Ad Code

Ticker

6/recent/ticker-posts

மண்டல ஆய்வு குழுவின் போது ஆய்வு குழு ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்ன



மண்டல ஆய்வு குழுவின் போது ஆய்வு குழு சமூக அறிவியல் பாடம் போதிக்கும் ஆசிரியர்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

1)Notes of Lesson 

2)Lesson Plan 

 3)Teaching aids

4) ஆசிரியர் பாடம் போதிக்கும் முறை

5) class work note

5)Social Map

6)CCE  –  FA  (a),  FA  (b) 

7)மன்ற செயல்பாடுகள் 


Notes of Lesson

Notes of Lesson என்றால் என்ன Notes of Lesson என்பது ஒரு வாரத்திற்கான பாட குறிப்பு இதை ALM  முறைப்படியும் CCE முறப்படி எழுத வேண்டும் . எடுத்துக்காட்டுக்காக ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் பாடத்திற்கான ALM முறைப்படி எழுதப்பட்ட Notes of Lesson கீழே காண்போம்.

நாள்:

வகுப்பு: ஏழாம் வகுப்பு

பாடம்: சமூக அறிவியல்

பாடத்தின் தலைப்பு: மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்

கற்றல் விளைவுகள்

SS715 மக்களின் வாழ்க்கை முறைக்கும் அவர்கள் வாழும் இடத்தின் புவியியல் அமைப்பிற்கான தொடர்பினை விவரித்தல்.

துணை கருவிகள்

உலகவரைபடம்

QR code video

Kalvi tv video

அறிமுகம்

மக்கள் புவியியல் என்பது மக்களின் விகிதம், பிறப்பு, இறப்பு வளர்ச்சி விகிதம் காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தை பற்றிய கற்றலாகும்

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதியை வாசித்துக் காட்டி பின் மாணவர்கள் தொடர்ந்து வாசித்தல் புதிய வார்த்தைகள் அடிக்கோடுதல்

மனவரைபடம்



தொகுத்தலும்  வழங்குதலும்

*மதங்களின் வகைப்பாடு

 உலகளாவிய மதங்கள்

 மனித இனப் பிரிவு மதங்கள்

 நாடோடிகள்

*குடியிருப்பு

*தளம் மற்றும் சூழலமைப்பு

*பண்டைய குடியிருப்பின் வகைகள்

*குடியிருப்பின் அமைப்புகள்

குழுமிய குடியிருப்பு

சிதறிய குடியிருப்பு

*நகர்ப்புற குடியிருப்பு

வலுவூட்டல்

ஆசிரியர் பாடகருத்துகளை மீண்டும் ஒருமுறை தொகுத்துக் கூறி பின் பாடத் தொடர்பான காணொளி காட்சிகளை காட்டி வலுவூட்டல்.

மதிப்பீடு

LOT

உலக மக்கள் தொகை தினம்____ஆகும்

MOT

______இன  மக்கள் என்பவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள் ஆவார்

HOT

குறைந்தபட்ச மக்கள் தொகையான 5000க்கும் அதிகமான மக்கள் இருக்கும் இடத்தையே____என்கிறோம்

குறைதீர் கற்பித்தல்

கற்றலில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாடப்பகுதியை மீண்டும் கற்பித்தல்

தொடர்பணி

நான்கு முக்கிய மனித இனங்களைப் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.


Lesson Plan

Lesson Plan என்பது ஒவ்வொரு நாளும் எழுதப்பட வேண்டியது. Notes of Lesson என்பது ஒரு வாரத்திற்கான பாட குறிப்பு. மேலே ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் உள்ள மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் பாடத்திற்கான பாடக்குறிப்பு பார்த்தோம்.இப்பாடத்திற்குLesson Plan எழுவதற்க்காக  பாடத்தை  ஐந்து நாட்களுக்கு ஐந்து தலைப்புகளாக பிரித்துள்ளேன். அதில் ஒரு தலைப்புக்கான Lesson Plan கீழே காண்போம்.


1)இனங்கள்

2)மதம் மற்றும் மொழி

3)குடியிருப்பு

4)கிராமப்புற குடியிருப்பு

5)நகர்ப்புற குடியிருப்புகள்


நாள்:10/8/2022

பருவம்: முதல் பருவம்

பாடத் தலைப்பு: மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்

உட்பாட தலைப்பு: மதம் மற்றும் மொழி

பக்கம் எண்:181,182

கற்றல் விளைவுகள்

SS715மக்களின் வாழ்க்கை முறைக்கும் அவர்கள் வாழும் இடத்தின் புவியியல் அமைப்பிற்குமான தொடர்பினை விவரித்தல்.

திறன்கள்

படித்தல், கடின வார்த்தைகள் அடிக்கோடிடுதல், புரிதல், மனவரைபடம் வரைதல், தொகுத்தல், பகிர்ந்து கொள்ளுதல், எழுதுதல்.

