சமூக அறிவியல் விடைகள்
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1)ஆ)தாஜ்-உல்-மா-அசிர்
2)ஈ) தஞ்சாவூர்
3)ஆ) ரிக்டர் அளவுகோல்
4)ஆ) கூற்று சரி, காரணம் தவறு
5)ஆ)18
6)இ)பல கட்சி முறை
7)இ) நிலம், உழைப்பு
II.கோடிட்ட இடங்களை நிரப்புக
8)712
9)மவுனாலோ
10)மியாமி கடற்கரை
11) அரசியல்
12) நிலம்
III)பொருத்துக
13) ராஜஸ்தான்
14) பாண்டியர்களின் தலைநகர்
15)சிலிகா மற்றும் மெக்னீசியம்
16) மக்களின் ஆட்சி
17) ஆடம் ஸ்மித்
IV சரியா?தவறா?
18) தவறு
19)சரி
20)தவறு
பொருந்தாததை வட்டமிடுக
21)சிலிக்கா
22) கங்கை
V கீழ்காணும் வினாக்களுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்
23)வரலாற்றை அறிந்துகொள்வதற்கான இருவகைச் சான்றுகளைக் கூறுக.
- முதல் நிலைச் சான்றுகள்
- இரண்டாம் நிலைச் சான்றுகள்
24) சோழர்கள் காலத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் யாவை?
சந்தனக்கட்டை, கருங்காலிக்கட்டை, சுவையூட்டும் பொருட்கள், விலையுயர்ந்த ஆபரணக் கற்கள், மிளகு, எண்ணெய், நெல், தானியங்கள், உப்பு ஆகியவை ஏற்றுமதி செய்யப்பட்டன.
25) ஆக்ரா நகரை நிர்மாணித்தவர் யார்?
சிக்கந்தர் லோடி
26)உருவத்தின் அடிப்படையில் மூன்று எரிமலைகளின் பெயர்களை எழுதுக.
- கேடய எரிமலை
- தழல் கூம்பு எரிமலை
- பல்சிட்டக் கூம்பு எரிமலை
27)குதிரைக் குளம்பு ஏரி எவ்வாறு தோன்றுகிறது?
ஆற்று வளைவுகள் இருபக்கங்களிலும் தொடர்ந்து அரித்தல் மற்றும் படிதல் ஏற்படுவதால், ஆற்று வளைவின் கழுத்துப் பகுதிகள் குறைந்து வருகின்றன. நாளடைவில், ஆற்று வளைவு ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுக்கின்றது. இதுவே குதிரைக் குளம்பு ஏரி எனப்படுகிறது.
28) இனங்களின் வகைகள் யாவை?
- காக்கசாய்டு (ஐரோப்பியர்கள்)
- நீக்ராய்டு (ஆப்பிரிக்கர்கள்)
- மங்கோலாய்டு (ஆசியர்கள்)
- ஆஸ்ட்ரலாய்டு (ஆஸ்திரேலியர்கள்)
29) சமத்துவம் என்றால் என்ன?
சமத்துவம் என்பது ஒரு தனி மனிதன் அல்லது ஒரு குழு வேறுபாடு காட்டி நடத்தப்படாமல் இருத்தல் அல்லது சிறப்பாக பாதுகாக்கப்பட்ட இயல்புகளான இனம், பால், இயலாமை, சமயம் அல்லது நம்பிக்கை, பாலியல் சார்ந்த போக்கு வயது அடிப்படையில் குறைவாக நடத்தப்படாமல் இருத்தல் முதலியவற்றை உறுதி செய்தலாகும்.
30) குடிமை சமத்துவம் என்றால் என்ன?
அனைத்து குடிமக்களும் குடியியல் உரிமைகளை அடைதல் வேண்டும் என்பதே குடிமை சமத்துவம் ஆகும்.
31) ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் எவை?
எந்த ஒரு அரசியல் கட்சியும் பின்வரும் மூன்று கூறுகளைக் கொண்டிருக்கும்.
- தலைவர்
- செயல் உறுப்பினர்கள்
- தொண்டர்
32) பயன்பாடு என்பது என்ன?
பயன்பாடு என்பது, நமது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்வதாகும
33) உற்பத்திக் காரணிகளைக் கூறுக.
முதல்நிலை உற்பத்திக் காரணிகள்
- முதல்நிலை உற்பத்திக்காரணிகளில் நிலமும் உழைப்பும் அடங்கும்.
மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக்காரணிகள்
- மூலப்பொருள்களிலிருந்து பெறப்பட்ட உற்பத்திக் காரணிகளில் முதலீடும், அமைப்பும் அடங்கும்.
VI வேறுபடுத்துக
34)செயல் எரிமலை மற்றும் செயலற்ற எரிமலை
செயல் எரிமலை
- அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள் செயல்படும் எரிமலைகள் என்றழைக்கப்படுகின்றன.
- பசிபிக் கடற்கரையோரமாக பெரும்பாலான எரிமலைகள் அமைந்திருப்பதால் இப்பகுதி பசுபிக் நெருப்பு வளையம் எனப்படுகிறது.
- சராசரியாக உலகெங்கும் 600 செயல்படும் எரிமலைகள் உள்ளன.
- மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள ஸ்ட்ராம்போலி, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள செயிண்ட் ஹெலன், பிலிப்பைன்ஸ் தீவிலுள்ள பினாடுபோ, மவுனாலோ (3,255 மீட்டர்) உலகின் மிகப் பெரிய செயல்படும் எரிமலையாகும்.
