வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16,
கல்கத்தாவில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட தினம் இன்று (1946).
நேரடி நடவடிக்கை நாள் பயங்கரம் தெரியுமா உங்களுக்கு?
ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினம். ஆகஸ்ட் 15 இந்தியாவின் சுதந்திர தினம். இவ்விரண்டு சுதந்திர தினங்களும் 1947இல்தான் முதல்முறையாக கொண்டாடப்பட்டன. இவ்விரண்டு நாடுகளுக்கும் மூலமாக அமைந்த மற்றொரு நாளும் அதே ஆகஸ்ட் மாதத்தில்தான் அமைந்தது, ஆனால் ஓராண்டுக்கு முன்னால்; 1946 ஆகஸ்ட் 16-ஐ ‘நேரடி நடவடிக்கை நாள்’ என்று முஸ்லிம் லீக் அறிவித்தது. “நம்முடைய நடவடிக்கைகளால், பிரிக்கப்பட்ட இந்தியாவை அடைவோம், அல்லது அழிக்கப்பட்ட இந்தியாவை அடைவோம்” என்றே ஆவேசமாக அறிவித்தார் ஜின்னா.
1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாளை பாகிஸ்தான் பிரிவினை கோரும் நேரடி நடவடிக்கை தினமாக ஹிந்துஸ்தானம் முழுவதும் தமது முஸ்லிம் லீக் கட்சி அனுசரிக்கும் என அறிவித்தார் (1946 ஜூலையில் முஸ்லிம் லீக் கட்சியின் செயற் குழு சம்பிரதாயமாகக் கூடி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது).முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் அந்த அறிவிப்பின் உட்பொருளைச் சரியாகப் புரிந்து கொண்டார்கள்....இணைந்திருந்த வங்காளத்தை ஆட்சி செய்துகொண்டிருந்தது முஸ்லிம் லீக்தான். அதனால் ஆட்சியாளர்கள் கல்கத்தா படுகொலைகள் நடக்க குண்டர்களுக்கும், முஸ்லிம் லீக்கை சேர்ந்தவர்களுக்கும் முழு ஆதரவும், ஆசியும் அளித்தார்கள்.
ரேஷன் முறையில் பெட்ரோல் வழங்கப்பட்ட அக்காலத்தில் பெட்ரோல் கூப்பன்களை அவர்களுக்கு தாராளமாக வழங்கினார்கள். அதிகாரத்தையும், திறமையையும் பயன்படுத்தி வன்முறையை அனுமதித்தார்கள்.வங்காளத்தின் முதலமைச்சர் பிரீமியர் ஷாகித் சுகர்வாடி ஒரு மோசமான மதக்கலவரம் நடைபெறுவதற்குக் முழு காரணமானார். காவல் நிலையங்களுக்குள் சென்று போலீசார் கைது செய்து வைத்திருந்த முஸ்லிம் லீக் தொண்டர்களையும் சமூக விரோதிகளையும் விடுதலை செய்தார். இது சில காவலர்களின் வாக்குமூலங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சுகர்வாடி போன்ற வங்காள முஸ்லிம் தலைவர்கள் முழுமூச்சுடன் நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். அவர்கள் பாகிஸ்தான் என்ற பரிசைப் பெறுவதற்கு சில கடினமான முறைகளைக் கையாள்வதில் துளியும் தவறில்லை என்று எண்ணி இருக்கலாம். இந்துக்கள் திருப்பித் தாக்குவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதன் காரணமாகவே ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஆயுதங்களோடு, ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயாராக இருந்தன.
மாநில அரசங்கத்தின் ஒத்துழைப்போடு ஒரு லட்சம் பேருக்குத் தேவையான ரேஷன் அரிசியும் பிற உணவுப் பண்டங்களும் நேரடி நடவடிக்கை தினத்தை அனுசரிக்க வரும் முஸ்லிம் லீகர்களுக்கு வழங்குவதற்காகச் சேகரித்து வைக்கபட்டன. நேரடி நடவடிக்கை நாளான ஆகஸ்ட் 16 ஆம் தேதி எல்லாம் திட்டமிட்டபடி நடந்தன. இந்தியாவின் பல பகுதிகளில் பிரச்சனை ஏதுமின்றி கடந்து போனது. ஆனால் அது கல்கத்தாவை உலுக்கி எடுத்தது. முஸ்லிம் லீக் மிகப்பெரிய திட்டம் தீட்டி இருந்தது. வெகு முன்னதாகவே ரயில் தண்டவாளங்களைப் பயன்படுத்தி கொடிய ஆயுதங்களை தயார் செய்து தேவையான இடங்களுக்கு அனுப்பி வைத்தது.
