Ad Code

Ticker

6/recent/ticker-posts

Importance of elements in daily life in Tamil

 அன்றாட வாழ்வில் அறிவியலின் பயன்பாடு.(Importance of elements in daily life in Tamil)

இன்றைய யுகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கின்றி வாழ்வே ஸ்தம்பித்து விடும் நிலை உள்ளது. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அறிவியலின் பயன் இடம் பெற்றுள்ளது. எனவே, நம் அறிவியல் கல்வி குழந்தைகளையும், இளைஞர்களையும், அறிவியல் விதிகளை, கண்டுபிடிப்புகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்த பயிற்றுவிக்க வேண்டும்.

வீட்டில் அறிவியலின் பயன்பாடு(Importance of elements in daily life in Tamil)

மின்சாரம் இல்லாமல் இன்றைய வாழ்வை நினைத்துப் பார்க்க இயலாத நிலைக்கு நாம் பழகிவிட்டோம். வீட்டில் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் பயன்படுத்தும் சாதனங்களையும், அவற்றில் செயல்படும் அறிவியல் தத்துவங்களையும் இங்கு காண்போம்.

மின் விளக்குகள் (Electric Lamps), மின் சமிக்ஞைகள் (Elecric Signals) மின் ஆற்றலை ஒளி ஆற்றலாக மாற்றுகின்றன.

வானொலியில் மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது

துணி துவைக்கும் இயந்திரம் (Washing Machine), மின்சார மோட்டார் (Electric Motor) மாவு அறைக்கும் இயந்திரம் (Wet Grinder) போன்றவற்றில் மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது.

மின் சமைப்பான் (Electric Cooker), மின் சலவைப் பெட்டி, (Iron Box) போன்றவற்றில் மின் ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது. இவை அனைத்தும் ஆற்றல் அழிவிண்மை விதியின் அடிப்படையில் செயல்படுகின்றன.

நீராவி குளிர்விக்கப்படுவதால் நீர்மமாகிறது என்ற தத்துவத்தின் அடிப்படையில் குளிர் சாதனப் பெட்டி (Refrigerator) செயல்படுகிறது.

பள்ளியில் அறிவியலின் பயன்பாடு

(Importance of elements in daily life in Tamil)

அறிவியல் வளர்ச்சியினை பள்ளியில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அளித்திட வேண்டியது அவசியம். ஏனெனில் அறிவியல் அறிவை பெருக்கிக் கொள்ளவும், அவற்றைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ளவும், அவற்றின் சிறப்பைக் கண்டு வியந்து அதனைப் போல ஏதேனும் கண்டுபிடிப்பு நிகழ்த்த வேண்டும் என்ற ஊக்கத்தை தூண்டவும் முடியும்.

பள்ளியில் உள்ள தொலைக்காட்சியில் கல்வி நிகழ்ச்சிகளைக் காண்கிறோம். இதில் மின் ஆற்றல் ஒளி மற்றும் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.

பள்ளியில் நாம் பயன்படுத்தும் குடிநீர் சுத்திகரிப்பான் (Water Purifier) பிரித்து வடித்தல் என்ற விதியின் அடிப்படையில் செயல்படுகிறது.

ஆய்வகங்களில் பயன்படும், தூய நீர் கலன் (Distilled Water Plant) காய்ச்சி வடித்தல் தத்துவத்தில் செயல்படுகிறது.

ஒளிப்படக்கருவி (Camera) ஒளி பிரதிபலித்தல் தத்துவத்தில் செயல்படுகிறது.

நுண்ணோக்கி (Microscope) லென்சு தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு பொருள்களின் அளவைப் பெரிதாக்கிக் காட்டுகின்றது.

