Ad Code

Ticker

6/recent/ticker-posts

ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் இறுதி தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள்

 

I. சரியான வி்டையைத் தேர்வு செய்க. 

1. மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமோக இருப்பது.

  1. கொரில்லோ
  2. சிம்பன்ஸி
  3. உரோங் உட்டோன்
  4. கிரேட் ஏப்ஸ்

விடை : சிம்பன்ஸி

2. சேரர்களை பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு எது?

  1. புகளூர்
  2. கிரிநார்
  3. புலிமான் கோம்பை
  4. மதுரை

விடை : புகளூர்

3. மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் ______________

  1. புத்தர்
  2. மகாவீரர்
  3. லாவோட்சே
  4. கன்ஃபூசியஸ்

விடை : மகாவீரர்

4.கிருஷ்ணதேவராயர் ……………………………………………. ன் சமகாலத்தவர்.

  1. பாபர்
  2. ஹுமாயுன்
  3. அக்பர்
  4. ஷெர்

விடை : பாபர்

5.பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

  1. மாலுமி ஹென்றி
  2. லோபோ கோன்ஸால்வ்ஸ்
  3. பார்த்தலோமியோ டயஸ்
  4. கொலம்பஸ்

விடை : மாலுமி ஹென்றி

6.. பாறைக்குழம்பு  _________________ காணப்படுகிறது

  1. புவிமேலாடு
  2. கவசம்
  3. கருவம்
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : கவசம்

7. பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல __________

  1. அதிகரிக்கும்
  2. குறையும்
  3. ஒரே அளவாக இருக்கும்
  4. மேற்கண்ட எதுவுமில்லை

விடை : குறையும்

8.. குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

  1. சேரர்கள்
  2. பாண்டியர்கள்
  3. சாேழர்கள்
  4. களப்பிரர்கள்

விடை : சாேழர்கள்

9. கூற்று (A) : மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.

காரணம் (R) : மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவோர்கள்.

  1. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.
  2. (A) மற்றும் (R) இரண்டும் சரியானது (R), (A) வை விளக்கவில்லை.
  3. (A) சரியானது மற்றும் (R) தவறானது.
  4. (A) தவறானது மற்றும் (R) சரியானது.

விடை : (A) மற்றும் (R) இரண்டும் சரியானது மற்றும் (R), (A) வை விளக்குகிறது.

10.தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

  1. ஆகஸ்டு – அக்டோபர்
  2. செப்டம்பர் – நவம்பர்
  3. அக்டோபர் – டிசம்பர்
  4. நவம்பர் – ஜனவரி

விடை : அக்டோபர் – டிசம்பர்

II. குறுகிய விடையளி

1. ஆபிரகாம் லிங்கனின் மக்களாட்சிக்கான வரையறையைக் கூறு

“மக்களால் மக்களுக்காக மக்கள்  நடத்தும் ஆட்சி மக்களாட்சி” என ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார்.

2) நீரியல் சுழற்சி என்றால் என்ன?

புவியின் மீது மேலும், கீழும் நீரின் இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுவதே நீரியல் சுழற்சி எனப்படும்

3. புவியின் உள் அடுக்குகள் யாவை?

புவியின் உள் அடுக்குகள்

  1. மேலோடு
  2. கவசம்
  3. கருவம்


4. பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்

  1. டோல்மென் எனப்படும் கற்திட்டை
  2. சிஸ்ட் எனப்படும் கல்லறை
  3. மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல்
  4. தாழி, பாறையைக் குடைந்து உருவாக்கிய குகைகள்
  5. சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்

5. மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.

மும்மணிகள் என்பது மூன்று கொள்கையை குறிக்கிறது. அவை

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நன்னடத்தை

6. விஜயநகர அரசை உருவாக்கியது யார்? அவ்வரசை ஆண்ட வம்சாவளிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

  • ஹரிஹரர் மற்றும் புக்கர் ஆகிய இரு சகோதரர்களால் விஜயநகர அரசு நிறுவப்பட்டது.
  • அவ்வரசை ஆண்டு வம்சாவளிகள் சங்கம வம்ச அரசர்கள், சாளுவ வம்ச அரசர்கள், துளுவ வம்ச அரசர்கள்
7. கிராம ஊராட்சிகளால் விதிக்கப்படும் வரிகள் யாவை?
  1. சொத்து வரி
  2. தொழில் வரி
  3. வீட்டு வரி
  4. குடிநீர் இணைப்புக்கான கட்டணம்
  5. நில வரி
  6. கடைகள் மீது விதிக்கப்படும் வரிகள

8.தொலைநுண்ணுர்வு – வரையறு.