நேரடி நடவடிக்கை நாளன்று முஸ்லிம் லீக் தொண்டர்கள் இந்துக்களை கடைகளை மூடச் சொல்லி மிரட்டினார்கள். (அன்றைய நவகாளி மாவட்டத்தில் எழுபது சதம் முகமதியர், முப்பது சதமே ஹிந்துக்கள். கிறிஸ்தவர்கள் அன்று அங்கு இல்லையென்றே சொல்லிவிடலாம்.)மறுப்பவர்கள் கடைகளை சூறையாடினார்கள். முஸ்லிம்கள் இந்துக்களையும் சீக்கியர்களையும் கொல்ல, சில இடங்களில் மனிதர்கள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டர்கள். கல்வி நிறுவனங்களுக்குள் புகுந்து மாணவர்களைச் சிலர் வெளியே இழுத்து வந்து கொலை செய்தார்கள்.உயிரோடு குழந்தைகளை தீக்குள் வீசி எறிவது ; காருக்குள் இருந்த குடும்பத்தை காரோடு சேர்த்து கொளுத்துவது போன்றவற்றில் முஸ்லிம் வன்முறையாளர்கள் ஈடுபட்டார்கள்.
(அக்டோபர் மத்தியில் நவகாளியில் முகமதியர் தொடங்கிய இனக் கலவரத்தை அடக்க கல்கத்தாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதிதான் காந்திஜியால் நவகாளி செல்ல முடிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.)
கடைசியாக பதிவு செய்யப்பட்ட தகவல்களின்படி கல்கத்தா கலவரத்தில் சுமார் 7000 முதல் 10,000 பேர் கொல்லப்பட்டார்கள்; ஒரு லட்சம் பேர் காயமடைந்தார்கள். ஆகஸ்ட் 21 ஆம் தேதி ராணுவத்தின் ஐந்து பெட்டாலியன்களும், நான்கு கூர்க்கா பெட்டாலியன்களும் வந்து இறங்கின. நிலைமை கட்டுக்குள் வந்தது. எதிர்வினையாற்றிய இந்துக்கள் சிலர் தற்காப்பு நடவடிக்கைகளிலும், கொலை செய்வதிலும் ஈடுபட்டார்கள்...
காவல் துறை கொடுத்த ஆவணங்கள்; இந்திய தேசிய காங்கிரஸிடமும், இந்து மகாசபையிடமும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்கள் ஆகியவற்றை கமிஷன் முறையாக பதிவு செய்துள்ளது. அவை எல்லாம் கல்கத்தா, டெல்லி அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக உள்ளன. இவற்றோடு, பலர் தங்கள் நினைவுகளில் இருந்து கூறியவையும், உண்மை நிகழ்வுகளை நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. தேதி வாரியாக , ஒவ்வொரு மணி நேரமும் நடத்தப்பட்ட படுகொலைகள், சூறையாடல்கள் ஆகியவை கல்கத்தா போலீஸ் ஆவணங்களில் பதிவாகியுள்ளன. அவற்றை எல்லாம் பார்க்கும்போது, அது தவறி நடந்த கலவரமாகத் தெரியவில்லை. ஒரு நோக்கத்துக்காக திட்டமிட்டு இழைக்கப்பட்ட கொடுமைகள் அவை.
கல்கத்தாவில் ஓடிய ரத்த ஆறு நவகாளியையும், திப்பேராவையும் அழித்து, பிகாரைத் தொட்டது.அதன் பின் இணைந்த மாகாணங்களில் படுகொலைகள் நடந்தன. இணைந்த மாகாணம் என்பது கிட்டத்தட்ட தற்போதைய உத்தரப் பிரதேச மாநிலத்தையும், உத்தரகண்ட் மாநிலத்தையும் கொண்ட பகுதியைக் குறிக்கிறது. தற்போது பாகிஸ்தானில் உள்ள வட மேற்கு எல்லை மாகாணம், சிந்து ஆகிய இடங்களும் பாதிக்கப்பட்டன. அதே வேளையில் பாகிஸ்தானை உருவாக்க நினைத்தவர்கள் நிகழ்த்திய கொடுமைகள் விடுதலைக்கு முன் இணைந்திருந்த பஞ்சாப் மாகாணத்தை மற்ற எல்லா இடங்களையும்விட அதிகமாக தாக்கி சீரழித்தன. ஏனென்றால் தனி பாகிஸ்தானை அடைய நடக்கும் போரில் முஸ்லிம் லீகுக்கு வங்காளத்துக்கு அடுத்தபடியாக இணைந்திருந்த பஞ்சாப் பிரிக்கப்பட வேண்டியது மிகவும் முக்கியம். பஞ்சாபில் சீக்கியர்கள் படுபயங்கரமான எதிர் தாக்குதல் நடத்தியபோது அது தேசப்பிரிவினைக்காக நடத்தப்படும் உள் நாட்டுப்போராக மாறிவிட்டது.
