Ad Code

Ticker

6/recent/ticker-posts

Book back questions|10 std Social Science

அலகு

பொருளடக்கம்

வரலாறு

1

முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

2

இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

3

இரண்டாம் உலகப்போர்

4

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம்

5

19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

6

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சிகள்

7

காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்

8

தேசியம்: காந்திய காலகட்டம்

9

தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

10

தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

புவியியல்

1

இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

2

இந்தியாகாலநிலை மற்றும் இயற்கைத்தாவரங்கள்

3

இந்தியாவேளாண்மை

4

இந்தியாவளங்கள் மற்றும் தொழிலகங்கள்

5

இந்தியாமக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

6

தமிழ்நாடு - இயற்கைப்பிரிவுகள்

7

தமிழ்நாடு - மானுடப்புவியியல்

 

குடிமையியல்

1

இந்திய அரசியலமைப்பு

2

நடுவண் அரசு

3

மாநில அரசு

4

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

5

இந்தியாவின் சர்வதேச உறவுகள்

பொருளியல்

1

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

2

உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

3

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

4

அரசாங்கமும் வரிகளும்

5

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

 

 

 


 

 

 

 

வரலாறு

அலகு - 1 முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?

) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்  ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா

) ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி              ) ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி

2. பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந்தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?

) சீனா   ) ஜப்பான்   ) கொரியா  ) மங்கோலியா

3. “ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்எனக் கூறியவர் யார்?

) லெனின்       ) மார்க்ஸ் ) சன்யாட் சென்    ) மா சேதுங்

4. மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?

) ஆகாயப் போர்முறை         ) பதுங்குக் குழிப் போர்முறை

) நீர்மூழ்கிக்கப்பல் போர்முறை ) கடற்படைப் போர்முறை

5. பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

) பிரிட்டன்      ) பிரான்ஸ்        ) டச்சு      ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

6. பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?

) ஜெர்மனி      ) ரஷ்யா    ) இத்தாலி        ) பிரான்ஸ்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ................. ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.

2. 1913ஆம் ஆண்டு மே மாதம் கையெழுத்திடப்பட்ட ....................... உடன்படிக்கையின் படி அல்பேனியா எனும் புதியநாடு உருவாக்கப்பட்டது.

3. .................... ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது

4. பால்கனில் ................. நாடு பல்வகை இனமக்களைக் கொண்டிருந்தது.

5. டானென்பர்க் ...................போரில் பேரிழப்புகளுக்கு உள்ளானது.

6. பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர் ........................ஆவார்.

7. ........................ஆம் ஆண்டில் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

III சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.

ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.

iii) பிரிட்டன் துருக்கியைத் தாக்கி கான்ஸ்டாண்டிநோபிளைக் கைப்பற்றியது.

iv) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்டமுயற்சி முறியடிக்கப்பட்டது.

) i), ii) ஆகியனசரி    ) i), iii) ஆகியனசரி        ) iv) சரி     ) i), ii), iv) ஆகியனசரி

2. கூற்று: ஜெர்மனியும் அமெரிக்காவும் மலிவான தொழிற்சாலைப் பொருள்களை உற்பத்தி செய்து இங்கிலாந்தின் சந்தையைக் கைப்பற்றின.

காரணம்: இரு நாடுகளும் தங்கள் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்தன.

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி.

) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

) காரணம் சரி, ஆனால் கூற்று தவறு.

 

3. கூற்று: ஆப்பிரிக்காவில் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்காக ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட முதற்கட்ட முயற்சிகள் ரத்தக்களரியான போர்களில் முடிந்தன.

காரணம் : சொந்தநாட்டு மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.

) காரணம், கூற்று ஆகிய இரண்டும் சரி.

) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான விளக்கம் அல்ல.

) கூற்று, காரணம் இரண்டுமேதவறு.

) காரணம் சரி ஆனால் கூற்று தவறு.

IV பொருத்துக

1. பிரெஸ்ட் லிடோவஸ்க் உடன்படிக்கை - வெர்செய்ல்ஸ்

2. ஜிங்கோயிசம்                        - துருக்கி

3. கமால் பாட்சா                        - ரஷ்யாவும் ஜெர்மனியும்

4. எம்டன்                              - இங்கிலாந்து

5. கண்ணாடி  மாளிகை                 - சென்னை

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. சீன - ஜப்பானியப் போரின் முக்கியத்துவத்தை நீ எவ்வாறு  மதிப்பீடு  செய்வாய்?

2. மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

3. ஐரோப்பிய  போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின்  மூன்று வடிவங்கள் எவை?

4. பதுங்குக் குழிப்போர் முறை  குறித்து  நீங்கள் அறிந்ததென்ன?

5. முஸ்தபா கமால் பாட்சா வகித்தப் பாத்திரமென்ன?

6. பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.

VI பின்வரும் வினாக்களுக்கு விரிவான விளையளிக்கவும்

1. முதல் உலகப்போருக்கான முக்கியக்  காரணங்களை விவாதி.

2. ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செயில்ஸ் உடன்படிக்கையின் சரத்துக்களை கோடிட்டு காட்டுக.

3. லெனின் தலைமையிலான ரஷ்யப் புரட்சியின் போக்கினை விளக்குக.

4. பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடு

VII. உலக வரைபடத்தில் பின்வரும் நாடுகளைக் குறிக்கவும்

1. கிரேட் பிரிட்டன்   2. ஜெர்மனி  3. பிரான்ஸ்  4. இத்தாலி     5. மொராக்கோ 6. துருக்கி

7. செர்பியா   8. பாஸ்னியா 9. கிரீஸ் 10. ஆஸ்திரிய-ஹங்கேரி  11. பல்கேரியா 12. ருமேனியா

 

அலகு - 2  இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?

) ஜெர்மனி       ) ரஷ்யா    ) போப்     ) ஸ்பெயின்

2. யாருடைய ஆக்கிரமிப்பால் மெக்சிகோ  நாகரிகம் நிலைகுலைந்து போயிற்று?

) ஹெர்மன் கோர்ட்ஸ்          ) பிரான்சிஸ்கோ பிசாரோ

) தௌசெயின்ட் லாவெர்ட்யூர்    ) முதலாம் பெட்ரோ

3. பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?

) ஆங்கிலேயர்   ) ஸ்பானியர்       ) ரஷ்யர்     ) பிரெஞ்சுக்காரர்

4. இலத்தீன் அமெரிக்காவுடன் 'அண்டை நாட்டுடன் நட்புறவு' எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் யார்?

) ரூஸ்வெல்ட்   ) ட்ரூமன் ) உட்ரோவில்சன்   ) ஐசனோவர்

5. உலகத்தின் எந்தப் பகுதி  டாலர்  அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?

) ஐரோப்பா      ) லத்தீன் அமெரிக்கா     ) இந்தியா     ) சீனா

II கோடிட்ட இடங்களை  நிரப்புக

1. சமூக ஜனநாயகக்கட்சியை நிறுவியவர்.....................

2. நாசிசகட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர் ........................ .

3. வியட்நாம் தேசியவாதிகள் கட்சி ......................  இல் நிறுவப்பட்டது.

4. நாசிச ஜெர்மனியின் ரகசியக்காவல்படை .................................. என அழைக்கப்பட்டது.

5. தென்னாப்பிரிக்க ஒன்றியம் ................... ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.

6. ஆப்ரிக்க தேசியக்காங்கிரஸ் தலைவரான நெல்சன் மண்டேலா ................ ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

7. போயர்கள்  ......................................... என்றும் அழைக்கப்பட்டனர்.

III சரியான கூற்றைத் தேர்வு செய்க

1. i) முதல் உலகப்போரின் போது ஆஸ்திரியாவை தெற்கு முனைப் போரில் தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட வைப்பதே இத்தாலியின்முக்கியக் கடமையாக இருந்தது.

ii) இத்தாலியைக் காட்டிலும் நீண்ட காலங்கழித்தே ஜெர்மனி பாசிசத்தைக்கைக் கொண்டது.

iii) அமெரிக்காவில் மிகப்பெரும் பங்குச் சந்தை வீழ்ச்சி 1929ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ஆம் நாளில் எற்பட்டது.

iv) ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் மீதானத்தடை1966இல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

) i), ii) ஆகியவைசரி              ) iii) சரி       

) iii), iv) ஆகியவை சரி            ) i), ii), iii) ஆகியவை சரி

2. கூற்று: தற்காப்புப் பொருளாதாரக் கொள்கையை முன்னிறுத்தியப் பொருளாதார தேசியம் எனும் புதிய அலையால் உலகவணிகம் பாதிக்கப்பட்டது.

காரணம்: அமெரிக்கா, கடன்பட்ட நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்ய விருப்பமில்லாமல் இருந்ததனால் இந்நிலை உண்டானது.

) கூற்று, காரணம் இரண்டுமேசரி

) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமேதவறு

) காரணம் சரி ஆனால் கூற்றுக்குப் பொருந்தவில்லை.

3. கூற்று: 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாடு காலனியாதிக்க சக்திகள் ஆப்பரிக்காவைத் தங்களின் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்தது.

காரணம்: ஆங்கிலேயருக்கும், போயர்களுக்கும் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிர்ப்பானதாகும்.

) கூற்று, காரணம் இரண்டுமேசரி    

) கூற்று சரி ஆனால் காரணம் சரியான விளக்கமல்ல.

) கூற்று காரணம் ஆகிய இரண்டுமே தவறு

) கூற்று தவறு ஆனால் காரணம் கூற்றுடன் பொருந்தவில்லை.

IV பொருத்துக

1. டிரான்ஸ்வால்     - ஜெர்மனி

2. டோங்கிங்        - ஹிட்லர்

3. ஹின்டன்பர்க்      - இத்தாலி

4. மூன்றாம் ரெய்க்   - தங்கம்

5. மாட்டியோட்டி     - கொரில்லா நடவடிக்கைகள்

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளைபயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?

2. ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.

3. முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள்  யாவை?

4. 1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக.

5. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மையின் மீது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தியது?

6. “டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட  விளக்குக.

VI விரிவான விடையளிக்கவும்

1. ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.

2. உலகப்போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதனைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்.

3. ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.

 

அலகு - 3  இரண்டாம் உலகப்போர்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி  கையெழுத்திட்டது?

) செம்டம்பர் 2, 1945    ) அக்டோபர் 2, 1945

) ஆகஸ்டு 15, 1945     ) அக்டோபர் 12, 1945

2.பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன் முயற்சி எடுத்தவர் யார்?

) ரூஸ்வெல்ட் ) சேம்பெர்லின்     ) உட்ரோவில்சன்   ) பால்டுவின்

3. ஜெர்மானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?

) க்வாடல்கெனால் போர்             ) மிட்வே போர்

) லெனின்கிரேடு போர்        ) எல் அலாமெய்ன் போர்

4. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?

) கவாசாகி            ) இன்னோசிமா    ) ஹிரோஷிமா     ) நாகசாகி

5. ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?

) ரஷ்யர்கள்    ) அரேபியர்கள்     ) துருக்கியர்கள்    ) யூதர்கள்

6. ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?

) சேம்பர்லின்  ) வின்ஸ்டன் சர்ச்சில்  ) லாயிட்ஜார்ஜ்  ) ஸ்டேன்லி பால்டுவின்

7. எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?

) ஜுன் 26, 1942   ) ஜுன் 26, 1945   ) ஜனவரி 1, 1942   ) ஜனவரி 1, 1945

II) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இராணுவ நீக்கம் செய்யப்பட்ட................. பகுதியை ஹிட்லர் தாக்கினார்.

2. இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் ஆகியவற்றிக்கிடையேயான ஒப்பந்தம் ......................என அழைக்கப்பட்டது.

3. ........................கடன் குத்தகைத் திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

4. 1940 இல் ராஜினாமா செய்த பிரிட்டன் பிரதமர் .....................ஆவார்.

5. ..........என்பது தொலைவிலிருந்தே எதிரிகளின் போர் விமானங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு கருவி.

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. கூற்று: குடியரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமெரிக்கா தனது தனித்திருக்கும் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

காரணம்: அவர் 1941 இல் கடன் குத்தகைத் திட்டத்தை தொடங்கினார்.

) கூற்றும் காரணமும் சரி.

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

) காரணம் கூற்று ஆகிய இரண்டுமே தவறானவை.

) காரணம் சரி ஆனால் அது கூற்றுடன் பொருந்தவில்லை.

 

IV) பொருத்துக

1. பிளிட்ஸ்கிரிக்            - ரூஸ்வெல்ட்

2. ராயல் கப்பற்படை        - ஸ்டாலின் கிரேடு

3. கடன் குத்தகை           - சாலமோன் தீவு

4. வோல்கா                - பிரிட்டன்

5. க்வாடல்கெனால்          - மின்னல் வேகத்தாக்குதல்

V) சுருக்கமாக விடையளிக்கவும்

1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?

2. ஹிட்லர் ஜெர்மனி மக்களின் ஆதரவைஎவ்வாறு பெற்றார்?

3. முத்துத் துறைமுக நிகழ்வை விவரி.

4. பெவரிட்ஜ் அறிக்கை குறித்து நீ அறிந்தது என்ன?

5. பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

6. பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?

VI) விரிவானவிடையளிக்கவும்

1. அடால்ப்ஹிட்லரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி குறித்து ஒரு கட்டுரைவரையவும்

2. இரண்டாம் உலகப்போரின் விளைவுகளை ஆய்வு செய்க

3. ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு, செயல்பாடுகளை ஆய்வு செய்க. .

VII) வரைபடப்பணி   உலக வரைபடத்தில் கீழக்கண்டவற்றைக் குறிக்கவும்

1. அச்சு நாடுகள், 2. நேச நாடுகள், 3. ஹிரோஷிமா,  4. நாகசாகி,  5. ஹவாய்தீவு,  

6. மாஸ்கோ, 7. சான் பிரான்சிஸ்கோ

 

அலகு - 4  இரண்டாம்  உலகப்போருக்குப்  பிந்தைய  உலகம்

I சரியான விடையைத் தெரிவு செய்க.

1. எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார்?

) உட்ரோவில்சன்        ) ட்ரூமென்   ) தியோடர் ரூஸ்வேல்ட்  ) பிராங்க்ளின் ரூஸ்வேல்ட்

2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?

) செப்டம்பர் 1959 ) செப்டம்பர் 1948   ) செப்டம்பர் 1954   ) செப்டம்பர் 1944

3. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ஆகும்.

) சீட்டோ  ) நேட்டோ   ) சென்டோ       ) வார்சா ஒப்பந்தம்

4. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969இல் தலைவராகப் பதவியேற்றவர் யார்?

) ஹபீஸ்அல் -ஆஸாத்   ) யாசர் அராபத்    ) நாசர்      ) சதாம் உசேன்

5. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?

) 1975     ) 1976      ) 1973       ) 1974

6. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம்  கலைக்கப்பட்டது?

) 1979      ) 1989      ) 1990       ) 1991

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நவீன சீனாவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ...................ஆவார்.

2. 1918 இல் ...................பல்கலைகழகத்தில் மார்க்ஸியக் கோட்பாட்டை அறியும் அமைப்பு நிறுவப்பட்டது.

