Ad Code

Ticker

6/recent/ticker-posts

தேசிங்கு ராஜன் வீழ்ந்தது எப்படி

 


ஒரு ஐப்பசி மாதம் அது சங்கராபரணி என்றழைக்கப்படும் வராக நதியின் இரு கரைகளையும் அறுத்துக் கொண்டு வெள்ளம் பாய்ந்தது. ஆற்றின் மேல் கரையில் படையினருடன் நின்றிருந்த தேசிங்குராஜன் ஆற்று வெள்ளத்தையே உற்று நோக்கியிருந்தான். அவன் முகத்தில் எவ்வித பயமும் இல்லை நினைவுகள் பின்னோக்கி சென்றன.

செஞ்சியின் ராஜாவாக தன்னை அறிவித்துக் கொண்டு இதோ 10 மாதங்கள் ஆகிறது. ஆமாம் அறிவித்துக் கொண்டான் என்று தான் சொல்ல வேண்டும் தந்தை. புண்டேல்காண்ட் அரசருக்கு தளபதியாக இருந்தவர். மராத்தியர்களிடம்  இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்களிடம் வீழ்ந்தது செஞ்சி. அப்போது சாரூப் சிங்கை செஞ்சியின் கில்லேதாராக நியமித்தார் பேரரசர் அவ்வுரங்கசீப்.


ழுதாவூர், திண்டிவனம், திருவாமாத்தூர், அசப்பூர், திருக்கோவிலூர், வேட்டவலம் ஆகிய பகுதிகள் செஞ்சியில் வசம் இருந்தன.தேவனாம்பட்டினத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு தொல்லை கொடுக்கும் . அளவிற்கும், அவர்களுடன் போர் செய்யும் அளவிற்கும் துணிச்சல் காரராக  இருந்தார் சாரூப்சிங்.ஆனாலும்  நாட்டின் கஜானா மிகவும் மோசமான நிலையில் இருந்தது. பேரரசுக்கு ரூபாய் 70லட்சம் வரை பாக்கி வேறு இதனால் சொந்த நாட்டிலேயே கொள்ளை அடிக்கும் உரிமையை தன் வீரர்களுக்கு வழங்கியிருந்தாராம் சாருப்சிங்.


ந்த நிலையில் 1714 ஜனவரியில் முதுமை காரணமாக சாருக்சிங் இறந்து விட, புண்டேல்காண்டில் இருந்து செஞ்சி வந்த தேசிங்கு ராஜன் செஞ்சிக்கு ராஜாவாக தன்னை அறிவித்துக் கொண்டான். நியாயமாக போரரசர் அல்லது ஆற்காடு நவாப் தான் இதற்கான உத்தரவு கொடுக்க வேண்டும். அதைப் பற்றியெல்லாம் இந்த 21 வயது இளவரசனுக்கு கவலை இல்லை.



தனால் நவாப்புடன் ஏற்பட்ட உரசல்கள் கடன் தொகை எழுவது லட்சத்துடன் சேர்ந்து பெரும் மோதலானது.  போதாக்குறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரி பாக்கி வசூலிக்க வந்த நவாப்பின் அதிகாரி தோடர்மாலை அவமானப்படுத்தியிருந்தான் தேசிங்கு அவ்வளவுதான் செஞ்சி அரசுக்கு எதிராக போரை அறிவித்த ஆற்காட்டு நவாப். இதோ படை திரட்டி வந்துவிட்டான். வராக நதியின் கீழ்க்கரையில் முப்பதாயிரம் படைவீரர்களுடன் காத்து நிற்கிறான் ஆற்காட்டு நவாப் சாதத்துல்லாகான்.


'தேசிங் என்ன யோசனை?' மகபத்கானின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் தேசிங்கு ராஜன். "ஒன்றுமில்லை தண்ணீர் எப்போது வடியும் என யோசித்துக் கொண்டிருந்தேன்" மகபத்கானுக்குப்  பதில் சொன்னான் தேசிங்கு.

கபத்கான் செஞ்சி அரசுக்கு உட்பட்ட வழுதாவூர் பகுதியின் கில்லேதாரி சயீத் கானின் மகன். இவனது தந்தையும் தேசிங்கின் தந்தையும் மிகவும் நெருக்கமானவர்கள். இப்பொழுது அரசருக்கு பிரச்சினை என்றவுடன் சில நூறு வீரர்கள் இரண்டு தளபதிகள் ஆகியோருடன் தன் மகனை அனுப்பி வைத்திருந்தார் சயீத்கான்.


ப்போது, தேசிங்குடன் படையணியில் இருப்பவர்கள் வழுதாவூரில்  இருந்து வந்தவர்கள் மற்றும் செஞ்சி கோட்டைக்குள் இருந்து அவனுடன் வந்த அவனது உறவினர் ராஜபுத்திர வீரர்கள் உள்ளிட்ட சில நூறு பேர்கள் அவ்வளவுதான். போருக்கு புறப்படும் போதே கோட்டையில் இருந்த அவனது குடும்பத்தினரும் முக்கிய அதிகாரிகளும் தன் வலியும் மாற்றான் வலியும் குறித்து அவனுக்கு வலியுறுத்தினர். எதையும் தேசிங்குக் காதில் வாங்கவில்லை.எதிரியை அவன் இடத்திற்கே சென்று சந்திக்க வேண்டும் புறப்பட்டு விட்டான்.


