Ad Code

Ticker

6/recent/ticker-posts

Tamil palamozhi related story

 Tamil palamozhi related story-1

பழமொழி-வலியவனுக்கு வலியவன் 

 திமிர் பிடித்த சேவல் 

 ஒரு வீட்டு தோட்டத்துல ரெண்டு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த ரெண்டு சேவல்ல ஒன்னு ரொம்ப பலசாலியாவும் இன்னொன்னு பலம் கொறஞ்சத்தவும் இருந்துச்சு ,அதனால அந்த பலசாலியான சேவலுக்கு திமிர் அதிகமா இருந்துச்சு.

அந்த திமிர் பிடிச்ச சேவல் எப்பவும் பலம் கொறஞ்ச சேவலோட சண்ட போட்டுக்கிட்டே இருக்கும் ,எங்க அந்த சேவல் போனாலும் அதுக்கு பின்னாடியே போயி அதுக்கு தொந்தரவு கொடுத்துகிட்டே இருக்கும்

ஒருநாள் பலமில்லாத சேவல் குப்பைல இருக்குற புழு பூச்சிகள சாப்டுகிட்டு இருந்துச்சு ,அப்ப அங்க வந்த திமிர்பிடிச்ச சேவல் அத சாப்பிட விடாம தொந்தரவு செஞ்சுச்சு.

உடனே பலமில்லாத சேவல் வேற இடத்துக்கு உணவு தேட நடந்து போச்சு ,அத பாத்த திமிர்பிடிச்ச சேவல் அந்த பயம் இருக்கணும்னு சொல்லி ஒட்டு மேல ஏறி கூவ ஆரம்பிச்சது

மரத்துமேல இருந்து இத பாத்துகிட்டு இருந்த பருந்து ஒண்ணு ரொம்பநாளா இந்த சேவல்கள சாப்பிடணும்னு காத்துகிட்டு இருந்துச்சு ,ஆனா அந்த வீட்டுக்காரர் வளக்குற நாய்க்கு பயந்து கீழ இறங்காம மரத்துமேலயே இருந்துச்சு அந்த பருந்து


ஆனா இன்னைக்கு ஓட்டுமேல ஏறி கூவுன சேவல பாத்தது ,அடடா இன்னைக்கு நமக்கு அதிர்ஷ்டம் இந்த திமிர் பிடிச்ச சேவல் தன்னோட திமிரினால பாதுகாப்பான இடத்த விட்டுட்டு ஓட்டு மேல நிக்குதுனு சொல்லி பறந்து வந்து அத தூக்கிகிட்டு போய்டுச்சு.

அப்பத்தான் வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகில் உண்டுங்கிற பழமொழி திமிர்பிடிச்ச சேவலுக்கு புரிய ஆரம்பிச்சது ,தனக்கு பலம் இருக்குங்கிற காரணத்துனால பலம் கொறஞ்ச சேவல தொந்தரவு செஞ்சதுக்கு தனக்கு சரியான தண்டனை கெடச்சுடுச்சுன்னு நினச்சு வருத்தப்பட்டுச்சு அந்த திமிர் பிடிச்ச சேவல்.



Tamil palamozhi related story-2

நீதி:சொல் புத்தியை விட சுய புத்தியே சிறந்தது

விவசாயியின் கழுதை

ஒரு ஊர்ல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு திடீர்னு பணக்கஷ்டம் வந்துச்சு ,உடனே தன்னோட கழுதையை வித்து அந்த பணத்தை வச்சு பிரச்னையை சமாளிக்கலாம்னு முடிவு பண்ணுனாரு.
தன்னோட மகன கூட்டிகிட்டு பக்கத்துக்கு சந்தைக்கு நடந்து போனாரு அந்த விவசாயி ,அப்படி போகும்போது ஒருத்தர் அவுங்கல பாத்து சொன்னாரு ,கழுதை சும்மாதான நடத்துவது ,உங்க ரெண்டு பேருல யாராவது அதுமேல உக்காந்துட்டு போகலாம்லனு சொன்னாரு
உடனே தன்னோட மகன அந்த கழுத மேல ஏத்தி விட்டுட்டு கூட சேர்ந்து நடந்தார் விவசாயி கொஞ்ச தூரத்துக்கு அப்புறமா அங்க வந்த இன்னொருத்தரு ,அட பாவி சின்ன பயலே வயசான உங்க அப்பாவ நடக்க விட்டுட்டு நீ உக்காந்துகிட்டு வரியேனு கேட்டாரு உடனே விவசாயி சரினு தான் உக்காந்துக்கிட்டு அவரோட மகன கூட நடக்க சொன்னாரு ,கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறம் ,ஒரு பாட்டி வந்து நீ எல்லாம் பெரிய மனுசனா,சின்ன பையன நடக்க விட்டு நீ உக்காந்துட்டு வரியேனு சொன்னாங்க .உடனே தன்னோட மகனையும் கூட ஏத்திக்கிட்டு ஒண்ணா பயணம் செஞ்சாரு அவரு ,அப்ப அந்த வந்த முதியவர் ஒருவர் அட கொடுமைக்காரர்களா இப்படி ரெண்டு பேரு அந்த குதிரைமேல உக்காந்து இருக்கீங்களே உங்களுக்கு இரக்கம் இல்லையானு கேட்டாரு உடனே ரெண்டு பேரும் கீழ இறங்கிக்கிட்டு ,இனி என்ன பண்றதுன்னு யோசிச்சாங்க ,இனி இந்த கழுதைய நாம தூக்கிட்டு நடப்போம்னு ,ஒரு குச்சியை கழுதையோட கால்களுக்கு நடுவுல கட்டி தலைகீழா தூக்கிட்டு நடந்தாங்க ,அப்ப அங்க ஒரு ஆறு குறிக்கிட்டுச்சு ,ஆத்த கடக்கறப்ப கழுத்த பயத்துல துள்ளி குதிச்சது ,உடனே பிடிய விட்டான் அந்த பையன் ,அப்ப அந்த கழுத்த ஆத்தோட போயிருச்சு அடுத்தவங்க சொல்றத எல்லாத்தையும் கேட்ட அவங்களுக்கு ,கழுதையும் போயிருச்சு ,அத வித்து பணம் கிடைக்க வழியும் இல்லாம போயிருச்சு