3. டாக்டர் சன் யாட் சென்னின் மறைவுக்குப் பின்னர் கோமிங்டாங் கட்சியின் தலைவராக இருந்தவர் ..........

4. அமைதியையும் பாதுகாப்பையும் விரும்பிய அரபு நாடுகளுக்கு திறந்தே இருந்த ஒப்பந்தம் ..............ஆகும்.

5. துருக்கிய அரபுப் பேரரசை ஏற்படுத்தும் நோக்கைக் கொண்டிருந்த ஒப்பந்தம் ................ஆகும்.

6. ஜெர்மனி நேட்டோவில் ...............ஆண்டு இணைந்தது.

7. ஐரோப்பியக் குழுமத்தின் தலைமையகம் ...............நகரில் அமைந்துள்ளது.

8. ஐரோப்பிய இணைவை உறுதி செய்ய 7 பிப்ரவரி 1992 இல் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் .............ஆகும்.

III சரியான வாக்கியம் / வாக்கியங்களைத் தெரிவு செய்க

1. i) கற்றறிந்த சிறுபான்மையினரின் தாக்கத்தில் சீனாவின் (1898) இளம் பேரரசர் துவக்கிய சீர்திருத்தங்கள் நூறு நாள் சீர்திருத்தம் என்று அறிப்படுகிறது.

ii) கோமிங்டாங் கட்சி தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

iii) மஞ்சூரியா மீதும் ஷாண்டுங் மீதும் ஜப்பான் பொருளாதாரக் கட்டுப்பாட்டை விதிக்க யுவான் ஷி-கே உடன்பட்டதால் தேசியவாதிகள் பார்வையில் அவர் செல்வாக்கு இழந்தார்.

iv) சோவியத் நாடு இருபது ஆண்டு காலத்திற்கும் மேலாக சீன மக்கள் குடியரசை அங்கீகரிக்க மறுத்தது.

) i) மற்றும் ii) சரி         ) ii) மற்றும் iii) சரி    ) i) மற்றும் iii) சரி   ) i) மற்றும் iv) சரி

2 i) கிழக்கு ஐரோப்பாவில் 1948 இல் சோவியத் நாடு நிறுவிய இடதுசாரி அரசுகளை சோவியத் இராணுவம் விடுதலை செய்தது.

ii) வடக்கு அட்லாண்டிக் பகுதியில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யவே நேட்டோ உருவாக்கப்பட்டது.

iii) சீட்டோவின் உறுப்பு நாடுகள் அப்பகுதியில் மக்களாட்சி பரவுவதைத் தடுக்கும் நோக்கோடு செயல்பட்டார்கள்.

iv) ஜப்பானுக்கெதிராக பிரிட்டன் அணுகுண்டைப் பயன்படுத்தியதின் மூலம் அது ரஷ்யாவுக்கு தன்னுடைய அழிக்கும் திறனை எடுத்துக்காட்ட விரும்பியது.

) ii), iii) மற்றும் iv) சரி   ) i) மற்றும் ii) சரி  ) iii) மற்றும் iv) சரி        ) i), ii) மற்றும் iii) சரி

3. கூற்று (கூ): அமெரிக்காவின் மார்ஷல் திட்டம் போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறு நிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.

காரணம் (கா): அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர  நினைத்தது.

) கூற்றும் காரணமும் இரண்டுமேசரி. ஆனால் காரணம், கூற்றிற்கான சரியான விளக்கமல்ல

) கூற்றும் காரணமும் தவறானவை

) கூற்றும் காரணமும் சரி. காரணம், கூற்றைத் துல்லியமாக விளக்குகிறது

) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

IV பொருத்துக

1) டாக்டர் சன் யாட் சென்   - தெற்கு வியட்நாம்

2) சிங்மென் ரீ              - மிங்டாங்

3) அன்வர் சாதத்            - கொரியா

4) ஹோ சி மின்            - எகிப்து

5) நிகோ டின் டியம்        - வடக்கு வியட்நாம்

V) கீழ்க்கண்டவினாக்களுக்கு சுருக்கமாக விடைதருக .

1. சீனாவில் 1911ஆம் ஆண்டில் நடந்த புரட்சிக்கு ஏதேனும் மூன்று காரணிகளைக் குறிப்பிடுக.

2. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.

3. பாக்தாத் உடன்படிக்கை பற்றி அறிந்ததை எழுதுக.

4. மார்ஷல் திட்டம் என்றால் என்ன? .

5. மூன்றாம் உலக நாடுகள் பற்றி ஒரு  குறிப்பு  வரைக.

6. கியூபாவின் ஏவுகணைச் சிக்கல் எவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டது?

VII விரிவான விடை தருக.

1. சீனாவை ஒரு  பொதுவுடைமை நாடாக்க மாசேதுங்கின் பங்களிப்பை அளவிடுக.

2. ஐரோப்பியக் குழுமம் எவ்வாறு  ஐரோப்பிய  இணைவானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.

 

 

அலகு – 5, 19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

I) சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?

) 1827   ) 1829      ) 1826       ) 1927

2. தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?

) ஆரியசமாஜம்   ) பிரம்மசமாஜம்   ) பிரார்த்தனை சமாஜம்   ) ஆதி பிரம்மசமாஜம்

3. யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?

) ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்   ) ராஜா ராம்மோகன்ராய்  ) அன்னிபெசன்ட்  ) ஜோதிபா பூலே

4. ‘ராஸ்ட் கோப்தார்யாருடைய முழக்கம்?

) பார்சி இயக்கம்   ) அலிகார் இயக்கம்  ) ராமகிருஷ்ணர்     ) திராவிட மகாஜனசபை

5. நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?

) பாபா தயாள்தாஸ்  ) பாபா ராம்சிங்   ) குருநானக்  ) ஜோதிபா பூலே

6. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?

) M.G. ரானடே  ) தேவேந்திரநாத் தாகூர்  ) ஜோதிபா பூலே  ) அய்யன்காளி

7. ‘சத்யார்த்தபிரகாஷ்எனும் நூலின் ஆசிரியர் யார்?

) தயானந்த சரஸ்வதி   ) வைகுண்டசாமி   ) அன்னி பெசன்ட்  ) சுவாமி சாரதாநந்தா

II) கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. .................சமரச வேத சன்மார்க்க சங்கத்தை நிறுவினார்.

2. புனே சர்வஜனிக் சபாவை நிறுவியவர்......................

3. குலாம்கிரி நூலை எழுதியவர்......................

4. ராமகிருஷ்ணா மிஷன் ......................ஆல் நிறுவப்பட்டது.

5. ....................அகாலி இயக்கத்தின் முன்னோடியாகும். .

6. ‘ஒரு பைசா தமிழன்பத்திரிகையைத் துவக்கியவர் .........................ஆவார.

III) சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1. i) ராஜா ராம்மோகன்ராய் ஒரு கடவுள் கோட்பாட்டை போதித்தார்.

ii) அவர் உருவ வழிபாட்டை ஆதரித்தார்.

iii) சமூகத்தீமைகளைக் கண்டனம் செய்வதை எதிர்த்து அவர் சிற்றேடுகளை வெளியிட்டார்.

iv) ராஜா ராம்மோகன்ராய் கவர்னர் வில்லியம் பெண்டிங்கால் ஆதரிக்கப்பட்டார்.

) i) சரி    ) i) , ii) ஆகியன சரி   ) i), ii), iii) ஆகியன சரி   ) i), iii) ஆகியன சரி

2. i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பெற்றது.

ii) இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்புத் திருமணங்களையும் ஊக்குவித்தது.

iii) ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றினார்.

iv) பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.

) i ) சரி   ) ii) சரி    ) i), ii) ஆகியன சரி    ) iii), iv) ஆகியன சரி

3. i) ராமகிருஷ்ணா மிஷன் கல்வி, உடல் நலம், பேரிடர்களின் போது நிவாரணப்பணி செய்தல்

   போன்ற சமூகப்பணிகளில் செயலூக்கத்துடன் ஈடுபட்டது.

ii) பேரின்ப நிலை எய்தும் பழக்கங்களின் மூலம் ஆன்மரீதியாக இறைவனோடு இணைவதை ராமகிருஷ்ணர் வலியுறுத்தினார்.

iii) ராமகிருஷ்ணர் ராமகிருஷ்ணா மிஷனை ஏற்படுத்தினார்.

iv) ராமகிருஷ்ணர் வங்கப்பிரிவினையை எதிர்த்தார்.

) i) சரி   ) i) மற்றும் ii) சரி   ) iii) சரி   ) iv) சரி

4. கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றோருக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான விடுதிகளையும் திறந்தார்.

காரணம்: ஜோதிபா பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை ஆதரித்தார்.

) கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக இல்லை.

) கூற்று சரி. காரணம் கூற்றுக்குப் பொருத்தமானதாக உள்ளது.

) இரண்டுமே தவறு.

) காரணம் சரி. ஆனால் கூற்று பொருத்தமற்றதாக உள்ளது.

IV) பொருத்துக.

) அய்யாவழி                    - விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம்

) திருவருட்பா                  - நிரங்கரி இயக்கம்

) பாபா தயாள்தாஸ்              - ஆதி பிரம்மசமாஜம்

) ஈஸ்வர்சந்திர வித்யாசாகர்     - குண்ட சுவாமிகள்

) தேவேந்திரநாத்                - ஜீவகாருண்யப்பாடல்கள்

V) கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.

1. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன் வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.

2. சமூகச் சீர்திருத்தங்களுக்கு மகாதேவ் ரானடேயின் பங்களிப்பைக் குறிப்பிடுக.

3. இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக.

4. பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத்தீமைகள் யாவை?

5. ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.

VII) விரிவாக விடையளிக்கவும்.

1. 19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.

2. இந்தியச் சமூகத்தின் புத்தெழுச்சிக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் ஆற்றிய தொண்டினைத் திறனாய்வு செய்க.

3. பெண்களின் மேம்பாட்டிற்கு 19ஆம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகள் ஆற்றிய பணிகள்

குறித்து ஒரு கட்டுரை வரைக

 

அலகு - 6  ஆங்கிலேய  ஆட்சிக்கு  எதிராக  தமிழகத்தில்  நிகழ்ந்த  தொடக்ககால கிளர்ச்சிகள்

I சரியான விடையைத்  தேர்வு  செய்யவும்:

1. கிழக்கிந்திய ம்பெனியின் நாடுபிடிக்கும் சையை எதிர்த்து நி்ற முல் பாளையக்காரர் யார்?

) மருது சகோதரர்கள்    ) பூலித்தேவர்  ) வேலுநாச்சியார்   ) வீண்டிய ட்டபொம்மன்

2. சந்தாசாகிப்பின் மூன்று முக்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?

) வேலுநாச்சியார்       ) கட்டபொம்மன்    ) பூலித்தேவர்        ) ைத்துரை

3. சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?

) கயத்தாறு      ) நாகலாபுரம்       ) விருப்பாட்சி       ) ாஞ்சாலங்குறிச்சி

4. திருச்சிராப்பள்ளி சுதந்திப் பித்தை வெளியிட்டவர் யார்?

) மருது சகோதரர்கள்  ) பூலித்தேவர்  ) வீண்டிய ட்டபொம்மன்   ) கோபால நாயக்கர்

5. வேலூர்புட்சி ப்போது வெடித்தது?

) 1805 மே 24    ) 1805 லை10    ) 1806 லை10     ) 1806 ப்டம்பர்10

6. வேலூர் கட்டையில் புதிய ராணுவிதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?

) கர்னல் பேன்கோர்ட்   ) மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்   ) சர்ஜான் கிரடாக்   ) கர்னல் அக்னியூ

7. வேலூர்புட்சிக்குப் பின் திப்பு சுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?

) ல்கத்தா      ) மும்பை   ) டெல்லி   ) மைசூர்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ாளையக்காரர் முறை தமிழகத்தில் .............................என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

2. வேலுநாச்சியரும் வரது களும் எட்டாண்டுகளாக .......................துகப்பில் இருந்தர்.

3. ட்டபொம்மனை சரணடையக் ோரும் தகவலைத் தெரிவிக்க பானெர்மென் ........................ என்பவரை அனுப்பிவைத்தார்.

4. கட்டபொம்மன் ....................என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

5. மருது சகதர்களின் புட்சி பிரிட்டிஷ் குறிப்புகளில் ...................என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

6. ............என்பவர் புரட்சிக்காரர்களால் வேலூர்கோட்டையின் புதிய சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

III சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. (i) ாளையக்காரர் முறை கதீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது

(ii) ன் சாகிப்பின் ப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும் செவலை1764 இல் மீண்டும் கைப்பற்றினார்.

(iii) ம்பெனி நிர்வாகத்திற்கு ல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவா்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் ன் துோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764 இல் தூக்கிலிடப்பட்டார்.

(iv) ஒண்டிவீன் ட்டபொம்மனின் படைப்பிரிவுகளில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார்.

) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி       ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

) (iii) மற்றும் (iv) ட்டும் ரி            ) (i) மற்றும் (iv) ட்டும் ரி

2. (i) கர்னல் கேம்ப்பெல் தலைமையின் கீழ் ஆங்கிலேயப் படைகள் மாபூஸ்கானின் படைகளோடு இணைந்து சென்றன.

(ii) ாளையகோவில் ோரில் முத்துவடுகநாதர் கொல்லப்பட்டப் பின் வேலுநாச்சியார் மீண்டும் அரியணையைப் பெறுவதற்கு மருது சகோதரர்கள் துணைபுரிந்தனர்

(iii) திண்டுக்கல் கூட்டமைப்புக்கு கோபால நாயக்கர் தலைமையேற்று வழிநடத்தினார்.

(iv) காரன்வாலிஸ் மே1799 இல் கம்பெனிப் படைகளை திருநெல்வேலி நோக்கிச் செல்ல உத்தரவிட்டார்.

) (i) மற்றும் (ii) ஆகியவை சரி           ) (ii) மற்றும் (iii) ஆகியவை சரி

) (ii), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி       ) (i) மற்றும் (iv) ஆகியவை சரி

3. கூற்று: பூலித்தேவர், ஹைதர்அலி மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியைப்  பெற முயன்றார்.

காரணம்: மராத்தியர்களோடு ஏற்கனவே தொடர்போர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் ஹைதர் அலியால் பூலித்தேவருக்கு உதவ முடியாமல் போனது.

) கூற்று மற்றும் காரணம் ஆகியவை சரி எனினும் காரணம், கூற்றைச்சரியாக விளக்கவில்லை.

) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டுமே தவறானவை.

) கூற்று மற்றும் காரணம் ஆகியவைசரி காரணம், கூற்றைச் சரியாகவே விளக்குகிறது.

) கூற்று தவறானது காரணம் சரியானது

IV பொருத்துக

1. தீர்த்தகிரி                  - வேலூர்புரட்சி

2. கோபால நாயக்கர்          - இராமலிங்கனார்

3. பானெர்மென்              - திண்டுக்கல்

4. சுபேதார்ஷேக்  ஆதம்       - வேலூர்கோட்டை

5. கர்னல் பேன்கோர்ட்        - ஓடாநிலை

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?

2. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்களைக் கண்டறிந்து எழுதுக.

3. களக்காடு போரின் முக்கியத்துவம் யாது?

