ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சி இம்மாதம் தொடங்குகிறது. இதற்காக 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், மதுரை, கோயம்புத்தூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் பயிற்சி நடைபெறும். பயிற்சி மொத்தம் 6 நாட்கள். முதல் 4 நாட்கள் பயிற்சி மீதம் இருநாட்கள் களப்பயணமுமாக பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தினமும் 4 பாடவேளைகள் . தொல்லியல் ஓர் அறிமுகம், பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம், நடுகற்கள், தமிழி கல்வெட்டு, வட்டெழுத்து கல்வெட்டு, கிரந்த கல்வெட்டு, பாண்டியர், பல்லவர் சிற்பம், கட்டடக்கலை போன்றவை பயிற்சியில் இடம் பெறும்.
0 கருத்துகள்