Ad Code

Ticker

6/recent/ticker-posts

திருவிளக்கு வகைகள்

 


சாத்தான்குளம் அ. இராகவன் அவர்கள் விளக்கை பற்றி ஆய்வு செய்து, தரவுகளை சேகரித்து நமக்கு வழங்கியுள்ளார். அந்த பெரும் மகனுக்கு நன்றி கூறி, திருவிளக்கை பற்றி நாம் காண்போமாக.


மக்கள் இனம் மண்ணுலகில் தோன்றியதும் முதலில் இருளையே கண்டது. அப்பால் பகலவனையும் விண்மீன்களையும், மதியையும் கண்டது. ஆனால் கதிரவன் ஒளியிலே மக்கள் கண்களால் ஒரு பொருளை நன்றாகக் காணமுடிந்தது. குளிர்மதியிலும், மதி இல்லாத காலங்களிலும் விண்மீன்களால் மக்கள் ஓரளவுதான் பார்க்க முடிந்தது. ஆரம்பகாலத்தில் விண்ணில் ஒளிரும் மின்னலையும் இடியையும் கண்டு நடுநடுங்கிக் கண்களை மூடிக் கொண்டான். மனிதவாழ்வில் அவனுக்கு ஒளி காட்டும் மணிவிளக்காய் ஞாயிறும் திங்களும், விண்மீன்களும் விளங்கின.


மலைகள் மீதும் மலை அடிவாரத்திலும் வாழ்ந்த பண்டைய மக்கள், அடர்ந்த காடுகளில் பெருங்காற்று வீசியபோது அங்குள்ள மூங்கில் போன்ற மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்பு உண்டாகி மரஞ்செடி கொடிகள் எரிந்து சாம்பலாய்ப் போவதைக் கண்டனர். ஞாயிறு, திங்கள், விண்மீன்கள் ஆகியவைகளுக்கு அடுத்த படியாக மக்கள் இனம் கண்ட ஒளி இந்தக் காட்டுத்தீதான். சில சமயம் தான் வீசிய கல் வேறொரு கல்லின் மீது வீழ்ந்து தீப்பொறி எழுந்து அருகிலுள்ள காய்ந்த சருகுகள் மீது விழுந்து நெருப்பு உண்டாவதை உணர்ந்தான். பின்னர், செயற்கை முறையில் தீயை உண்டாக்கத் முயற்சித்தான். சக்கி முக்கிக் கற்களை ஒன்றோடொன்று உரசும் படி செய்து அருகிலுள்ள உலர்ந்த சருகுகளில் தீப்பொறி வீழ்ந்து பற்றும் படி செய்தான். நெருப்பைக் கண்ட மனிதன் அதைக் குளிர்காயவும் உணவைப் பக்குவப்படுத்தவும் உபயோகித்ததோடு இருளை அகற்றும் விளக் காகவும் உபயோகிக்கக் கற்றுக் கொண்டதை ஆராயும் வரலாற்று அறிஞர்கள், திருவிளக்கு மனித சமூக நாகரிக வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்து விட்டது.


ஆதியில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நானிலத்திலும் நான்கு வகையான விளக்குகள் தோன்றின எனலாம். கல்லில், சங்கில், மண்ணில் அரும்பிய கைவிளக்குகள் நாளடைவில் பல்வேறு வடிவம் பெற்று எழுந்தன. முதன் முதலில் நானிலத்திலும் விளக்குகள் தோன்றினாலும் மருத நிலத்திலேதான் சிறப்புற்று எழுந்தன. ஆரம்பத்திலே அங்கு கல்லிலும் மண்ணிலும் பல்வேறு விதமான கைவிளக்குகளும் குத்து விளக்குகளும் தோன்றின.


