வாட்ஸ்ஆப்பில் 30 நொடிகள் வரை வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். குறுஞ்செய்தி, போட்டோ, விடியோ அனுப்புவதற்கும் ஆடியோ, விடியோ அழைப்புகளுக்கும் அதிகம் பயன்படுகிறது.
அந்நிறுவனமும் பயனர்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது வாட்ஸ்ஆப்பில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போட்டோ, விடியோ மட்டுமின்றி வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 30 நொடிகள் வரையிலான வாய்ஸ் மெசேஜை ஸ்டேட்டஸாக வைக்கலாம்.
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்ஆப்பில் பயனர்கள் அனைவரும் இந்த புதிய வசதியை பெறலாம்.
0 கருத்துகள்