4. கம்பெனியாருக்கும் கட்டபொம்மனுக்கும் இடையே சர்ச்சை ஏற்படக் காரணமாக விளங்கியது எது?

5. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தின் (1801) முக்கிய கூறுகளைத் தருக.

VI விரிவாக விடையளிக்கவும்

1. கிழக்கிந்திய ம்பெனியாரை எதிர்த்து கட்டபொம்மன் நடத்திய வீரதீரப் போர்கள் பற்றி ஒரு கட்டுரைவரைக

2. சிங்கையின் துன்பரமா வீழ்ச்சிக்குக் காரணமானவற்றை ஆய்ந்து அதன் விளைவுகளை எடுத்தியம்புக.

3. வேலூரில் 1806 இல் வெடித்த புட்சியின் கூறுகளை விளக்குக.

 

அலகு 7     காலனியத்துக்கு  எதிரான இயக்கங்களும்  தேசியத்தின்  தோற்றமும்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. 1818ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?

) வஹாபி கிளர்ச்சி  ) ஃபராசி இயக்கம்  ) பழங்குடியினர் எழுச்சி   ) கோல் கிளர்ச்சி

2. ‘நிலம் கடவுளுக்குச் சொந்தம்என்று  அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?

) டிடு மீர்               ) சித்து     ) டுடு மியான்      ) ஷரியத்துல்லா

3. நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின் படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?

) சாந்தலர்கள்    ) டிடு மீர்   ) முண்டா   ) கோல்

4. கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?

) தாதாபாய் நௌரோஜி  ) நீதிபதி கோவிந்த் ரானடே இ) பிபின் சந்திர பால்  ) ரொமேஷ் சந்திரா

5. வங்கப்பிரிவினை எந்தநாளில் நடைமுறைக்கு வந்தது?

) 1905 ஜூன் 19    ) 1906 ஜூலை18    ) 1907 ஆகஸ்ட்19  ) 1905 அக்டோபர் 16

6. சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?

) கோல் கிளர்ச்சி   ) இண்டிகோ கிளர்ச்சி  ) முண்டா கிளர்ச்சி    ) தக்காண கலவரங்கள்

7. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?

) அன்னி பெசன்ட் அம்மையார் ) பிபின் சந்திர பால் இ) லாலா லஜபதி ராய்     ) திலகர்

8. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?

) தீன பந்து மித்ரா  ) ரொமேஷ் சந்திர தத்   ) தாதாபாய் நௌரோஜி  ) பிர்சா முண்டா

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மன்னராட்சிக்கும் நிலசுவான்தாரர்களுக்கும் எதிரான ____________ இயக்கம் 1827 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்டது.

2. சோட்டா நாக்பூர் பகுதியில் நடந்த மிகப்பெரிய பழங்குடியினர் கிளர்ச்சி ____________

3. __________ சட்டம் பழங்குடியினரல்லாத மக்களை பழங்குடி நிலத்தில் நுழைய தடைவிதித்தது.

4. சோட்டாநாக்பூர் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு ____________.

5. W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு ______

III சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. (i) மீர் ஜாபரிடம் இருந்து 2 கோடியே 25 லட்ச ரூபாயை வாங்கிய கிழக்கு இந்திய கம்பெனி அதனை பிரிட்டனில் தொழிற்புரட்சி மேம்பட முதலீடு செய்தது.

(ii) 1832 - 1831 ஆம் ஆண்டு அரசு அதிகாரிகள் மற்றும் கடன் கொடுப்போருக்கு எதிரான கிளர்ச்சியைக் கோல் மக்கள் ஒருங்கிணைத்தனர்.

(iii) 1855 ஆம் ஆண்டில் சாந்தலர் கிளர்ச்சிக்கு சித்து, கணு ஆகிய இரண்டு சாந்தலர் சகோதரர்கள் தலைமை ஏற்றனர்.

(iv) 1879 ஆம் ஆண்டில் சாந்தலர்கள் வசம் இருந்த பகுதிகளை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு சட்டம் இயற்றப்பட்டது.

) (i) (ii) மற்றும் (iii) சரியானவை             ) (ii) மற்றும் (iii) சரியானவை

) (iii) மற்றும் (iv) சரியானவை                ) (i) மற்றும் (iv) சரியானவை

2. (i) காலனி ஆட்சி பற்றிய பொருளாதார விமர்சனத்தைச் செய்தது ஆரம்பகால இந்திய தேசியவாதிகளின் மிகமுக்கியமான பங்களிப்புகளில் ஒன்றாகும்.

(ii) இந்தியாவில் வறுமை அதிகரிக்க சமய ரீதியிலான சுரண்டலே மிக முதன்மையான காரணம் என்று ஆரம்பகால காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

(iii) சுயராஜ்ஜியம் அல்லது தன்னாட்சியை எட்டுவதே மித தேசியவாத காங்கிரஸ் தலைவர்களின் குறிக்கோள்களில் ஒன்றாக இருந்தது.

(iv) வங்காளத்தின் ஆதிக்கத்தை குறைப்பதையும் தேசியவாத இயக்கத்தை வலுவிழக்கச் செய்வதையும் குறிக்கோளாகக் கொண்டு வங்கப் பிரிவினை நடந்தது.

) (i) மற்றும்(iii) சரியானவை   ) (i), (iii) மற்றும்(iv) சரியானவை

) (ii) மற்றும்(iii) சரியானவை   ) (iii) மற்றும்(iv) சரியானவை

3. கூற்று: இந்திய வரலாற்றில் முதன் முறையாக காலனி ஆட்சியின் கீழ் அரசு வனங்களின் மீது நேரடி தனியுரிமையைக் கோரியது.

காரணம்: இண்டிகோ விவசாயம் செய்யுமாறு விவசாயிகளை நிர்ப்பந்திக்க தொழில் செய்வோர் மிரட்டல் மற்றும் வன்முறையைக் கையாண்டனர்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி; அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று தவறு காரணம்சரி.

4. கூற்று: பிரிட்டிஷ் அரசு 1857ஆம்ஆண்டின் கிளர்ச்சியை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது.

காரணம்: மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் இல்லாததால் கிளர்ச்சி தோல்வி கண்டது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே தவறு.   

) கூற்று தவறு காரணம் சரி.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. அத்துடன் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமே சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

IV பொருத்துக

1.

வஹாபி கிளர்ச்சி

-

லக்னோ

2.

முண்டா கிளர்ச்சி

-

பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்

3.

பேகம்ஹஸ்ரத் மகால்

-

டிடு மீர்

4.

கன்வர் சிங்

-

ராஞ்சி

5.

நானாசாகிப்

-

பீகார்

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?

2. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.

3. வளங்கள் சுரண்டப்படுவது (செல்வச் சுரண்டல்) பற்றி தங்களின் கருத்து என்ன?

4. தன்னாட்சி (ஹோம் ரூல்) இயக்கத்தின் குறிக்கோள்களை விவரிக்கவும்.

5. லக்னோ ஒப்பந்த்தின் முக்கிய அம்சங்களைத் தொகுத்து வழங்கவும்.

 VI விரிவாக விடையளி்க்கவும்

1. 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்கான காரணங்கள் குறித்து விரிவாக ஆராயவும்.

2. 1905 ஆம் ஆண்டு நி்ழந் வங்காளப் பிரிவினையின் போது வங்காள பொதுமக்கள் எவ்விம் நடந்து கொண்டனர்?

 

அலகு - 8  தேசியம்: காந்திய காலகட்டம்

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?

) மோதிலால் நேரு  ) சைஃபுதீன் கிச்லு   ) முகம்மது அலி   ) ராஜ்குமார் சுக்லா

2. இந்திய தேசிய காங்கிரசின் எந்தஅமர்வில் ஒத்துழையாமைஇயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?

) பம்பாய்  ) மதராஸ்   ) கல்கத்தா   ) நாக்பூர்

3. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?

) 1930 ஜனவரி 26      ) 1929 டிசம்பர்26  ) 1946 ஜூன் 16       ) 1947 ஜனவரி 15

4. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?

) 1858   ) 1911      ) 1865       ) 1936

5. 1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?

) கோவில் நுழைவு நாள்   ) மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே)

) நேரடி நடவடிக்கைநாள்   ) சுதந்திரப் பெருநாள்

6. மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?

) 1858ஆம் ஆண்டு சட்டம்       ) இந்திய கவுன்சில் சட்டம், 1909

) இந்திய அரசுச் சட்டம், 1919    ) இந்திய அரசுச் சட்டம், 1935

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. காந்தியடிகளின் அரசியல் குரு ____________ ஆவார்.

2. கிலாபத் இயக்கத்துக்கு ____________ தலைமைஏற்றார்.

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டம் மாகாணங்களில் ____________ அறிமுகம் செய்தது.

4. வடமேற்கு எல்லை மாகாணத்தில் சட்டமறுப்பு இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்_____

5. சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு தனித் தொகுதிகளை வழங்கும் __________ ஐ ராம்சே மெக்டொனால்டு அறிவித்தார்.

6. _________ என்பவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காங்கிரஸ் வானொலியை திரைமறைவாக செயல்படுத்தினார்.

III சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. i) இந்திய பொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது.

(ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

(iii) சத்தியப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது.

(iv) வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை.

) (i) மற்றும் (ii) சரியானது    ) (ii) மற்றும் (iii) சரியானது

) (iv) சரியானது               ) (i) (ii) மற்றும் (iii) சரியானது

2. கூற்று: காங்கிரஸ் முதலாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது.

காரணம்: காங்கிரஸ் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்துகொள்ள காந்தி- இர்வின் ஒப்பந்தம் வழிவகை செய்தது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

 

3. கூற்று: காங்கிரஸ் அமைச்சரவைகள் 1939 ஆம் ஆண்டு பதவி விலகின.

காரணம்: காங்கிரஸ் அமைச்சரவைகளை ஆலோசிக்காமல் இந்தியாவின் காலனி ஆதிக்க அரசு போரில் பங்கேற்றது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.

) கூற்று சரியானது ஆனால் காரணம் தவறானது

) கூற்று மற்றும் காரணம் இரண்டுமேதவறானது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரியானது மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

IV பொருத்துக

1. ரௌலட் சட்டம்                        - பட்டங்களைத் திரும்ப ஒப்படைத்தல்

2. ஒத்துழையாமை இயக்கம்              - இரட்டை ஆட்சி

3. 1919 ஆம் ஆண்டின் இந்திய அரசு சட்டம் - M.N. ராய்

4. இந்திய பொதுவுடைமை கட்சி           - நேரடி நடவடிக்கை நாள்

5. 16 ஆகஸ்ட்1946                         - கருப்புச் சட்டம்

V) சுருக்கமாக விடையளிக்கவும்

1. ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.

2. கிலாபத் இயக்கம் பற்றி குறிப்பு வரைக.

3. ஒத்துழையாமை இயக்கத்தை ஏன் காந்தியடிகள் திரும்பப்பெற்றார்?

4. சைமன் குழு புறக்கணிக்கப்பட்டது ஏன்?

5. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?

6. பகத் சிங்பற்றி குறிப்பு வரைக.

7. பூனா ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

VI) விரிவாக விடையளிக்கவும்

1. காந்தியடிகளை ஒரு மக்கள் தலைவராக உருமாற்றம் செய்ய உதவிய காரணிகள் என்ன என்று ஆராயவும்.

2. காந்திய இயக்கத்தின் ஒரு சிறந்த உதாரணமான சட்டமறுப்பு இயக்கம் குறித்து விரிவாக ஆராயவும்.

3. இந்தியாவின் பிரிவினைக்குப் பின்னால் இருந்த காரணங்களை விவாதிக்கவும்.

 

அலகு - 9    தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்

I) சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?

) T.M. நாயர் ஆ) P. ரங்கையா  ) G. சுப்பிரமணியம்   ) G.A. நடேசன்

2. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?

) மெரினா   ) மைலாப்பூர்  ) புனித ஜார்ஜ் கோட்டை ஈ) ஆயிரம் விளக்கு

3. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்ததுஎனக்கூறியவர் யார்?

) அன்னிபெசன்ட்  ) M. வீரராகவாச்சாரி  ) B.P. வாடியா  ) G.S. அருண்டேல்

4. கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?

) S.சத்தியமூர்த்தி     ) கஸ்தூரிரங்கர்    ) P. சுப்பராயன்  ) பெரியார் ஈ.வெ.ரா

5. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?

) K. காமராஜ்   ) C. ராஜாஜி    ) K. சந்தானம்   ) T. பிரகாசம்

6. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?

) ஈரோடு   ) சென்னை   ) சேலம்   ) மதுரை

II) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் இந்திய நீதிபதி _________ ஆவார்..

2. ____________ எனும் ரகசிய அமைப்பை நீலகண்ட பிரம்மச்சாரி தொடங்கினார்.

3. சென்னையில் தொழிற்சங்கங்களைத் தொடங்குவதில் முன்னோடியாகத் திகழ்ந்தவர் _____.

4. சென்னையில் முதலாவது காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர்___________.

5. ____________ முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை உருவாக்கியவராவார்.

6. 1932 ஜனவரி 26 இல் ____________ புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக்கொடியை ஏற்றினார்.

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. (i) சென்னைவாசிகள் சங்கம் 1852 இல் நிறுவப்பட்டது.

  (ii) தமிழில் வெளிவந்த தேசியப்பருவ இதழான சுதேசமித்திரன் 1891இல் தொடங்கப்பட்டது.

  (iii) குடிமைப்பணித் தேர்வுகள் இந்தியாவில் மட்டுமே நடத்தப்பட வேண்டுமென சென்னை மகாஜன சபை கோரியது.

  (iv) V.S. சீனிவாசனார் ஒரு தீவிர தேசியவாதியாவார்.

) (i) மற்றும் (ii) ஆகியவைசரி         ) (iii) மட்டும் சரி   ) (iv) மட்டும் சரி   ) அனைத்தும் சரி

2. (i) ஒத்துழையாமை இயக்கத்தில் பெரியார் பங்கேற்கவில்லை.

  (ii) முஸ்லிம் லீக்கைச் சேர்ந்த யாகூப் ஹசனுடன் ராஜாஜி நெருக்கமாகப் பணியாற்றினார்.

  (iii) ஒத்துழையாமை இயக்கத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவில்லை.

  (iv) தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளுக்கு முன்பாக மறியல் செய்யப்படவில்லை.

) (i) மற்றும் (ii) ஆகியவை சரி       ) (i) மற்றும் (iii) ஆகியவை சரி

) (ii) மட்டும் சரி                     ) (i), (iii) மற்றும் (iv) ஆகியவை சரி

3. கூற்று: நீதிக்கட்சி தன்னாட்சி இயக்கத்தை எதிர்த்தது.

காரணம்: தன்னாட்சி இயக்கம் பிராமணர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கிவிடுமென நீதிக்கட்சி அஞ்சியது.

) கூற்றும், காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

4. கூற்று: பிராமணர் அல்லாதவர்க்கு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற பிரச்சினையைப் பெரியார் எழுப்பினார்.

காரணம்: காங்கிரசின் முதல் அமைச்சரவையின் போது ராஜாஜி விற்பனை வரியை ரத்துச் செய்தார்.

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று சரி, காரணம் தவறு           

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் தவறு

) கூற்று, காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

IV) பொருத்துக

1.

