Ad Code

Ticker

6/recent/ticker-posts

PSTM - சில குறிப்புகள்|How to approve PSTM Applications Online HM Login

 

1) பள்ளி, கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்கள் (PSTM - Person Studied in Tamil Medium -சான்றிதழ்) இனி ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும்.


2) மின்னணு சேவை மையத்தில் விண்ணப்பிக்கப்படும் மனுக்கள் பள்ளிக் கல்வி மாநிலத்திட்ட இயக்ககத்தில் இருந்து மின்னஞ்சல் மூலமாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பப்படும்.


3) பின்னர் அங்கிருந்து ஆன்லைன் மூலமாகவே தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்படும். 


4) தலைமை ஆசிரியர்கள் பள்ளிப் பதிவேடுகளைப் பார்த்து, விண்ணப்பத்தின் நம்பகத் தன்மையை சரிபார்த்த பின்னர் மின் கையொப்பம் செய்து பதிவேற்றம் செய்து சான்றிதழ் வழங்க வேண்டும்.


5) தமிழ் வழி சான்றிதழை ஆன்லைன் வாயிலாகவே மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தலைமை ஆசிரியர் கையினால் பூர்த்தி செய்து சான்றிதழை வழங்கக் கூடாது.


6) ஒரு வேளை விண்ணப்பதாரரின் விவரங்கள் தவறாக இருந்தால் அதனை ஆன்லைன் வாயிலாகவே தலைமை ஆசிரியர் நிராகரித்து விடலாம்.


7) இந்தப் பணியை பெறப்பட்ட 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


  


How to approve PSTM Applications Online HM Login 



கருத்துரையிடுக

0 கருத்துகள்