தொலை நுண்ணுணர்வு என்பது புவியில் உள்ள பொருட்களை நேரிடையாகத் தொடர்பு கொள்ளாமல் தொலைவிலிருந்து உற்று நோக்கி அவற்றின் தகவல்களைச் சேகரிப்பது ஆகும்.

9.பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் யாவை ?

  • தோல்
  • மணிகள்
  • ஓடுகள்
  • புகையிலை
  • உப்பு
  • சோளம்
10.பேரிடர் மேலாண்மை சுழற்சியின் நான்கு நிலைகள் யாவை?
  • தடுத்தல்
  • தணித்தல்
  • தயார் நிலை
  • எதிர் கொள்ளல்
  • மீட்டல்
  • புணர் வாழ்வு
  • மறு சீரமைப்பு

 விரிவான விடையளிக்கவும்

1. தமிழகத்தின் அரசியல் சக்திகள் எந்தளவுக்குச் சங்க கால ஆட்சி அமைப்பின் மீது தாக்கம் செலுத்தின?

சங்ககாலத்தின் தாக்கம் தமிழக அரசியலில் காலகாலமாக இருந்து வந்துள்ளது,

குழு வாழ்வும் – குழுத்தலைவனும்

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். குழுக்களிலிருந்து உருவான தலைவர்களில் இருந்தே வரலாற்றின் தொடக்கக் காலத்தில் வேந்தர்கள் தோன்றினார்கள். வேளிர்கள் என்போர் சங்க காலத்தின் குறுநில மன்னர்கள் ஆவர்.

மூவேந்தர் – அரசியல் நிலப் பிரிவுகள்

சங்க கால ஆட்சியாளர்களில் சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களே முன்னிலையில் இருந்தனர்.

சேரர்

தற்காலத்து கேரளத்தையும், தமிழ்நாட்டின் மேற்கு பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

  • தலைநகர் – வஞ்சி
  • துறைமுகங்கள் – முசிறி, தொண்டி
  • புகழ்பெற்ற அரசர் – சேரன் செங்குட்டுவன்
  • இலச்சினை – வில்லும் அம்பும்

சோழர்

காவிரி வடிநிலப்பகுதியையும், தமிழ்நாட்டின் வட பகுதிகளையும் ஆட்சி புரிந்தனர்.

  • தலைநகர் -உறையூர
  • துறைமுகங்கள் – பூம்புகார் (எ) காவிரிபூம்பட்டினம்
  • புகழ்பெற்ற அரசர் – கரிகால சோழன்
  • இலச்சினை – புலி

சேரர்

தென் தமிழகத்தை ஆட்சி புரிந்தனர். தமிழ்ச்சங்கங்களை நிறுவி ஆதரவு அளித்தார்கள்

  • தலைநகர் – மதுரை
  • புகழ்பெற்ற அரசர் – பாண்டியன் நெடுஞ்செழியன்
  • இலச்சினை – மீன்

குறுநில மன்னர்கள்

பாரி, காரி, ஓரி, நள்ளி, பேகன், ஆய், அதியமான் போன்ற குறுநில மன்னர்கள் மூவேந்தர்களோடு துணைநின்றோ, மூவேந்தர்களை எதிர்த்தோ ஆட்சி புரிந்தனர்.

2. வேறுபடுத்துக

1. கருவம் மற்றும் மேலோடு

மேலோடுகருவம்
1. நாம் வாழும் புவியின் மேலடுக்கை புவி மேலோடு என்கிறோம்.புவியின் கவசத்திற்குக் கீழ் புவியின் மையத்தில் அமைந்துள்ள அடுக்கு கருவம் எனப்படுகிறது.
2. புவிமேலோடு திடமாகவும் இறுக்கமாவும் உள்ளது.இது உட்கருவம் திட நிலையிலும், வெளிக் கருவம் திரவ நிலையிலும் உள்ளது.
3. புவி மேலோட்டில் சிலிகா மற்றும் அலுமினியம் அதிகம் காணப்படுவதால் இவ்வடுக்கு சியால் என அழைக்கப்படுகிறது.கருவத்தில் நிக்கலும், இரும்பும் அதிகமாக காணப்படுவதால் இவ்வடுக்கு “நைப்” என அழைக்கப்படுகிறது