தமிழர்களின் நாகரிகம், ஞாயிற்று வணக்கம், திங்கள் வணக்கம் நெருப்பு வணக்கம் ஆகியவற்றைச்சூழ்ந்தே கட்டப்பட்டிருக்கிறது. தினகரன், திங்கள், தீ ஆகிய முச்சுடர்களின் சின்னமாகவே திருவிளக்கு அரும்பியது. விளக்கு தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய இன்றியமையாத ஒன்று. பன்னெடுங்காலமாக தொடர்ந்து இன்று வரை தமிழர்களின் இல்லத்தில் ஒரு மதிப்புக்குரிய மங்கலப் பொருளாக மதிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் விளக்கை திருவிளக்கு என்றனர் அதில் கலை அம்சத்தைப் புகுத்தினர், போற்றி வணங்கினர்.


தமிழகத்தில் சங்கிலும், கல்லிலும், மண்ணிலும், வெண்கலத்திலும் விளக்குகளின் வடிவங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. நாம் இன்று விளக்கின் பெருமையைச் சரிவர உணரவில்லை. எனினும் நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும் விழாக்களிலும் பெரும் பங்கு பெற்று வருகிறது. நாம் ஒளியின் உயர்வைச் சரிவர உணராவிடினும் அது, நம்மை அறியாமலே நாம் அதன் உயர்வை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கிறது. தமிழர்கள் தம் நாட்டின் வரலாற்றோடு தங்கள் நாட்டின் மொழி, இசை, நாடகம், நாட்டியம், அணி, ஆலயம், ஆடை, இலக்கியம், உறைவிடம், குடை, சமயம், காசு, விளக்கு போன்றவைகளின் வரலாற்றையும் நன்குணர வேண்டும் என்பது எனது பேராவல்.


பழங்கால வாழ்க்கை முறைகளிற் சில இக்கால மக்களின் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராத போதினும் அவற்றை நாம் அறிந்திருப்பதில் தவறொன்றும் இல்லை. பண்டைக்கால வாழ்க்கை முறைகூடச் சிலசமயங்களில் நமது உயிருக்கு உறுதுணையாக நிற்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டு விளக்குகள் அரேபியாவிலும், உரோம் நாட்டுக்கும், கிரேக்க நாட்டுக்கும் சென்று அங்குள்ள அரண்மனையையும் கோவில்களையும் அலங்கரித்துள்ளன.


200 ஆண்டுகளுக்கு முன் வரை, பண்டைக் காலத்திலுள்ள விளக்குகளின் அமைப்பிலும் அழகிலும் ஒளிதரும் கருவிகளின் அமைப்பிலும் மாறுதல் எதுவும் செய்ய வேண்டும் என்று பிரச்சனையே எழவில்லை. விளக்குகளில் எண்ணெய் நிற்கும் அகல் (கலயம்) மிகச் சாதாரணமாக அமைக்கப்பட்டிருந்தது. சில விளக்குகளில் எண்ணெய் நிற்கும் கலயம் திறந்தும் சில விளக்குகளில் மூடப்பட்டும் இருந்தன. எண்ணெய் மரவித்துக்களிலிருந்து எடுக்கப்பட்டதாகவோ மிருகங்களின் கொழுப்புகளிலிருந்து செய்யப்பட்டதாகவோ இருந்தது.


தமிழகத்தின் எண்ணற்ற விதமான விளக்குகள் உண்டு. அவைகளில் முக்கியமான விளக்குகள் கீழே வருமாறு:


பாவை விளக்கு :- 

1. தீபலட்சுமி விளக்கு 

2. ஆண் (பாவை) விளக்கு


குத்து விளக்கு :-

1. சந்திரகாந்தக் குத்துவிளக்கு

2. அன்ன விளக்கு (ஓதிம விளக்கு) 

3. கிளி விளக்கு (கிள்ளை விளக்கு) 

4. மயில் விளக்கு (மயூரதீபம்) 