சென்னைவாசிகள் சங்கம்

-

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

2.

    .வெ.ரா

-

நீல் சிலையை அகற்றுதல்

3.

S  N. சோமையாஜுலு

-

உப்பு சத்தியாகிரகம்

4.

   வேதாரண்யம்

-

சித்திரவதை ஆணையம்

5.

   தாளமுத்து

-

வைக்கம் வீரர்

V) சுருக்கமாக விடையளிக்கவும்

1. மிதவாத தேசியவாதிகளின்பங்களிப்பைப்பட்டியலிடுக.

2. திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.

3. இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் அன்னிபெசன்ட்டின் பங்களிப்பு யாது?

VII) விரிவாக விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்பதை விவாதிக்கவும்.

2. தமிழ்நாட்டில் பிராமணரல்லாதோர் இயக்கம் தோன்றி வளர்ந்ததை ஆய்வு செய்க.

3. சட்டமறுப்பு இயக்கத்தில் தமிழ்நாடு வகித்த பாத்திரத்தை விவரி.

 

அலகு – 1௦    தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

I) சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. 1709 இல் தரங்கம்பாடியில் ……………………………ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்

) கால்டுவெல் ஆ) F.W. எல்லிஸ்  ) சீகன்பால்கு  ) மீனாட்சி சுந்தரனார்

2. 1893 இல் ஆதி திராவிட மகாஜன சபையை ……………………………….நிறுவினார்.

) இரட்டைமலை சீனிவாசன்   ) B.R. அம்பேத்கார்    ) ராஜாஜி   ) எம்.சி. ராஜா

3. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் ………………..இல் உருவாக்கப்பட்டது.

) 1918   ) 1917      ) 1916       ) 1914

4. அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய ........................நீதிக்கட்சியால் நிறுவப் பெற்றது.

) பணியாளர் தேர்வு வாரியம்                ) பொதுப் பணி ஆணையம்

) மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்   ) பணியாளர் தேர்வாணையம்

5. சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

) எம்.சி. ராஜா  ) இரட்டைமலை சீனிவாசன்  ) டி.எம். நாயர்   ) பி. வரதராஜுலு

II) கோடிட்ட இடங்களை நிரப்புக

1. முதன் முதலாக அச்சேறிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி …………………………….ஆகும்.

2. புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை உருவாக்கியவர் …………………………………..…………………..ஆவார்.

3. ……………………….………….தமிழ் மொழியியல் தூய்மைவாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.

4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கேற்பதை முதலில் அங்கீகரித்தது .................ஆகும்.

5. சூரியநாராயண சாஸ்திரி எனும் பெயர் ................................................என மாற்றம் பெற்றது.

6. ............................தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் ...........................ஆவார்.

III) சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. (i) மிக முன்னதாகவே வெளியிடப்பட்ட தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான திருக்குறள்  

     1812 இல் வெளியிடப்பட்டது.

(ii) பனையோலைகளில் எழுதப்பெற்ற பல்வேறு தமிழ் இலக்கண இலக்கிய கையெழுத்துப் பிரதிகளை மறைமலையடிகள் சேகரித்துத் தொகுத்தார்.

(iii) இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் இல்லாத ஒப்புமை திராவிட மொழிகளுக்கிடையே நெருக்கமாக நிலவுவதை நிரூபித்தார்.

 தமிழின் தொன்மையையும் நிரூபித்தார்.

(iv) திரு.வி.கல்யாணசுந்தரம் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்ககால முன்னோடியாக இருந்தார்.

) (i), (ii) ஆகியன சரி   ) (i), (iii) ஆகியன சரி    ) (iv) சரி   ) (ii), (iii) ஆகியன சரி

2. கூற்று: சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை நீதிக்கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது.

காரணம்: இக்காலகட்டத்தில் இரட்டையாட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சட்டமன்றத்தைப் புறக்கணித்தது.

) காரணம், கூற்று ஆகியவை சரி

) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல

) காரணம், கூற்று இரண்டுமே தவறு

) காரணம் சரி. ஆனால் கூற்றுடன் அது பொருந்தவில்லை.

IV பொருத்துக

1. திராவிடர் இல்லம்        - மறைமலையடிகள்

2. தொழிலாளன்             இரட்டைமலை சீனிவாசன்

3. தனித் தமிழ் இயக்கம்     - சிங்காரவேலர்

4. ஜீவிய சரித சுருக்கம்     - நடேசனார்

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறுகுறிப்பு வரைக.

2. தென்னிந்திய மொழிகளுக்காக கால்டுவெல்லின் பங்களிப்பினை நன்குப் புலப்படுத்துக.

3. தங்களுடைய எழுத்துக்களின் மூலம் தமிழ் இலக்கியத்தின் புத்துயிர்ப்புக்குப் பங்களிப்புச் செய்த ஆளுமைகளைப் பட்டியலிடவும்.

4. நீதிக்கட்சியால் நிறைவேற்றப்பட்ட இந்துசமய அறநிலைய சட்டத்தின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

5. தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்தித்தாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

6. பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.

VI விரிவாக விடையளிக்கவும்

1.தமிழ் மறுமலர்ச்சியின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு கட்டுரை எழுதவும்.

2. நீதிக்கட்சியின் தோற்றத்திற்கான பின்புலத்தை விளக்கி சமூகநீதிக்கான அதன் பங்களிப்பைச் சுட்டிக்காட்டவும்.

3. தமிழ்நாட்டினுடைய சமூகமாற்றங்களுக்கு ஈ.வெ.ரா. பெரியாரின் தீர்மானகரமான பங்களிப்பை மதிப்பீடு செய்யவும்.

புவியியல்

அலகு – 1    இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு

I சரியான விடையைத் தேர்வு

1. இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.

) 2500 கி.மீ     ) 2933 கி.மீ ) 3214 கி.மீ ) 2814 கி.மீ

2. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு

) நர்மதா       ) கோதாவரி       ) கோசி     ) தாமோதர்

3. மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ___________ என அழைக்கப்படுகிறது.

) கடற்கரை    ) தீபகற்பம்        ) தீவு       ) நீர்ச்சந்தி

4. பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா _____________ ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது.

) கோவா       ) மேற்கு வங்காளம்       ) இலங்கை ) மாலத்தீவு

5. தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ___________.

) ஊட்டி        ) ஆனை முடி     ) கொடைக்கானல்  ) ஜின்டா கடா

6. பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி ___________.

) பாபர்         ) தராய்     ) பாங்கர்    ) காதர்

7. பழவேற்காடு ஏரி ___________________ மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.

) மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ) கர்நாடகா மற்றும் கேரளா

) ஒடிசா மற்றும் ஆந்திரப்பிரதேசம்   ) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்

II பொருத்துக

1. சாங்போ                  - கங்கை ஆற்றின் துணை ஆறு

2. யமுனை                 - இந்தியாவின் உயர்ந்த சிகரம்

3. புதிய வண்டல் படிவுகள்  - பிரம்மபுத்திரா

4. காட்வின் ஆஸ்டின் (K2)   - தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி

5. சோழ மண்டலக் கடற்கரை - காதர்

III காரணம் கூறுக

1. இமயமலைகள் மடிப்புமலைகள் என அழைக்கப்படுகின்றன.

2. வட இந்திய ஆறுகள் வற்றாத ஆறுகள்

3. தென்னிந்திய நதிகள் கிழக்கு நோக்கிப் பாயும் நதிகள்

4 மேற்கு நோக்கிப் பாயும் நதிகள் டெல்டாவை உருவாக்குவதில்லை

IV வேறுபடுத்துக

1. இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்

2. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள்

3. மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி

V சுருக்கமாக விடையளி

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.

2. இந்திய திட்டநேரத்தின் முக்கியத்துவம் பற்றி கூறுக.

3. தக்காண பீடபூமிகுறிப்பு வரைக.

4. இந்தியாவின் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைப் பற்றி கூறுக.

5. இலட்சத் தீவுக்கூட்டங்கள் பற்றி விவரி.

VI ஒரு பத்தியில் விடையளிக்கவும்

1. இமயமலையின் உட்பிரிவுகளையும் அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.

2. தீபகற்ப ஆறுகளைப் பற்றி விவரி.

3. கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.

VII வரைபடப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ள இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.

1. மலைத் தொடர்கள்: காரகோரம், லடாக், ஜஸ்கர், ஆரவல்லி, மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை.

2. ஆறுகள்: சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, நர்மதை, தபதி, மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா மற்றும் காவிரி.   

3. பீடபூமிகள்: மாளவபீடபூமி, சோட்டா நாகபுரி பீடபூமி, தக்காண பீடபூமி.

 

அலகு – 2     இந்தியாகாலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்

I சரியான விடையைத் தேர்வு செய்க

1. மேற்த்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி

) தமிழ்நாடு     ) கேரளா   ) பஞ்சாப்   ) மத்தியப் பிரதேசம்

2. கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு காற்றுகள் உதவுகின்றன.

) லூ    ) நார்வெஸ்டர்ஸ்         ) மாஞ்சாரல்       ) ஜெட் காற்றோட்டம்

3. ஒரே அளவு மழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு ஆகும்.

) சமவெப்ப கோடுகள்   ) சம மழைக்கோடுகள்  ) சம அழுத்தக்கோடுகள்  ) அட்சக் கோடுகள்

4. இந்தியாவின் காலநிலை ....................ஆக பெயரிடப்பட்டுள்ளது.

) அயன மண்டல ஈரக்காலநிலை                 ) நிலநடுக்கோட்டுக் காலநிலை

) அயனமண்டல பருவக்காற்றுக் காலநிலை   ) மித அயனமண்டலக் காலநிலை

5. பருவக்காற்று காடுகள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

) அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்   ) இலையுதிர்க் காடுகள்

) மாங்குரோவ் காடுகள்                     ) மலைக் காடுகள்

6. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்

) தமிழ்நாடு   ) ஆந்திரப் பிரதேசம்   ) மத்தியப் பிரதேசம்   ) கர்நாடகா

7. யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது ………….

) நீலகிரி  ) அகத்திய மலை       ) பெரிய நிக்கோபார்       ) கட்ச்

II பொருத்துக

1. சுந்தரவனம்                     பாலை மற்றும் அரைப்பாலைவனத் தாவரங்கள்

2. உயிர்பன்மைச் சிறப்பு பகுதிகள்   - அக்டோபர், டிசம்பர்

3. வடகிழக்குப் பருவக்காற்று       கடற்கரைக் காடுகள்

4. அயன மண்டல முட்புதர் காடுகள் - மேற்கு வங்காளம்

5. காடுகள்                         - இமயமலைகள்

III கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. கூற்று: இமய மலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது.

காரணம்: இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது.

) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரி.

) A மற்றும் R இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் தவறு.

) கூற்று சரி காரணம் தவறு.        

) கூற்று தவறு காரணம் சரி.

IV பொருந்தாத விடையைத் தேர்வு செய்க.

1. ஓதக்காடுகள் இதனைச் சுற்றி காணப்படுகிறது.

) பாலைவனம்  ) கங்கை பிரம்மபுத்ரா டெல்டா இ) கோதாவரி டெல்டா  ) மகாநதி டெல்டா

2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் காரணிகள்

) அட்ச பரவல் ) உயரம்    ) கடலிலிருந்து அமைந்துள்ள தூரம்  ) மண்

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. காலநிலையை பாதிக்கும் காரணிகளை பட்டியலிடுக

2. "வெப்ப குறைவு விகிதம்" என்றால் என்ன?

3. ”ஜெட் காற்றோட்டங்கள்”’ என்றால் என்ன?

4. பருவக்காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக.

5. இந்தியாவின் நான்கு பருவக்காலங்களைக் குறிப்பிடுக..

6. ’பருவமழை வெடிப்புஎன்றால் என்ன?

7. அதிக மழைப்பெறும் பகுதிகளைக் குறிப்பிடுக.

8. இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.

9. இந்தியாவில் உள்ள உயிர்க்கோள காப்பகங்கள் ஏதேனும் ஐந்தினை எழுது?.

VI வேறுபடுத்துக

1. வானிலை மற்றும் ாலநிலை.

2. அயன மண்டல பசுமை மாாக் ாடுள் மற்றும் இலையுதிர்க் ாடுள்.

3. வடகிழக்கு பருவக் ாற்று மற்றும் தென்மேற்கு பருவக்காற்று.

VII. காரணம் கண்டறிக

1. மேற்கு கடற்கரை சமவெளி குறுகலானது.

2. இந்தியா அயனமண்டல பருவக்காற்று காலநிலையை பெற்றுள்ளது.

3. மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை.

VIII. விரிவான விடையளிக்கவும்

1. தென்மேற்கு பருவக்காற்று குறித்து எழுதுக.

2. இந்தியக் காடுகள் பற்றி விவரிக்கவும்.

IX. வரைபடப் பயிற்சி   இந்திய நில வரைபடத்தில் கீழ்கண்ட இடங்களை குறிக்கவும்.

1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை 2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை

3. அதிக மழைபெறும் பகுதிகள்            4. மலைக்காடுகள்

5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்          6. அகத்தியர் மலை உயிர்க்கோள பெட்டகம்


அலகு – 3    இந்தியாவேளாண்மை

I சரியான விடையைத் தேர்வு செய்க

1. ––––––––––––– மண்ணில் இரும்பு ஆக்ஸைடு அதிகமாக காணப்படுகிறது

) வண்டல்      ) கரிசல்    ) செம்மண் ) உவர் மண்

2. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண்வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?

) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்     ) இந்திய வானியல் துறை

) இந்திய மண்அறிவியல் நிறுவனம்         ) இந்திய மண்ஆய்வு நிறுவனம்

3. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்

) செம்மண்     ) கரிசல் மண்     ) பாலைமண் ஈ) வண்டல் மண்

4. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை

) ஹிராகுட் அணை    ) பக்ராநங்கல் அணை இ) மேட்டூர் அணை  ) நாகர்ஜூனா சாகர் அணை

5. ––––––––––––– என்பது ஒரு வாணிபப்பயிர்

) பருத்தி       ) கோதுமை       ) அரிசி     ) மக்காச் சோளம்

6. கரிசல் மண்––––––––––––– எனவும் அழைக்கப்படுகிறது.

) வறண்ட மண்       ) உவர் மண்  ) மலைமண்     ) பருத்தி மண்

7. உலகிலேயே மிக நீளமான அணை––––––––

) மேட்டூர் அணை     ) கோசி அணை    ) ஹிராகுட் அணை        ) பக்ராநங்கல் அணை

8. இந்தியாவில் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது –––––––––––––

) பருத்தி       ) கோதுமை       ) சணல்     ) புகையிலை

II சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

1. கூற்று : பழங்கள் காய் வகைகள் மற்றும் பூக்கள் பயிரிடலில் ஈடுபடுவது தோட்டக்கலைத் துறையாகும்.

காரணம்: உலகளவில் இந்தியா மா, வாழைமற்றும் சிட்ரஸ் பழவகை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று தவறு, காரணம் சரி

2. கூற்று : வண்டல் மண் ஆறுகளின் மூலம் அரிக்கப்பட்டு படியவைக்கப்பட்ட, மக்கிய பொருட்களால் ஆன ஒன்று.