பொது இடங்களில் அறிவியலின் பயன்பாடு(Importance of elements in daily life in Tamil)

பொதுமக்களும் அன்றாட வாழ்வில் பல பொது இடங்களில் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்களை அடைந்து வருகின்றனர். பெருகிவரும் மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அறிவியல் கருவிகளின் கண்டுபிடிப்புகளும் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

டிராக்டர் (Tractor), மிதிவண்டி (Bicycle) போன்றவை எளிய எந்திரங்களின் தத்துவத்தில் செயல்படும் கூட்டு எந்திரங்கள் ஆகும்.

லாரிகளிலும், டிரக்குகளிலும் பெரிய பொருள்களை ஏற்றுவதில் சாய்தளத்தின் தத்துவம் பயன்படுகிறது.

கத்தரிக்கோல், இடுக்கி, பாக்கு வெட்டி, திறப்பான் போன்றவற்றில் நெம்புகோல் தத்துவங்கள் பயன்படுகின்றன.

மின் தூக்கி (Electric Lift), பளு தூக்கி (Crains), போன்றவற்றில் கப்பியின் தத்துவம் செயல்படுகிறது.

செய்தித் தொடர்புத் துறையில் (Telecommunication), ராடார் (Radar), சோனார் (Sonar) இவற்றின் தத்துவங்கள் செயல்பட்டு வியக்கத்தக்க வளர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளன.

இன்னும் பல்வேறு துறைகளில் பல்வேறு அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனின் வேகத்தையும் செயல்பாடுகளையும் அதிகரித்துள்ளன. அறிவியல் வளர்ச்சி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது. வணிக வளாகங்கள், பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சந்தைகள் போன்ற இடங்களில் அறிவியலின் பயன்பாடு மிக அதிகமே.


அன்றாட வாழ்வில் வேதியியலின் பங்கு

(Importance of elements in daily life in Tamil)

காலையில் பற்பசையில் பல்துலக்குவது முதல் இரவில் தூங்குவதற்குப் பிளாஸ்டிக் பாயைப் பயன்படுத்துவதுவரை நம் அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் வேதியியல் முக்கிய பங்கு வகிக்கிறது.


 வேதியியலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவும், நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளின் பின்னுள்ள வேதியியல் தத்துவத்தைப் புரிந்துகொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்வதை ஊக்கப்படுத்தவும் இந்த ஆண்டை சர்வதேச வேதியியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்துள்ளது.


 ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி க்யூரி அம்மையாருக்கு வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்து 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இந்த சர்வதேச வேதியியல் ஆண்டு அமைவதால் அறிவியல் வளர்ச்சியில் பெண்களின் முக்கியத்துவத்தை உணரவும், உணர்த்தவும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கும், வேதியியலுக்கும் உள்ள உறவு நம் மூச்சுக்காற்றிலேயே கலந்துள்ளது. காற்றிலுள்ள ஆக்சிஜன் நாம் உயிர் வாழக் காரணம். எனினும், தண்ணீரில் கரைந்திருக்கும் ஆக்சிஜனைக் கொண்டு மீன்கள் சுவாசிக்கும்போது நம்மால் தண்ணீரில் சுவாசிக்க முடிவதில்லை. இன்று, வேதியியல் வளர்ச்சியால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் கடலின் அடிஆழத்தையும், இமயமலை சிகரங்களையும், காற்று மண்டலமே இல்லாத விண்வெளி மற்றும் நிலவையும் எட்டிப்பிடித்திருக்கிறோம். இவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள வேதியியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டதே, மனித இனம் இந்த அளவுக்கு வளர்ச்சியடையக் காரணமாகும்.


 நாம் சுவாசிக்கும் காற்று மட்டுமன்றி, குடிக்கும் தண்ணீரும் ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் இணைந்த வேதிப் பொருளாகும்.


 இதேபோல் நாம் உண்ணும் உணவுப் பொருள்களும், பயன்படுத்தும் மருந்துப்பொருள்களும் வேதிப்பொருள்களால் ஆனவை ஆகும். வேதியியலுக்கும், நமக்குமான உறவு கருவிலிருக்கும்போதே தொடங்கி விடுகிறது, கருவிலிருக்கும் குழந்தை ஆரோக்கியமாக வளர கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தருகிறார் மருத்துவர். கால்சியம், எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.