5. குயில் விளக்கு 

6. நாகர் விளக்கு 

7. நிலை விளக்கு 

8. சிலை விளக்கு 

9. கம்பி விளக்கு 

10. காய் விளக்கு 

11. தண்டு விளக்கு 

12. குருவி விளக்கு 

13. அகல் விளக்கு  

14. கிளை விளக்கு 

15. புருஷாமிருக விளக்கு 

16. ஓதிமக்கிளை விளக்கு 

17. முக்கிளை விளக்கு 

18. காமாட்சி விளக்கு 

19. மணி விளக்கு 

20. மாயோன் விளக்கு

21. ஏழு தலை நாக விளக்கு

22. காமதேனு விளக்கு

23. சரோருக விளக்கு

24. மங்கல விளக்கு

25. பத்மாசன முருகன் விளக்கு

26. பதும் விளக்கு

27. கஜலட்சுமி விளக்கு

28. சந்நிதி விளக்கு

29. கின்னரி விளக்கு

30. கிண்கினி விளக்கு 

31. கன்னி விளக்கு 

32. காமன் விளக்கு 

33. மூன்று கிளை விளக்கு

34. திருமண (கிளை விளக்கு) 

35. தாரா விளக்கு 

36. ஈழச்சியல் (கிளை விளக்கு)

37. மலையாண்சியல் கிளை விளக்கு 

38. அரை தலை கிளை விளக்கு 

39. சோழியச்சியல் கிளை விளக்கு

40. ஆரக்குட கிளை விளக்கு 

41. அனந்தலை கிளை விளக்கு 

42. எரிக்கக்கட விளக்கு 

43. பாகவோர் விளக்கு 

44. கைவினை விளக்கு 

45. ஊழ் உறு விளக்கு

46. குடக்கால் விளக்கு

47. கடைக்கெழு விளக்கு

48. மீன் திமில் விளக்கு

49. ஒழியா விளக்கு

50. காவலர் விளக்கு

51. மாண் விளக்கு


தூக்கு விளக்கு :-

1. வாடா விளக்கு 

2. ஓதிமத் தூக்கு விளக்கு 

3. தூண்டாமணி விளக்கு  

4. ஓதிமம் நந்தா விளக்கு 

5. கூண்டு விளக்கு 

6. புறா விளக்கு 

7. நந்தா (நுந்தா) விளக்கு 

8. ஈச்சோப்பிக்கைத் தூக்கு விளக்கு

9. சங்கிலி தூக்கு விளக்கு

10. கிளித் தூக்கு விளக்கு


கோவில் விளக்கு :-

1. சர விளக்கு

2. நிலை விளக்கு


கைவிளக்கு :-

1. கஜலட்சுமி கை விளக்கு 

2. திருமால் கை விளக்கு 

3. தாமரைக் கை விளக்கு

4. சிலுவைக் கை விளக்கு

5. சம்மனசுக் கை விளக்கு

6. முஸ்லீம் கை விளக்கு

7. கணபதி கை விளக்கு

8. சைவக் கை விளக்கு


பூஜா விளக்குகள் :-

1. சர்வராட்சத தீபம் 

2. சபூத தீபம் 

3. பிசாஜ தீபம்

4. கின்னர (அலி) தீபம் 

5. கிம் புருஷ தீபம் 

6. கண நாயக தீபம் 

7. வித்யாதர தீபம் 

8. கந்தர்வ தீபம் 

9. பிதரஹ் தீபம்


திக் பாலகர் தீபம் :-

1. ஈசான தீபம்

2. இந்திர தீபம்

3. வருண தீபம்

4. யம தீபம்


சோடச விளக்குகள் :-

1. தூபம்

2. தீபம்

3. புஷ்ப தீபம் (பூ விளக்கு)

4. நாக தீபம் (பாம்பு விளக்கு) 

5. புருஷமிருக தீபம் (மனித மிருக விளக்கு)

6. கஜ தீபம் (யானைவிளக்கு 

7. ருயாஜத தீபம் (குதிரை விளக்கு)

8. வியாக்ர தீபம் (புலி விளக்கு) 