கற்பித்தல் உபகரணங்கள்

*கோவில், தேவாலயங்கள், விஹாரம் மசூதி புகைப்படங்கள்

*ஸ்பானிஷ், போர்ச்சுகீசியஸ், ரஷ்யன், அராபிக், ஜெர்மன் எழுத்து வடிவங்கள்

*பத்து ரூபாய் நோட்டு

*இந்திய வரைபடம்

 ஆயுத்தப்படுத்துதல் 

தீபாவளி பண்டிகை எந்த மதம் சார்ந்த விழா என கேட்டு மாணவர்களைஆயுத்தப்படுத்துதல்

அறிமுகம்

ஆசிரியர் தேவாலயத்தின் புகைப்படத்தை காட்டி இது எந்த மதத்தை சார்ந்தது என கேட்டு பாடத்தினை அறிமுகம் செய்தல்.

மாணவர்களின் செயல்பாடுகள்

பாடகருத்துக்கு ஏற்ற மனவரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மனவரைபடத்தை வழங்குதல். மேலும் பாட கருத்தினை தொகுத்தல்

ஆசிரியர் செயல்பாடுகள்



வலுவூட்டல் செயல்பாடுகள்

ஒவ்வொரு சிறு குழுவும் தங்களின் மனவரைபடம் தொகுத்தலை வழங்குதல் பாட கருத்துகளை வாழ்வியல் சூழலில் தொடர்பு படுத்தி எளிய செயல்பாடுகள் மூலம் ஆசிரியர் விளக்குதல்.

மதிப்பீடு

LOT

பன்னாட்டு தாய்மொழி தினம்______

HOT

இந்திய அரசியலமைப்பு _______மொழிகளை அங்கீகரித்துள்ளது

MOT

கீழ்கண்டவற்றில் ஜுடாய்ஸ மதம் வழிபாட்டுத் தலங்கள் எது

அ)விஹாரம்

ஆ)பசாதி

இ)சினகாத்

ஈ)அகியாரி


குறைதீர்க்க கற்றல்

புரியாத மாணவர்களை கண்டறிந்து பாடப்பகுதியை QR code  வீடியோக்கள் மற்றும் power point slides மூலம் எளிய முறையில் எடுத்துக் கூறல்

தொடர் பணி

இந்திய மொழிகள் பற்றி படித்துக்கொண்டு எழுதி வரவும்.



Teaching aids

Notes of lesson  எவ்வளவு முக்கியமோ அதேபோல் Teaching aids முக்கியமானது Teaching aids இல்லாமல் வகுப்பறைக்கு கட்டாயமாக செல்லக்கூடாது. பாட தொடர்பான வரைபடம், புகைப்படங்கள்,QR code வீடியோக்கள்,chat, Power point, வரலாற்று புத்தகம், பாடத்தொடர்பான Websites போன்றவற்றை பயன்படுத்தலாம். மண்வகைள் பாடம் நடத்துவது என்றால் களிமண், வண்டல் மண், செம்மண் போன்றவற்றை மாணவர்களிடம் காண்பிக்கலாம். அதே போல் புதுப்பிக்க இயலா வளங்கள் நடத்துவது என்றால் பெட்ரோல், நிலக்கரி, நீர் இவற்றை மாணவர்களிடம் காட்டலாம். மேலே குறிப்பிட்டுள்ள ஏழாம் வகுப்பு மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் பாடத்திற்காக என்னென்ன Teaching aids பயன்படுத்தலாம் என்றால் மனித இனங்களுடைய புகைப்படம் , மதம் சார்ந்த விழாக்களின் புகைப்படம், இந்து கடவுளின் புகைப்படம், ஏசுவின் புகைப்படம், நபிகள் நாயகம்  புகைப்படம், மகாவீரர், புத்தர் போன்றவருடைய புகைப்படத்தை காட்டலாம், தமிழ் , ஆங்கிலம், சீனம், ஸ்பானிஷ், ரஷ்யன், ஹிந்தி மொழியின் எழுத்துக்கள் போன்றவற்றை காட்டலாம்.கிராமப்புற குடியிருப்புகளின்  புகைப்படங்களை காட்டலாம்.நகர்ப்புறக் குடியிருப்புகள் புகைப்படங்கள் காட்டலாம்.

ஆசிரியர் பாடம் போதிக்கும் முறை

மண்டலக்குழு பள்ளியில் ஆய்வு செய்யும் போது பாடம் போதிக்கும் ஆசிரியர்களை எமிஸ் இணையதளம் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களை 45 நிமிடம் வகுப்புகள் எடுக்க வேண்டும் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உரையாடல் மூலமாகவே பாடம் எடுக்க வேண்டும் குறிப்பாக லட்சரி முறையில் பாடம் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும் பாடத்தில் மதம் மற்றும் மொழி என்ற தலைப்பில் எப்படி வகுப்பு எடுப்பது என்பதை பார்ப்போம்.