ற்றில் வெள்ளம் வடிவதாக தெரியவில்லை. 'இனியும் தாமதிக்க வேண்டாம் புறப்படுங்கள்' படையினருக்கு கட்டளையிட்டான் தேசிங்கு. இதனை ஏற்றுக் கொண்ட மகமபத்காணும் இன்னும் நூறு பேரும் குதிரைகளுடன் ஆற்றில் இறங்கினர். ஆழம் அதிகம் இல்லை தண்ணீர் தான் வேகம் இதற்கே பயந்து இன்னும் பல வீரர்கள் கரையிலே நின்று விட்டனர்.காட்டாற்று வெள்ளத்தை கட்டறுத்து பாய்ந்த தேசிங்கு ராஜனின் குதிரை கடலியில் கால்கொண்டிருந்த ஆற்காட்டு படைகளுக்குள் புகுந்தது. அந்த முப்பதாயிரம் பேர் இந்த 100 பேர்களை சூழ்ந்து கொண்டனர் எப்படியாக இருந்தாலும் தேசிங்கு ராஜனை உயிருடன் பிடிக்க வேண்டும் என்பதுதான் ஆற்காட்டு நவாப்பின் ஆணை.



போர்க்களத்தில் தன் கையில் இருந்த வாளால் எதிரிகளைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தான் தேசிங்கு. இதோ அருகில் வாலை சுழற்றிக் கொண்டிருந்த மகபத்கான் வெட்டுப்பட்டு கீழே சரிந்து விழுகின்றான். இதனால் உள்ளம் கலங்கினாலும் தேசிங்கின் வேகம் குறையவில்லை. நவாப்பின் படைத்தளபதி தௌலத்கானைக் குத்திக் கொன்றான் தேசிங்கு. பழிக்கு பழி இந்த நேரத்தில் தேசிங்கு குதிரையின் முன்னங்கால்களை பாளையக்கார வீரன் ஒருவன் வெட்டிவிட  அவனையும் குத்திக்கொள்கிறான் தேசிங்கு. அப்போதுதான் "அவனை சுட்டுத் தள்ளுங்கள்" என பாளையக்காரர் யச்சம நாயக்கரிடமிருந்து உத்தரவு வருகிறது. அடுத்த சில நிமிடங்களில் சுட்டுக் கொள்ளப்படுகிறான் தேசிங்கு ராஜன்.


இது நடந்தது ஜெய ஆண்டு ஐப்பசி மாதம் இரண்டாம் நாள் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம் கழித்து. அடுத்த சில மணி நேரங்களில் தேசிங்கின் உயிரற்ற உடலுடன் செஞ்சி கோட்டைக்குள் நுழைந்தார் ஆற்காடு நவாப். ஆராயாமல் எடுக்கப்பட்ட அவசர முடிவுகளே தேசிங்கு ராஜனின் தோல்விக்கு காரணங்களாகும் ஆனாலும் கதைப்பாடல்களின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறான். தேசிங்கு ராஜன் எப்படி?


வாப் உட்பட எதிரிகளே வியந்து போற்றிய அவன் வீரம் அவனைப் பற்றிய வீர வழிபாட்டுக்கு அடித்தளமாகிறது. அலெக்ஸாண்டரை எதிர்த்து போரில் தோற்ற ஆனால் சரித்திரத்தில் வென்ற புருஷோத்தமனாக அவன் புகழ் பரவுகிறது. நாட்டு மக்கள் அவன் வீரத்தைப் புகழ்ந்து வணங்குகின்றனர். அந்த வீரவணக்கமே வீர சுவையுடைய கதைப்பாடலாக உருக்கொண்டு அவன் புகழை நிலைக்க செய்கிறது. என்கிறார் ஆய்வாளர் ஆறு.ராமநாதன் அவர்கள். "முரட்டு வீரமாயினும் தேசிங்கின் அஞ்சாமைக்கு தமிழகம் தலை வணங்குகிறது" எனும் நா.வானமாமலை அவர்களின் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது. தேசிங்கின் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. அவன் மனைவி உடன்கட்டையேற அனுமதிக்கப்பட்டாள். தேசிங்கு ராஜன் வீழ்ந்து பட்ட இடத்தில் ஒரு புதிய நகரை நிர்மாணித்துக் கொள்ளவும் தேசிங்குக்கு ஒரு கோயிலை எழுப்பிக் கொள்ளவும் நவாப் அனுமதியளித்தார். ஆனால் அப்படி புதிய நகர் ஒன்று ஏற்பட்டதாகவோ கோவில் எழுப்பியதாகவோ தெரியவில்லை.ஆனாலும் தேசிங்கின் மனைவி இராணிபாயின் நினைவாக ஒரு நகரம் இருந்தது அதுதான் ராணிப்பேட்டை இப்போது அது ஒரு மாவட்டத்தின் தலைவராக ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


சங்கராபரணி முதல் தென்பெண்ணை வரை- கோ.செங்குட்டுவன்



கருத்துரையிடுக

0 கருத்துகள்