Tamil palamozhi related story-3


அடுத்தவருக்கும் வேண்டும் 
ஒருநாள் ஒரு ராமன்ற விவசாயி பாலைவன பகுதியில் நடந்து போய்கிட்டு இருந்தாரு ,அப்போது அவனுக்கு அதிகமாக தாகம் எடுத்துச்சு.தண்ணீர்தேடி ரொம்ப தூரம் நடந்த அவனுக்கு தண்ணி கிடைக்கவே இல்ல ,ரொம்ப சோர்வடைந்த அவனுக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு ,நடக்கவே முடியாத நிலைக்கு போன ராமனுக்கு ஒரு கிணறு கண்ணுல பட்டுச்சு உடனே வேகமா ஓடிப்போன ராமன் அந்த கிணத்து பக்கத்துல ஒரு அடி குழாயும் ,அதுக்கு பக்கத்துல ஒரு பழைய பாட்டில்ல தண்ணியும் இருக்குறத பாத்தான்.வேகமா தண்ணிய எடுத்து குடிக்க போன ராமன் அங்க ஒரு பலகைள “இந்த தண்ணீரை குழாயில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும் அதனை குடித்துவிட்டு ,மீண்டும் பாட்டிலில் நிரப்பி வைக்கவும் ” என்று எழுதி இருந்தது

இதை படித்த ராமனுக்கு ஏற்கனவே இருக்கும் தண்ணீரை குடிப்பதா ,இல்லை பலகையில் சொல்லியிருக்குற மாதிரி தண்ணி அடிச்சி குடிக்கிறதான்னு ஒரு கேள்வி வந்துச்சு தண்ணிய குடிச்சிட்டா திரும்ப தண்ணி எடுக்க யாராலயும் முடியாது ,ஒரு வேல தண்ணி ஊத்தி அடிச்சாலும் தண்ணி வருமான்னு தெரியாது ,தன்னோட தாகத்த மட்டும் போக்கிகிறதா இல்ல அடுத்தவங்களுக்கு தண்ணி எடுத்து வைக்கிறதான்னு ஒரே குழப்பமா இருந்துச்சு

அப்பத்தான் அவனுக்கு யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படிங்கிற திருமந்திரம் ஞாபகத்துக்கு வந்துச்சு ,தனக்கு தண்ணி கிடைக்கலனாலும் பரவா இல்லை ,என்ன போல வர்றவங்களுக்கு தண்ணி பிடிக்க ஏற்கனவே ஒருத்தர் தண்ணிய பாட்டில்ல பிடிச்சி வச்சிருக்காரு அவரு மாதிரியே நாமளும் அடுத்து தாக்கத்தோட இங்க வர்றவங்களுக்கு தண்ணீர்கிடைக்க ஏற்பாடு செய்யணும்னு நினச்சு ,அந்த குழாய்ல தண்ணிய ஊத்தி அடிச்சான் நிறைய தண்ணி வந்துச்சு அத வேணும்ங்கிற அளவுக்கு குடிச்சிட்டு ,அந்த பாட்டில் நிறைய பிடிச்சி வச்சுட்டு தன்னோட பயணத்த தொடர்ந்தான் ராமு