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16,
இடி அமீன் இறந்த தினம் இன்று
இடி அமீனின் சர்வாதிகாரத்தை பார்க்கும் போது ஹிட்லர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவன் ருசித்திருக்கின்றான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய அதிகாரிகள் மூலம் தெரியவந்துள்ளது. இரக்கம் என்ற வார்த்தைக்கும் இவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில்தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.
உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.தாயால் வளர்க்கப்பட்ட இவன் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயியின் மகன் ஆரம்ப கல்வி மட்டுமே பயின்ற இவன் 1946 இல் சமையல் காரனாக ராணுவத்தில் சேர்ந்து பின்னர் படிப்படியாக லெப்டினன்ட் ஆக பதவி பெற்றான்.
உகண்டா, ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa) என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்ட இந்நாடு ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்தது. 1962 இல் உகண்டா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அதே ஆண்டு நடந்த பொது தேர்தலில் வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே வெற்றி பெற்று பிரதமரானார். இவர் ஒபோடே லாங்கி பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். இவர் ஆட்சிக்கு வரும் போது அந்நாட்டு மக்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக பிரிந்து வாழ்ந்தனர். அவ்வினங்களுக்கென்று தனி தலைவர்களும் இருந்தனர். ஜாதி தலைவர்கள் போன்று. இந்நிலையில் புகாண்டா என்னும் பழங்குடியின் தலைவரான கிங் பிரெட் என்பவரை உகாண்டாவுக்கு ஜனாதிபதியாக்கினார்.
ஒபோடே மற்றும் பிரெடி இருவருக்குமான நட்பு நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. இருவருக்கும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட ஒபோடே ஜனாதிபதி அதிகாரங்ளை பிரெடியிடமிருந்து பறிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த புகண்டா இனத்தவர்கள் கலவரதத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். அதிகமாக வாழ்ந்த அவ்வின மக்களை அடக்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட முரட்டுத்தனமான இராணுவ அதிகாரியே இடி அமீன். காக்வா இனத்தைச் சேர்ந்த இவன் பார்ப்பதற்கே பயங்கரமாக இருப்பான் ஆறு அடிக்கு மேல் உயரம். குத்துச்சண்டை சாம்பியன். முரட்டு குணம் கொண்டவன்.
1966 இல் இடி அமீன் மேஜர் ஜெனரல் ஆக ஒபோடே அசால் நியமிக்கப்பட்டான் அமீன் முதல் வேலையாக ஜனாதிபதி மாளிகையை பீரங்கி கொண்டு தாக்குதல் நடத்தினான். இதனால் பீதியடைந்த ஜனாதிபதி நாட்டை வீட்டே பிரிட்டனுக்கு ஓடினார். பின்னர் ஒபோடேவுடன் சேர்ந்து உகண்டாவை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கினான். இதற்கிடையே பிரிட்டனில் தஞ்சம் புகுந்த ஜனாதிபதி நோயுற்று இறந்து போனார்.
ஜனவரி 1971 அன்று ஒபோடே காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூருக்கு விமானத்தில் பறந்தார். அவரிடம் பணிவோடு கைகுலுக்கி வழியனுப்பிய இடிஅமீன், விமானம் கிளம்பியவுடன் ராணுவத்தின் ஒரு பிரிவை பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றி தான் நாட்டின் சர்வாதிகாரி என அறிவித்தான். சர்வாதிகாரியான அமீன் வெள்ளையர்களை தனது பல்லாக்கு சுமக்கும் சிப்பந்திகளாகவும் குடை பிடிக்கவும் பயன்படுத்தி கொண்டதால் நாட்டு மக்களிடையே அமீனுக்கு நன்மதிப்பு ஏற்பட்டது.