அறிமுகம் செய்தல்

ஆசிரியர் தன் கையில் இருந்த முருகன் கடவுள் படத்தை காட்டி இவர் யார் என்று கேள்வி கேட்க வேண்டும் அதற்கு மாணவர்கள் அனைவரும் முருகப்பெருமான் என்று கூறுவார்கள்.அடுத்து ஒரு மாணவனை எழுப்பி அவனிடம் மகாவீரர் படத்தை காட்டி இவர் பெயர் என்ன என்று கேட்கவேண்டும்.பதில் சொல்லவில்லை எனில் அவரைப் பற்றி விவரிக்க வேண்டும் (இப்போது இந்திய வரைபடத்தில் மகாவீரர் சம்பந்தப்பட்ட இடங்களை காட்டவேண்டும்.

வாசித்தல்

ஆசிரியர் பாடப்பகுதி வாசித்துக் காட்டி பின் மாணவர்களை படிக்க செய்தல் வேண்டும் ஒரு மாணவன் எழுந்து படிக்கும் போது மற்ற மாணவர்கள் கடினமான வார்த்தையை கோடிட வேண்டும் பின் கோடிட்ட வார்த்தைகளை நோட்டில் எழுத வேண்டும்.புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். 

மாணவர் செயல்பாடு

மாணவர்கள் கடின வார்த்தையை நோட்டில் எழுதிய பின் மன வரைபடம் வரைய வேண்டும் இது குழுவாக  செய்ய வேண்டும் மனவரைபடம் வரைந்த பின் மாணவர்கள் ஆசிரியர்களும் காண்பித்து கையெழுத்து பெற வேண்டும்.

ஆசிரியர் செயல்பாடு

மாணவர்கள் வரைந்த மனவரைபடம் முழுமையடையாமல் இருக்கும்.அதை நிவர்த்தி செய்ய ஆசிரியர் மனவரைபடம் கரும்பலகையில் வரையவேண்டும்.

தொகுத்தலும் வழங்குதலும்

பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில்தொகுத்தல்

1.வார்த்தை வலை(Word web

2. அட்டவணை(Tables).

3. குறிப்புகள்(Hints).

4. வரிசைமுறையில் எழுதுதல்.

5. படங்கள் வரைதல்.

6. உண்மைத் தகவல்கள்.

7. காலங்கள்.

8. மீன்முள்

9.தகவல் பலகை

மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்

வலுவூட்டுதல்

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல்.

மதிப்பீடு

மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.இதில் LOT,MOT,HOT வினாக்கள் கேட்கபடவேண்டும்.

குறைதீர் கற்றல்

கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.இந்த மாணவர்களின் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்ட குறைதீர் கற்பித்தல் நடைமுறைகளை பதிவேடு பராமரிப்பு செய்யவேண்டும்.


Class Work Note

ஒவ்வொரு பாடத்திற்கு மாணவர்கள் விடைகளை நோட்டில் எழுதவைத்து அதை திருத்தி கையெழுத்து தேதியுடன் போடவேண்டும்.

MAP

ஒவ்வொரு பாடத்திலும் உள்ள வரைபடத்தை மாணவர்கள் கேட்கப்பட கேள்விகளை வரைபடத்தில் குறித்ததை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து தேதியுடன் கையெழுத்து போட வேண்டும்.

CCE  –  FA  (a),  FA  (b) 

ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு FA(a) செயல்பாடுகள் எளிய முறையில் கொடுக்கபடவேண்டும். 5மதிபெண்கள் குறைவாக மதிப்பெண் போடக்கூடாது.மாணவர்கள் எழுந்து நின்றாலே 5 மதிப்பெண் கொடுக்க வேண்டும்.FA(b) தேர்வுக்கு எளிய வினாக்கள் கொடுக்க வேண்டும்.ஒவ்வொரு மாணவர்களும் 5 மதிப்பெண் குறைவாக மதிப்பெண் எடுகாத வகையில் வினாக்கள் கேட்கப்பட வேண்டும்.

மன்ற செயல்பாடுகள்

வரலாற்று மன்றம் தொன்மை பாதுகாப் மன்றம் போன்ற இனைய செயல்பாடுகளைைை மாதம் ஒருமுறை நடத்தி அறிக்கை எழுதி வைக்க வேண்டும்.


கா.கோபாலகிருஷ்ணன்

பட்டதாரி ஆசிரியர்

அ.மே.பள்ளி

பேரணி.


 Join  

https://t.me/+bbDs7CM4BkI1ODg1 இணைய செயல்பாடுகள் முறையாக


கருத்துரையிடுக

0 கருத்துகள்