காரணம் : நெல் மற்றும் கோதுமை வண்டல் மண்ணில் நன்கு வளரும்

) கூற்று மற்றும் காரணம் இரண்டு சரி, கூற்று காரணத்திற்கான சரியான விளக்கம்

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, கூற்றுக்கான காரணம் சரியான விளக்கமல்ல

) கூற்று சரி, காரணம் தவறு

) கூற்று தவறு, காரணம் சரி

III பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும்

1. ) கோதுமை     ) நெல்     ) திணைவகைகள் ) காபி

2. ) காதர்   ) பாங்கர்   ) வண்டல் மண்    ) கரிசல் மண்

3. ) வெள்ளப்பெருக்கு கால்வாய்   ) வற்றாத கால்வாய்  ) ஏரிப்பாசனம்   ) கால்வாய்

IV. பொருத்துக

1. இந்தியாவின் சர்க்கரை கிண்ணம் மகாநதி

2. காபி                            - தங்கப்புரட்சி

3. டெகிரி அணை                  - கர்நாடகா

4. ஹிராகுட்                        - உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார்

5. தோட்டக் கலை                 - இந்தியாவின் உயரமான அணை

V சுருக்கமாக விடையளி

1. ’மண்’ – வரையறு

2. இந்தியாவில் காணப்படும் மண்வகைகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

3. கரிசல் மண்ணின் ஏதேனும் இரண்டு பண்புகளை எழுதுக.

4. ’வேளாண்மை வரையறு.

5. இந்தியாவின் வேளாண்மை முறைகளை குறிப்பிடுக.

6. இந்திய வேளாண் பருவங்களைக் குறிப்பிடுக.

7. இந்தியாவின் தோட்டப் பயிர்களைக் குறிப்பிடுக.

8. கால்நடைகள் என்றால் என்ன?

9. இந்தியாவில் மீன்வளர்ப்பு பிரிவுகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்பு தருக.

VI காரணம் கூறுக

1. வேளாண்மை இந்தியாவின் முதுகெலும்பு.

2. மழைநீர் சேமிப்பு அவசியம்.

VII வேறுபடுத்துக

1. ராபி பருவம் மற்றும் காரிப்பருவம்

2. வேள்ளப்பெருக்கு கால்வாய் மற்றும் வற்றாத கால்வாய்

3. கடல் மீன்பிடிப்பு மற்றும் உள்நாட்டு மீன் பிடிப்பு

4. வண்டல் மண் மற்றும் கரிசல் மண்

VIII பத்தியளவில் விடையளி

1. இந்திய மண்வகைகள் ஏதேனும் ஐந்தினைக் குறிப்பிட்டு, மண்ணின் பண்புகள் மற்றும் பரவல் பற்றி விவரி.

2. நோக்குத் திட்டம் என்றால் என்ன? ஏதேனும் இரண்டு இந்திய பல்நோக்கு திட்டங்கள் பற்றி எழுதுக

3. தீவிர வேளாண்மை மற்றும் தோட்ட வேளாண்மையின் பண்புகளை வெளிக் கொணர்க.

4. நெல் மற்றும் கோதுமை பயிரிடுவதற்கு ஏற்ற புவியியல் சூழல்கள் பற்றி விவரி.

IX உயர் சிந்தனை வினாக்கள்

1. வேளாண்மை இல்லாத உலகை கற்பனை செய்து பார்க்க முடியுமா?

2. தென்னிந்தியாவில் நிலவும் நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வை உங்களால் கொடுக்க முடியுமா?

X நிலவரைபட பயிற்சி

1. வண்டல் மண் அதிகம் காணப்படும் பகுதிகளைக் குறிப்பிடுக.

2. கரிசல் மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.

3. ஹிராகுட் அணை, மேட்டூர் அணை மற்றும் தாமோதர் அணைகளின் அமைவிடங்களைக் குறிக்கவும்.

4. சணல் விளையும் பகுதிகளைக் குறிக்கவும்.

5. காபி மற்றும் தேயிலை விளையும் பகுதிகள் ஏதேனும் மூன்றை குறிக்கவும்.

6. பாலை மண் காணப்படும் பகுதிகளைக் குறிக்கவும்.

7. தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் மசூலிப்பட்டினம் மீன் பிடித்தல் மையங்களைக் கண்டறிக.

8. காவிரி மற்றும் கோதாவரி டெல்டா பகுதிகளைக் குறிக்கவும்.

 

அலகு – 4    இந்தியாவளங்கள் மற்றும் தொழிலகங்கள்

I சரியான விடையைத் தேர்வு செய்க

1. மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.

) சேமிப்பு மின்கலன்கள் ஆ) எஃகு தயாரிப்பு  ) செம்பு உருக்குதல் ஈ) பெட்ரோலிய சுத்திகரிப்பு

2. ஆந்த்ரசைட் நிலக்கரி ____________ கார்பன் அளவை கொண்டுள்ளது.

) 80% - 95%   ) 70% க்கு மேல்     ) 60% - 70%  ) 50% க்கும் குறைவு

3. பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் __________

) ஆக்ஸிஜன்   ) நீர்        ) கார்பன்    ) நைட்ரஜன்

4. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் நகரம்.

) சேலம்       ) சென்னை          ) மதுரை   ) கோயம்புத்தூர்

5. இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்.

) குஜராத்      ) இராஜஸ்தான்    ) மகாராஷ்டிரம்    ) தமிழ்நாடு

6. மிக அதிகமாக கிடைக்ககூடிய ஆற்றல் வளம்.

) உயிரி சக்தி ) சூரியன்          ) நிலக்கரி         ) எண்ணெய்

7. புகழ் பெற்ற சிந்திரி உரத்தொழிலகம் அமைந்துள்ள மாநிலம்.

) ஜார்கண்ட்    ) பீகார்     ) இராஜஸ்தான்    ) அசாம்

8. நாகபுரி பீடபூமி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு கருவாக இருப்பது

) போக்குவரத்து ஆ) கனிமப்படிவுகள்  ) பெரும் தேவை  ) மின்சக்தி சக்தி கிடைப்பது

II) பொருத்துக

  ) பாக்சைட்            - சிமெண்ட்

) ஜிப்சம்              - வானூர்தி

) கருப்பு தங்கம்       - மின்சாதனப் பொருட்கள்

) இரும்பு தாது        - நிலக்கரி

) மைக்கா              மேக்னடைட்

III) சுருக்கமாக விடையளி.

1.   வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.

2.   கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?

3.   மெக்னீசியத்தின் பயன்களைகுறிப்பிடுக.

4.   இயற்கை எரிவாயு என்றால் என்ன?

5.   நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக.

6.   இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக.

7. இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக.

IV) வேறுபடுத்துக.

1.   புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலாவளங்கள்.

2. உலோக மற்றும் அலோக கனிமங்கள்

3. வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்

4. சணல் ஆலைகள் மற்றும் சர்க்கரை ஆலைகள்

5. மரபுசார் மற்றும் மரபுசாரா எரிசக்தி

V). ஒரு பத்தியில் விடையளி

1. இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.

2. இந்திய தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.

VI) இந்திய வரைபடத்தில் கீழ்காண்பனவற்றை குறிக்கவும்.

1.       இரும்பு தாது உற்பத்தி மையங்கள்

2.       பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மையங்கள்

3.       நிலக்கரி சுரங்கங்கள்

4.       பருத்தி விளையும் பகுதிகள்

5.       இரும்பு எஃகு தொழிலகங்கள்

 

 

அலகு - 5    இந்தியாமக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்

I சரியான விடையைத் தேர்வு செய்து எழுதுக

1. மக்கள் தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு -----------------

) வரைபடவியல்  ) மக்களியல்    ) மானுடவியல்   ) கல்வெட்டியல்

2. .......................போக்குவரத்து நேரடியாக உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் இணைக்கிறது.

) இரயில்வே   ) சாலை    ) வான்வழி   ) நீர்வழி

3. இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின்நீளம்

) 5846 கி.மீ     ) 5942 கி.மீ    ) 5630 கி.மீ        ) 5800 கி.மீ

4. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்

) பெங்களூரு   ) சென்னை          ) புது டெல்லி    ) ஹைதராபாத்

5. எளிதில் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் போக்குவரத்து

) சாலைப்போக்குவரத்து        ) இரயில் போக்குவரத்து

) வான்வழிப் போக்குவரத்து     ) நீர்வழிப் போக்குவரத்து

6. கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?

) ஏர் இந்தியா  ) இந்தியன் ஏர்லைன்ஸ்  ) வாயுதூத்   ) பவன் ஹான்ஸ்

7. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள்

) சிமெண்ட்     ) ஆபரணங்கள்     ) தேயிலை        ) பெட்ரோலியம்

II பொருத்துக

1. எல்லைபுறச் சாலை   செயற்கைக் கோள் தகவல் தொடர்பு

2. INSAT (இன்சாட்)       நகரமயமாக்கலின் தாக்கம்

3. சகான்கப்பல்கட்டும்    - 1990 தளம்

4. புறநகரப் பரவல்       - மும்பை

5. கொங்கண் இரயில்வே - 1960 ஹைதராபாத்

III குறுகிய விடையளி

1. இடம்பெயர்வு என்றால் என்ன? அதன் வகைகளைக் குறிப்பிடுக.

2. இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக.

3. நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.

4. இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக.

5. தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?

6. பன்னாட்டு வணிகம்வரையறு.

7. சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக.

IV வேறுபடுத்துக

1. மக்களடர்த்தி மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி

2. தனி நபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல் தொடர்பு

3. அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்

4. சாலை வழி போக்குவரத்து மற்றும் இரயில் வழி போக்குவரத்து

5. நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து

6. உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்.

V ஒரு பத்தியில் விடையளிக்கவும்

1. நகரமயமாக்கம்என்றால் என்ன? அதன் சிக்கல்கள் யாவை?

2. இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக.

3. இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.

VI இந்திய புறவளி நிலவரை படத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்

1. தேசிய நெடுஞ்சாலை எண். 44 (NH44)    

2. இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள்.

3. இந்தியாவின் முக்கியபன்னாட்டு விமான நிலையங்கள்.

4. மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலங்கள்.

5. இந்தியாவின் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்.   6. இந்திய இரயில்வே மண்டலங்கள்

அலகு – 6    தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்

I. சரியானவிடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ...............முதல் .......................வரை உள்ளது.

) 8°4´ வ முதல் 13° 35´ வ வரை      ) 8° 5´ தெ முதல் 13° 35´ தெ வரை

) 8° 0´ வ முதல் 13° 05´ வ வரை     ) 8° 0´ தெ முதல் 13° 05´ தெ வரை

2. தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ....................முதல் .................வரை உள்ளது .

) 76°18´ கி முதல்  80°20´ கி வரை            ) 76°18´ மே முதல்  80°20´ மே வரை

) 10°20´ கி முதல்  86°18´ கி வரை            ) 10°20´ மே முதல்86°18´ மே வரை

3. தமிழ்நாட்டில் உள்ள மிக உயரமான சிகரம் ......................ஆகும்.

) ஆனைமுடி   ) தொட்டபெட்டா          ) மகேந்திரகிரி     ) சேர்வராயன்

4. கீழ்க்கண்டவற்றில் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையாத கணவாய் எது?

) பாலக்காடு    ) செங்கோட்டை   ) போர்காட்  ) அச்சன்கோவில்

5. கீழ்க்கண்டவற்றில் அரபிக் கடலில் கலக்கும் ஆறு எது?

) பெரியார்      ) காவிரி    ) சிற்றார்    ) பவானி

6. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம் எது?

) இராமநாதபுரம்   ) நாகப்பட்டினம்   ) கடலூர்   ) தேனி

7. பின்னடையும் பருவக்காற்று ...............லிருந்து ஈரப்பதத்தை எடுத்துக் கொள்கிறது.

) அரபிக்கடல்   ) வங்கக் கடல்  ) இந்தியப்பெருங்கடல் ஈ) தைமுர்க்கடல்

8. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்...........................

) தேனி ) மதுரை    ) தஞ்சாவூர்       ) இராமநாதபுரம்

9. தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் காடுகளைக் கொண்ட மாவட்டம்.....................

) தர்மபுரி       ) வேலூர்  ) திண்டுக்கல்      ) ஈரோடு

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களுக்கிடையே காணப்படும் பீடபூமி ..................ஆகும்.

2. கிழக்கு தொடர்ச்சி மலையின் தென் பகுதியில் உள்ள உயரமான சிகரம் ................ஆகும்.

3. ஆற்றுத் தீவான ஸ்ரீரங்கம் ...............மற்றும் ......................ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.

4. தமிழ்நாட்டின் மாநில விலங்கு .............ஆகும்.

III பொருத்துக

1. குளிர்காலம்

- முன் பருவமழை

2. கோடைக்காலம்

- ஜூன்செப்டம்பர்

3. மேற்கு பருவக்காற்று

- மார்ச்மே

4. கிழக்கு பருவக்காற்று

- டிசம்பர்பிப்ரவரி

5. மாஞ்சாரல்

- அக்டோபர்நவம்பர்

IV கூற்று வகை வினா

1. கூற்று: தமிழ்நாடு தென்மேற்கு பருவகாற்று காலங்களில் அதிகமழையைப்பெறுவதில்லை.

காரணம்: இது மேற்கு தொடர்ச்சி மலையின் மழைமறைவுப் பிரதேசத்தில் அமைந்துள்ளது

) கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

) கூற்று, காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு  ) காரணம் சரி. ஆனால் கூற்று தவறு

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் எல்லைகளைக் குறிப்பிடுக

2. ‘தேரி’ - என்றால் என்ன?

3. கடற்கரைச் சமவெளி எவ்வாறு உருவாகிறது?

4. தமிழ்நாட்டின் முக்கிய தீவுகளைக் குறிப்பிடுக.

5. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகளின் பெயர்களை எழுதுக

6. பேரிடர் அபாய நேர்வு - வரையறு.

7. புயலின்போது வானிலைமையம் மீனவர்களை எவ்வாறு எச்சரிக்கிறது.?

VI. வேறுபடுத்துக.  1. தாமிரபரணி மற்றும் காவிரி

VII கீழ்கண்டவற்றிக்கு காரணம் கூறுக

1. கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்று காணப்படுகிறது.

2. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு மிகக்குறைந்த மழையைப் பெறுகிறது.

3. கடலூர் ஒரு பல்வழி பேரழிவு மண்டலம்.

VIII பத்தி அளவில் விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் பீடபூமி நிலதோற்றத்தின் தன்மையை விவரிக்கவும்.

2. காவிரி ஆறு குறித்து தொகுத்து எழுதுக.

3. தமிழ்நாட்டின் கோடை மற்றும் குளிர் பருவங்களின் பண்புகளை விவரிக்கவும்

4. தமிழ்நாட்டில் உள்ள மண்வகைகளின், பரவல் மற்றும் அவற்றின் பண்புகளை விளக்குக.

5. புயலுக்கு முன்னரும், பின்னரும், மேற்கொள்ளவேண்டிய அபாய நேர்வு குறைப்பு நடவடிக்கைகளை எழுதுக.

IX நில வரைபடப்பயிற்சி 1. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள், மண்பரவல் மற்றும் காடுகளின் வகைகளை வரைபடத்தில் குறிக்கவும்.