2.இயற்பியல் சிதைவு மற்றும் இரசாயனச் சிதைவு

இயற்பியல் சிதைவுஇரசாயனச் சிதைவு
இயற்பியல் சக்திகளால் பாறைகள் இரசாயன மாற்றம் ஏதும்  அடையாமல் உடைபடுவது இயற்பியல் சிதைவு எனப்படும்பாறைறகளில் இரசாயன மாற்றம் ஏற்படுவதால் அவை உடைந்து சிதைதல் இரசாயனச் சிதைவு எனப்படும்
உதாரணம் : பாறை உரிதல், சிறு துகள்களாகச் சிதைவுறுதல்,பாறை பிரிந்துடைதல்உதாரணம் : ஆக்ஸிகரணம், கார்பனாக்கம், கரைதல், நீர்கொள்ளல்

காரணம் கூறுக

3. நிலவரைபடத்தில் ஒரு குறிப்பிட்ட இடங்களைச் சுட்டிக்காட்ட புவி வலைப்பின்னல் அமைப்புப் பயன்படுகிறது.

நிலவரைபடம் உலகளாவிய மொியாகும். சர்வதேச அளவில் உலகின் ஒர் இடத்தை சுட்டிக்காட்ட, அட்ச, தீர்க்க கோடுகளின் அளவையே பயன்படுத்துகின்றன. எனவே நில வரைபடத்தில் புவி வலைப்பின்னல் அமைப்பு மிக முக்கியமானதாகும்.

3. சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும் வேறுபாடுகளையும் எழுதுக?

சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகள்

  • சமணம், புத்தம் இரண்டும் பொ.ஆ.ம 6-ம் நூற்றாண்டில் தோன்றியது.
  • யாகம், சடங்குகளுக்காக விலங்குகளை பலியிடுவதை எதிர்த்தன.
  • இவை இரண்டும் துறவு, சொத்துக்களை துறந்து வாழும் முறை போன்றவைகளை ஆதரித்தது.
  • மகாவீரரும், புத்தரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள்,
  • எளிமைக்கும், தன்னல மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்கள்.

சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான வேறுபாடுகள்

  • மகாவீரரின் போதனைகள் மும்மணிகள் (திரிரத்னா) எனப்பட்டது. புத்தரின் போதனைகள் எண்வழிப்பாதை எனப்பட்டது.
  • சமணம் திகம்பரர் என்றும் சுவேதாம்பரர் என்றும்இரண்டாகப் பிரிந்தது. புத்தம் ஹீனயானம், மஹாயானம் என இரண்டாகப் பிரிந்த்து.
  • சமணத்தை தனந்தர், சந்திரிகுப்தர் மெளரியர், காரவேலன் போன்ற அரசர்கள் ஆதரித்தனர். பெளத்தம் மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா, சீனா, மங்கோலியா, கொரியா, ஜப்பான், வியட்நாம் நாடுகளுக்கும் பரவியது.

4. “தமிழக வரலாற்றில் சோழர்களின் காலம் ஒரு உன்னதக் காலம்” விளக்கவும்.

  • சோழர்கள் காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்பு மிக்க காலமாகும். இக்காலத்தின் வணிகமும், பொருளாதாரம் வரிவடைந்தன.
  • நகரமயமாதலும் இவற்றுடன் இணைந்து கொண்டது. சோழர்கள் காலத்தில் நிர்வாகம் மறுசீரமைக்கப்பட்டது.
  • உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை கிராமம் ஆகும். அதற்கு அடுத்தவை ஊர் (கிராமம்)களின் தொகுப்பான நாடு மற்றும் கோட்டம் (மாவட்டம்) என்பதாகும்.
  • பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள் ‘பிரம்மதேயம்’ என்றறியப்பட்டன. சந்தை கூடுமிடங்களும் சிறுநகரங்களும் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டன.
  • ஊர், நாடு, பிரம்மதேயம், நகரம் ஆகிய ஒவ்வொன்றும் தனக்கென ஒரு மன்றத்தைக் (சபை) கொண்டிருந்தது.
  • நிலங்களையும் நீர்நிலைகளையும் கோவில்களையும் பராமரித்து மேலாண்மை செய்வது. உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பது அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிகளை வசூல் செய்வது ஆகியவை, இம்மன்றங்களின் பொறுப்புகளாகும்.
  • (மண்டலம், வளநாடு) உருவாக்கியதன் மூலம் வருவாய்த்துறை நிர்வாகத்தில் புதுமைகளைப் புகுத்தியது.
  • வேளாண்மை மற்றும் வணிகத் துறைகளில் பல புதிய வரிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • புதிய கோவில்கள் கட்டப்பட்டன. பழைய கோவில்கள் வழிபாட்டிற்கான இடங்களாககு மட்டுமல்லாமல் பொருளாதார பண்புகளைக் கொண்ட நிறுவனங்களாக மாறின.
  • அவைபொருட்களைக் கொள்முதல் செய்பனவாகவும் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனமாகவும் நில உடமையாளராகவும் மாறின.
  • சோழர் காலத்தில் பொருளாதார் செழிப்பாய் இருந்தது. இதனாலே சோழர்காலம் தமிழக வராற்றில் ஒரு உன்னத காலம் என கூறப்படுகிறது.

5. மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.

  • மறுமலர்ச்சிக் காலத்தில் மனிதநேயம் தனி உரிமைக் கோட்பாடு, பகுத்தறிவு தேசியம் போன்ற புதிய சிந்தனைகள் உதயமாயிற்று.
  • இந்த சிந்தனைகளின் விளைவாக புதிய இயந்திரங்கள் மற்றம் அறிவியல் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • இவைகளால் சிந்தனையாளர்கள் தங்கள் கருத்துக்களை தெளிவாக அச்சு பிரதியின் உதவியுடன் வெளியிட்டனர்.
  • இது அரசியலிலும் திருச்சபையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் கலையிலும், இலயக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • இந்த தாக்கம் விமர்சனத்தையும் நையாண்டியைும் முன்னெடுத்து சென்றது.
  • இதனால் செவ்வியலாளர்கள் அறிவியலுக்கு அடித்தளம் அமைத்தனர்.
  • ஊழல்கள் நிறைந்த திருச்சபைகள் இளவரசர்களை போல ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த திருச்சபை ஊழியர்கள் பற்றி கத்தோலிக்க நம்பிக்கையின் நெறிபிறழாத விசுவாத்துடன் ஆழ்ந்த அர்பணிப்புடனும் வாழந்த மார்ட்டின் லூதர் போன்ற பேராசிரியர்கள் புரட்சிகளை அடையாளப்படுத்தினர்.
  • மேலும் கடவுகளுக்கும், தனிமனிதருக்கும் இடையே திருச்சபை இணைப்பு பாலம் நிராகரித்தார்.
  • இதனால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் உதயமாயிற்று மேலும் பலர் திருச்சபை மற்றம் மதச் சீர்த்திருத்தங்கள் உருவாக வழிவகுத்தனர்.
  • புவிசார் கண்டுபிடிப்புகள் காலனிய ஆதிக்கத்தை உருவாக்கியதுடன் வேளாண்மை, சுங்கத் தொழிகளை உருவாக்கியது.
  • புதிய கடல்வழித் தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வணிகம் பொருளாதார செழுமைக்கு இட்டுச் சென்றது.
  • இவ்வாறு நவீன யுகத்தின் வருகையை மறுமலர்ச்சி, மதசீர்திருத்தம், புவிசார் கண்டுபிடப்புகள் நவீன யுகத்தின் வருகையை பறைசாற்றின.
  • கூடுதல் ஆய்வு தேடல் பயணங்கள் தொடரப்பட்டன.
6. மக்களாட்சியில் உள்ள சவால்கள் யாவை?

இந்தியாவில் மக்களாட்சி உள்ள முக்கிய சவால்கள்

  • கல்வியறிவின்மை
  • வறுமை
  • பாலினப் பாகுபாடு
  • பிராந்தியவாதம்
  • சாதி, வகுப்பு, சமய வாதங்கள்
  • ஊழல்
  • அரசியல் குற்றமயமோதல்
  • அரசியல் வன்முறை

 7. 1992 ஆம் ஆண்டு 73 மற்றும் 74வது அரசமைப்பு திருத்தச் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

  • ஊராட்சி மற்றும் நகராட்சிகள் ‘உள்ளாட்சி அமைப்பு’ நிறுவனங்களாகச் செயல்படும்.
  •  குடியரசு அமைப்பின் அடிப்படை அலகுகள்: வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள உரிய வயதுடையோரைக் கொண்ட கிராம சபைகள் (கிராமங்கள்) மற்றும் பகுதி குழுக்கள் (நகராட்சிகள்) ஆகியன.
  • கிராமங்கள் இடையில் காணப்படும் வட்டாரம் / வட்டம் / மண்டலம் மற்றும் மாவட்ட அளவில் ஊராட்சிகள் என மூன்றடுக்கு முறையில் செயல்படுகின்றன. இரண்டு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையை உடைய சிறு மாநிலங்களில் பஞ்சாயத்துக்கள் ரண்டடுக்கு முறையில் இயங்குகின்றன.
  • நேரடித் தேர்தலின் மூலம் அனைத்து அளவிலும் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
  • அனைத்து அளவு நிலைகளில் பஞ்சாயத்து தலைவர்களுக்கான இடங்களில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு, மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.
  • பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டில் பெண்களுக்கும் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. எல்லா அளவு நிலைகளிலும் தலைவர்கள் பதவிக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஒரே மாதிரியான ஐந்தாண்டு பதவிக்காலம் மற்றும் பதவிக்காலம் நிறைவடையும் முன்பாகவே தேர்தல்கள் நடத்தப்பெற்று, புதிய அமைப்புகள் உருவாக்கப்படுதல் வேண்டும். ஆட்சி கலைக்கப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படுதல் வேண்டும்.
8. விவரி

