தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023:
தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம்.
இந்த தமிழ் புத்தாண்டை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.
ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று பனிரெண்டு மாதங்கள் உள்ளன. அதேபோல் சித்திரை, வைகாசி என்று பனிரெண்டு தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது.
இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரியன் மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது.
ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது.
ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
நடைமுறைக்கு ஏற்றதாக தமிழ்ப் புத்தாண்டு ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அதாவது தமிழ் புத்தாண்டையொன்டி மக்கள் வீட்டை சுத்தம் செய்து மாவிலை தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து சாமியை கும்பிட்டு மகிழ்வர். அன்றைய தினம் உணவில் வேப்பம்பூவை சேர்த்துக் கொள்வார்கள்.
0 கருத்துகள்