ஆனால் அமீனுக்கு ஒரு பயம் இருந்தது. தான் இராணுவ அதிகாரியாக இருந்து ஆட்சியை கவிழ்த்து போல் தனக்கும் இது போல நடந்து விட்டால் என்னவாகும் என்று யோசித்த அமீன் அந்நாட்டின் முக்கிய உயர் இரானுவ அதிகாரிகளை இரவு விருந்து ஒன்றுக்கு அழைத்தான் இவ்விருந்தில் 36 பேர் வரை கலந்து கொண்டனர். அனைவரையும் திட்டமிட்டது போல் தனது அடியாட்களை வைத்து கொலை செய்தான். மறு நாள் தன்னை கொலை செய்ய சதி திட்டத்துடன் வந்த இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி ஏற்பட்டது என்று வானொலி மூலம் அறிக்கை விடுத்தான்.
நீதி கேட்டு வந்த ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சுலைமான் ஹுசைன் அவர்களையும் கொலை செய்து அவரது தலையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்து உள்நாட்டு, அயல் நாட்டு பிரமுகர்களை அழைத்த விருந்தொன்றில் சுலைமானின் தலையை எடுத்து ஊறுகாயுடன் சேர்த்து ருசித்ததாகவும் தகவலொன்று கூறுகின்றது.
எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீனுக்கு நாட்டின் தலை எழுத்து தனது கையில் இருந்ததால், நாட்டின் உயரிய பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது மார்பே மறைக்கும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டான்.
இவன் செய்த கொலைகளும் தேசதுரோகச் செயல்களும் மக்களுக்கு தெரியாமல் போனமைக்கான முக்கிய காரணம் அந்த நேரத்தில் ஊடகங்கள் அதிகளவில் இல்லாமையே, இருந்த வானொலியும் அமீனின் கையில் என்பதால் உண்மைகள் மறைக்கப்ட்டன. ஆனாலும் உண்மைகள் கசிய ஆரம்பித்தது அதன் பிறகு அமெரிக்க பத்திரிக்கை ஒன்றின் நிருபரான நிகோலஸ் ஸ்ட்ரோ என்பவரும் ராபர்ட் ஸைடில் என்கிற சமூகவியல் பேராசிரியரும் உகாண்டாவில் ராணுவ கமாண்டரான மேஜர் ஜூமோ அய்கா என்பவனை சந்தித்து, இதுபற்றி விசாரிக்க போன போது அவர்களையும் அமீனின் ஆணைப்படி கொலை செய்தான் அய்கா. அத்தோடு உகண்டாவின் பொருளாதாரமும் மந்தகதியாகி அடிமட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தது. உதவி செய்யவும் எந்த நாடும் முன்வரவில்லை.
உகாண்டாவில் 50,000 க்கும் அதிகமாக ஆசிய மக்கள் வசித்து வந்தார்கள். இவர்களில் தொழிலதிபர்களாகவும் உயரிய பதவிகனையும் வகித்து, உகாண்டாவின் பொருளாதாரத்தையும் தூக்கி பிடித்து நிறுத்தினார்கள். ஆசிய தொழிலதிபர்களால் லட்சக்கணக்கான உகாண்டா மக்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்தது. இவர்கள் அனைவரையும் 90 நாட்களில் தனது நாட்டை விட்டு வெளியேறும் படி உத்தரவிட்டான். பல தலைமுறைகளாக உகாண்டாவிலேயே பிறந்து, வளர்ந்த அனைவரும் கையில் மூட்டை முடிச்சுகளுடன் நாட்டைவிட்டு வெளியேறினர்.
உகாண்டா அரசுக்கு லிபியா நாடு மட்டுமே ஏதோ நிதியுதவி அளித்து வந்தது. லிபியாவின் ஒரே கண்டிஷன் - யூதர்கள் அத்தனை பேரையும் நாட்டைவிட்டுத் துரத்த வேண்டும் என்பதே அந்த கண்டிஷன். 1976 ஜூன் 28 ஆம் திகதி இஸ்ரேலிலிருந்து பாரிஸ் சென்று கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானத்தை பாலஸ்தினிய தீவிரவாதிகள் கடத்தி, உகாண்டாவில் இறங்கினார்கள். விமானத்தில் அதிகமான யூதர்கள்.
