"வரலாறு மன்ற துவக்க விழா"
உயர்நிலைப் பள்ளி பென்னகர்-604210.
நாள்: 08.07.2022 வெள்ளிகிழமை
இன்று நடைபெற்ற விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.வீ.வேல்முருகன் அவர்கள் வரலாறு மன்றத்தை துவங்கி வைத்து வரலாறு மற்றும் நம் தலைமுறைகள் பற்றி உரையாற்றினார். அவரைத்தொடர்ந்து அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு.சா.வசந்தராஜன் அவர்கள் வரலாறு தொடர்பாக உரையாற்றினார். கணித பட்டதாரி ஆசிரியை திருமதி.ஹே.ஜேஸ்மின் சோபனா, தமிழ் பட்டதாரி ஆசிரியை திருமதி.அ.இராதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு.அ.அருணாசலம், பகுதிநேர ஆசிரியை திருமதி.செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் 6ம் வகுப்பு மாணவர்கள் 10பேர் அண்டைவெளி, சூரியக்குடும்பம் பற்றி பேசினார்கள், இன்றைய மன்ற நிகழ்ச்சி தலைப்பான "செஞ்சிக்கோட்டை" பற்றி
9ம் வகுப்பு மாணவி 'ஏ.புனிதவதி'
தனித்திறனில்
தேசப்பற்று பாடலை
9ஆம் வகுப்பு மாணவிகள்
P.விஜயலட்சுமி
KK.காவியா
தனித்திறனில்
பனை ஓலையில் "கைபை" யை
9ம் வகுப்பு மாணவி
மு.தீபிகாவும்
விழிப்புணர்வு ஓவியங்கள்
9ம் வகுப்பு மாணவர்கள்
தமிழ்செல்வன்
திலீப்குமார்
விஜயலட்சுமி
தீபிகா ஆகியோர்
சிறப்பாக செய்தனர்.
மாணவ மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் மரக்கன்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரலாறு மன்ற பொறுப்பு ஆசிரியர் திரு.சி.சரவணன் அவர்கள் வரவேற்றார். விழா முடிவில் அனைவருக்கும் நன்றி கூறினார்.
வரலாறு மன்றம் அறிக்கை pdf- click here
0 கருத்துகள்