 இரும்புச்சத்து, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி ரத்தசோகை வராமல் காக்கிறது. ஃபோலிக் அமிலம், புதிய ஆரோக்கியமான செல்களின் உற்பத்திக்கு உதவுகிறது.


 கருவுற்ற சில தாய்மார்கள் சத்து மாத்திரை சாப்பிட்டால் கருவிலிருக்கும் குழந்தை குண்டாகி, பிரசவம் சிரமமாகிவிடும் என தவறாக நினைத்து மாத்திரை சாப்பிடாமல் விட்டுவிடுகிறார்கள்.


 கருவிலிருக்கும்போதும், வளரும் பருவத்திலும் குழந்தைகளுக்கு இந்த சத்துகள் மிகவும் அவசியம். உண்மையில் இந்த சத்துகள் குறைந்தால் குழந்தையின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் பாதிக்கப்படலாம். இதுகுறித்து தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். வளர்ந்த நாடுகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சாக்லெட் மற்றும் பிஸ்கட்டுகளில் இந்த சத்துகளைக் குறிப்பிட்ட அளவில் கலந்தே தயாரிக்கிறார்கள்.


 அதேபோல கருவுறும் வயதிலுள்ள அனைத்துப் பெண்களுக்கும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. நமது நாட்டிலும் இதுகுறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.


 உடல்நலம் குன்றும்போது நம் உயிர்காக்கும் அனைத்தும் வேதியியலின் நன்கொடையே ஆகும். சாதாரண தலைவலி, காய்ச்சலைக் குணமாக்கும் பாரசிட்டமால் மாத்திரைகள் முதல் கொடிய பாம்பு கடியிலிருந்து நம் உயிரைக் காப்பாற்றும் விஷமுறிவு மருந்து வரை வேதியியல் மருந்துகள் உயிர்காக்கும் மருந்துகளாக உதவுகின்றன. அதேநேரம், இவற்றை நாம் கவனமாகப் பயன்படுத்தாவிடில் உயிர் குடிக்கும் எமனாகவும் மாறிவிடக்கூடும்.


 எடுத்துக்காட்டாக, பாம்பு கடிக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்து சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி நாமே மருந்துகள் வாங்கி உட்கொள்வது ஆபத்தானது.


 அதேபோல பாம்பு கடிக்கு ஆளானவரை எந்த வகைப் பாம்பு கடித்தது என்று மருத்துவரிடம் தெரிவிப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில், நல்லபாம்பின் விஷம் நரம்புமண்டலத்தை செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. விரியன் பாம்பின் விஷமோ ரத்த சிவப்பணுக்களை அழித்து திசுக்களைச் செயலிழக்கச்செய்யும் புரதத்தாலானது. எனவே அவற்றுக்குக் கொடுக்கப்படும் விஷமுறிவு மருந்துகளும் வெவ்வேறு வகையானவைகளாகும்.


 2011 - சர்வதேச வேதியியல் ஆண்டின் மையக்கரு ""வேதியியல் - நம் வாழ்வு, நம் எதிர்காலம்''  என்பதாகும். ஆதிகாலம் தொட்டே மனிதன் பயன்படுத்தத் தொடங்கிய செம்பு, இரும்பு போன்ற உலோகங்களிலிருந்து இன்று நம் வாழ்வை ஆக்கிரமித்துள்ள பாலித்தீன் வரை மனித இனத்தின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் வேதியியலின் பங்கு முக்கியமானதாகும். சிந்தித்துப் பார்த்தோமானால் நாம் பயன்படுத்தும் எந்தப் பொருளையும் வேதியியலின் துணையின்றி உருவாக்கியிருக்க முடியாது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்