மோசடி பத்திரம் ரத்து செய்ய புகார் மனு 2023
பதிவு சட்டம் 1908 பிரிவு 77(A) படி மோசடி பத்திர பதிவு – ரத்து செய்ய வேண்டுதல் –மனு
அனுப்புநர்:
பெயர் (வயது ),
முகவரி
பெறுநர்
உயர்திரு மாவட்ட பதிவாளர் அவர்கள்
மாவட்ட பதிவாளர் அலுவலகம் ,
——— மாவட்டம்
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : ———- மாவட்டம் ———— வட்டம் ——— கிராமம் பழைய சர்வே எண் —– இல் புதிய சர்வே எண் —- உட்பட்ட சொத்தினை ———— பதிவு மாவட்டம் ————- மாவட்டம் ————– சார்பதிவாளர் அலுவலகத்தில் ——–நாள் அன்று பதிவு செய்யப்பட்ட ஆவண எண் ——மற்றும் —— ஆவணமானது மோசடியானது. எனவே மோசடி ஆவணங்களை தமிழ்நாடு திருத்தச் சட்டம் 41/2022 இன் படி இந்திய பதிவு சட்டம் 1908 பிரிவு 77(A) பிரிவின் கீழ் மோசடி ஆவணத்தை ரத்து செய்ய வேண்டுதல்- தொடர்பாக
1) நான் மேற்கண்ட முகரிவ்யில் வசித்து வருகிறன் .எனக்கு சொந்தமான தாவ சொத்தானது —— மாவட்டம் ———வட்டம் ——— கிராமம் சர்வே எண் ——– இல் ; காட்டப்பட்ட——- ஏக்கர் —— சென்ட் இந்த சொத்தானது ஆதியில் ————– ;அவர்களுக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்ட சொத்தாகும்;. அதன் பிறகு மேற்படி சொத்தினை அவர் காலத்திற்கு பிறகு அவரது வாரிசுகளான ————–, ———– ,———– ஆகியோர் ஆண்டுஅனுபவித்து வந்தனர் .
2) மேற்படி நபர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தினை ————–என்பரின் —–மகன்/மகள் ———- தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை 45-1/2 சென்ட் இடத்தை கடந்த ————- தேதி ———– மாவட்டம் ———- சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட கிரையம் ஆவணம் எண் ———- மூலம் எனக்கு பதிவு செய்து கொடுத்தார்.
3) அதன்பிறகு மேற்சொன்ன சர்வே எண்ணிற்கு உட்பட்ட 45-1/2 –எனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை எனது பெயருக்கு பட்டா உள்ளிட்ட வருவாய் துறை ஆவணகளை பெயர் மாற்றம் செய்து நாளது தேதி வரை ஆண்டு அனுபவித்து வருகிறேன்.
5) இந்நிலையில் எதிர்மனுதார்…………… மகன் …… மற்றும் ……………. அவர்கள் உண்மையான முந்தய உரிமையாளர்களை மறைத்து தனக்கு சொந்தமில்லாத மேற்படி சொத்தின் மீது எந்தவித உரிமையும் இன்றி ஏமாற்றி மோசடி கிரைய ஆவணம் மூலம் பணம்பலன் பெறலாம் என்ற கெட்ட எண்ணத்துடன் ஏமாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் ……….. மாவட்டம் …………… சார்பதிவாளர் அலுவலகத்தில் மேற்படி சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களின் துணையுடன் ————— நாள் அன்று ஆவண எண் ————- மோசடி கிறைய பத்திரம் பதிவு செய்து ————– என்வரின் மகன் ————. க்கு மோசடி கிரைய ஆவணம் பதிவு செய்து கொடுத்துள்ளார்.
கிரைய சொத்து தனக்கு சொந்தமானது என தெரிவிக்கும் மூல ஆவணங்களை சரிபார்காமலும் மற்றும் கிரையத்தில் உள்ள வில்லங்கத்தை மறைத்தும் மேற்படி கிரையம் நடைபெற்று உள்ளது இதன் மூலம் உறுதியாகிறது..மேலும் ஆவண எண் …… அல்லது பட்டா எண் … சர்வே எண் ……………. மற்றும் ………… சார்பதிவாளர் அலுவலகம் மூலம் பெற்ற …………….. வில்லங்க சான்றிதல் மூலம் மேற்படி கிரையமானது மோசடி பத்திரம் என்பது தெரியவருகிறது .
6. எனவே குற்றம் புரியும் உள்நோக்கத்துடன் பொய்யான ஆவணங்களை தயாரித்து/ பொய்யான ஆவணங்களை சமர்பித்து /ஆள்மாறாட்டம் செய்து தனக்கு உரிமை இல்லாத தனக்கு சொந்தமில்லாத தன்னுடைய அனுபவத்தில் இல்லாத அடுத்தவர் சொத்தை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்தவர் சொத்தை அபகரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மேற்படி மோசடி கிறைய ஆவணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.எனவே போலியான ஆவணங்கள் மூலம் மோசடி கிரைய ஆவணம் பதிவு செய்த்தது குற்றமாகும்.
இதுபற்றி மேற்படி மோசடி ஆவணங்களை தயாரித்த …………. ஆவண எழுத்தாளர் மற்றும் ——— எதிர்மனுதாரரிடம் கேட்டதற்கு அவர்கள் என்னை மேலும் மிரட்டி எங்கு புகார் கொடுத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மீறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள். இதனால் நான் நில அபகரிப்பு பிரிவு மற்றும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததும் எந்த நடவடிக்கையும் இல்லை .
எனவே ஆள் மாறாட்டம் / மோசடி ஆவணங்களை தயாரித்து தனக்கு இல்லாத சொத்தை மோசடி கிரைய ஆவணம் பதிவு செய்த மேற்படி எதிர் மனுதாரர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் மோசடி ஆவணத்தை தயாரிப்பிற்கு உடந்தையாக இருந்த ஆவண எழுத்தர் மீதும் மற்றும் பதிவு செய்வதற்கு முன்பு உரிமை மூல ஆவணகளை சரிபார்க்காமல் மோசடி ஆவணத்தை பதிந்த……. சார் பதிவாளர் மீது பத்திர பதிவு சட்டம் 1908 ,பிரிவு 81 மற்றும் 83 இன் கீழ் நடவடிக்கை எடுத்து மற்றும் காவல்துறையில் புகார் கொடுத்து அவர்கள் மீது மோசடி நடவடிக்கைக்கு உடந்தையாக இருந்ததாக கூறி உரிய தண்டனை பெற்றுத் தருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
எனவே மாண்புமிகு மாவட்ட பதிவாளர் அவர்கள் இப்புகார் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
0 கருத்துகள்