தரும் வகையிலும் இக்கலை மன்றம் இருக்க வேண்டும் என ஒரு இசைக்குழுவரவேற்பு குழு, 1928 ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று தற்காலிகமானதொரு செயற்குழுவை தேர்ந்தெடுத்தது.  1928 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 அன்று இக்கலை மன்றம், பொது நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.


*சகோதரி சுப்பலட்சுமி (R. S. Subbalakshmi, ஆகத்து 18, 1886 - திசம்பர் 20, 1969) என்றழைக்கப்பட்ட [1] ஆர். எஸ். சுப்பலட்சுமி பெண்ணியத்திற்காகப் பாடுபட்ட சமூக சீர்திருத்த சிந்தனையாளரும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியுமாவார். 1905 மெட்ரிகுலேசன் தேர்வில் எல்லாப்பாடங்களிலும் முதலாவதாகத் தேறினார்.  கல்வி மட்டுமின்றி வீணை மீட்டுவதிலும் பயிற்சியெடுத்துக் கொண்டார். 1898இல் பின்னர் ஜார்ஜ் டவுனிலிருந்த பிரசன்டேசன் கான்வென்டில் எப். ஏ வகுப்பில் சேர்ந்தார். 1908 இல் பி. ஏ வகுப்பில் சேர்ந்து 1911ஆம் வருடம் முதல் பிராமணக் குடும்பத்துப் பட்டதாரியாகவும் தென்னகத்தின் முதல் பட்டதாரிப் பெண்மணியாகவும் தேர்வு பெற்றார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 18 ஆண்டு 1886.


*விஜயலட்சுமி பண்டிட் இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி என்பது. மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி. சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 18 ஆண்டு 1900.


*டி. எஸ். சௌந்தரம் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவரும், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும், சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். தந்தை சுந்தரம் தில்லிக்கு அனுப்பி அங்கு மருத்துவம் படிக்க வைத்தார்.  1936 இல் மருத்துவராகப் பட்டம் பெற்றார். மதுரையில் சொந்தமாக இலவச மருத்துவமனையை ஆரம்பித்தார். கிராமப்பகுதிகளில் காங்கிரசு கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரிசன சேவை சங்கத்தைச் சேர்ந்த ஜி. இராமச்சந்திரன் என்பவரைக் காதலித்து மகாத்மா காந்தியின் ஆசியுடன் அவரை மறுமணம் செய்தார். இவர் திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் தொடங்கிய காந்தி கிராம அறக்கட்டளை 1976 ஆம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற காந்திகிராம பல்கலைக்கழகமாக மாறியது. 1952 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். பெண்களின் திருமண வயது 18 ஆக உயர்த்தும் சட்ட முன் வடிவைக் கொண்டுவந்து அதை நிறைவேற்றினார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 18 ஆண்டு 1904.


*நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். இவர் இறந்ததாக கருதப்படும்  தினம் ஆகஸ்ட் 18 ஆண்டு 1945.


*கோபி அன்னான்  கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர். ஜனவரி 1, 1997 இல் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கோபி அன்னான் டிசம்பர் 31, 2006 அன்று ஓய்வு பெற்றார். 2001 இல் அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக "ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக " அமைதிக்கான நோபல் பரிசு, விருது வழங்கப்பட்டது. இவர் இறந்த தினம் ஆகஸ்ட் 18 ஆண்டு 2018.

கருத்துரையிடுக

0 கருத்துகள்