9. ஹம்சதீபம் (அன்ன விளக்கு)

10. கும்ப தீபம் (குட விளக்கு)

11. குக்குட தீபம் (கோழி விளக்கு) 

12. விருஷ தீபம் (மாட்டு விளக்கு)

13. கூர்ம தீபம் (ஆமை விளக்கு)

14. நட்சத்திர தீபம் (வெள்ளி விளக்கு) 

15. மேரு தீபம் (மலை விளக்கு)

16. கற்பூர தீபம் (சூட விளக்கு)


இதர தியான தீபங்கள் :-

1. ஏகமுக தீபம்

2. அன்ன தீபம்

3. கிளி தீபம்

4. கமல தீபம்

5. பிரம தீபம்

6. சட்கோண தீபம் 

7. முக்கோண தீபம்

8. நாற்பத்து முக்கோண தீபம் 

9. கண்ணாடித்தீபம் (சாயா விளக்கு

10. அஷ்டோத்திர (108)

11. சகஸ்திர அலங்கார (1000) தீபம்

12. சக்தி தீபம்

13. பஞ்சோபசாரம் தீபம்

14. சப்தமுக தீபம்

15. ஏகபாத தீபம்

16. துவிபாத தீபம் 

17. திரிபாத தீபம்

18. சதுர்பாத தீபம் (மனித மிருக விளக்கு

19. பஞ்சபாத தீபம்

20. சட்பாத தீபம்

21. சப்தபாத (ஊ) தீபம் விளக்கு)

22. அஷ்டபாத தீபம்

23. நவபாத தீபம்

24. சதபாத தீபம்

25. நீராஞ்சனபாத தீபம்

26. நந்தா தீபம்

27. சங்கிலித் தீபம்

28. சர தீபம்

29. கற்பூர தீபம் (வெள்ளி விளக்கு

30. கைச் சட்டித் தீபம்

31. இந்திர விமானப் பூங்கோவில் தீபம்

32. வால் தீபம் 

33. யட்ச தீபம்

34. சித்திர தீபம்

35. மானுஷ தீபம்

36. முனையட்ச தீபம்

37. மயூர தீபம்

38. பஞ்சராத்திரா தீபட்


அஷ்டகஜ தீபம் :-

1. ஐராவத தீபம்

2. புண்டரீக தீபம்

3. குமுத தீபம்

4. ஜன தீபம்

5. புஷ்பதந்த தீபம்

6. சர்வபௌம தீபம்

7. சுப்ர தீபம்

8. பித்ர தீபம்


அஷ்டகன்னித் தீபம் :-

1. இந்திராணித் தீபம்

2. சுவாகாதேவித் தீபம்

3. சாமளதேவி தீபம்

4. துர்க்கா தீபம்

5. காளி தீபம்

6. அஞ்சனா தேவி தீபம்

7. சித்ரலேகா தீபம்

8. பார்பதித் தீபம் 


சப்தமாதர் தீபம் :-

1. பிரமஹி தீபம்

2. மகேஸ்வரித் தீபம்

3. கெளமாலித் தீபம்

4. வைணவித் தீபம்

5. வராகித் தீபம்

6. மகேந்திரத் தீபம்

7. சாமுண்டித் தீபம்

மேற்குறித்த விளக்குகளில் ஒவ்வொன்றும் பற்பல விதமான சிற்பச் சிறப்புகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளன.  இவைகளிலே ஒவ்வொரு மாவட்டச் சிற்பிகளும் ஒவ்வொரு பாணிகளைக் கையாள்வதால் ஆயிரக்கணக்கான விதத்தில் விளக்குகள் காணப்படுகின்றன. எண்ணற்ற பூசா தீபங்கள் போன்ற பல்வேறு தீபங்கள் உண்டு. இவைகள் அனைத்தையும் இங்கு எடுத்துக் காட்டுவது எளிதன்று.


















கருத்துரையிடுக

0 கருத்துகள்