அலகு – 7  தமிழ்நாடு - மானுடப் புவியியல்


I சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் டெல்டா .................

) காவிரி டெல்டா  ) மகாநதி டெல்டா  ) கோதாவரி டெல்டா  ) கிருஷ்ணா டெல்டா

2. தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர்

) பருப்பு வகைகள்  ) சிறுதானியங்கள்  ) எண்ணெய் வித்துக்கள்  ) நெல்

3. தமிழ்நாட்டின் மிகப் பெரிய நீர்மின்சக்தி திட்டம்

) மேட்டூர்  ) பாபநாசம்  ) சாத்தனூர்   ) துங்கபத்ரா

4. தமிழ்நாட்டிலுள்ள பெரிய மற்றும் சிறிய துறைமுகங்களின் எண்ணிக்கை

) 3 மற்றும் 15   ) 4 மற்றும் 16   ) 3 மற்றும் 16   ) 4 மற்றும் 15

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு ................... சதவிகிதத்தை வகிக்கிறது.

2. சாத்தனூர் அணை .........................ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

3. மும்பை மற்றும் டில்லியை அடுத்த இந்தியாவின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ............ ஆகும்.

4. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மதிப்புகளுக்கு இடையிலுள்ள வேறுபாடு ............. என அழைக்கப்படுகிறது.

III பொருத்துக

1. பாக்சைட்

- சேலம்

2 ஜிப்சம்

- சேர்வராயன்மலை

3. இரும்பு

- கோயம்புத்தூர்

4. சுண்ணாம்புக்கல்

- திருச்சிராப்பள்ளி

IV சரியான கூற்றினை கண்டுபிடி

1. கூற்று: கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மண்டலம் தமிழ்நாட்டின் ஜவுளி பள்ளத்தாக்கு என அழைக்கப்படுகிறது.

காரணம்: இவைகள் நெசவாலைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை அளிக்கின்றன.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. காரணம், கூற்றுக்கான சரியான விளக்கம் ஆகும்.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

2. கூற்று: நீலகிரி தமிழ்நாட்டின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாவட்டம்.

காரணம்: இது தமிழ்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

) கூற்று மற்றும் காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.

) கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் வேளாண் பருவக்காலங்களை எழுதுக.

2. கோயம்புத்தூர் ஏன் தமிழ்நாட்டின் 'மான்செஸ்டர்' என அழைக்கப்படுகிறது?

3. தமிழ்நாட்டின் முக்கிய பல்நோக்குத் திட்டங்களின் பெயர்களைஎழுதுக.

4. பறக்கும் தொடருந்துத் திட்டம் (MRTS) என்றால் என்ன?

5. தமிழ்நாட்டின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைப் பட்டியலிடுக.

VI வேறுபடுத்துக.

1. கடல் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன்பிடித்தல்.

2. உணவுப் பயிர்கள் மற்றும் வாணிபப் பயிர்கள்.

3. மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர்.

VII கீழ்க்கண்டவற்றிக்குக் காரணம் கூறுக

1. விவசாயிகள் இரசாயன வேளாண்மையிலிருந்து கரிம (இயற்கை) வேளாண்மைக்கு மாறுகிறார்கள்.

2. கிராமங்களை விட பெருநகரங்களில் மக்கள் தொகை நெருக்கம் அதிகம்.

3. தமிழ்நாட்டின் 'நெசவாலைத் தலைநகர்' என கரூர் அழைக்கப்படுகிறது.

VIII பத்தி அளவில் விடையளிக்கவும்

1. தமிழ்நாட்டின் தோட்டவேளாண்மை பற்றி விளக்குக.

2. தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்களைப் பற்றி எழுதவும்.

3. தமிழ்நாட்டின் கனிம பரவலை விவரி.

4. தமிழ்நாட்டில் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகள் மற்றும் அதற்கான காரணங்களை எழுதுக.

5. தமிழ்நாட்டின் பல்வேறு போக்குவரத்து முறைகளை விவரி.

6. சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றி எழுதவும்.

IX நில வரைபடப் பயிற்சி

1. முக்கிய பயிர் விளையும் பகுதிகள், தாதுக்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களைத் தமிழ்நாடு வரைபடத்தில் குறிக்கவும்.

 

குடிமையியல்

அலகு – 1    இந்திய அரசியலமைப்பு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. கீழ்காணும் வரிசையில்முகவுரைபற்றிய சரியான தொடர் எது?

) குடியரசு, ஜனநாயக, சமயச் சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.

) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.

) இறையாண்மை, குடியரசு, சமயச் சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.

) இறையாண்மை, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

2. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

) ஒரு முறை ) இரு முறை      ) மூன்று முறை     ) எப்பொழும் இல்லை

3. ஒரு வெளிநாட்டவர், கீழ்க்காணும் எதன் மூலம் இந்திய குடியுரிமை பெறமுடியும்?

) வம்சாவளி   ) பதிவு     ) இயல்புரிமை     ) மேற்கண்ட அனைத்தும்.

4. மாறுபட்ட ஒன்றைக்கண்டுபிடி.

) சமத்துவ உரிமை    ) சுரண்டலுக்கெதிரான உரிமை

) சொத்துரிமை         ) கல்வி மற்றும் கலாச்சார உரிமை

5. கீழ்க்காண்பவற்றில் ஒன்று, அடிப்படை உரிமையைப் பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.

) கர்நாடகாவிலிருந்து, கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணிசெய்தல்

) கிறித்துவ சமயக்குழு, தொடர்ச்சியாக, பள்ளிகளை அமைத்தல்

) ஆண், பெண் இருபாலரும் அரசுப்பணிகளுக்கு சமஊதியம் பெறுதல்

) பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச் செல்லுதல்

6. பின்வருவனவற்றுள் எந்தஉரிமை டாக்டர். B.R. அம்பேத்கர் அவர்களால் 'இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா' என விவரிக்கப்பட்டது?

) சமய உரிமை                                   ) சமத்துவ உரிமை

) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை ) சொத்துரிமை

7. அடிப்படைஉரிமைகள் எவ்வாறு நிறுத்திவைக்கப்படமுடியும்?

) உச்சநீதி மன்றம் விரும்பினால்            ) பிரதம மந்திரியின் ஆணையினால்

) தேசிய அவசரநிலையின் போது குடியரசு தலைவரின் ஆணையினால் ஈ) மேற்கண்ட அனைத்தும்

 

8. நமது அடிப்படைகடமைகளை .......................இடமிருந்து பெற்றோம்.

) அமெரிக்க அரசியலமைப்பு        ) கனடா அரசியலமைப்பு

) ரஷ்யா அரசியலமைப்பு             ) ஐரிஷ் அரசியலமைப்பு

9. எந்தபிரிவின்கீழ்நிதிநிலைஅவசரநிலையைஅறிவிக்க முடியும்?

) சட்டப்பிரிவு 352   ) சட்டப்பிரிவு 356     ) சட்டப்பிரிவு 360   ) சட்டப்பிரிவு 368

10. எந்தக்குழுக்கள் / கமிஷன்கள் மத்திய-மாநில உறவுகள் பற்றி பரிந்துரை செய்தன?

1. சர்க்காரியாகுழு       2. ராஜமன்னார் குழு 3. M.N. வெங்கடாசலையா குழு

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு

) 1, 2 & 3      ) 1 & 2     ) 1 & 3      ) 2 & 3

II கோடிட்ட இடத்தை நிரப்புக

1. முதன் முதலில் அரசியலமைப்பு எனும் கொள்கை ................ல் தோன்றியது.

2. அரசியல் நிர்ணய சபையின் தற்காலிக தலைவராக ........................தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் மற்றும் ஆண்டு ...................

4. .........................பேராணைகள் சட்டப்பிரிவு 32இல் குறிப்பிடப்படுகின்றன.

5. இந்திய குடிமக்களுக்கு அடிப்படைகடமைகள் .....................பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

III பொருத்துக

1. குடியுரிமைச் சட்டம்      - ஜவகர்லால் நேரு

2. முகவுரை                - 42வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம்

3. குறு அரசியலமைப்பு      - 1955

4. செம்மொழி                      - 1962

5. தேசிய அவசரநிலை       - தமிழ்

IV குறுகிய விடைதருக

1. அரசியலமைப்பு என்றால் என்ன?

2. குடியுரிமை என்பதன் பொருள் என்ன?

3. இந்திய அரசியலமைப்பால் வழங்கப்படும் அடிப்படை உரிமைகளை பட்டியலிடுக.

4. நீதிப்பேராணை(Writ) என்றால் என்ன?

5. இந்தியாவின் செம்மொழிகள் எவை?

6. தேசிய அவசரநிலைஎன்றால் என்ன?

7. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மூன்று தலைப்புகளில் பட்டியலிடுக.

V விரிவான விடை தருக

1. இந்திய அரசியலமைப்பின் சிறப்புக் கூறுகளை விளக்குக.

2. அடிப்படை உரிமைகளைக் குறிப்பிடுக.

3. அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.

4. அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக


 

அலகு – 2    நடுவண் அரசு


I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. நடுவண் அரசின் அரசியலமைப்புத் தலைவர் ஆவார்.

) குடியரசுத் தலைவர்   ) தலைமை நீதிபதி இ) பிரதம அமைச்சர்  ) அமைச்சர்கள் குழு

2. ஒரு மசோதாவை நிதிமசோதாவா அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவர்.

) குடியரசுத் தலைவர்                ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

) நாடாளுமன்ற விவகார அமைச்சர்    ) லோக் சபாவின் சபாநாயகர்

3. அமைச்சர்கள் குழு ஒட்டு மொத்தமாக இதற்குப் பொறுப்புடையவர்களாவர்.

) குடியரசுத் தலைவர்   ) மக்களவை   ) பிரதம அமைச்சர்   ) மாநிலங்களவை

4. லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது

) 18 வயது     ) 21 வயது ) 25 வயது ) 30 வயது

5. இந்திய மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் பெற்றவர்/ பெற்ற அமைப்பு.

) குடியரசுத் தலைவர்  ) பிரதமஅமைச்சர்  ) மாநிலஅரசாங்கம் ஈ) நாடாளுமன்றம்


6. கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?

) சட்டப்பிரிவு 352   ) சட்டப்பிரிவு 360   ) சட்டப்பிரிவு 356   ) சட்டப்பிரிவு 365

7. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளைநியமிப்பவர்.

) குடியரசுத் தலைவர்               ) இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்

) ஆளுநர்                           ) பிரதமஅமைச்சர்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ............ மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்றி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.

2. ……………...... நாட்டின் உண்மையான தலைவராகவும், நாட்டின் முக்கியக் செய்தி தொடர்பாளராகவும் செயல்படுகிறார்.

3. ......................அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.

4. நாடாளுமன்ற இரு அவைகளிலும் உரையாற்றவும், கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவும் உரிமை பெற்றவர்.....................

5. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது....................

6. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் .......................ஆகும்.

7. தற்சயம், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்படநீதிபதிகளின் எண்ணிக்கை..................

III சரியான கூற்றினை தேர்ந்தெடுக்கவும்

1. (i) மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 250.

(ii) இலக்கியம், அறிவியல், கலை, சமூகசேவை ஆகிய துறைகளில் சிறந்த அறிவு மற்றும் அனுபவம் பெற்ற 12 நபர்களை மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

(iii) மாநிலங்களவை உறுப்பினராவதற்கு 30 வயதுக்குக் குறைவாக இருத்தல் கூடாது.

(iv) மாநிலங்களவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

) ii & iv சரியானவை  ) iii & iv சரியானவை இ) i & iv சரியானவை     ) i, ii & iii சரியானவை

2. (i) உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மற்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 62.

(ii) நடுவண் அரசின் மூன்றாவது அங்கம் நீதிதுறை ஆகும்.

(iii) அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்களுக்கு உட்பட்டது.

(iv) உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் ஆணை இந்தியாவின் அனைத்துப் பகுதியிலுள்ள நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்.

) ii & iv சரியானவை ) iii & iv சரியானவை  ) i & iv சரியானவை    ) i & ii சரியானவை

IV பொருத்துக

1. சட்டப்பிரிவு 53  மாநில நெருக்கடிநிலை

2. சட்டப்பிரிவு 63  - உள்நாட்டு நெருக்கடிநிலை

3. சட்டப்பிரிவு 356 - குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள்

4. சட்டப்பிரிவு 76  - துணைக் குடியரசுத் தலைவரின் அலுவலகம்

5. சட்டப்பிரிவு 352 - இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்அலுவலகம்

V கீழ்க்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளி

1. இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

2. நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?

3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?

4. நிதி மசோதா குறிப்பு வரைக.

5. இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.

VI விரிவான விடையளி

1. இந்தியக் குடியரசுத் தலைவரின் சட்டமன்ற மற்றும் நீதி அதிகாரங்களை விவரி.

2. இந்திய உச்சநீதிமன்றத்தின் நீதிவரையறைகள் ஏதேனும் மூன்றினை விளக்குக.

3. இந்தியப் பிரதம அமைச்சரின் பணி்கள் மற்றும் கடமைகள் யாவை?

 4. நாடாளுமன்றத்தின் அதி்காரங்கள் மற்றும் செயல்பாடு்கள் தி்றனாய்வு செய்க.

 

 

 

அலகு – 3    மாநில அரசு

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. மாநில ஆளுநரை நியமிப்பவர்

) பிரதமர்       ) முதலமைச்சர்    ) குடியரசுத் தலைவர்      ) தலைமைநீதிபதி

2. மாநில சபாநாயகர் ஒரு

) மாநிலத் தலைவர்               ) அரசின் தலைவர்

) குடியரசுத் தலைவரின் முகவர்    ) மேற்கண்ட எதுவுமில்லை

3. கீழ்க்காணும் எந்த ஒன்று ஆளுநரின் அதிகாரமல்ல

) சட்டமன்றம் ) நிர்வாகம்        ) நீதித்துறை       ) தூதரகம்

4. ஆங்கிலோ இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?

) குடியரசுத் தலைவர்  ) ஆளுநர்   ) முதலமைச்சர்    ) சட்டமன்ற சபாநாயகர்

5. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?

) முதலமைச்சர்                        ) அரசுப்பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்

) மாநில தலைமை வழக்குரைஞர்        ) உயர் நீதிமன்ற நீதிபதிகள்

6. அமைச்சரவையின் தலைவர்

) முதலமைச்சர்   ) ஆளுநர்       ) சபாநாயகர்   ) பிரதம அமைச்சர்

7. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது

) 25 வயது     ) 21 வயது         ) 30 வயது ) 35 வயது

8. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்கவில்லை?

) ஆந்திரப்பிரதேசம்    ) தெலுங்கானா   ) தமிழ்நாடு   ) உத்தரப்பிரதேசம்

9. இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்

) கொல்கத்தா, மும்பை, சென்னை    ) டெல்லி மற்றும் கொல்கத்தா

) டெல்லி, கொல்கத்தா, சென்னை     ) கொல்கத்தா, சென்னை, டெல்லி

10. கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப பெற்றுள்ளன?

) தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம்       ) கேரளா மற்றும் தெலுங்கானா

) பஞ்சாப் மற்றும் ஹரியானா               ) மகாராஷ்டிரா மற்றும் குஜராத்

II கோடிட்ட இடத்தை நிரப்புக

1. ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை ..................இடம் கொடுக்கிறார்.

2. சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ...............ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

3. .....................மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.

4. அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ........................ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்யமுடியும்.

III பொருத்துக

1. ஆளுநர்                  அரசாங்கத்தின் தலைவர்

2. முதலமைச்சர்            மாநில அரசின் தலைவர்

3. அமைச்சரவை            தீர்ப்பாயங்கள்

4. மேலவை உறுப்பினர்      சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்

5. ஆயுதப்படையினர்        - மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது

IV சரியான கூற்றினைத் தேர்வு செய்க.

1. கூற்று: மாநில சட்டமன்றத்திற்கு சட்ட அதிகார வரம்பு உண்டு

காரணம்: குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மட்டுமே மாநிலப்பட்டியலிலுள்ள சில மசோதாக்களைச் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யலாம்.

அ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி 

ஆ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு  

இ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, மேலும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.

 

 

V. சுருக்கமாக விடையளி

1. மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது?

2. ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் யாவை?

3. உயர்நீதிமன்றத்தின் தனக்கே உரிய நீதிவரையரை அதிகாரங்கள் யாவை?

4. உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அதிகாரங்கள் யாவை?

VI. விரிவான விடையளி

1.   முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.

2.   ஆளுநரின் சட்டமன்ற அதிகாரங்களை விவரி.

3.   அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.

 

அலகு 4     இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. இந்தியாவின் அயலுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் எந்த அமைச்சர் முக்கிய பங்கு வகிக்கிறார்?

) பாதுகாப்பு அமைச்சர்              ) பிரதமஅமைச்சர்

) வெளி விவகாரங்கள் அமைச்சர்    ) உள்துறை அமைச்சர்

2. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?

) இந்தியா மற்றும் நேபாளம்       ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்

) இந்தியா மற்றும் சீனா            ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா

3. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?

) சட்டப்பிரிவு 50      ) பிரிவு 51         ) பிரிவு 52   ) பிரிவு 53

4. இன ஒதுக்கல் கொள்கை என்பது

) ஒரு சர்வதேச சங்கம்             ) இராஜதந்திரம்

) ஒரு இனப்பாகுபாட்டுக் கொள்கை ) மேற்கூறியவைகளில் எதுவுமில்லை

5. 1954 இல் இந்தியாமற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.

) வியாபாரம் மற்றும் வணிகம்      ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது

) கலாச்சார பரிமாற்றங்கள்          ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்

6. நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?

) உலக ஒத்துழைப்பு  ) உலக அமைதி   ) இனச் சமத்துவம்  ) காலனித்துவம்

7. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?

) யுகோஸ்லாவியா  ) இந்தோனேசியா  ) எகிப்து  ) பாகிஸ்தான்

8. ொருந்தாத ஒன்றினைக் கண்டுபிடி

) சமூக நலம்         ) சுகாதாரம்        ) ராஜதந்திரம்   ) உள்நாட்டு விவகாரங்கள்

9. அணிசேராமை என்பதன் பொருள்

) நடுநிலைமை வகிப்பது  ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்

) இராணுவமயமின்மை   ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை

10. இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது

) ஆற்றல் பாதுகாப்பு  ) நீர் பாதுகாப்பு  ) தொற்றுநோய்கள்  ) இவை அனைத்தும்

II ோடிட்டஇடங்களை நிரப்புக

1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ....................

2. தற்போது நமது வெளியுறவுக் கொள்கையானது உள்நாட்டு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான .....................உருவாக்குவதற்கான வழிமுறையாகச் செயல்படுகிறது.

3. .........என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.

4. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை......................

5. நமது மரபு மற்றும் தேசிய நெறிமுறைகள் ....................நடைமுறைப்படுத்துவதாகும்.

 

III பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. பின்வருவனவற்றைக் காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) பஞ்சீலம்                   (ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை 

(iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்    (iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை

) (i), (iii), (iv), (ii)         ) (i), (ii), (iii), (iv) ) (i), (ii), (iv), (iii)     ) (i), (iii), (ii), (iv)

2. பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?

(i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி.கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

(ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.

(iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.

(iv) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.

) (i) மற்றும் (ii)       ) (iii) மற்றும் (iv)          ) (ii) மட்டும்       ) (iv) மட்டும்

3. கீழ்காணும் ஒவ்வொரு கூற்றுக்கும் எதிராக சரியா/தவறா என எழுதுக

) பனிப்போரின் போது சர்வதேச விவகாரங்களில் இந்தியா மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்தது.

) இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.

) இந்தியாவின் அணுசக்தி சோதனை பூமிக்கடியிலான அணு சோதனை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டது.

4. கூற்று: 1971இல் இந்தோ- சோவியத் ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா சோவியத் யூனியனுடன் இணைந்தது.

காரணம்: இது 1962 இன் பேரழிவுகரமான சீனப்போருக்குப்பின் தொடங்கியது.

) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

) கூற்று சரி காரணம் தவறு

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

5. கூற்று: இந்தியாஉலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது.

காரணம்: உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.

) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்

) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல

) கூற்று தவறு காரணம் சரி

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு

6. இந்தியா சுதந்திரத்திற்குப் பின்னர் இராணுவ முகாம்களில் இணைவதைத் தவிர்ப்பது அவசியமாக இருந்தது. ஏனெனில், இந்தியா இதனை/ இவைகளை மீட்கவேண்டி இருந்தது

) கடுமையான வறுமை                        ) எழுத்தறிவின்மை

) குழப்பமான சமூக பொருளாதார நிலைமைகள்  ) மேற்கூறிய அனைத்தும்

IV பொருத்துக

1.   இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ளது              1955

2.   தென் கிழக்காசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம்    1954

3.   பஞ்சசீலம்                                         - மாலத்தீவு

4.   ஆப்பிரிக்க- ஆசிய மாநாடு                          - வெளியுறவுக் கொள்கை

5.   உலக அமைதி                                     - மியான்மர்

V) சுருக்கமாகவிடையளிக்கவும்

1. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?

2. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி. .

3. வேறுபடுத்துக: உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை

4. பஞ்சசீல கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.

5. இந்தியா அணிசேராக் கொள்கையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன?

6. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.

7. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?

8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.

VI) விரிவாகவிடையளிக்கவும்

1. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.

2. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்.

3. அண்டை நாடுகளுடன் நட்புறவினைப் பேண இந்தியா பின்பற்றும் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகளைப் பட்டியலிடுக.

 

அலகு – 5  இந்தியாவின் சர்வதேச உறவுகள்


I சரியான விடையைத் தேர்வு செய்யவும்

1. மக்மகான் எல்லைக்கோடு எந்தஇரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை ஆகும்?

) பர்மா- இந்தியா  ) இந்தியா - நேபாளம்  ) இந்தியாசீனா   ) இந்தியா - பூடான்

2. இந்தியா பின்வருவனவற்றுள் எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை?

1) ஜி 20   2) ஏசியான் (ASEAN)   3) சார்க்(SAARC)   4) பிரிக்ஸ் (BRICS)

) 2 மட்டும்    ) 2 மற்றும் 4      ) 2, 4 மற்றும் 1    ) 1, 2 மற்றும் 3

3. ஒபெக்(OPEC) என்பது

) சர்வதேச காப்பீட்டு நிறுவனம்                   ) ஒரு சர்வதேச விளையாட்டுக்கழகம்

) எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு   ) ஒரு சர்வதேச நிறுவனம்

4. இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது?

) வங்காளதேசம்      ) மியான்மர்       ) ஆப்கானிஸ்தான்  ) சீனா

5. பின்வருவனவற்றைப் பொருத்தி கீழே கொடுக்கப்பட்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

i) சல்மாஅணை          - 1. வங்காளதேசம்

ii) பராக்காஒப்பந்தம்     - 2. நேபாளம்

iii) சுக்காநீர்மின்சக்தி     - 3. ஆப்கானிஸ்தான் திட்டம்

iv) சாரதா கூட்டு        - 4. பூடான் மின்சக்தித்திட்டம்

) 3 1 4 2       ) 3 1 2 4   ) 3 4 1 2    ) 4 3 2 1

6. எத்தனை நாடுகள் இந்தியாவுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

) 5     ) 6         ) 7         ) 8

7. எந்த இரண்டு தீவு நாடுகள் இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்?

) இலங்கை மற்றும் அந்தமான் தீவுகள்      ) மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள்

) மாலத்தீவு மற்றும் நிக்கோபார் தீவு        ) இலங்கை மற்றும் மாலத்தீவு

8. எந்த இந்திய மாநிலம் மூன்று நாடுகளால் சூழப்பட்டுள்ளது?

) அருணாச்சலப்பிரதேசம்  ) மேகாலயா  ) மிசோரம்   ) சிக்கிம்

9. எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன?

) ஐந்து ) நான்கு   ) மூன்று     ) இரண்டு

10. சுதந்திரமடைந்த பாகிஸ்தானுக்கான எல்லைகளை வகுத்தவர்

) மவுண்ட்பேட்டன் பிரபு   ) சர் சிரில் ராட்க்ளிஃப்

) கிளமன்ட் அட்லி         ) மேற்கூறிய ஒருவருமில்லை

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இமயமலையில் உள்ள ஒரு சிறிய முடியாட்சி நாடு ____________ ஆகும்.

2. இந்தியா, தென்கிழக்காசியாவிற்குள் செல்வதற்கான ஒரு நுழைவு வாயிலாக ____________ இருக்கிறது.

3. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இடைப்படு நாடு ____________ ஆகும்.

4. இந்தியாவிற்குச் சொந்தமான ____________ என்ற பகுதி மேற்கு வங்காளம் - வங்காளதேச எல்லையில் அமைந்துள்ளது.

5. இடிமின்னல்நிலம் என்று அறியப்படும் நாடு ____________ ஆகும்.

6. இந்தியாவும் இலங்கையும் ___________ ஆல் பிரிக்கப்படுகின்றன.

III சரியான கூற்றைத் தேர்வு செய்யவும்

1. இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத் திட்டம் பின் வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது?

1. சாலை         2. ரயில்வழி  3. கப்பல்      4. உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

) 1, 2 மற்றும் 3   ) 1, 3 மற்றும் 4   ) 2, 3 மற்றும் 4   ) 1, 2, 3 மற்றும் 4

2. கூற்று: இந்தியாவும் பிரான்சும் சர்வதேச சூரியசக்திக் கூட்டணியைத்(International Solar Alliance) தொடங்கியுள்ளன.

காரணம்: இது கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையேயான நாடுகளைச் சூரிய ஆற்றலுக்கான ஒத்துழைப்பில் ஒன்றிணைப்பதற்காகும்.

) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.

) கூற்று சரி. காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.

) கூற்று தவறு; காரணம் சரி

) கூற்று, காரணம் இரண்டும் தவறு

3. பின்வரும் கூற்றுகளில் எது/ எவை உண்மையானவை?

1. இந்திய பண்பாட்டு உறவுகளுக்கான குழு, டாக்கா பல்கலைக்கழகத்தில் தாகூர் இருக்கைஏற்படுத்த வழிவகை செய்துள்ளது.

2. மேற்கத்திய நாடுகளுக்கான இந்தியாவின் நுழைவு வாயில் மியான்மர் ஆகும்.

3. நேபாளம், பூடான் ஆகியவை நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளாகும்.

4. இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தின் ஒரு பங்குதாரர் நாடு இலங்கையாகும்.

) 1, 2 மற்றும் 3       ) 2, 3 மற்றும் 4    ) 1, 3 மற்றும் 4    ) 1, 2 மற்றும் 4


4. கூற்று: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒபெக்(OPEC) ஆர்வம் காட்டியுள்ளது.

காரணம்: தேவையான எண்ணெய் வளங்கள் இல்லாததால் இந்தியா விவசாயம் மற்றும் தொழில்துறை உற்பத்தியில் கவனம் செலுத்துகிறது.

) கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது   ) கூற்று தவறு. காரணம் சரி

) கூற்று காரணம் இரண்டும் சரி                 ) கூற்று காரணம் இரண்டும் தவறு

IV பொருத்துக

1. பிராண்டிக்ஸ்      - வியன்னா(Brandix)

2. தகவல்தொடர்பு    - ஜப்பான் இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் (COMCASA)

3. ஷிங்கன்சென்      - ஷாங்காய்

4. பிரிக்ஸ் (BRICS)    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

5. ஒபெக்(OPEC)       - விசாகப்பட்டினத்தின் ஆடை நகரம்

V சுருக்கமாக விடையளிக்கவும்

1. இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைஎழுதுக.

2. பொர்த்திறம் சார்ந்த பங்களிப்பு ஒப்பந்தம் (SPA) பற்றிய சிறு குறிப்பு வரைக.

3. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

4. கலடன் பன்முக மாதிரி போக்குவரத்துத் திட்டம் பற்றி நீவிர் அறிவது யாது?

5. சாபஹார் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

6. இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் ஐந்து உலகளாவிய குழுக்களைப் பட்டியலிடுக.

7. ஜப்பான் இந்தியா உற்பத்தி நிறுவனத்தின் (JIM) பங்கு என்ன?

VI விரிவாக விடையளிக்கவும்

1. இந்தியா மற்றும் சர்வதேச அமைப்புகள் குறித்தும் இந்தியா உறுப்பினராக உள்ள ஏதேனும் மூன்று உலகளாவிய குழுக்கள் பற்றிய சிறப்பு அம்சங்கள் குறித்தும் எழுதுக.

2. பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு உருவானதற்கான காரணம் மற்றும் அதன் நோக்கங்களை எழுதுக.

3. பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் அமைப்பின் (OPEC) திட்டம் குறித்தும் அவ்வமைப்பு எவ்வாறு பிற நாடுகளுக்கு உதவி செய்கின்றன என்பது குறித்தும் குறிப்பிடுக.

 

பொருளியல்

அலகு – 1   மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்

I. ரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. GNP யின் சமம்

) பணவீக்கத்திற்காக சரி செய்யப்பட்ட NNP  

) பணவீக்கத்திற்காக சரி செய்யப்பட்ட GDP

) GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

) NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்

2. நாட்டு வருமானம் அளவிடுவது

) பணத்தின் மொத்த மதிப்பு          ) உற்பத்தியாளர் பண்டத்தின் மொத்த மதிப்பு

) நுகர்வு பண்டத்தின் மொத்த மதிப்பு  ) பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்தமதிப்பு

3. முதன்மைதுறை இதனை உள்ளடக்கியது

) வேளாண்மை       ) தானியங்கிகள்   ) வர்த்தகம் ) வங்கி

4. ________ முறையில் ஒவ்வொரு இடைநிலை பண்டத்தின் மதிப்பை கூட்டும்போது, இறுதி பண்டத்தின் மதிப்பை கணக்கிடலாம்.

) செலவு முறை      ) மதிப்பு கூட்டு முறை

) வருமானமுறை     ) நாட்டு வருமானம்

5. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?

) வேளாண் துறை     ) தொழில்துறை

) பணிகள் துறை             ) மேற்கண்ட எதுவுமில்லை

6. பணிகள் துறையில் நடப்பு விலையில் மொத்த மதிப்பு கூடுதல் 2018 – 19 இல் ________ லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

) 91.06        ) 92.26      ) 80.07      ) 98.29

7. வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ________ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.

