Ad Code

Ticker

6/recent/ticker-posts

சமூக அறிவியலும் இணையமும்

 


சமூக அறிவியலும் இணையமும்

"வானம் தொட்டுவிடும் தூரம்தான்" என்ற நிலையில் இணையமும், கணினியின் தாக்கமும் உலகத்தை சுருக்கி விட்டது என்றால் மிகையாகாது. நம் வாழ்வின் அன்றாட பணிகளிலும் கூட கணினி பெருமளவு தாத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் கணினி மூலம் ஏதோ ஒரு இடத்தில் நிகழும் இயற்கை நிகழ்வுகளையோ, சமுதாய நிகழ்வுகளையோ, உண்மை வடிவில், நேரடி அனுபவத்துடன் தெரிந்து கொள்ள உதவுவது இணையமாகும். சமூக அறிவியல் பாடத்தில், கற்பனைக்கெட்டா, இயற்கை விநோதங்களும், மனித உணர்வுகளும், சமூக கலாச்சாரப் பண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றன. இயற்கைக்கும், மனிதனுக்கும் உள்ள இன்றியமையாத தொடர்பை விளக்குவது சமூக அறிவியல் பாடமாகும். இப்பாடக் கருத்துக்களை கண்களுக்கு புலப்படும் வகையில் வெளிப்படுத்திக் கொடுப்பது இணையமாகும். எனவே சமூக அறிவியல் பாடம் கற்பித்தலில், இணையம் ஒரு பயனுள்ள தொழில்நுட்பமாகும்.

பொதுவான நிலையில் எல்லா பாடங்களிலும் Power Point Slide மூலம் பாடக்கருத்தினை சுருக்கி விரித்துரைக்க ஏற்ற விதத்தில் உள்ளது. உயிரோட்டங்கள் (Animation Pictures) மூலம் பாடக்கருத்தின் உண்மைத் தன்மையை தத்துரூபமாக விளக்க முடியும்.

சமூக அறிவியல் நிலவரை படங்களை வரைவதற்கு நவீன யுக்தியாக GIS (Geographical Information System) - 1 மணிநேரத்தில் ஒரு நிலவரைபடத்தை வரையும் நிலை மாறி அதற்குப் பதிலாக 1 மணிநேரத்தில் பல நூறு நிலவரைபடங்கள் வரையும் நிலைக்கு சமூக அறிவியலில் கணினியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சமூக அறிவியலில் Google Earth என்ற இணையதளத்தின் Website முகவரியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம்? நம்மைச் சுற்றியுள்ள தகவல்கள் என்ன? என்பதை உயிரோட்டமாக உணரும் நிலையில் அதிசயத்தக்க விதத்தில் கருத்துக்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.

வரலாறு பாடத்தில் காலக்கோடுகளை அழகிய கட்டங்கள் வரைந்து Power Point உதவியுடன் மனதில் புரியும் விதத்தில் நிலைநிறுத்தி விளக்க முடியும். உலக அதிசயங்களையும், உலகின் பல்வேறு பரிமாணங்களையும் உயிரோட்டமாக கண்ணுக்கும் பதியும் விதமாக முப்பரிமான படங்கள் மூலம் கணினி உதவியுடன் தெளிவாக விளக்கி புரிய வைக்கமுடியும்.

மனிதன் எளிதில் செல்ல முடியாத இடங்களையும், தகவல்களையும் உலக வலைப்பின்னல் முகவரியில் தொடர்பு கொண்டு அதிசயிக்க முடியும்


கருத்துரையிடுக

0 கருத்துகள்