ஓர் அழகிய மாலை நேரம் ஒரு அழகிய மாலை நேரம் மனம் பாடிடும் ஆசையில் கானம் விழி திரும்பிடும் திசையினில் தேடல் கனம் தாேன்றிடுதே புதுப்பாடல் கணவிலும் நினைவிலும் நீயே கதிர் விரித்திடும் கதிரவத் தீயே தினம் பார்க்கிறேன் கானல் நீரே உயிர்களும் சேர்ந்திட வருமா மன ஏக்கமும் விரைவினில் அருமா காதல் கனிந்த பின் இதழைத் தொடுமா சின்னச் சின்ன ஆசை வந்து கண்ணுக்குள்ளே நிக்குதடி மேற்கு மலை முட்டி வரும் மழை போல துடிக்குதடி
மாலை நேரத்து மதுரம் மாலை நேர மலர்வனம் தரும் சுகந்தத்தின் இனிமையை உணர நாங்களும் தேனீக்களாக மாறி பறந்தோம் ! மாலையின் சூரியன் தரும் ஒளி அனைத்து மலர்கள் மீதும் தங்க வண்ணம் பூச ! இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் ரீங்காரமிட ! மாலை வேளை கொஞ்சல்களை புறாக்கள் அரங்கேற்ற ! தேனீக்களான நாங்கள் மலரின் மதுரத்தை அள்ளி பருக நினைத்து ஒருவரைஒருவர் பார்வையால் பருகிக்கொண்டோம் எங்கள் மாலை நேரத்து மதுரமே !
மாலை நேரத்து மதுரம் மாலை நேர மலர்வனம் தரும் சுகந்தத்தின் இனிமையை உணர நாங்களும் தேனீக்களாக மாறி பறந்தோம் ! மாலையின் சூரியன் தரும் ஒளி அனைத்து மலர்கள் மீதும் தங்க வண்ணம் பூச ! இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் ரீங்காரமிட ! மாலை வேளை கொஞ்சல்களை புறாக்கள் அரங்கேற்ற ! தேனீக்களான நாங்கள் மலரின் மதுரத்தை அள்ளி பருக நினைத்து ஒருவரை ஒருவர் பார்வையால் பருகிக்கொண்டோம் எங்கள் மாலை நேரத்து மதுரமே !
மாலை -- அடியில் காடுகளுக்குள்ளிருந்து தப்பி வந்தன ஓடைகள் நீருக்கடியில் போய் நினைவுகள் ஒளிந்து கொண்டன புகை வராதபடி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தன கரையில் சவுக்குத் தோப்புகளிடம் அச்சம் கொண்டிருந்தன சவுக்குத் தோப்புகள் வேறு கவனமின்றி வழி தெரியாத கூச்சல்களை நிர்வாகம் செய்துகொண்டிருந்தன
அஸ்தமனக் கதிர் ஊடுருவிப் பார்த்தபோது நீருக்கடி நினைவுகள் தம் உட்புறத்தைச் சென்றடைந்திருந்தன. எண்ணத் தொலையாத தமது பிம்பங்களை விட்டுச் சென்றிருந்தன, காடுகளிடையே ஊர்ந்து பரவிக் கதறித் திரிய
இப்போது சல்லடையில் சலித்து இறங்கிய நுட்பங்களாக பூமிக்கடியில் என் இயக்கங்கள் இயக்கங்களின் தரைமட்ட பிம்பமாக நான், காடுகள் ஊர்ந்து பரவக் களமாக மாலை -- காத்திருத்தல் விஷப்புகை மேவிய வானம் மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு மின்னி இடித்து வெறியோடு வருகின்றன அல்ல அல்ல அல்ல என்று பொழிந்து பிரவகிக்க அழித்துத் துடைத்து எக்களிக்க வருவது தெரிகிறது அடர்வனங்களின் குறுக்கும் நெடுக்குமாக ஆவேசக் காட்டாறுகள் பதறி ஓடி வாழ்வைப் பயிலும் உண்டு -- இல்லை என்பவற்றின் மீது மோதிச் சிதறி அகண்டம் ஒரு புதிய விரிவுக்குத் தயாராவது புரிகிறது
காத்திருக்கிறேன் இதுவே சமயமென எனது வருகைக்காக என் குடிசையில் வாசனை தெளித்து சுற்றிலும் செடிகொடிகளின் மயக்கம் தெளிவித்து அகாலத்திலிருந்து இந்த மாலைப்பொழுதை விடுவித்து -- காத்திருக்கிறேன் மறுபுறங்களிலிருந்து வெற்றி தோல்வியின்றித் திரும்பும் என் வருகையை நோக்கி
மாலை -- மூடிவைக்கப்பட்ட மாலை நேற்றுப் போலவே இன்றும் காற்றே வீசவில்லை தெரு இரைச்சலும் நெரிசலும் மனித சலனங்களின் அனைத்து உராய்வுகளும் மாலைக்கு வெளியேதான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன இறுக மூடிவைக்கப்பட்டிருக்கிறது இந்த மாலை நடுமுற்றத்தை வற்றச் செய்த தனிமை இனி என்பது இல்லாமல் இருக்கிறது மாலையின் உறைந்த ஸ்வரங்களின் அருகே தொடப்படாமலும் தொடாமலும் என் அம்சம் பலவும் பிரிந்துவிட்ட நான் மூடிவைக்கப்பட்டிருக்கிறோம் நாங்கள் காற்று வீசவிருக்கும் இரவின் அபத்த ஆசுவாசத்திற்கும் வெளிச்சம் ஆபாசப்படுத்தும் பகலின் அசட்டுக் கவர்ச்சிக்கும் நாங்கள் திறந்துகொடுக்கப் போவதில்லை எட்டி நெருங்க முடியாதவாறே நீங்களும் நாங்களும்
மறையும் மாலை பொழுது தென்னங்கீற்று தெம்மாங்கு பாட, கூட்டை விட்டுச் சென்ற குருவிகள் குடும்பத்தை நாடி வீடு திரும்ப, மொட்டவிழ்த்து முல்லை முகம் காட்ட, சுட்டெரித்தது போதுமென சூரியன் சுருண்டுகொள்ள வெட்கத்துடன் வெண்ணிலவு வெளியில் வர தயாராகிவிட்டது. இரவை வரவேற்க மாலை பொழுது மறைய போகிறது மறைவதற்கு முன் மறவாமல் உனக்கு மாலை வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்
மாலை நேர மேகம் .. மாலைநேர மேகமவள்
மஞ்சம்கொண்டு உறவாட
காஞ்சிவண்ண சேலையதை
காற்றிலாட விட்டாளோ
0 கருத்துகள்