) 1 வது       ) 3 வது     ) 4 வது    ) 2வது

8. இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் ________ ஆண்டுகள் ஆகும்.

) 65    ) 60        ) 70         ) 55

9. கீழ்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?

) நீர்பாசன கொள்கை         ) இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை

) நில சீர்திருத்தக் கொள்கை ) கூலிக் கொள்கை

10. இந்திய பொருளாதாரம் என்பது

) வளர்ந்து வரும் பொருளாதாரம்    ) தோன்றும் பொருளாதாரம்

) இணை பொருளாதாரம்            ) அனைத்தும் சரி

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. இந்தியாவில்________ துறை முதன்மை துறையாகும்.

2. ________ மக்களின் வாழ்க்கைத்தரத்தை உணர்த்தும் ஒரு கருவியாகும்

3. இரண்டாம் துறையை வேறுவிதமான________ துறை என அழைக்கலாம்.

III பொருத்துக

1.   மின்சாரம் / எரிவாயு மற்றும் நீர்  -  நாட்டு வருமானம் / மக்கள் தொகை

2.   விலைக் கொள்கை               -  மொத்த உள்நாட்டு உற்பத்தி

3.   GST                             -  தொழில்துறை

4.   தலா வருமானம்                 - வேளாண்மை

5.      C+I+G+(X-M)                    - பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி

IV கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. நாட்டு வருமானம் - வரையறு.

2. மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

3. GDPயின் முக்கியத்துவத்தை எழுதுக

4. தனி நபர் வருமானம் என்றால் என்ன?

5. மதிப்பு கூட்டுமுறையை எடுத்துக்காட்டுடன் வரையறு

6. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளின் பெயர்களை எழுதுக.

7. சிறு குறிப்பு வரைக.

1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)      2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)

V. கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

1. நாட்டு வருமானத்தை கணக்கிடுவதற்கு தொடர்புடைய பல்வேறு கருத்துகளை விவரி.

2. GDP ஐ கணக்கிடும் முறைகள் யாவை? அவைகளை விவரி.

3. இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி.

4. பொருளாதார வளர்ச்சிக்கும் முன்னேறத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.

5. கீழ்காணும் பொருளாதார கொள்கைகளை விவரி.

1). வேளாண் கொள்கை   2). தொழிற் கொள்கை       3). புதிய பொருளாதார கொள்கை

 

அலகு - 2 உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

I சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. உலக வர்த்தக அமைப்பின்(WTO) தலைவர் யார்?

) அமைச்சரவை   ) இயக்குநர்   ) துணை தலைமை இயக்குநர்  ) இவற்றில் எதுவுமில்லை

2. இந்தியாவில் காலனியாதிக்க வருகை

) ோர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு  

) டச்சு, ஆங்கிலேயர், டேனிஷ், பிரெஞ்சு

) ோர்ச்சுகீசியர், டேனிஷ், டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர்

) டேனிஷ், போர்ச்சுகீசியர், பிரெஞ்சு, ஆங்கிலேயர், டச்சு

3. காட்(GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்

) டோக்கியோ ) உருகுவே        ) டார்குவே ) ஜெனீவா

4. இந்தியா எப்போது டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது?

) 1984   ) 1976      ) 1950       ) 1994

5. 1632 இல் ஆங்கிலேயர்களுக்குகோல்டன் ஃபயர்மான்வழங்கியவர் யார்?

) ஜஹாங்கீர்          ) சுல்தான் ) அக்பர்     ) ஔரங்கசீப்

6. வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை(FIP) அறிவித்த ஆண்டு

) ஜூன் 1991   ) ஜூலை 1991   ) ஜூலை-ஆகஸ்ட் 1991   ) ஆகஸ்ட் 1991

7. இந்திய அரசாங்கத்தால் 1991 இல் ஐ அறிமுகப்படுத்தப்பட்டது.

) உலகமயமாக்கல்                  ) உலகவர்த்தஅமைப்பு

) புதிய பொருளாதார கொள்கை      ) இவற்றில் எதுவுமில்லை

II கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. ஒரு நல்ல பொருளாதாரம் ...............ன் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

2. உலகவர்த்தக அமைப்பு ஒப்பந்தம் ..................ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது.

3. .........................ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

III பொருத்துக

1.   இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் 1947

2.   பன்னாட்டு நிதி நிறுவனம் (MNC)     - அயல்நாட்டு வாணிபத்தை செயல்படுத்தல்

3.   சுங்கவரி, வாணிபம் குறித்த

பொது உடன்பாடு (GATT)             - உற்பத்தி செலவு குறைத்தல்

4.   8வது உருகுவே சுற்று              – இன்ஃபோசிஸ்

5.   உலகவர்த்தகஅமைப்பு (WTO)               - 1986

IV கீழ்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. உலகமயமாக்கல் என்றால் என்ன?

2. உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக.

3. பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி சிறுகுறிப்பு எழுதுக.

4. உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக?

5. நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?

6. “நியாயமான வர்த்தக நடைமுறைகளின்ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.

7. “உலகவர்த்தக அமைப்பின்முக்கிய நோக்கம் யாது?

8. உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.

V கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1. பன்னாட்டு நிறுவனங்களின்(MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.

2. ‘உலகவர்த்தக அமைப்புபற்றி எழுதுக.

3. உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.

 

அலகு - 3    உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து


I சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. .................என்பது விரும்பிய அளவுகளில் உணவு இருப்பு இருப்பது, உள்நாட்டு உற்பத்தியில் இருப்பில் மாற்றங்கள் மற்றும் இறக்குமதி பற்றிய ஒரு செயல்பாடாகும்.

) உணவு கிடைத்தல்   ) உணவுக்கான அணுகல்  

) உணவின் முழு ஈடுபாடு  ) இவை ஏதுமில்லை

2. தாங்கியிருப்பு என்பது உணவுப் பங்கு தானியங்கள் அதாவது கோதுமை மற்றும் அரிசியை .................. மூலம் அரசாங்கம் கொள்முதல் செய்கிறது.

) FCI    ) நுகர்வோர் கூட்டுறவு    ) ICICI       ) IFCI

3. எது சரியானது?

i) HYV – அதிக விளைச்சல் தரும் வகைகள்             ii) MSP – குறைந்தபட்சஆதரவு விலை

iii) PDS – பொது விநியோக முறை                      iv) FCI – இந்திய உணவுக் கழகம்

) i மற்றும் ii சரியானவை            ) iii மற்றும் iv சரியானவை      

) ii மற்றும் iii சரியானவை           ) மேற்கூறிய அனைத்தும் சரி.

4. நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச்சட்டம் 480 ஐ கொண்டு வந்த நாடு....................

) அமெரிக்கா   ) இந்தியா   ) சிங்கப்பூர் ) இங்கிலாந்து

5. ....................இந்தியாவில் தோன்றியதால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெறவழி வகுத்தது.

) நீலப் புரட்சி  ) வெள்ளைப் புரட்சி  ) பசுமைப் புரட்சி  ) சாம்பல் புரட்சி

6. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்ட ஒரே மாநிலம்.................

) கேரளா  ) ஆந்திரபிரதேசம்  ) தமிழ்நாடு  ) கர்நாடகா

7. .............என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல்முறையாகும்.

) ஆரோக்கியம்  ) ஊட்டச்சத்து   ) சுகாதாரம்  ) பாதுகாப்பு

II கோடிட்டஇடங்களை நிரப்புக

1. ....................ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறியீடாகும்.

2. ..................ஆம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.

3. பொதுவான மக்களுக்கு பொறுப்பான விலையில் தரமான பொருள்களை வழங்குவதில் .................முக்கியப் பங்கு வகிக்கிறது.

III பின்வருவனவற்றைப் பொருத்துக

1. நுகர்வோர் கூட்டுறவு                   - மானிய விகிதங்கள்

2. பொது விநியோக முறை                - 2013

3. UNDP                                  - குறைந்த ஏழ்மை உள்ள பகுதி

4. தேசிய உணவுப் பாதுகாப்புச்சட்டம்       - தரமான பொருள்களை வழங்குதல்

5. கேரளா                                - ஐக்கிய நாடுகள் சபை வளர்ச்சித் திட்டம்

IV. சரியான கூற்றைதேர்வு செய்க.

1. கூற்று : விலை குறைந்தால் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது, மற்றும் இது நேர்மாறானது.

2. காரணம் : பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை அதிகரிப்பதால் வாங்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

) கூற்று சரியானது, காரணம் தவறானது

) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது

) கூற்று சரியானது, ஆனால் காரணம் சரியான விளக்கம் அல்ல

) கூற்று சரியானது, காரணம் என்பது கூற்றின் சரியான விளக்கம்

V. குறுகிய விடையளிக்கவும்

1. FAO வின் படி உணவு பாதுகாப்பை வரையறு.

2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் அடிப்படைக் கூறுகள் யாவை? .

3. பசுமைபுரட்சியில் FCIயின் பங்கு என்ன?

4. பசுமைபுரட்சியின் விளைவுகள் என்ன?

5. தமிழ்நாட்டிலுள்ள சில ஊட்டச்சத்து திட்டங்களின் பெயரை எழுதுக.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1. பசுமைப் புரட்சி ஏன் தோன்றியது என்பதைப் பற்றி விவரி.

2. குறைந்த பட்ச ஆதரவு விலையை விளக்குக.

3. பொது விநியோக முறையை விவரிக்கவும்.

4. வாங்கும் திறனைப் பாதிக்கும் காரணிகள் யாவை? அவற்றை விளக்குக.

5. புதிய வேளாண் கொள்கையின்  முக்கிய குறிக்கோள்கள் யாவை.

 

அலகு – 4   அரசாங்கமும் வரிகளும்

I சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்

) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி         ) மைய, மாநில மற்றும் கிராம

) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து       ) ஏதுமில்லை

2. இந்தியாவில் உள்ள வரிகள்

) நேர்முக வரிகள்  ) மறைமுக வரிகள்  ) இரண்டும் () மற்றும் ()      ) ஏதுமில்லை

3. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?

) பாதுகாப்பு                         ) வெளிநாட்டுக் கொள்கை

) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்   ) மேற்கூறிய அனைத்தும்

4. இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

) சேவைவரி   ) கலால் வரி   ) விற்பனைவரி   ) மத்திய விற்பனைவரி

5. ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

) மதிப்புக் கூட்டு வரி (VAT)                        ) வருமான வரி

) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி          ) விற்பனைவரி

6. இந்தியாவில் வருமான வரிச்சட்டம் முதன் முதலில் ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

) 1860    ) 1870    ) 1880    ) 1850

7. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ..................வரி விதிக்கப்படுகிறது.

) வருமான வரி        ) சொத்து வரி      ) நிறுவன வரி    ) கலால் வரி

8. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?

) பண்டங்களின் பற்றாக்குறை       ) அதிகவரி விகிதம்

) கடத்தல்                           ) மேற்கூறிய அனைத்தும்

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. .......................மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.

2. “வரிஎன்ற வார்த்தை ...................சொல்லிலிருந்து பெறப்பட்டது.

3. ........................வரியில் வரியின் சுமையைமற்றவர்களுக்கு மாற்ற முடியாது.

4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி .................. ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

5. வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் ........................... என்று அழைக்கப்படுகிறது.

III சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்

1. GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

i) GST ‘ஒரு முனைவரி

ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

iii) இது ஜூலை1, 2017 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது.

iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

) (i) மற்றும் (ii) சரி              ) (ii), (iii) மற்றும் (iv) சரி

) (i), (iii) மற்றும் (iv) சரி    ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.

IV பொருத்துக

1. வருமான வரி     - மதிப்புக் கூட்டு வரி

2. ஆயத்தீர்வை       - ஜூலை1, 2017

3. VAT               - கடத்துதல்

4. GST               நேர்முக வரி

5. கருப்பு பணம்      மறைமுக வரி

V கீழ்க்கண்டவினாக்களுக்கு குறுகிய விடையளி

1. வரி வரையறுக்க.

2. அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

3. வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

4. பண்டங்கள் மற்றும் பணிகள் வரிசிறு குறிப்பு வரைக.

5. வளர்வீத வரி என்றால் என்ன?

6. கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

7. வரி ஏய்ப்பு என்றால் என்ன?

8. வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.

VI கீழ்க்கண்டவினாக்களுக்கு விரிவான விடையளி

1. சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.

2. GST யின் அமைப்பை எழுதுக.

3. கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.

அலகு – 5   தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

I சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக

1. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது  ..................... .

) தூத்துக்குடி   ) கோயம்புத்தூர்    ) சென்னை ) மதுரை

2. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _____.

) சேலம்        ) கோயம்புத்தூர்    ) சென்னை ) தருமபுரி

3. .................என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.

) வேளாண்மை ) தொழில்  ) இரயில்வே       ) மேற்கண்டஎதுவுமில்லை

4. திருப்பூர் ...............தொழிலுக்குப் பெயர்பெற்றது.

) தோல் பதனிடுதல்         ) பூட்டு தயாரித்தல்  

) பின்னலாடைதயாரித்தல்    ) வேளாண் பதப்படுத்துதல்

5. ............இல் ஒரு வெற்றிகரமான தொழில்துறை தொகுப்பு முற்றிலும் தமிழ்நாட்டால் உருவாக்கப்பட்டது.

) ஓசூர்         ) திண்டுக்கல்      ) கோவில்பட்டி     ) திருநெல்வேலி

II கோடிட்ட இடங்களை நிரப்புக

1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் .................. மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ...............ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

3. ......... என்பவர் புத்தாக்க சிந்தனைகள் மற்றும் வணிக செயல்முறைகளின் புத்தாக்கம் புனைபவர் ஆவார்.

III தவறான ஒன்றினை தேர்வு செய்க

1. பின்வருவனவற்றில் தோல் தொழிற்சாலைகள் இல்லாதது எது?.

) ராணிப்பேட்டை       ) தர்மபுரி   ) ஆம்பூர்    ) வாணியம்பாடி

2. பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?.

) TIDCO ) SIDCO     ) MEPG      ) SIPCOT

IV பின்வருவனவற்றைப் பொருத்துக

1. தொழில் முனைவோர்                         - ஏற்றுமதி செயலாக்க மண்டலம்

2. MEPZ                                         - கோயம்புத்தூர்

3. இந்திய ஒழுங்குமுறை தொழிற்சாலை          அமைப்பாளர்

4. TNPL                                          - அரவங்காடு

5. தென்னிந்தியாவின் மான்செஸ்டர்               கரூர்

V கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி

1. விவசாயத்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன?

3. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை?.

4. தமிழ்நாட்டில் உள்ளமூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களையும் அவற்றின் பங்கினையும் குறிப்பிடுக.

5. தற்போது தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் சிக்கல்கள் யாவை?.

6. தொழில் முனைவோர் என்பவர் யாவர்?

7. தொழில்முனைவு என்றால் என்ன?

VI கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1.வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கிய பண்புகள் யாவை?

2. தமிழ்நாட்டில் நெசவுத் தொழில் தொகுப்பு பற்றி எழுதுக?

3. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

4. தொழில்முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்