செயலற்ற எரிமலை
- வருடங்களாக எரிமலைக் குழம்பை வெளியேற்றுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளிப்படுத்தாமல், எப்போது வேண்டுமானாலும் செயல்படக்கூடிய எரிமலைகள் செயல்படாத எரிமலைகள் என அழைக்கப்படுகிறது.
- இதை உறங்கும் எரிமலை என்றும் அழைப்பர்.
- இத்தாலியில், வெசுவியஸ், ஜப்பானில் பியூஜியாமா, இந்தோனேஷியாவில் சிரகோட்டா ஆகியவை இவ்வகைக்கு பிரசித்தி பெற்ற எடுத்துக் காட்டுகளாகும்.
35)கிளையாறு மற்றும் துணையாறு
துணையாறு
ஒரு முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு.
கிளையாறு
ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு
VII கீழ்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி
36)
37)
38)நிலநடுக்கத்தின் விளைவுகள் பற்றி எழுதுக.
- நிலநடுக்கம் புவி பரப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
- நிலநடுக்கங்கள், மலைப்பிரதேசங்களில் நிலச் சரிவுகளை ஏற்படுத்துகின்றன. கட்டிடங்கள் இடிந்து விழுவது நிலநடுக்கத்தின் முக்கிய விளைவாகும்.
- மண்ணாலும், செங்கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் இடிந்து நொறுங்கி மரணக்குழிகளாக மாறுகின்றன.
- நிலத்தடிநீர் அமைப்பும் நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைகிறது.
39) . காற்றின் செயல்களால் ஏற்படும் நிலத்தோற்றங்களை விளக்குக.
காளான் பாறைகள்
காளான் வடிவ பாறைகளை பாலைவனப் பகுதிகளில் நம்மால் காணமுடியும். இவை காளான் பாறைகள் எனப்படுகின்றன.
தனிக்குன்றுகள்
- ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs) என்று அழைக்கப்படுகிறது.
- (எ.கா.) தென் அமெரிக்காவில் கலஹாரி பாலைவனத்தில் காணப்படும் காற்றரிப்புத் தனிக்குன்றுகள்
மணல் குன்றுகள்
- காற்று வீசும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது. காற்றின் வீசுவது நிற்கும் போது மணலானது உயரம் குறைவான குன்றுகள் போன்று படியவைக்கின்றது. இப்படிவுகள் மணல் குன்றுகள் என அழைக்கப்படுகிறது.
- பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள் பிறைவடிவ மணல் குன்றுகள் எனப்படுகின்றன.
வண்டல் படிவுகள்
- மணல் துகள்கள் மிக லேசாகவும் மற்றும் எடை குறைவாகவும் இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்தி செல்கின்றது. இவ்வாறு கடத்தப்பட்ட மணல் ஒரு பெரும் பரப்பில் படிவதை காற்றடி வண்டல் படிவுகள் (Loess) எனப்படுகிறது.
- காற்றடி வண்டல் படிவுகள் சீனாவில் அதிகமாக காணப்படுகின்றன.
40) அரசியல் சமத்துவம் என்றால் என்ன?
இந்தியா உள்ளிட்ட அனைத்து மக்களாட்சி நாடுகளும் அவற்றின் குடிமக்களுக்கு அரசியல் உரிமைகளை உறுதியளிக்கின்றன.
அவை பின்வருமாறு:
- வாக்களிக்கும் உரிமை
- பொது அலுவலகத்தில் பங்குகொள்ளும் உரிமை
- அரசை விமர்சனம் செய்யும் உரிமை
- குடிமக்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் தீவிரமாக பங்கெடுப்பதற்கு சமமான
வாய்ப்பினை பெற்றிருத்தல் வேண்டும் - இந்த உரிமைகள் அனைவருக்கும் வாக்குரிமை என்பதன் அடிப்படையில் மக்களுக்கு கிடைக்கின்றது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது.
- 1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலிலேயே இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் 1971 ஆம் ஆண்டில் தான்பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.
- இந்தியாவில் 25 வயது பூர்த்தி அடைந்த எவரும் தேர்தலில் போட்டியிடலாம். அரசை விமர்சிக்கலாம் என்ற உரிமை ஒரு முக்கியமான உரிமை என்பதோடு மக்கள் தங்களது மாறுபட்ட கருத்துக்களை பல்வேறு வகையிலும் தெரிவிக்கலாம்.
- நாட்டின் பிரதமரின் வாக்கின் மதிப்பும் ஒரு சாதாரண மனிதனின் வாக்கின் மதிப்பும் பொதுத் தேர்தலில் ஒன்றே என்பது அரசியல் சமத்துவத்தைக் குறிக்கிறது.
41)மூலதனத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.
- மூலதனம் செயலற்ற ஓர் உற்பத்திக் காரணி
- மனித முயற்சியால் உருவாக்கப்படுகிறது
- இது உற்பத்தியில் தவிர்க்க முடியாத காரணியல்ல. இது இன்றியும் உற்பத்தி நடைபெறும்
- மூலதனம் அதிகம் இயங்கும் தன்மையுடையது
- இதன் அளிப்பு நெகிழுந்தன்மையுடையது
- மூலதனம் ஆக்கமுடையது
- மூலதனம் பல ஆண்டுகள் நீடிக்கும்
- மூலதனத்தை ஈடுபடுத்துவதன் நோக்கம், எதிர்காலத்தில் வருமானம் பெற வேண்டும் என்பதேயாகும்.
VIII இந்திய வரைபடத்தில் குறிக்கவும்
0 கருத்துகள்