Ad Code

Ticker

6/recent/ticker-posts

பழங்கால கல்பதுக்கை கண்டுபிடிப்பு

 பழங்கால கல்பதுக்கை கண்டுபிடிப்பு

திருக்கோவிலூர் அக்-17 திருக்கோவலரை அடுத்த ஆதிச்சனூர் கிராமத்தில் திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உரியன் தலைமையில் தொல்லியல்துறை காப்பாட்சியர் அ.ரஹீத்கான் இலக்கிய பெரும் மன்ற மாவட்ட தலைவர் மு.கலியபெருமாள் தென்பெண்ணை நதிக்கரை நாகரிக ஆய்வாளர் தேசப்பிரியன், தொல்லியல் ஆர்வலர்கள் வி நல்லதம்பி, சிலம்பரசன் ராஜேஷ் உள்ளிட்ட வரலாற்றுத் தேடல் குழுவினர்கள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது அங்குள்ள செந்தில் என்பவர் விளைநிலையத்தில் ஒரு கல் பதுக்கையை கண்டுபிடித்தனர்.

பழங்காலத்தில் இறந்தவர்களை புதைக்க கல்பதுக்கை, கல்திட்டை, கல்வட்டம் ஈமப்பேழை, கற்குவை முதுமக்கள் தாழி போன்ற முறையிலை பயன்படுத்தினர் அதேபோன்ற கல்பதுக்கை தான் இதுவாகும்.

 பொதுவாக பெருங்கற்கால நாகரிகத்தில் இனக்குழு மரபில் ஒருவர் இறந்த பின்பும் அவரது ஆவியானது அவர் வாழ்ந்த இடத்தில் தங்கும் என நம்பினர். அவ்வாறு இறந்தவர் ஆவி வந்து தங்குவதற்கு ஏதுவாக இவ்வகை எடுத்துளை ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது. எனவே இவ்வகை ஈமச் சின்னங்களில் படையல் வைத்து வழிபடும் முறை தொன்று தொட்டு வருகிறது இந்த கல்பதுக்கை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கும் என்று ஆய்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்