Tamil palamozhi related story-4

பழமொழி  –  சுவர் இல்லாமல் சித்திரமில்லை 

ஒரு ஊருல ஒரு இளைஞன் இருந்தான் , அவன் எப்பவும் நல்லபடியா இருக்கணும்னு கடவுள வேண்டிகிட்டே இருப்பான் ஒருநாள் கடவுள் அவன் கனவுல வந்தாரு நீ பணக்காரனை ஆகணும்பா உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பாறையை உன் கையாலேயே நகத்து அப்படினு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு தன்னோட கனவு ரொம்ப உண்மையா இருக்குறமாதிரி இருந்ததால மறுநாள் காலைல அந்த பாறையை நகத்த பாத்தான்

எவ்வளவு முயற்சி பண்ணியும் அவனால அந்த பாறைய நகத்த முடியல

என்னதான் அந்த பாறைய அவனால நகத்த முடியளானாலும் அவன் முயற்சியை விடல தினமும் அந்த பாறையை நகத்த முயற்சி பண்ணியும் அவனால முடியல கொஞ்ச காலத்துக்கு அப்புறமா கடவுள் மீண்டும் ஒருநாள் அவன் கனவுல வந்தாரு

அப்ப அந்த இளைஞன் கேட்டான் நீங்க சொன்ன மாதிரி அந்த பாறைய நகத்தி பாத்தேன் என்னால அத நகத்த முடியல அப்படின்னு சொன்னான் அத கேட்ட கடவுள் சொன்னாரு சுவர் இல்லாம சித்திரம் இல்லை , இப்ப உன்னோட உடம்ப பாரு

தினமும் நீ செஞ்ச முயற்சியால உன்னோட உடம்னு அந்த பாற மாதிரி மாறிடுச்சு நீ இப்ப எந்த வேலையையும் சுலபமா செய்ய முடியும் ,உன்னோட உழைப்பை நீ பேருக்கு நீ இந்த ஊர்லயே பெரிய பணக்காரனை மாறிடுவேன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு


Tamil palamozhi related story-5

நல்ல ராஜா 

 ஒரு ஊர்ல ஒரு ராஜா வாங்கிட்டு வந்தாரு அவருக்கு தன்னோட மக்கள் மேல ரொம்ப பாசம் இருந்துச்சு மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு அவர் ஆர்வமாக இருந்தார்,மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து கொள்ள ஒரு நாள் அவர் நடைபயணம் கிளம்பினார்

குதிரை கூட இல்லாம வெறும் காலோட மக்களோட மக்களா நடந்து போனாரு , போகுற வழி எல்லாம் மக்களோட குறைகளை கேட்டு தெரிஞ்சு கிட்டாரு எல்லா ஊர் மக்களும் ராஜா உங்களோட ஆட்சியில எங்களுக்கு எந்த குறையும் இல்லைனு சொன்னாங்க

இத கேட்ட ராஜா சந்தோஷப்பட்டாலும் மனசுல ஒரு சின்ன கவலை உருவாச்சு ,அது என்னன்னா அவரோட கால் நடந்து நடந்து வலிக்க ஆரம்பிச்சது அடடா நம்ம கால் வலிக்குதே இது மாதிரியே நம்ம குடிமக்களோட கால்களும் வலிக்குமேனு நினச்சுகிட்டே அரண்மனை வந்து சேர்ந்தாரு

மறுநாள் அமைச்சரவையை கூட்டி நம்ம நாட்டு சாலைகள் எல்லாம் மண்ணும் கல்லுமா இருக்கு இதுல நடக்குற நம்ம நாட்டு மக்களுக்கு கால்வலிக்கும் அதனால நம்ம நாட்டு சாலைகள் எல்லாத்தையும் தோலால் ஆன பாய் போட்டு மூடணும்னு சொன்னாரு

இத கேட்ட மந்திரிமார்கள் எல்லாரும் அதிர்ச்சி ஆனாங்க , அரசர் சொல்றமாதிரி இந்த தோல் பாய் போட்டம்னா அரசு கஜானாவே கலியாயிடுமே அப்படினு யோசிச்சாங்க அப்ப ஒரு வயசான மந்திரி ராஜா கிட்ட வந்து உங்க கால் நடக்கும்போது வலிச்சுச்சுன்னா ஏன் சாலை முழுசும் பாய் விரிக்கணும் சின்ன தோல் துணியால உங்க கால மூடிக்கலாமேன்னு சொன்னாரு அடடா அவசர பட்டு இப்படி ஒரு திட்டம்போட்டு மக்களோட வரிப்பணத்தை வீணடிக்க பாத்தோமே அப்படினு யோசிச்ச அரசர் எல்லா மக்கலும்மும் தோல் செருப்பு கொடுக்க திட்டம் அறிவிச்சாரு

நீதி : உலகத்தை மாத்தணும்னு நினைக்காம முதல்ல நாம் மாறவேண்டும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்