ஜூலை 3 ஆம் தேதி நள்ளிரவு இஸ்ரேலிய கமாண்டோக்களைச் சுமந்துக்கொண்டு ஒரு ராணுவ விமானம் வந்து இறங்கியது. விமானத்திலிருந்து பாய்ந்த கமாண்டோக்கள் விமான நிலையத்தில் புகுந்து, அத்தனை பயணிகளையும் காப்பாற்றி, தங்கள் விமானத்தில் ஏற்றிக்கொண்டு பறந்துவிட்டார்கள் குறுக்கே வந்த அமீனின் ராணுவ வீரர்கள் அனைவரையும் சுட்டுத்தள்ளினார்கள். ஒரு மணிநேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.
1978 இல் உள்நாட்டு கலகங்களும் பொருளாதார பிரச்சனைகளும் உகாண்டாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது. அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியாவை போருக்கு அழைத்தான். ஆத்திரமடைந்த தான்சானியா மற்றும் உள்நாட்டு படைகள் எதிர்த்து தாக்கின. பயிற்சியில்லாத அமீனின் இராணுவ வீரர்கள் சமாளிக்க முடியாமல் இறந்து போனார்கள்.
இடி அமீன் லிபியாவில் தஞ்சம் புகுந்தான் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தான் அவனுக்கு ஏறக்குறைய 40 பிள்ளைகளும் 8 மனைவிக்கு மேல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இறுதிக்காலகட்டத்தில் 16 ஆகஸ்ட் 2003 அன்று மாரடைப்பால் இறந்து போனான். இடி அமீன் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டான். மீண்டும் ஒபோடே ஆட்சி துவங்கியது.அமீனின் ஆட்சியில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர்.மனிதனாக பிறந்து, மிருகமாக வாழ்ந்து, மிருகமாகவே இறந்தான் இடிஅமீன்.
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16,
இயற்கை விஞ்ஞானி
மசானபு ஃபுகோகா நினைவு தினம் இன்று.
இவர் ஜப்பான் நாட்டில் 1913ஆம் ஆண்டு பிறந்தவர். நுண்ணுயிரியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்ற இவர், 1955ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பெற்ற வேளாண் கல்வி நடைமுறைக்கு உதவவில்லை என்று உதறித் தள்ளிவிட்டு, நேரடி விவசாயத்துக்கு வந்தார். சொந்த நிலத்தில் நீண்ட காலம் ஆய்வு செய்து, உழவு மற்றும் செலவு இல்லாத வேளாண்மைத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தார்.
இவருடைய சித்தாந்தங்கள் 1978ஆம் ஆண்டு, 'ஒற்றை வைக்கோல் புரட்சி' என்ற நூலின் வழியாக வெளி உலகுக்கு வந்தது. ஆரம்பத்தில், 'விதைக்கிறேன், அறுக்கிறேன்... வேறு எதுவும் செய்வதில்லை’ என்று இவர் சொன்னபோது, கேலியாகத்தான் எல்லோராலும் அது பார்க்கப்பட்டது. ஆனால், சில ஆண்டுகளில் இவர் சொல்லும் விவசாயம்தான் மண்ணுக்கும் மனிதர்களுக்கும் ஏற்றது என்பது உலகுக்கே புரியத் தொடங்கியது.
நஞ்சில்லாத உணவை உண்டால், நீண்டகாலம் வாழ முடியும் என்பதை நிரூபித்துக்காட்டும் வகையில், 95 ஆண்டுகள் வாழ்ந்தவர், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16இல் தான் மிகவும் நேசித்த இயற்கையுடன் கலந்தார்.
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16,
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் நினைவு தினம் இன்று.
தன்னுடைய 17 வயதில் குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலைக் காரணமாக, கல்கத்தாவிற்கு வேலைத் தேடி சென்றார். அங்கே தன்னுடைய அண்ணனுக்கு உதவியாக கோவிலில் வேலைப் பார்த்து வந்தார். அவர் இறந்தவுடன் அதே காளி கோவிலின் பூசாரியானார்.
ஆன்மீகச் சிந்தனைகளை உலகெங்கும் பரப்பியவர். மேலும் இவர் அவதாரப் புருஷர் என்று அனைவராலும் போற்றப்பட்டார். இவருடைய சீடர்களுள் நரேந்தரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்.
'கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல வழிகள்" என்பதை தெளிவுபடுத்திய இவர் 1886ஆம் ஆண்டு ஆகஸ்டு 16ஆம் நாள் காலமானார்.
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 16,
இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று(2018).
1996ம் ஆண்டு சில காலமும், 1998ல் இருந்து 2004 வரையிலும் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர். இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் பிறந்த இவர் திருமணம் செய்து கொள்ளாதவர். 50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் ( உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி ) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் இவர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.
0 கருத்துகள்