அ) முதன்மைத் துறை, ஆ) இரண்டாம் துறை, இ) சார்புத் துறை

அ) முதன்மைத் துறை

முதன்மைத்துறை விவசாயத்துறை என அழைக்கப்படுகிறது. முதன்மைத் துறைக்கு உதாரணங்கள் விவசாயம், கால் நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பால்பண்ணை போன்றவை

ஆ) இரண்டாம் துறை

இரண்டாம் துறை தொழில்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு உற்பத்தி, தொழிற்சாலைகள், கட்டுமானம் போன்றவை உதாரணம் ஆகும்

இ) சார்புத் துறை

சார்புத் துறை சேவைத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இதற்கு போக்குவரத்து, காப்பீடு, வங்கி, வணிகம், தொலைத்தொடர்பு, வீட்டு விற்பனை, அரசு மற்றும் அரசுசார சேவைகள்  போன்றவை உதாரணம் ஆகும்

9.இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரி.

இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 முதல் செயல்பட தொடங்கியது . 1937 லிருந்து நிரந்தரமாக மும்பையில் இயங்கி வருகிறது. இது 1949இல் நாட்டுடைமையாக்கப்பட்டது

  • பணப்பரிமாற்றத்தைப் பராமரிக்கும் பொறுப்பும் கண்காணிக்கும் கடமையும் ஓர் அரசுக்கு இருக்கிறது. பொதுவாகப் பணம் பதுக்கி வைக்கப்படுவது பொருளியலில் தவிர்க்கப்பட வேண்டும். இதனால் வங்கிகளில் பணம் சேமிக்கப்படுகிறது.
    வங்கிகளில் சேமிக்கப்படும் பணத்தில் பெரும் பங்கு தொழில் வளர்ச்சிக்கும் பொருளியல் வளர்ச்சிக்கும் ஏழைகளின் நலனுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்தியாவில் அனைத்து வங்கிகளும் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பணப்புழக்கத்தை ஒழுங்குபடுத்தும் பணியினை இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
  • அச்சடிக்கப்பட்டப் பணத்தில் 85% புழக்கத்தில் விடப்படுகிறது. ஆகஸ்ட் 2018 நிலவரப்படிஇந்தியாவில் ரூபாய் 19 லட்சம் கோடி மதிப்பிலான பணம் புழக்கத்தில் உள்ளது.
10.நிலவரைபடங்களில் அளவை என்பதன் பொருள் என்ன? அதன் வகைகளை விளக்குக.

நிலவரைபடங்கள் உலகினை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ வரைந்து காண்பிப்பவையாகும். அளவை மற்றும் திசைகள் கொண்டு நிலவரைபடங்கள் வரையப்படுகின்றன. நிலவரைபடத்தில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் நிறங்களைக் கொண்டு பல விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

சொல்லளவை முறை

நிலவரைபடத்திலுள்ள தூரம் மற்றும் புவியின் உண்மையான தூரத்தினை ஒப்பீடு செய்து சொற்களில் குறிப்பிடுவது சொல்லளவை முறையாகும். அதாவது ஒரு சென்டிமீட்டர் பத்து கிலோமீட்டர்க்குச் சமம்.

பிரதி பின்ன முறை

இம்முறையில் நிலவரைபட மற்றும் உண்மையான தூரங்களின் ஒப்பீடு
விகிதமாகவோ, பின்னமாகவோ வெளிப்படுத்தப்படும். இது வழக்கமாக R.F என
சுருக்கமாகக் கூறப்படுகிறது.

பிரதிபின்ன முறை = நிலவரைபடத் தூரம் /  புவிபரப்பின் தூரம்

கோட்டளவை முறை

நில வரைபடங்களில் ஒரு நீண்டகோடு பல சமப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவும் நிலப்பரப்பில் எவ்வளவு தூரத்தைக் காட்டுகிறது என்பதைக் காட்டுவதே (முதன்மை மற்றும் இரண்டாம்நிலை) நேர்க்கோட்டு அல்லது கோட்டளவை முறையாகும். இந்த அளவை முறையின் மூலம் நிலவரைபடத்திலுள்ள தூரத்தினை நேரடியாக அளக்க உதவுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்